சென்னை மவுண்ட் ரோடு புதிய
தலைமைய கட்டிடம் எதிரில் P.R.R
& Sons வாட்ச் கடைப் பக்கம் The mail அப்படிங்கிற
ஒரு கட்டிடம் இருக்கு. யாராவது அதைப் பார்த்து இருகிறீங்களா!? நான் பலமுறை அதை கடந்து
போகும்போது பார்த்திருக்கேன். அது என்ன கட்டிடம்ன்னு சரியாத் தெரியாது. கடைசியா சென்னைக்கு வந்தப் போது அந்தப் பக்கம் போகும்போது அது என்னக் கட்டிடம்ன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு ஆர்வம் வந்துச்சு. அதுக்குக் காரணம் இப்பதான் நாம பிரபல பதிவராகிட்டமே!! அதான். (சகோஸ்!யாரும் கல்லெடுக்காதீங்க! ப்ளீஸ்).
இந்தவாரம்
மௌன சாட்சிகளில் The mail(1868-1968) கட்டிடத்தை பற்றி தெரிந்து
கொள்ளலாம். வாங்க !
இப்பத்திய இந்த The Mail Newspaper, ஆரம்ப காலங்களில் The Madras Mail என அழைக்கப்பட்டது. பின்னர் The Mail என அழைக்கப்பட்டது. இதன் ஆண்டு 1868 - 1968. நம்ம பழைய
மதராசபட்டினம் பார்த்தோம்ன்னா அது ஒரு நீண்ட இதழியல் பாரம்பரியம் கொண்டது. முதன்
முதலாக வெளிவந்த பத்திரிகை 1780 ல்
வெளியிடப்பட்டது.
அதன்பிறகு மெட்ராஸ் கொரியர் இது
ஆங்கிலமொழி செய்தித் தாளாக வெளிவந்தது. இது வெளியிடப்பட்ட ஆண்டு 1785 அக்டோபர் 12. ரிச்சர்ட் ஜன்ஸ்ட்சன் என்பவர் கிழக்கிந்திய கம்பெனி
அச்சகத்தின் மூலம் வெளியிட்டார். அதன்பிறகு வந்த காலக்கட்டங்களில் பல்வேறு செய்திதாள்களும், வாரப் பத்திரிகைகளும் பல்வேறு தலைப்புகளில்
வெளிவந்தன. 1830 ல் மேலும் The Spectator மற்றும் The Madras Times என இரண்டு பத்திரிகைகள் வெளிவந்தன. பின்னர் 1859 ம் ஆண்டு ஜஸ்டினியன் கட்ட்ச் என்வரால் The Madras Times எடுத்து நடத்தப்பட்டது இவர் ஏற்கனவே மெட்ராஸ் பிரெசிடென்சி பிரோட்வேயில் கண்ட்ஸ் அண்ட் சன்ஸ் ன்னு ஒரு பதிப்பகமும், புத்தகக் கடையும் நடத்தி வந்தார். 1859 ம் ஆண்டு இந்த மெட்ராஸ் டைம்ஸ் சென்னை பிரெசிடென்சியின் வருமான வரி விதிப்பால் கடுமையாக போராடியது.
அந்தச் சமயத்தில் இரண்டு பெரிய பத்திரிகையாளர்களான சார்லஸ் லாசன் மற்றும்
ஹென்றிகோமிஸ் கைக்கு மாறியது. இவர்கள்தான்
தி மெட்ராஸ் மெயில் என்று பெயர் மாற்றம் செய்து அக்டோபர் 15 ம் தேதி 1868 ல் வெளியிட்டனர். அந்த சமயத்தில் இது மிகவும் பிரபலமான பத்திரிகையாக செயல்பட்டது.
இந்தச் செய்தித்தாள் நிறுவனம் பல்வேறு வளாகங்களில் மெட்ராஸ் பிரஸ்ட் லைன் பீச் மற்றும் செகண்ட் லைன் பீச்லயும் இயங்கியது. லாசன் 1862 நவம்பர்
12 ல் மெட்ராஸ் வர்த்தகசபையின் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் 30 வருடங்களாக
இந்த பதவியில் இருந்தாலும் பெரும்பான்மையான விஷயங்களில் அப்பொழுது இருந்த ஆங்கில
அரசின் தலையீடுக் காரணமாகச் சிறப்பாக செயல்படமுடியவில்லை என சொல்லபடுகிறது. த மெட்ராஸ் மெயில் க்காக ஒரு புதிய
கட்டிடம் கட்டப்பட்டு 1869 ல் புதிய கட்டிடத்திற்கு மாற்றபட்டது மேலே இருப்பது த மெட்ராஸ் மெயில் பத்திரிகையை ஆரம்பித்த இருவர்களில் ஒருவரான சார்லஸ் லாசன்னுடைய வரைபடம்.
இது 1944 ல எடுக்கப்பட்ட படம் லாசன் பின்னர் 1887 ல் மெட்ராஸ் பிரெசிடென்சியில் இங்கிலாந்து மகாராணியின் ஆட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றார். பின்னர் 1892 ம் ஆண்டு லாசனுடைய மகன் AE லாசன் தன்னுடைய தந்தையிடம் இருந்து பொறுப்பை ஏற்று நடத்தி சேம்பர் செயலாளராகவும் பொறுபேற்று கொண்டார். 1917 ல அவர் இங்கிலாந்து திரும்பும் வரை இந்த பத்திரிகையை நிர்வாகம் செய்தார் அதன்பிறகு அதன் பிறகு TE வேல்பி என்பவர் எடிட்டர் ஆக பொறுபேற்றுக் கொண்டார்.
பின்னர் 1928 ம் ஆண்டு அதன் அசோசியேட் பப்ளிஷர்களினால் த மெயில் என மாற்றிஅமைக்கப்பட்டது. அதன் புதிய நிர்வாகத்தின் கீழ், A.A.ஹெல்ஸ் என்பவரது ஆசிரியர் பொறுப்பில் மெட்ராஸ் மெயில் பத்திரிகை மவுண்ட் ரோடு அலுவலகத்தில் 1928 முதல் 1955 வரை இந்த அலுவலகத்தில் சிறப்பாக இயங்கியது இந்த தினசரி.
மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு இடத்திலிருந்து மௌன சாட்சிகளில் சந்திக்கலாம்
நூற்றாண்டுகள் கண்ட இந்த செய்தித்தாள் நிறுவனம் அதன் பயணப் பாதையில் 1945 ல் ஹிக்கின்பாதம்ஸ்சை வாங்கிய அமல்கமசன்ஸ் குருப் நிறுவனத்தினரால் வாங்கப்பட்டது. அதன் பிறகு இந்த செய்தித்தாள் 1981 வரை வெளிவந்ததாகவும், பின்னர் மூடபட்டதாகவும் சொல்கிறார்கள்
இந்த நாளிதழை வாசித்தவர்கள் அதுப்பற்றியத் தகவல்களை இங்குப் பகிரலாம். தெரியாதவர்கள் தெரிந்திக் கொள்ள வசதியா இருக்கும்.
இவ்வளவு வரலாற்றையும் தாங்கிக்கொண்டு இன்று அந்த இடம் மௌன சாட்சியாக வெற்றிடமாகத் தனியாக இருந்தாலும் அது மிகவும் தூய்மையானதாக காட்சியளிக்கிறது.
மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு இடத்திலிருந்து மௌன சாட்சிகளில் சந்திக்கலாம்
நான் தினசரி பஸ் ஏறி செல்லும் பஸ்டாப் பி ஆர் & சன்ஸ் பல முறை பார்த்து இருக்கிறேன். ஆனால் முழுதகவல் அறிந்தது இன்றுதான். பகிர்வு அருமை பாராட்டுக்கள்
ReplyDeleteஇன்னிக்காவது தெரிஞ்சுக்கிட்டீங்களே! அதுக்கே ஒரு சபாஷ் போடலாம் உங்களுக்கு!
Deletetha.ma 2
ReplyDeleteஅருமையான தகவல்கள்.. புதிய பக்கமான மவுன சாட்சிகள்..உங்களை ஒரு அருமையான பதிவராக கைகாட்டுகிறது....அதனால் பிரபல பதிவர் எனக் கிண்டலடிப்பதாக ஏன் சொல்லிக்கறீங்க ராஜி...அது உண்மைதான்..
ReplyDeleteபூவோடு சேர்ந்த நாறும் மணப்பதுப் போல உங்களைப் போன்றா பிரபல பதிவர்களோடு சேர்ந்ததால் நானும் பிரபல பதிவர்தான் எழில்!
Deleteமெட்ராஸ் மெயில் பத்திரிகை பற்றிய தகவல்களை மூத்த பதிவர்களுக்கு தான் தெரியும் சகோ... உங்களின் தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!
Deleteதங்களின் தகவலுக்கு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html
தகவலுக்கு நன்றி!
Deleteசெய்திதாள் பத்தின நல்ல செய்தி இந்த பத்திரிகையின் ஏதாவது ஒரு காப்பி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகூகுள் ஆண்டவர்கிட்ட சொல்லி தேடிப் பார்த்தும் கிடைக்கலீங்க அமிர்தா!
Deleteநான் சிறுவனாக இருந்த காலத்தில் மெய்ல் (மாலைப் பதிப்பு) பத்திரிகை தினமும் எங்கள் வீட்டுக்கு வரும். என்னுடைய தாத்தாவுக்கு மிகவும் பிடித்த செய்தித்தாள் அது. உங்கள் பதிவு அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தது. அதற்காகவே உங்களுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
Deleteதி மெயில் பத்த்ரிக்கை 60 களில் மாலை பதிப்பாக சென்னையிலும் மறுநாள் காலையில் தமிழ்நாட்டின் மற்ற ஊர்களிலும் கிடைக்கும்.தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் கழித்த மெயில் சுதந்திர இந்தியாவில் எந்த பாதையில் போவது என்று அறியாமல் தடுமாறியது.விளம்பர பலமும் அவ்வளவாக இல்லை என்றே நினைக்கிறேன்,உரிமையாளர்களுக்கு தங்களுடைய மற்ற தொழில்களில் இருந்த அக்கறை பத்திருக்கையில் இல்லை.கடைசி காலத்தில் simpson group தான் உரிமையாளர்கள்.எப்படியோ வெள்ளைகாரனுக்கு வால்பிடித்த பத்திரிகை மறைந்துவிட்டது,அது வாழ்ந்த காலத்தின் பெருமையை அந்த கட்டிடம் பேசுகிறது.
ReplyDeleteஅந்தக் கட்டிடம் பற்றிய கூடுதல் தகவல் உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்களேன். எல்லோரும் தெரிந்துக் கொள்ள உதவும்
Deleteஅருமையான தகவல்களை அசத்தலா பகிர்ந்திருக்கிங்க...தொடருங்கள் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சசி!
Deleteதெரிந்துகொண்டோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி!
Deleteஇதை நினைவிடமாக ஆக்கி பொதுமக்கள் சுற்றிப் பார்க்கும் வண்ணம் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் !
ReplyDeleteஅறிய தந்தமைக்கு நன்றிம்மா...
நிஜம்தான்! ஆனா, நடவடிக்கை எடுக்கும் பதவியில் நாமில்லையே!
Deleteமவுன சாச்சிய சொம்மா சவுண்டா சொல்லிக்கினம்மே...! சோக்கா கீதும்மே...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
சத்தமா சொல்லியாவது விடிவுக்காலம் கிடைக்குதானு பார்க்கலாம் சகோ!
Deleteஇந்த கட்டிடடத்தை எத்தனையோ முறை பார்ர்த்திருக்கிறேன். அவ்வழியே நடந்தும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த கட்டிடத்துக்கு பின்னால் இவ்வளவு சங்கதிகள் இருப்பதை இன்று தான் தெரிந்துக்கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅடுத்த முறை அந்தப் பக்கம் போகும்போது ஒரு நிமிடம் நின்று உற்றுப் பாருங்கள். ஆயிரம் கதைகளை உங்களோடு அது பகிர்ந்துக் கொள்ளும்
DeleteI think you have got enough materials to publish a book on this title. Very very interesting and also quite knowledgeable too. Please keep it up.
ReplyDeleteநல்ல தகவல்கள்....
ReplyDeleteதொடரட்டும் மௌன சாட்சிகள்....
பல தகவல்கள் அறிந்தேன். தேடலும் தெரிதலும் உங்களுக்கு மட்டுமல்ல நீங்கள் சொல்லி நாங்கள் கேட்டலும் சிறப்பே
ReplyDeleteதிருநெல்வேலிக்கு என் அப்பாதான் அப்போ ஏஜண்ட்.
ReplyDelete