Saturday, August 26, 2017

அத்தை மகனே போய் வரவா?!

என் பெரியம்மாக்கு கல்யாணம் ஆகும்போது என் அப்பாரு சின்ன புள்ளை. என் அப்பாவோட அம்மாவும், என் அம்மாவோட அப்பாவும் உடன்பிறந்தவர்கள். அதாவது விளக்கமா சொல்லனும்ன்னா என் அம்மாக்கு என் அப்பா முறைப்பையன்.

என் பெரியம்மா கல்யாணம் கட்டிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு கிளம்பும்போது எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டு, அப்படியே என் அப்பாக்கிட்ட வந்து  போய்வரேன்னு சொல்லும்போது சரியா இந்த பாட்டு ஒலிச்சதாம். இந்தன் பாட்டை எப்ப கேட்டாலும் அப்பா இதை சொல்வாரு.  இப்பலாம் அப்பா கண்ணுல தண்ணி வழியும்., காரணம் பெரியம்மா இப்ப இல்ல. ஆனா அப்பா நினைவில் இருக்காங்க..
படம்

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!


மல்லிகை மலர் சூடி காத்து நிக்கவா?!
மாலை இளம் தென்றல் தூதுவிடவா?!
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா?!
நாட்டோரை சாட்சி வைத்து வந்துவிடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா?!
முகம் பார்க்க முடியாம நிலம் பார்க்கவா?!
நிலம் பார்த்து உன்னை நாடவா?!
உன்னை நாடி.... உன்னை நாடி....
உன்னை நாடி .... உன்னை நாடி உறவாடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!













தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468381
நன்றியுடன்,
ராஜி

Friday, August 25, 2017

பிள்ளையார்.... பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார் - விநாயகர் சதுர்த்தி

’வி’ ன்னா சிறப்பு. “நாயகன்’ ன்னா தலைவர். சிறப்புமிக்க தலைவர்ன்னு குறிப்பதே வினாயகன்.  கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப்பெருமான் இருக்குறதாலயும் இந்த பேர் உண்டாச்சு.  விக்னம்ன்னா பிழை, இடர்ன்னு பொருள். நமக்கு ஏற்படும் பிழைகளை, இடர்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரன்ன்னு பேர் உண்டாச்சு.   கணங்களுக்கு அதிபதியா இருக்குறதால கணேசன்னு பேர் உண்டாச்சு. மனித உடலும், யானை தலையையும் கொண்டதால இந்த பிள்ளை யார்ன்னு கேட்க போய் பிள்ளையார்ன்னு பேர் உண்டாச்சு.   இந்துக்கள் எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் விநாயகப் பெருமானை வணங்கியப் பின் தொடங்குவாங்க. பிள்ளையார் நம்ம அப்பாக்கள் போல எளிமையானவர். நாம எப்படி இழுத்தாலும் வந்துடுவார்.  சாணம்,. மஞ்சள், அரச இலைன்னு எதிலும் வந்திடுவார்.

 இன்று நாம கொண்டாடும் இந்த விரதத்தை அன்று பார்வதி தேவிதான் தொடங்கி வைத்தாள்.  தன் கணவரான சிவனை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.  இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதின்ற  பெயரில் வளர்ந்து வந்தாள்.  சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும்ன்னா அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையான பர்வதராஜன் யோசனை சொன்னார்.  அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை செய்து,  கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

 அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

, விநாயகருக்கு    மோதகம், கொழுக்கட்டை படைப்பது வழக்கம். மோதகம் என்பது  தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது.  மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.  உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம்.    அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்கு கிடைப்பதுப்போல  நமக்குள் இருக்கும் இனிய குணங்களை அண்டத்திலுள்ள அனைத்துவித மாயைகளும் மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் பிரம்மத்தை அடையலாம் என்பதை இந்த மோதகம் உணர்த்துது.  விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.

 விநாயகருக்கு யானை முகம் வந்ததுக்கு பல காரணம் சொல்றாங்க. அதுல ஒண்ணு, ”கஜமுகாசுரன்”ன்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரனும்ன்னு வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லை ன்னு அவன் போட்ட கணக்கு.  அவன் நினைச்ச மாதிரியே அப்படி யாருமே உலகில் பிறக்கலை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை(அழுக்குன்னும் சிலர் சொல்றாங்க. நல்லதையே எடுத்துப்போமே)  வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு  இருந்த பிள்ளையார் தடுக்க,  என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன்னு வாக்கு கொடுத்தாராம் சிவன். அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை  உணர்ந்த எல்லா ஜீவன்களும் அப்படி படுக்கலை. என்னை போல சொல்பேச்சு கேளாத ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததா ஒரு வரலாறு இருக்கு.
மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும்உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்ன்னு அன்னையை சமாதானம் செய்தார் சிவன்.  
தன் பிறப்பின் நோக்கம் அறிந்து கஜமுகன்மீது படை எடுத்து சென்று அவன் மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உரு கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேண்டுக்கோளுக்கிணங்கி,  தன் வாகனமாக்கி கொண்டார்.

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால் கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை, 
பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்சிக்க வேண்டுமென ஆணையிட்டார். 
விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரண்டு காதுகள், மூன்று திருக்கண்கள், நான்கு தோள்கள்,  ஐந்து கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழேழு பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.   விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் கொண்டு உலகம் அனைத்தும்  தன்னுள்ளே  இருப்பதை விநாயகரின் உருவம் உணர்த்துது.

விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார். விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீச முனிவரது புதல்வி.

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.  தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.  மூன்று, ஐந்து, ஏழு நாள்ன்னு பிள்ளையாரை கோலாகலமா பூஜித்து அவரை கொண்டு போய் கரைக்கனும்ன்னு உடக்குறதும், மிதிக்குறதும் காண சகிக்காத என் அம்மா வீட்டிலேயே கரைச்சு செடிகளுக்கு ஊத்திடுவாங்க, நானும் அப்படியே!
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து மனையில் களிமண்ணாலான பிள்ளையாரை வைத்து அலங்கரித்து பொரி, அவல், பழங்கள், கரும்பு, சோளம், வேர்க்கடலை, நாவல்ப்பழம்,  மோதகம், சுண்டல் செய்து படைத்து, விநாயகர் அகவல் பாடி தொழ வேண்டும். அவரவர் வசதிப்படி 3, 5, 7,9 நாட்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.  கடைசி நாளில் படைத்து ஏதாவது நீர்நிலையில் கரைத்து விடவேண்டும்...

விநாயகரை தொழுவோம்... எல்லா வளமும் பெறுவோம்..

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....

வீட்டுல அண்ணன் மகனுக்கு கல்யாணம். நேரம் கிடைக்கும்போது வருவேன். பதிவு போடுவேன். ஓடிருவேன்.  நேரம் கிடைச்சா மத்தவங்க பதிவுக்கு வரேன். இது புதன்கிழமை வரை மட்டுமே! மத்தவங்க தளத்துக்கு வரமுடிலைன்னு என்னைய மறந்துடாதீங்க சகோஸ்.... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470264  


நன்றியுடன்,
ராஜி.

Thursday, August 24, 2017

பிள்ளையார் குடை - கைவண்ணம்

பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் எப்படி முக்கியமோ அதுமாதிரியே பிள்ளையார் குடை முக்கியம். பேப்பர் பிளேட்ல செஞ்ச குடை கடையில் விதம் விதமா கிடைக்குது.  வீட்டுல சும்மாதானே இருக்கேன்னு பிள்ளையார் குடையை நானே எனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சுப்பேன்.. 

அதுக்கு தேவையான பொருள்ன்னு தனியா எதுமில்ல. பிள்ளையார் போலவே பிள்ளையார் குடையும் எந்த பொருள்ளயும் வந்துடும்.  இங்க நான் செஞ்சிருக்கும் குடை தென்னங்குச்சி, உல்லன் நூல் கொண்டு செஞ்சது. 
 இதுதான் முக்கியமானது. மிச்சம்லாம் நம் விருப்பம்...
 ரெண்டு குச்சியை  ப்ளஸ் குறி போல  வச்சு உல்லன் நூலால இணைச்சுக்கனும். டைட்டா இருக்கனும். இல்லன்னா என்னைப்போல லூசாகிடும். 
 ரெண்டு குச்சிக்கு இடையில் இன்னொரு குச்சி வச்சு இணைச்சுக்கனும்...

 கடைசியா இணைச்ச குச்சிக்கு எதிர்புறத்தில் வச்சு இன்னொரு குச்சியை இணைச்சுக்கனும்..
 நாலு குச்சியை இணைச்சுக்கிட்டா  மேல இருக்கும் படத்துல இருக்குற மாதிரி வரும்.
 வுல்லன் நூலை குச்சில ஒரு  சுத்து சுத்தி சுத்திக்கிட்டே வரனும்.,
அடுத்த கலர் நூலை இணைக்கும்போது முடிச்சு போட்டு இணைச்சு சுத்திக்கிட்டே வரனும்..
 நல்லா டைட்டா சுத்திக்கிட்டே வாங்க..
 விருப்பப்பட்டப்படி கலர் நூலை மாத்தி மாத்தி சுத்திக்கிட்டு வாங்க.
 சுத்தி முடிச்சதும் சைக்கிள் ஃபோக்ஸ் கம்பியை இணைச்சு கம் தடவிக்கோங்க. 

ஃபோக்ஸ் கம்பி தெரியாம இருக்க பேட்ச் வொர்க்கை ஒட்டிக்கிட்டேன்.
  குடையில் தொங்க மணியை கட்டிக்கிட்டேன்.
அங்கங்க சமிக்கி, கண்ணாடின்னு ஒட்டிக்கலாம்... மிச்சமீதி நூலுலாம் பிசிறில்லாம வெட்டி விருப்பப்பட்ட மாதிரி கண்ணாடி, மணி,ன்னு எப்படி வேணும்ன்னாலும் அலங்கரிச்சுக்கலாம்...

கூல்ட்ரிங்க் பாட்டில், பேப்பர் டீ கப், பேப்பர் தட்டு,  காட்போர்ட் அட்டை, தேங்காய் ஓடு, கம்பின்னு எதுல வேணும்ன்னாலும் குடை செய்யலாம்,  அடுத்த வாரம் கூல்ட்ரிங்க் பாட்டில்ல செஞ்ச குடையை பார்க்கலாம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470197

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, August 23, 2017

ராமனின் கால்பிடித்த லட்சுமணனுக்கு கிடைத்த பரிசு - பலராமர் ஜெயந்தி

தன் தங்கைக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தன் ஆசை தங்கை தேவகியை கொல்ல செல்கிறான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால்தானே உனக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தையையும் உன்னிடம் கொடுத்து விடுகின்றோம் என்று கம்சனின் தங்கையான தேவகியின் கணவரான வசுதேவர். தேவகிக்கு பிறக்கும் ஆறு குழந்தைகளையுன் ஒன்றன் பின் ஒன்றாக வசுதேவன் கம்சனிடம் கொடுக்க கம்சன் அவைகளை கொன்றான். 

தேவகி ஏழாவது முறையாக கர்ப்பமுற்றாள்.  விஷ்ணு துயில் கொள்ளும் ஆதிசேஷன் தேவகி வயிற்றில் கருவானது.   தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயத்தில் துக்கமும் கொண்டாள்.   குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்று விடு வானோ என்ற வருத்தம் அவளை கவலைக்கொள்ளச் செய்தது. விஷ்ணுவின் கட்டளைப்படி யோகமாயை  ( யோகமாயை என்பது விஷ்ணுவின் சக்திகளில் ஒன்று.  எல்லா சக்திகளுக்கும் மூலாதாரம் இந்த மாயைதான். சர்வ அலங்காரம் பூண்டது இந்த மாயை.) சிறையிலிருந்த தேவகி வயிற்றிலிருக்கும் கருவை, ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணி கருப்பைக்குள் இடம் மாற்றியதோடு, நந்தகோபம் மனைவியான யசோதையின் வயிற்றில் கருவானாள். தேவகியின் கருக்கலைந்தது என வசுதேவரிடம் கம்சன் தெரிவித்தார்.  கம்சனின் தொல்லை தாங்காமல்தான் கருக்கலைந்தது என அனைவரும் நம்பினர். 
 இதற்கிடையில்  ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரோகிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. யதுகுல குருவான கர்கர் யாருக்கும் தெரியாமல் பசுமடத்தில் வைத்து சடங்குகள் செய்து ராமன் என பெயரிட்டார். ராமன்ன்னா சமிக்க செய்பவன்னு அர்த்தம். ராமன் வளர்ந்து வருகையில் பலசாலியாய் திகழ்வதை கண்டவர்கள் பலராமன் என அழைத்தனர்.  இதேவேளையில் க்ருஷ்ணரும் அவதரித்தார். இருவரும் கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க க்ருஷ்ணனை கோவர்த்தனகிரி தேடி வந்தான்.  அங்கிருந்த முனிவர்கள், மக்களை துன்பப்படுத்தினான், பலராமனை க்ருஷ்ணன் என எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன்.  மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமனை கட்டிப்பிடித்து கைமுட்டியால் அடித்தான் மயிந்தன். பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். இதுப்போல பலராமன் க்ருஷ்ணரோடு சேர்ந்து பல அசுரர்களை வதம் செய்து க்ருஷ்ணரோடு வளர்ந்து வந்தார்.
ரைவத நாட்டின் மன்னனான ரைவதன் மகள் ரேவதியை மணந்தார். தன் மகளான வத்சலையை துரியோதனனுக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு தன் தம்பியான க்ருஷ்ணரிடம் இதுப்பற்றி விவாதித்தார் பலராமர். அண்ணா! நம் தங்கையான சுபத்ரை மகனான அபிமன்யூக்கு வத்சல்யையை கொடுப்பதாக முன்னொருமுறை தாங்கள் வாக்களித்தீர்களே! மறந்துவிட்டீர்களாவென க்ருஷ்ணர் கேட்டார். மறக்கவில்லை க்ருஷ்ணா! அன்று அரசனாய் இருந்தார்கள் அதனால் வாக்களித்தென். இப்போது ராஜ்ஜியத்தை இழந்து காடுகளில் வாழும் இவர்களுக்கு எப்படி பெண் கொடுப்பது என மறுத்து, துரியோதனனுக்கு மணமுடிப்பதாய் வாக்களித்து விட்டார் பலராமன்.

க்ருஷ்ணர் சுபத்ரைக்கு இவ்விசயத்தை தெரிவிக்க , சுபத்ரை தன் மகன் அபிமன்யூவிற்கு இவ்விசயத்தை சொல்ல, அபிமன்யூ விரைந்து வந்து வத்சல்யை மணமுடித்தான்...  இந்த நிகழ்ச்சியால் க்ருஷ்ணர்மீது கோபம்கொண்ட   பலராமர் தீர்த்த யாத்திரை சென்றார். இதைத்தான் க்ருஷ்ணரும் எதிர்பார்த்தார். பலராமன் இருந்திருந்தால் குருஷேத்திர போரின் போக்கே மாறிவிடும் என்பதை க்ருஷ்ணர் உணர்ந்திருந்தார். 

குருஷேத்திர போர் முடிந்து 36வது வருடம். துவாரகைக்கும் விஸ்வாமித்திர முனிவர் வருகை புரிந்தார். அவரின் கோவம் தெரியாது விளையாட்டுத்தனமாய் க்ருஷ்ணனின் மகன்களில் ஒருவனுக்கு வயிற்றில் இரும்புதுண்டை கட்டி கர்ப்பிணி வேடமிட்டு பிறக்கப்போவது ஆணா?! பெண்ணா?!வென  வினவ, விஸ்வாமித்தரர் கோபம்கொண்டு, பிறப்பது ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் அவற்றால்தான் உங்கள் குலம் அழியும்ன்னு சாபமிட்டார். இதைக்கேள்விப்பட்ட பலராமர், குருதேவர் அறிவுரைப்படி அந்த இரும்புத்துண்டை தூளாக்கி   கடலில் எறிந்துவிட்டார். இருப்பினும் அந்த பொடிகளால் உண்டான செடிகளை கொண்டே யதுகுலம் முடிவுக்கு வந்தது.

யதுகுலம் முடிவுற்றதையும், க்ருஷ்ண அவதாரம் முடியப்போவதையும் உணர்ந்த பலராமர் யோகநிலையில் அமர்ந்தார். யோகத்தின் துணைக்கொண்டு தன் உடலை அழித்து வெள்ளை பாம்பாய்  உருக்கொண்ட அவர் ஆத்மா கடலில் கலந்தது.  தன் அண்ணனான பலராமனுக்கு சடங்குகள் செய்வித்து க்ருஷ்ணரும் வேடன் இட்ட அம்பால் தன் அவதாரத்தை முடித்துகொண்டார்.


ஒருமுறை, நாரதர் விஷ்ணுவிடம், ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேசனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாக பிறக்க செய்து, அவர் கால்பிடித்து, கைப்பிடித்து பலவாறாக சேவை செய்த காரணமென்ன என கேட்டார்.   நாரதா! ஒருமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரே முறை என் காலில் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வக்காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே. அதனால்தான், லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேசனை பலராமனாய் பிறக்க செய்து அவன் கால்பிடித்தேன் என பதிலுரைத்தார்.  
கலியுகம்  ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கிட்டத்தட்ட கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்னமயே க்ருஷ்ணரும், பலராமனும் கம்சனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவன் அரசவைக்கு சென்று பல்வேறு   மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்து, கடைசியில் கம்சனையும் அழித்ததை நாம கேள்விப்பட்டிருக்கோம். இதுக்கு  கம்ச சானூர மர்த்தனம்ன்னு பேரு. இன்றைய மல்யுத்தத்துக்கு இதுதான் முன்னோடி.  மல்யுத்த சண்டையில் பலராமன் பேர்பெற்றவர். மல்யுத்த தந்தைன்னு பலராமனுக்கு பேர் வைக்கலாம்.  ஆனா, இந்தியன் கண்டுப்பிடிப்பை வெளிநாட்டுக்காரன் சொன்னாதானே நாம ஒத்துக்குறோம்!!!
இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் எல்லா வளமும் பெறலாம்ன்றதை பலராம அவதாரம் நமக்கு உணர்த்துது. இத்தனை பேரும், புகழும் பெற்ற ஆதிசேஷனான பலராமனின் அவதார தினம் இன்று. பலராமனை வணங்குவோம்.. பலசாலியாய் இருப்போம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி. 

மெட்ராசை சுத்திக்காட்டப்போறேன்... மெரினாவில் வீடு கட்டப்போறேன்... மௌனச்சாட்சிகள்


நாகர்கோவில்ல நாகர்கோவில்காரங்க இருப்பாங்க. மதுரைல மதுரைக்காரய்ங்க இருப்பாங்க.. தூத்துக்குடில தூத்திக்குடிக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க. ஆனா, சென்னைல எல்லா ஊர்க்காரங்களும் இருப்பாங்க. சென்னைக்கு பல முகம், பல மொழி, பல கலாச்சாரம்ன்னு ஒரு படத்துல சொல்வாங்க. அது உண்மைதான். பல ஊர்க்காரய்ங்க மட்டுமில்ல பல நாட்டுக்காரங்களும் இருக்காய்ங்க. குடிசைக்கூட இல்லாம பிளாட்பாரத்துல தூங்கும் மக்கள் ஒருபக்கம்.... அரண்மனை போல வீடிருந்தும் பொழுது போகாம அதே பிளாட்ஃபார்ம் பக்கம் உலாவும் மக்கள் மறுபக்கம்.  ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு பக்கம், கால்வாய், குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கவர்ல செஞ்ச வீடுகள் மறுபக்கம்.. சர்வதேச உணவுகள் விற்கும் உயர்தர ஹோட்டல்கள் ஒருபுறம்,  பாரம்பரிய உணவான களி, கூழை விற்கும் தள்ளுவண்டி கடை மறுபக்கம்....  சாமி, பூதம் இல்லன்னு சொல்லி விஞ்ஞான போக்கில் போகும் மக்கள் ஒருபக்கம், அலகு குத்துறது, குறி பார்க்குறது, சாமியார் ஆசிரமம்ன்னு மூடநம்பிக்கைகள் மறுபக்கம். லிவிங்க் டூ கெதர்ல வாழும் வாழ்க்கை ஒருபக்கம்... கூட்டுகுடும்பம் மறுபக்கம்... ஹோலி பண்டிகை ஒரு பக்கம்... ஓணம் பண்டிகை மறுபக்கம்... நெதர்லாந்துக்காரன் ஒரு பக்கம்ன்னா... ஆப்பிரிக்காக்காரி இன்னொரு பக்கம்... சர்வதேச விமான நிலையம், சர்ச், கோவில், தியேட்டர், மருத்துவமனைகள், கல்வி, கலை,  தொழிற்சாலைகள்ன்னு எல்லா  துறையினருக்கும் சென்னைதான் மையப்புள்ளி...
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியல், மருத்துவம், சுற்றுலா பொருளாதாரம்ன்னு பலவிதத்தில் முக்கிய பங்கு வகிக்குது.   ஆங்கிலேயர்கள் காலூன்ற  அடித்தளமிட்டது சென்னைதான். சோழ, பல்லவ, விஜய நகர பேரரசுகளுக்கும் முக்கிய இடமா சென்னை  இருந்திருக்கு.  இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னை இன்னிக்கு ஆரம்பம் எது முடிவெதுன்னு தெரியாம இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரு சிறு கிராமமாதான் இருந்திருக்கு. இன்னிக்கு கால்வைக்க இடமில்லாம ஜன நடமாட்டம் மிக்கதா இருக்கும் சென்னை சொற்ப மக்கள் வாழ்ந்த இடமாவும் இருந்திருக்கு. 

1639 ம் ஆண்டு ஆக 22ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோதன் ஆகியோர் இணைந்து ஐய்யப்பன், வேங்கடப்பன்ன்றவங்கக்கிட்ட இப்பத்திய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கினாங்க. அந்த இடத்துக்கு  தங்களோட அப்பா பேரான  சென்னப்பநாயக்கன் பேருல இருக்கனும்ன்னு கேட்டதால சென்னை பட்டனம்ன்னு பேர் உண்டாச்சு. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை பிரம்மாண்டமாய் வளர ஆரம்பிச்சது. அப்படி வளர்ந்த நகரம் திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவொற்றியூர்,  திருவான்மியூர் மாதிரியான நூற்றாண்டு புகழ்வாய்ந்த ஊர்களையும் இணைச்சுக்கிட்டது.  1688ல இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால்  நகராட்சியாய் அறிவிக்கப்பட்டது., இந்தியாவின் முதல் நகராட்சி அப்போதைய சென்னை பட்டனம். அதேப்போல, இந்தியாவின் முதல் மாநகராட்சி இப்போதைய சென்னை. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து இப்போதைய சென்னை அந்த இடத்தை தட்டிக்கிட்டு போச்சு. 


சென்னை பட்டினம்  பின்னாளில் ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினமானது. சென்னை மட்டுமல்ல அப்போதைய மதராசப்பட்டினத்தில் தமிழ்நாட்டோடு இன்னும் பல மாநிலத்தின் இடங்கள் சேர்ந்திருந்தது. 1969ல மொழிவாரியாக எல்லை பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனியாய் பிரிந்து வந்தது.   இந்திய சுதந்திரத்திற்குபின் சென்னை மாகாணமானது. அதன்பின் 1956ல    மதராஸ்ன்னு பேர் வைக்கப்பட்டு இப்ப சென்னையா விஸ்வரூபமெடுத்து நிக்குது.  இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த சென்னைக்கு இந்த வாரம் பொறந்த வாரமாம். அதனால, சென்னை தினம்ன்னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நம்ம பங்குக்கு சின்னதா ஒரு பங்களிப்பு. 
அன்றைய பாரீஸ் கார்னர்



சென்னைன்னா நமக்கு நினைவுக்கு வர்றதுல மெரினா பீச்சும் ஒன்னு. உலகத்துல நீளமான பீச்சுல இதும் ஒண்ணுன்னாலும் உலகின் நீளமான பீச்சுல மெரினாக்கு இரண்டாவது இடம்.  கிட்டத்தட்ட 13கிமீ தூரம் நீண்டுக்கிட்டிருக்கும். பேரும் புகழோடும் இருக்கும் இந்த மெரினா பீச் அன்னிக்கு களிமண் பகுதியா இருந்துச்சுன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா பாருங்க. அதான் உண்மை. 1880ல ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப்தான் முதன்முதலில் அழகாக வடிவமைத்தார் `1881 ம் ஆண்டு சென்னை துறைமுகம் உருவாச்சு.  1884ல மெரினான்னு பேர் வச்சாங்க.  மேல படத்துல இருக்கும் மெரினா பீச் லைட் அவுஸ் பத்தி ஒரு பதிவு ஏற்கனவே போட்டிருக்கு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போய்ட்டு வந்திருங்க.  

அடையாறுங்குற ஆறு கடலில் கலக்கும் பகுதியின் வடக்கு பகுதியும், சாந்தோம் சர்ச்சுக்கும் இடைப்பட்ட பகுதியே சாந்தோம் பீச்.  சாந்தோம் சர்ச் என்னும் புனித தோமையார் தேவாலயம் இங்கதான் இருக்கு. இந்த இடம் மீனவமக்கள் நிறைந்த பகுதியாகும். இங்க மீன் விற்பனை களைக்கட்டும்.
 பெசண்ட் நகர்  பீச்ன்னு சொல்லப்படும் எட்வர்ட் எலியட் பீச்தான் மெரினாவின் கடைசி முனை.  காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த எட்வர்ட் எலியட்ன்ற  ஆங்கில அதிகாரியின் நினைவாக இந்த பீச் அழைக்கப்படுது. மெரினா பீசுலயே இந்த பீச் ரொம்ப சுத்தமா இருக்குமாம்!  நீரில் மூழ்க ஒருவரை காப்பாறறி தன் உயிரை இழந்த  டச்சு மாலுமியான கார்ல் இசுபிட்   நினைவாக  இங்க ஒரு நினைவு சின்னம் இருக்கு. இங்கதான் அஷ்டலட்சுமி கோவில், ஆரோக்கியமாதா கோவில், அறுபடைவீடு கோவிலும் இருக்கு.  அஷ்டலட்சுமி கோவில் நம்ம பிளாக்குல வந்திருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க. 

இன்னிக்கு சென்னைல புதுசு புதுசா கட்டிங்கள் பல வந்தாலும் 200, 300 வருட கட்டிடங்களும் சென்னைல இன்னும் இருக்கு. அதுல ஒரு சிலது பார்ப்போம்..   1892 ல ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி   இண்போ- சர்ச்சியனிக் கட்டடக்கலையின்படி கட்டப்பட்டது இன்றைய உயர்நீதிமன்ற வளாகம். இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம்ன்ற பெருமை கொண்டது இக்கட்டிடம்.  மிக உயரமான கூம்புகளால் நிற்கும் அழகிய கட்டிடம் இது.  முழுக்க முழுக்க  சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டது.  ஆரம்ப காலங்களில் இந்த கட்டிடம் கலங்கரை விளக்கமாவும் இருந்திருக்கு.  சென்னைமீது எம்டன் கப்பல் வீசியதில் அந்த லைட் அவுஸ்  சேதமாகிட்டதால இன்றைய லைட் அவுஸ் கட்டப்பட்டது. இதற்கான நினைவுக்கல் ஒன்னு வச்சிருந்தாங்க. இப்ப இருக்கா?! இல்லியான்னு தெரில.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இடமான தலைமைச்செயலகம்  இருக்கும் கட்டிடத்தோட பேரு புனித ஜார்ஜ் கோட்டை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். 1644  ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  சுத்திலும் அகழி சூழ்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களும், கதவுகளும் இதன் பழமையை பறைச்சாற்றுது. காலமாற்றத்தில் எத்தனை மாற்றம் இக்கட்டிடத்தில் செய்தாலும்  பழமை மாறாம இருப்பது ஆச்சர்யமே!
எனக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும். அங்க படிக்கனும்ன்னு நினைச்சேன்.  அங்கதான் வாக்கப்படனும்ன்னு  நினைச்சேன்..  அங்கதான் செட்டில் ஆகனும்ன்னு நினைச்சேன். ஆனா எதும் நடக்கல. பார்க்கலாம் எதிர்காலத்துலயாவது செட்டில் ஆகுறேனான்னு. சென்னைமேல் இருந்த மோகத்தால் சென்னை பத்தி எழுதிய பதிவு இன்னிக்கு உதவுது. வரிசையா பார்த்துட்டு வந்திருங்க /.... சென்னை தின கொண்டாட்டம் ஆக 20 முதல் 27 வரை கொண்டாடப்படுது. அதுக்காக தமிழக அரசு சார்பா பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டி, பேச்சு போட்டின்னு நிறைய போட்டிகள் களைக்கட்டுது. 






அண்ணா சமாதி

தி மெயில் கட்டிடம்...

ஹாப்பி பொறந்த டே டூ சென்னை

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470106
நன்றியுடன்,
ராஜி