மாகாகவி பாரதியார் தன் இறுதிகாலத்தில் வாழ்ந்த
திருவல்லிகேணி பாரதியார் இல்லத்தைதான் இந்தவாரம் மௌன சாட்சிகளில் நாம பார்க்கப் போறோம். கண்ணன் மேல் தீராத காதல் கொண்ட வீர கவிஞனின் வாழ்ந்த இடத்தில் நிற்கிறோம்ன்ற நினைவே நம்மை இனம்புரியா உணர்ச்சிகள் மனசுல கரைப் புரண்டோடுது.
வீட்டுக்குள் நுழைந்ததும்
தேடி சோறு நிதம்
தின்று
பலசின்னஞ் சிறு
கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக
உழன்று
பிறர்வாட பல செயல்கள்
செய்து
நரைகூடி கிழப் பருவம்
எய்தி -
கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை
போலே
நான்வீழ்வேனென்று
நினைத்தாயோ?ன்னு
பாரதி பாடியது காதோரம் கேட்டது பிரமையா!? இல்ல நிஜமா!? பெண்களின்
விடுதலைக்கு அன்றே அஸ்திவாரம் போட்ட முதல் கவிஞன் இந்த பாரதி தான். இந்த பாடல் எழுதப்பட்ட
சூழ்நிலையை பத்தி எங்க தமிழ் சார் அழகாக சொல்லுவார். அந்த நாட்களில் பாரதி
தன் மனைவி செல்லம்மாவின் தோளில் கையை
போட்டுக்கொண்டுதான் தெருவில் அழைத்துச் செல்வாராம். அப்படி செல்லும் போது, பெண்களை அடுக்களையில் வைத்து இருந்த அந்த காலத்தில், இப்படி செய்கிறாரே! என ஊரில் உள்ளவர்கள்
"பைத்தியங்கள் ஊர் சுற்ற கிளம்பி விட்டன"ன்னு பரிகாசம் செய்வார்களாம்.
அப்படி செய்பவர்களை பார்த்து செல்லம்மாள் வருத்தப்படுவாராம். தன்னால் தானே தன் கணவருக்கு இந்த அவமரியாதை என. அவளை சமாதானப்படுத்த பாடப்பட்ட பாடல்தானாம் இது. என்ன அற்புதமான புதுமை
சிந்தனையை கொண்டவன் இந்த பாரதி. வாங்க அவருடைய
நினைவு இல்லத்தின் உள்ளே போலாம். இங்க ஒரு நூலகமும் இயங்குது .
இந்த வீட்டுல அவரது மார்பளவு உருவச் சிலை ஒண்ணி வைக்கப்பட்டிருக்கு. மேலும் வீடு புதுப்பிக்கும் வேலைலாம் நடக்குறதால சில இடங்களை மட்டுமே பார்க்கமுடியும். அங்க இருபவர்கள் புகைப்படம் ஃபோட்டோ எடுக்க பெர்மிஷன் கொடுக்க தயங்குறாங்க. அங்க ஒரு தற்காலிக அலுவலகமும்
இயங்குது.
நமக்குத் தொழில்
கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
இதுதான்
அவர் ஃபோட்டோ, அவர் எழுதிய நூல்கள் அவருடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய
தொகுப்புகள் வைத்திருக்கும் அறைக்கு செல்லும் முகப்பு. அங்க அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு போட்டோ
இருக்கு. அதுல காம்பீரமா இருக்கிறார் நம் மீசைகவிஞன்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
இங்கே நிறைய ஃபோட்டோக்கள் இருக்கு. அவர் கையெழுத்துடன் கூடிய போடோஸ் இருக்கு அதில் சில போடோஸ் பத்தி பார்க்கலாம்
அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு அகராதி பிரதியுடன் போட்டோ கோப்பி வச்சு இருக்காங்க.
எட்டயப்புரத்தில் சின்னச்சாமி, லட்சுமி அம்மாளுக்கு 11.12.1882 அன்று பிறந்தார். தனோட 14 வது வயதில் 7வயது செல்லம்மாவை மணந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து அத்தையின் ஆதரவோடு காசியில் கல்விச் செல்வத்தை பெற்றார்.
தன்னோட 11 வயதில் எட்டயப்புரத்து சமஸ்தானத்துல பெரிய பெரிய புலவர்களால் சோதனைக்குட்பட்ட பாரதி புடம் போட்ட தங்கமாய் வெளி உலகத்திற்கு ஒளி வீசினார்.
இந்த வீட்டின் பழைய புகைபடம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்ப பாரதியார் புதுச்சேரியில் இருந்தார்.
பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
தன் வீட்டிலிருந்து தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது பாரதியின் வழக்கம். அப்படி ஒருநாள் இறைவனை தரிசிக்க செல்லும்போது தினமும் வாழைப்பழம் கொடுத்து தன் அன்புக்கு பாத்திரமான கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டு சில் நாள் உடல் நலிவாயிருந்து 12.9.1921 அன்று நள்ளிரவு தனது 39 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
பாரதியாரின் ஆயுட்காலம் போலவே என்னோட கேமரா ஆயுட்காலமும் (அதாங்க பேட்டரி) சீக்கிரமே முடிஞ்சுட்டுதால, நிறைய புகைப்படங்கள் எடுக்க முடியலை.
நிறைய படங்களோட வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.கடைசி படம் நெட்டுல சுட்டது.
பாரதியைப் பற்றிய அறிய தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteஇத்தனைமுறை சென்னை சென்றும்
ReplyDeleteஒருமுறை கூடப் பாரதி இல்லம் போகாதது
உங்கள் பதிவைப் பார்த்ததும் உறுத்தத்
துவங்கி விட்டது
அடுத்தமுறை அவசியம் சென்று
தரிசித்துவிடுவேன்
அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கண்டிப்பாய் போய்ப் பாருங்க.
Deleteசிறப்பு சகோதரி... பகிர்வு மிகவும் சிறப்பு.... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அக்கா எனக்கு முண்டாசு கவி பாரதியை ரொம்ப பிடிக்கும்.ஆனால் இதுவரை நினைவு இல்லத்துக்கு போனது இல்லை.இங்கு கேரளாவில் மலையாளம் படிக்கும் என் குழந்தைகளுக்கு பாரதி பாடலை சொல்லி கொடுக்கிறேன்.ஏதோ என்னால் முடிந்தது.
ReplyDeleteநல்ல விசயம்தான் சுபா. பாராட்டுகள்
Deleteஉங்கள பதிவின் வழியே எனக்கு ஒரு உறுத்தல். நானும் எத்தனையோ முறை சென்னைக்கு வந்து இருக்கிறேன். திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லம் சென்றதில்லை. சந்தர்ப்பம் அமையும் போது சென்று வர வேண்டும்.
ReplyDeleteகண்டிப்பாய் ஒரு முறை சென்று வாருங்கள் ஐயா!
Deleteபாரதியை பற்றிய தகவலுக்கு நன்றி அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteபாரதி வாழ்ந்த நினைவுச்சின்னம் மிக அழகாய் இருக்கிறது. மிக் அழகாய் புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். திருவல்லிக்கேணியில் இந்த நினைவிடம் எங்கிருக்கிறது?
ReplyDeleteதிர்வல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் பின் பக்க வாசலுக்கு நேர் எதிரே பாரதியார் இல்லம் இருக்குங்க.
Deleteபாரதியைப் பற்றி பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. சென்னையில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் பார்த்துவிட்டேன் என்று இருந்த எனக்கு தங்களின் இந்த பதிவு, "அடேய், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கிறது" என்று சொல்லாமல் சொல்லிவிட்டது.
ReplyDeleteசென்னையிலேயே பிறந்து சென்னையிலே வளார்ந்து வாழ்ந்து வந்தாலும் பார்க்காம மிச் பண்ணிட்ட இடங்கள் கண்டிப்பாய் இருக்கும்.
Deleteமுண்டாசு கவிஞனின் அருமை முரட்டு யானைக்கு தெரியாமல் போனதுதான் சோகம் !
ReplyDeleteத .ம +1
நிஜம்தானுங்க
Deleteசிறப்பான தகவல்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்த்துக்கும் நன்றிங்க ஆதி!
Deleteநல்ல பதிவு சகோதரி, பாரதி வாழ்ந்த வீட்டை மிக அருமையாக காட்டி உள்ளீர்கள் !
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து பாராட்டியமைக்கும் நன்றி சுரேஷ்!
Deleteபாரதி பற்றிய தகவல்களும் படங்களும் அருமை.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராஜி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!
Delete