Tuesday, March 27, 2018

புதினா ரைஸ் - கிச்சன் கார்னர்

கறிவேப்பிலை, கொத்தமல்லிக்கு அடுத்தப்படியாக உணவினை மணமூட்ட நாம பயன்படுத்துறது புதினா.  இது பெரும்பாலும் சட்னி, அசைவ உணவுகள்ன்னுதான் பயன்படுத்தப்படுது. ஆனா, இதுல சாதம், புலாவ், ஜூஸ், குழம்பு, சூப்ன்னு விதம் விதமா செஞ்சு சாப்பிடலாம். புதினாவில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரத சத்து, கந்தகம், தாது உப்புகள்,ஆகஸாலிக் அமிலம், க்ளோரின், நிகோடினிக் அமிலம், நார் சத்துகள்லாம் இருக்கும். புதினா செடியின் இலை, தண்டு, வேர்ன்னு அனைத்தும் மருந்தாய் பயன்படுது.  இது செரிமான பிரச்சனையை தீர்க்கும். புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, புது ரத்தம் ஊறும், வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கும், வயிற்றுப்போக்கினை நீக்க புதினா துவையலை சாப்பிடலாம். புதினா இலைகளை காய வைத்து, எட்டு பங்கு கீரையுடன், ஒரு பங்கு உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் தீரும். புதினாச்சாற்றினை முகத்தில் தேய்த்துவர முகப்பரு நீங்கி முகம் பளிச்சுன்னு இருக்கும். வாதம், மஞ்சக்காமாலை, இதய நோய்கள்ன்னு புதினாகீரையால் குணமாகும் நோய்கள் நீண்டுக்கிட்டே போகும்.... அதனால இத்தோடு நிறுத்திக்கலாம்...

தேவையானப்பொருட்கள்...
உதிர் உதிரா வடிச்ச சாதம்..
புதினா, 
பச்சை மிளகாய்
இஞ்சி,
பூண்டு,
புளி
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு,
வேர்க்கடலை,
வெங்காயம்.
காய்ந்த மிளகாய்..


செய்முறை...
 புதினா, புளி, மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்சுக்கனும். 
வாணலி சூடானதும், எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை போட்டு சிவந்ததும், காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,. வெங்காயம் சேர்த்து வதக்கிக்கோங்க. 
வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், அரைச்சு வச்சிருக்கும் புதினாக்கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து நல்லா வதக்கிக்கனும்... 
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிங்கோங்க... 
புதினாக்கலவை பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்ச சாதத்தை சேர்த்து நல்லா சூடு பண்ணனும். லேசா எலுமிச்சை சாறும் சேர்த்துக்கலாம். 
சுவையான, ஆரோக்கியமான புதினா ரைஸ் ரெடி. பசங்க லஞ்ச் பாக்சுக்கு ஏத்த டிஷ். நல்லா வதக்கிட்டா எட்டு மணிநேரத்துக்கும் மேலானாலும் கெட்டு போகாது.

என் சின்னப்பொண்ணுக்கு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்புலாம் வெரைட்டி ரைஸ் சாப்பிடும்போது ரொம்ப ஊறிட்டு இருந்தால் பிடிக்காது. அதனால, அவளுக்குன்னு செய்யும்போது பருப்பு வகைகளை தனியா வறுத்து எடுத்து வச்சிக்கிட்டு சாதம் கிளறும்போது சேர்ப்பேன். மதியம் சாப்பிடும்போது லேசா மொறுமொறுப்பா இருக்கும்...

அடுத்த வாரம் கசப்போடு வரேன்....
நன்றியுடன்,
ராஜி. 

15 comments:

  1. சூப்பர்...

    பாகற்காய் பொரியலா?

    ReplyDelete
    Replies
    1. கசப்புன்னாவே பாகற்காய்தானா?!

      Delete
  2. புதினா ரைஸ்! நல்லா இருக்குமே....

    நடத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ஆமா சகோ. லஞ்ச் பாக்சுக்கு ஏத்த ரெசிப்பி

      Delete
  3. செம ரெசிப்பி....விருப்பமானதும் கூட..

    அது சரி //புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். // காரண்டி உண்டா ராஜி? இல்ல செஞ்சு பாக்கத்தான்.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பழக்கமில்லை. கீதாக்கா நீங்க செஞ்சு பார்த்துட்டு எனக்கும் சொல்லுங்க. செஞ்சு பார்த்துடலாம். ஏன்னா எனக்கும் பொடுகு தொல்லை இருக்கு

      Delete
  4. நாங்களும் அவ்வப்போது செய்வோம். சுவை ப்ளஸ் ஆரோக்கியம்.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  5. புதினா..நான் ரசித்து உண்பதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் அதேகதைதான். புதினா சட்னி, சாதம்ன்னு வாரத்துக்கு நாலு நாள் இந்த கீரை உண்டு

      Delete
  6. அருமையான் புதினா சாதம், அழகான படங்கள்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜி ! வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா!

      Delete
  7. சுவையான உணவு ராஜிக்கா...

    ReplyDelete
  8. புதினா சாதம் குறிப்பு அருமை! வித்தியாசமாக இருந்தது. புதினா, சாதம், புளி, பூண்டு அளவுகள் கொடுத்திருந்தால் செய்து பார்க்க வசதியாக இருக்கும்!

    ReplyDelete