புதன், டிசம்பர் 11, 2013

அண்ணா சமாதி - மௌனச்சாட்சிகள்

மௌன சாட்சிகளில் நாம இன்னைக்கு பார்க்க போறது சென்னை மெரினா பீச்சுல இருக்குற அண்ணா சமாதி.  தமிழ் நாட்டில் எந்த மூலை முடுக்குக்குப் போனாலும் அங்கே நிச்சயம் அண்ணாவின் பெயரில் ஒரு பேருந்து நிலையமோ இல்ல ஒரு நகரோ இல்ல ஒரு தெருவாவது அவரோட பேருல கட்டாயம் இருக்கும்.

அவ்வளவு சிறப்பு மிக்க தலைவரா வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. அப்பேற்பட்ட தலைவரின் பூத உடல் உறங்கும் அவருடைய சமாதியைதான் நாம பார்க்கபோறோம். இதுதான் உள்ளே செல்லும் வழி 


  15.9.1909 ல காஞ்சிப்புரத்து நடராஜன், பங்காரு அம்மாளுக்கு ஆறாவது பிள்ளையாய் பிறந்தார். சி.என். அண்ணாதுரை. சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் நீதிக்கட்சியில சேர்ந்து, பின், கருத்து வேறுபாட்டால் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து 1967ல தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அண்ணா, வெத்திலை, மூக்குப்பொடி போடும் பழக்கம் உடையவர். முதல்வரான ரெண்டாவது வருசமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார், மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடாக்கியதாலும், ஹிந்தி, ஆங்கிலம்,தமிழ் என மும்மொழி ஆட்சி திட்டத்தை மாற்றி, ஆங்கிலம், தமிழ் என இருமொழி ஆட்சி திட்டத்தை கொண்டு வந்ததால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

 30 டூ 40 வயசுக்குள்ள இருகிறவங்களுக்கு படம் பார்க்க  தியேட்டருக்கு போகும் போது, படத்துக்கு முன் நியூஸ் ரீல் பார்த்த அனுபவம் இருக்கும் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன பெரும்பாலும் பிளாக் அண்ட் வொயிட்லதான் ஒரு நியூஸ் ரீல் காண்பிப்பாங்க. ஒரு குரல் 1950 -ம் ஆண்டுன்னு ஆரம்பிச்சு, அங்க சண்டை , இங்க பஞ்சம்ன்னு எதாவது போட்டு கழுத்தறுப்பாங்க. நீயூஸ் ரீல் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் தமிழ்நாடு திரைப்பட துறைன்னு இந்த யானை தந்தம் போல இருக்கிற அண்ணா சமாதில இருக்கிற இந்த சிம்பல்தான் காண்பிப்பாங்க. அந்த நியூஸ் ரீல் முடிஞ்ச உடனே, அறுவை முடிஞ்சு படம் பார்க்கும் ஆவல்ல எல்லோரும் பட படன்னு கைதட்டுவாங்க. ஐயோ! இங்கயும் எதாவது நியூஸ் ரீல் போடுவாங்களோன்னு இந்த தந்தத்தை பார்த்தவுடனே எனக்கு மெல்லிசா ஒருபயம் வந்துச்சு!!

உள்ளே நுழைஞ்ச உடனே இடப்பக்கம் கவியரசர் கம்பர் சிலை வச்சு இருக்காங்க. இந்த சிலை திரு.பக்தவச்சலம் அவர்களால் உலக தமிழ் மாநாடு 1968 -ல் சென்னை அண்ணாநகர் பூங்காவில் நடை பெற்றதன் நினைவு சின்னமா இதை திறந்து வைத்தார்ன்னு அங்க குறிச்சு வச்சிருக்காங்க. 
வலதுப்பக்கம் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளுக்கு தமிழ் அறிஞர் மா.பொ.சி அவர்கள் முன்னிலையில் 1971 -ம் ஆண்டு இந்த சிலை திறக்கபட்டுளாதாக குறிப்பும் காணப்படுது. உள்ளே அவருடைய வாழ்க்கை குறிப்புகள் சுருக்கமா எழுதி வச்சிருக்காங்க.
தூரத்துல இருந்து பார்க்கும்போதே தெரியும் விதமா பளிங்கு கற்களால் அழகாக கட்டப்பட்டிருக்கு இந்த சமாதி. இங்கு அவரது மார்பளவு சிலை ஒண்ணும் வைக்கப்பட்டிருக்கு. நடுவில் அழகிய புல்வெளி அமைத்து அதுக்கு நடுவுல ஒரு பெண் சங்கு முழங்கும் சிலையும் அமைக்கப்பட்டிருக்கு.  இந்து முறைப்படி அவர் வாழ்ந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் ன்னு உறுதியா இருந்தார்.
 

அதைப்போலவே அவருடைய சமாதியிலும் எதிரொலித்தது அனைவரும் சமம் எனபது போல காசு உள்ளவர்களும் ஓய்வெடுத்து போட்டோக்கள் எடுத்து கொண்டு இருந்தனர் காசு இல்லாதவர்களும் அங்கே தங்கி ஓயவெடுகின்றனர் காதலர்கள் சேட்டைகள், வியாபாரிகளின் வியாபாரம் ன்னு அனைத்தும் ஒரே இடத்தில சமமாக இருக்கு.
அழகா கீறி, மிளகாய்தூளும், உப்பும் போட்ட மாங்காயை வாங்கி சாப்பிட்டுக்கிட்டே சமாதியை சுத்திப் பார்த்தோம். படிக்குற பசங்களே ஆனாலும் இந்த இடங்களைப் பார்க்கும் ஆவல் பசங்களுக்கு இல்ல. எப்ப பீச்சுக்கு போறதுன்னு ஒரே தொணதொணப்பு.
மேடையில் மணிக்கணக்காய் பேசும் ஆற்றல் கொண்டவர் அண்ணா. அப்படிப்பட்டவர், ஒரு மேடையில் வெறும் 1 நிமிடம் பேசிய அற்புதம் நிகழ்ந்தது. அது தேர்தல் நேரம். நைட் பத்தரைக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சாக வேண்டிய கட்டாயம்.

அண்ணா அவர்கள் பேச வெறும் ஐந்து நிமிடங்களே இருந்தது. மேடையேறி மைக்கைப் பிடித்த அண்ணா, நேரமோ பத்தரை. உங்களை தழுவுது நித்திரை. திமுகவுக்கே போடுங்கள் முத்திரை”ன்னு பேசி தன் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டா
சிறுகதை, நாடகம், புதினம், என ஏராளமாய் எழுதி, தன் நாடகங்களை இயக்கி நடித்துமிருக்கிறார். படிக்கும்போதே ராணி அம்மையாரை மணந்தார். தங்களுக்கென வாரிசுகள் இல்லாததால் தன் அக்காளின் பேரப்பிள்ளைகளை எடுத்து வளர்த்தார். இருக்கும்போது மட்டுமில்லாமல் இறந்தப் பின்னும் சாதனை படைத்தவர் அண்ணா. அண்ணாவின் இறுதி ஊர்வலத்துல 1 கோடியே 50லட்சம் பேர் கலந்துக்கொண்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு மேடைகளில் முழங்கி அதேப்போலவே வாழ்ந்தும் காட்டியவர். கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்து அண்ண மறைந்தப் போது அவரின் சொத்துக்கள் காஞ்சிப்புரத்திலயும், சென்னையிலயும் ஒவ்வொரு வீடும், பேங்க்ல வெறும் ஐயாயிரம் ரூபாயும் மட்டுமே. இதை இப்போதைய தலைவர்கள் உணர்ந்தால் நல்லது.
அண்ண சமாதியில் அவர் பயன்படுத்திய பொருட்கள், முக்கிய நிகழ்வுகளின் ஃபோட்டோக்கள்லாம் வச்சிருக்காங்க. நேரு, இந்திரா, ராஜாஜி, பெரியார், அண்ணாவின் குடும்பத்தார், இப்போதைய தலைவர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், இப்போதைய முதல்வர், அந்தக் காலத்து நடிகர்களுடன் கூட அண்ணா இணைந்திருக்கும் புகைப்படங்கள் வச்சிருக்காங்க. அவரோட இறுதி ஊர்வலத்தோட படங்களும் இருக்கு.

அடுத்த வாரம் வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக பார்க்கலாம். 

24 கருத்துகள்:

 1. இளைய தலைமுறை யினா் அண்ணா ,காமராசா் இவா்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் தன்னலமில்ல தலைவர்கள் இருந்தார் என அறியட்டும் அக்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் முன் தலைமுறை தலைவர்களைப் பற்றி நம் பிள்ளைகள் தெரிஞ்சுக்கனும். ஆனா, போலி நாகரீகம் அதை தடுக்குது.

   நீக்கு
 2. படங்களுடன் விளக்கம் அருமை சகோதரி... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   நீக்கு
 3. ///தமிழ் நாட்டில் எந்த மூலை முடுக்குக்குப் போனாலும் அங்கே நிச்சயம் அண்ணாவின் பெயரில் ஒரு பேருந்து நிலையமோ இல்ல ஒரு நகரோ இல்ல ஒரு தெருவாவது அவரோட பேருல கட்டாயம் இருக்கும்.///

  உங்க அண்ணா பெயரில் சில தெருக்கள்தானே உண்டு பேருந்து நிலையமோ இல்ல ஒரு நகரோ இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏட்டிக்கு போட்டியாய் பேசுறதுன்னே முடிவு பண்ணிட்டா என்ன செய்ய!?

   நீக்கு
 4. ///பூத உடல் உறங்கும் அவருடைய சமாதியைதான் நாம பார்க்கபோறோம். ///

  என்னங்க தலைவரோட உடலை பூத உடல் என்கிறீர்கள் உங்களுக்கு கிண்டல் ஜாஸ்திதானுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணி ஏன் பூரிக்கட்டையால வாய்லயே குத்துறாங்கன்னு இப்பதான் தெரியுது!!

   நீக்கு
 5. உங்களுடைய மௌன சாட்சி, அடுத்த தலைமுறையினரை பேச வைக்கும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 6. உண்மைகள் புதைக்கப்பட்டிருக்கிறது...

  எப்போதும் உண்மைகள் புதைக்கமட்டுமே படும்...

  பதிலளிநீக்கு
 7. அழகான படங்களுடன் அருமையான பதிவு.

  நேரிலேயே சென்று பார்த்தது போல் இருந்தது.
  நுழைவாயிலைப் பற்றி சொன்ன விதம் மனத்தில் சிரிப்பை உண்டாக்கியது.
  வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 8. பக்கம் பக்கம் இருக்கிற அண்ணா சமாதியையும் எம்ஜியார் சமாதியையும் ரெண்டு பக்கமா பிரிச்சு ( தனித்தனி பதிவு) போட்டுட்டீங்களே நியாயமா? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் தினம் ஒரு பதிவா எப்படி தேத்துறதாம்!?

   நீக்கு
 9. படங்களும் செய்திகளும்
  மிக அருமை சகோதரி.

  பதிலளிநீக்கு
 10. அண்ணா சமாதியை அழகா சுத்தி காட்டியிருக்கீங்க...அவரோட வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமா சிறப்பா சொல்லியிருக்கீங்க... நன்றி...

  பதிலளிநீக்கு
 11. அருகிலுள்ள தலைவர் பற்றி சொல்லலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன வாரமே தலைவரை பத்தி போட்டாச்சு. நீங்க ரொம்ப லேட். இங்க போய் பார்த்துட்டு வாங்க. http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_4.html

   நீக்கு
 12. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அண்ணாவா?

  சரி சரி!

  ரசித்தேன்!

  பதிலளிநீக்கு