Wednesday, February 19, 2014

சென்னையும் சிவப்பு நிற கட்டிடங்களும் .மௌனச்சாட்சிகள்

கடந்த சில நாட்களாக மதராசப் பட்டணத்திலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில் உருமாற்றங்களை சந்தித்த சென்னையின் புகழ்பெற்ற இடங்களின், பயண பாதைகளின் வரலாற்றை மௌனசாட்சிகளில் பார்த்து வந்தோம். சில நாட்களாக, நேரமின்மைக் காரணமாக சில இடங்கள் பத்தி விரிவாக சொல்ல முடியல.அடுத்தடுத்த வாரங்களில அதைபத்தி விரிவாப் பார்க்கலாம்.

நம்ம சென்னை நகர்ல பார்த்தோம்னா நிறைய பழங்காலக் கட்டிடங்கள் எல்லாமே சிவப்பு கலரில்தான் இருக்கும். இது என்ன ட்ரேடு மார்க்ன்னு சில சமயம் புரியாது. எப்படி இப்ப இருக்கிற சில அரசு கட்டிடங்கள் பெரும்பாண்மையா மஞ்சள் கலரிலும், பச்சை கலரிலும் இருக்கிறதோ அதேமாதிரி தான் இருக்கும்ன்னு நினைச்சு கிட்டேன்.


உதராணத்திற்கு ராயபேட்டை அரசு மருத்துவமனை பழைய கட்டிடமானாலும் கம்பீரமா இருக்கும்.  அதன் வரலாற்றைப் பார்த்தோம்னா பிரிட்டிஷ்காரங்க சுத்திச் சுத்தி பீச் பக்கமாகவே இருந்ததுனால அவங்களுக்குன்னு ஒரு மருத்துவமனை தேவைபட்டப்ப, அப்ப இருந்த சென்னை பிரெசிடென்சில முக்கிய பொறுபில இருந்த மோர் என்பவர் ஒரு செட்டியிடம் கான்ட்ராக்கட் விட்டு கட்டியதாக சொல்வாங்க. வருஷம் கூட 1912 ல ஆரம்பிச்சு 1914 ல கட்டப்பட்டு திறக்கப்பட்டதாக சொல்வாங்க. 

அதேமாதிரி, பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலைக் கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவைகளும் சிவப்புக் கட்டிடத்துக்கு உதாரணங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு ஆராய்ந்து பார்த்ததுல என் சிற்றறிவுக்கு எட்டிய சில விசயங்களைத் தெரிந்துகொள்வோம். வாங்க!

தாட்டிக்கொண்ட நம்பெருமாள் செட்டியார் என்பவர் சிறந்தக் கட்டட மேதை.  பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்தவர். மேற்கூறிய கட்டிடங்கள் எல்லாம் இவர்தான் கட்டினார். எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு முழுக்க அவருக்கு சொந்தமாக இருந்தது என சொல்லபடுகிறது. அதனால், "செட்டியார் பேட்டை' என அழைக்கப் பட்டது. நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "சேட்பெட்' என மாறிவிட்டது. 


அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர். அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக இருக்கிறது. உதாரணமாக, ஹாரிங்டன், பாந்தியன் என.

இதுதான் பழைய சேத்துப்பட்டு கிராமம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு கிராமமாகத் தான் இருந்திருக்கிறது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கோட்டைக்கு அருகில் இருந்த கிராமங்களை வாங்கத் தொடங்கினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய கிராமங்களின் வரிசையில் மெட்ராசுடன் இணைந்ததுதான் சேத்துப்பட்டு. ஆனால் அப்போது இதன் பெயர் என்ன என்று சரிவர யாருக்கும் தெரியவில்லை.

ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் இந்தப் பகுதியில் நிம்மதியாக வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு கப்பல் ஏறி போயாச்சு, சுத்தமான ஊராச்சுங்கிர மாதிரி இங்கிலாந்திற்கு கப்பல் ஏறினர். அப்போது இங்கிருந்த அவர்களின் வீடுகளைச் செல்வச் சீமான்களான செட்டியார்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் செட்டியார்கள் நிறைந்த பகுதியாக இது மாறியதால் செட்டியார்பேட்டை அல்லது செட்டிப்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் சேத்துப்பட்டு பெயர் வந்ததுன்னும் சொல்றாங்க. எது எப்படினாலும் அந்த காலக்கட்டங்களில் வாழ்ந்தவங்களுக்கே அதுலாம் வெளிச்சம். இன்றைக்கு நமக்கு அது வெறும் வரலாறு. அந்த சமயத்தில் அவங்களுக்கு அது போராட்டமாக இருந்திருக்கும்!!

இதுல ஆச்சர்யம் என்னனா, நிறைய விசயங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன. ஆனா ஒரு பாட்டுல சொன்ன மாதிரி, மாறாதையா மாறாது! மனமும், குணமும் மாறாதுன்ற மாதிரி இந்த சம்பவம் இது 1973 ல இருந்த காலேஜ் மாணவர்கள் அப்பவே இப்படிதானான்னு கேட்கும் போது இல்ல எப்பவுமே இப்படிதான்னு சொல்கிற மாதிரி இருக்கு.

இப்பொழுதும் மாணவர்கள் செய்கிற வேலையும் கொஞ்சகூட மாறவே இல்ல. ஆனா அடுத்தவாரம் தன் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றிகொண்ட ஒரு கட்டிடத்தின் வரலாற்றோட மௌன சாட்சிகளில் சந்திக்கலாம்.

22 comments:

 1. Replies
  1. பார்த்து கண்கள் கலங்கி நின்னுட்டேன்க்கா! இந்த அன்புக்கு என்ன பதில் மரியாதை செய்யப் போறேன்!?

   Delete
 2. ஆஹா ....நான் தான் முதலாளா ?....இப்போதைக்கு போகின்றேன் திரும்பி
  வருவேன் திக்கும் பகிர்வினைக் கண்டு மகிழ .முதலில் ஓடி வாருங்கள்
  நான் போட்ட அன்புப் பகிர்வைக் காண .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பைக் கண்டேன்

   Delete
 3. எப்பவுமே இப்படித்தான்....

  நெகிழ்ந்த பகிர்வுக்கு செல்கிறேன் சகோதரி...!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் அப்படித்தானா!?

   Delete
 4. ஒ அப்போ செட்டியாரோட பேவரிட் நிறம் சிவப்போ ?
  மஞ்சள் ,பச்சை சூப்பர் !
  எவ்வளவு மெனக்கட்டு தகவல் தருகிறீர்கள் !!

  ReplyDelete
 5. அந்தக்கால சென்னையை நினைவூட்டிய படங்கள் அருமை! வழக்கம் போல கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ!

   Delete
 6. செட்டியார்பேட்டை இப்படித் திரிந்து போனதா?

  அம்பாளடியாள் தளத்தில் பார்த்து வந்தேன்..நெகிழ்ந்து வந்தேன்..வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்

   Delete
 7. சேத்துப்பட்டு கிராமம் படம் பிரமாதம்!

  ReplyDelete
  Replies
  1. நெட்டுல சுட்டதுங்க

   Delete
 8. சேத்துப்பட்டு பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன். கல்லூரி மாணவர்களின் போக்கு கவலைக்குரிய செய்தி. தகவல் பகிர்வுக்கு நன்றி ராஜி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா!

   Delete
 9. அக்கா, வெளிநாடுகளிலும் நான் பார்த்திருக்கிறேன், அரசாங்க கட்டிடங்கள் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே அது போல் அடர் சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டிருக்கும்.. ஆனால் ரிப்பன் பில்டிங் ஏன் வெள்ளையாக விட்டுவிட்டார்கள்.. (ரிப்பனுக்கு பிடிச்ச கலரோ?)

  சேத்துப்பட்டு பற்றிய தகவல் அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆவி!

   Delete
 10. கலர் சூட்சுமம் இப்போதானே தெரியுது மும்பையும் இப்படிதான் இருக்கு !

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! மும்பைக்கு வந்து உங்க வூட்டுல டேரா போட்டு எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டு வர வேண்டியதுதான்

   Delete
 11. மாணவர்கள் என்னைக்குங்க மாறியிருக்காங்க?

  ReplyDelete
 12. சேத்துப்பட்டு பெயர்க்காரணம் இதுதானா?... நல்ல பகிர்வு அக்கா...

  அம்பாளடியாள் சகோவின் வலைத்தளமும் பார்த்தேன்... உங்களுக்கான அருமையான பரிசக்கா அது...

  ReplyDelete
 13. சேத்துப்பட்டு.... பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன.

  தொடரட்டும் மௌன சாட்சிகள்....

  ReplyDelete