Tuesday, March 17, 2020

இதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு?!- கிச்சன் கார்னர்

அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து  சாப்பிடும் பழக்கம் புதுசா  பரவிக்கிட்டிருக்கும் காலக்கட்டத்தில் பாரம்பரிய பலகாரங்களை செய்ய யாருக்கு பொறுமையும், நேரமும் இருக்கு?!ன்னு பலரும் நினைக்குற மாதிரி இதுலாம் செய்யுறது பெரிய விசயமில்லை. பசங்களுக்கு நல்லது கொடுக்குற திருப்தியும், நம்மாலும் இதுலாம் செய்யமுடியும்ன்ற ஆர்வமும் இருக்கும்வரை இதுலாம் ஜுஜுபி மேட்டர்.

சின்ன வயசில் எல்லார் வீட்டிலும் அப்பப்ப முறுக்கு, தட்டை, கோதுமை கலகலா, சிம்னின்னு  எதாவது பண்டம் செய்வாங்க. அதுதான் காலை, மாலை, சாப்பாட்டுக்கு தொட்டுக்கன்னு பத்து பதினஞ்சு நாளுக்கு அந்த பண்டம் இருக்கும். இப்ப மாதிரி கடையில் வாங்கும் பழக்கமில்லை.  எங்க ஊரில் இதை கலகலான்னு சொல்வாங்க. மத்த ஊரில் என்ன பேருன்னு தெரில!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் 
கோதுமை மாவை சலிச்சு எடுத்துக்கனும். கோதுமை மாவில் அரை பங்கு சர்க்கரையை எடுத்துக்கனும்.
சர்க்கரையை பொடிச்சு கோதுமை மாவில் சேர்த்துக்கனும்.
ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக்கனும்..
வெண்ணெய் இல்ல. அதனால் நெய்யினை சேர்த்து, மாவினை நல்லா கலந்துக்கிட்டு, சிறுக சிறுக தண்ணி சேர்த்து பிசையனும்,. சர்க்கரை சேர்த்திருக்குறதால் அதிகம் தண்ணி செலவாகாது. சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைஞ்சுக்கனும். 
சப்பாத்தி மாதிரி திரட்டி, கத்தியால் சின்னசின்னதா வெட்டிக்கனும்.. ரொம்ப மெல்லிசா திரட்டிக்க வேணாம். கொஞ்சம் கனமா இருக்கனும்.

சர்க்கரை சேர்த்திருக்குறதால் சீக்கிரம் சிவந்திடும். அதனால், அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.
நல்லா சிவக்கவிட்டு எடுத்தால் கலகலா ரெடி. இதை கிண்ணத்தில் போட்டு உருட்டுனா கலகலன்னு இருக்கும் அதனால்தான் இந்த பேரா இருக்குமோ?! கோதுமை, மைதா மாவினை சம பங்கா எடுத்தும் செய்யலாம்.  

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. இது வேற டிப்பார்ட்மெண்ட்டு

    ReplyDelete
  2. ஒருவேளை சாப்பிட்டவுடன் சிரிப்பு வருமோ...?

    ReplyDelete
  3. செய்முறை வழிகாட்டல் சிறப்பு
    நினைக்க வாயூறுது

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    ReplyDelete
  4. ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிட ஆர்வம் இருக்கும்தான்.   ஆனால் அதைச் சாப்பிட்டால் எப்போதும் தோன்றும் எண்ணம் "நம்ம வீட்டில் செய்யறது இதைவிட நல்லாயிருக்குமே..."

    சுலபமாத்தான் இருக்கு...   இதுவரை இது செய்ததில்லை.

    ReplyDelete
  5. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு?!- கிச்சன் கார்னர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    Please use Page break option into your post

    ReplyDelete
  6. கலகலா...கல கல ன்னு இருக்கு ...சூப்பர் கா

    ReplyDelete
  7. கலகலா! நல்ல பெயர். இப்படிச் சொல்லி கேள்விப்பட்டதில்லை. அம்மா செய்து ருசித்ததுண்டு. சுலபமான செய்முறை தான்!

    ReplyDelete