Friday, May 11, 2012

வாழ்க்கையின் வலி புரிய....,

  


சில பொழுதாவது சோகப்படு....,

ஆனந்தத்தின் அருமை புரியும்.

யாருக்காவது கண்ணீர் விடு.....,

புன்னகையின் பெருமை புரியும்.



ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று....,

வறுமையின் கொடுமை தெரியும்.

மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா....,

அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும்.



மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்....,

கல்வியின் அவசியம் தெரியும்.

அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார்...,

மரணத்தின் வேதனை புரியும்.



குற்றவாளிகளின் கதறலைக் கேள்.....,

முன்கோபத்தின் பின்விளைவு புரியும்.

காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர்....,

வாழ்க்கையின் வேகம்தெரியும்.



கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள்...,

வாழ்க்கையின் தாகம் புரியும்.

உழைக்கும் சிறுவர்களை உற்றுப்பார்....,

வாழ்க்கையின் அச்சம் தெரியும்.



உயர்ந்தவர்களின் வரலாறு படி..,

வாழ்க்கையின் வலி புரியும்.

21 comments:

  1. //ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று....,

    வறுமையின் கொடுமை தெரியும்.
    //

    இதை அனுபவத்தில் கண்டுள்ளேன்

    ReplyDelete
  2. ஆஹா வாழ்க்கை தத்துவங்கள் மலையாக ச்சே மழையாக பொழிகிறதே....!!!

    ReplyDelete
  3. அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புதமான கருத்துக்கள்! நன்று!

    ReplyDelete
  4. வரிக்கள் அனைத்தும்
    வாழ்வியல் கூறுகள்
    புரிந்தால் நலமே
    போதனை வளமே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. அருமை அருமை
    மிகவும் ரசித்த பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கவிதை எழுது அது
    எவ்வளவு கஷ்டம்னு புரியும்(ச்சும்மா).
    அனைத்து வரிகளுமே சிந்திக்கவைப்பவை.

    ReplyDelete
  7. சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள். சிறப்பாக இருக்கு, ராஜி.

    ReplyDelete
  8. ராஜி உங்களின் இந்த கவிதையை படித்தால்
    வாழ்க்கையின் தத்துவங்கள் புரியும்.

    ReplyDelete
  9. பணத்தின் மீது மோகம் அதிகரிப்பது என்றாவது அதன் அருமை தெரியும் போதுதான் ..!

    ReplyDelete
  10. raji!

    azhakaakavum!
    arththamaakavum-
    sonneenga!

    ithu kavithai alla!
    pon mozhikal!

    ReplyDelete
  11. //மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்....,

    கல்வியின் அவசியம் தெரியும்.//

    கல்விக்கும் மொழிக்கும் தொடர்பில்ல -:)

    ReplyDelete
  12. arppudhamaana vazhkkai vali padhivu
    nandri
    surendran

    ReplyDelete
  13. >>உயர்ந்தவர்களின் வரலாறு படி..,

    நான் 6 அடி உயர்ந்தவன், அப்போ என் டைரியை டெயிலி படிச்சா போதுமா? ஹி ஹி

    ReplyDelete
  14. வாழ்க்கை தத்துவங்கள் அருமை அக்கா

    ReplyDelete
  15. தெரியும்..தெரியும் என்று நற் கருத்துகள் தொடர். நல்ல கவிதை. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்க்கையை சுவைபட சொல்லியிருக்கும் விதம் சிறப்பு உண்மையில் உலகத்தை அப்போதுதான் முறையாக புரிந்து கொள்ள இயலும் சிறப்பு

    ReplyDelete
  18. பலவற்றை உணர்ந்ததுண்டு........உண்மை தான்!!!

    ReplyDelete