Monday, July 08, 2013

கர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் என்ன?! -ஐஞ்சுவை அவியல்

 
ஏனுங்க மாமா! இந்த சீலை நல்லா இருக்கா?!  

ம்ம் நல்லா இருக்கு. சீக்கிரம் கிளம்பு. நீ ரெடியாகுறதுக்குள்ள,  கோமதிக்கு வளைக்காப்பு முடிஞ்சு குழந்தையே பொறந்திடும் போல இருக்கு!!

ம்ம்ம்ம் ஆச்சு, ஆச்சு. நீங்க போய் அந்த புல்லட்டை இஸ்டார்ட் பண்ணுங்க. நான் கதவை பூட்டிட்டு வரேன்.

பாத்து உக்காரு புள்ளை, சீலைல்லாம் பறக்காம் பார்த்துக்கோ! பின்னாடி கம்பியை பிடிச்சுக்கோ!

சரிங்க மாமா! கோமதியை அவ, கண்ணாலத்தப்போ பார்த்தது.      அத்தை மவளா இருந்தாலும் பார்க்க முடியலை. இப்போதான் அவ வளைக்காப்புக்குதான் பார்க்கனும்ன்னு இருந்திருக்கு போல!! 

ஏன் வளைக்காப்பு செய்யுறாங்கன்னு தெரியுமா புள்ள!?

தெரியும் மாமா!  ஒரு பொண்ணுக்கு பிரசவம்”ங்குறது மறுபிறவி மாதிரி. அதை உடல் வலிமையோடும், மன வலிமையோடும் தாங்கனும்ன்னு அந்த காலத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான் வளைக்காப்பு. அப்படி செய்யுற வளைக்காப்பு நல்லதுன்னு இப்போ ஆராய்ச்சிகள்ல கண்டுபிடிச்சு இருக்காங்க.

என்ன கண்டுபிடிச்சிருக்காங்க புள்ள?!

நல்ல விசயம்லாம் சும்மா பழக்கத்தால  மட்டும் வந்துடாது.., அது பரமபரை பரம்பரையா வற்றதுன்னு சொல்ற மாதிரிதான் வளைக்காப்பும். கர்ப்பிணி பெண்ணுக்கு, ஏற்கனவே பிள்ளை பெத்து, சுமங்கலியா இருக்குற பொம்பளைங்கதான் வளையல் போட்டு நலுங்கு விடுவாங்க. அது எதுக்குன்னா?!  எங்களை பாரு, நாங்க நல்லபடியா பிள்ளை பெத்து வளர்த்து, ஆரோக்கியமா இருக்கோம். அதுப்போலதான் நீயும் பிள்ளை பெத்து நல்ல படியா வருவே. அதுக்கான மனத்தைரியத்தை எங்களை பார்த்து வளார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அர்த்தம்.

சரி, அதுக்கு சந்தனம், குங்குமம் விட்டா போதாதா?! வளாஇயல் ஏன் போடனும்? உன் வளைக்காப்பு போது கண்ணாடி வளையல் உடைஞ்சி கை கிழிச்சு ரத்தம் வந்துச்சே! அதனால வளையல் போடாம விட்டா என்னவாம்?!

அது சரியா கவனிக்காம வாங்கி வந்த வளையலா இருக்கும் மாமா! வளையல் போடுறது எதுக்குன்னா!? வளையல் போட்டுக்க போற பொண்ணோட கை விரல்களை கூப்பி, வளையலை போட்டு விடுவாங்க. விரல் பக்கம் போகும்போது ஈசியா போய்டும். அப்புறம் மணிக்கட்டு பக்கம் வரும்போது உள்ள போக சிரமப்படனும். வலிக்கும். அந்த வலியை பொறுத்துக்கிட்டா வளையல் கைகளில் ஏறிடும் அதுப்போலதான் பிரசவம்ன்னு சொல்லாம சொல்லுது. அதுமில்லாம, வளையல் ஏற சிரமப்படும்போது, கைகளை அந்த, வளையல் போட்டுவிரும் அம்மா, அப்படி, இப்படி திருப்பி, சதைகளை தளர்த்தி போட்டு விடுவாங்க. அதாவது, குழந்த பிரசவிக்க நீ சிரமப்பட்டாலும் ஹெல்ப் பண்ணி குழந்தையை வெளில் எடுக்க நாங்க இருக்கோம்ன்னு மறைமுகமா சொல்றாங்க மாமா.

என்னதான் சொல்லு புள்ள,  என்ன வேலை செஞ்சாலும், கண்ணாடி வளையல் சத்தம் போட்டுக்கிட்டே இருக்குமே!  இது மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்காதா?!

ஐயோ மாமா! இந்த வளையல்கள் ஒண்ணொடு ஒண்ணு உரசி உண்டாகுற சத்தம் கருவுல இருக்குற குழந்தைக்கு நல்ல தாலாட்டாம். நம்ம அம்மா நம்ம கூடவே இருக்கான்னு ஒரு பாதுகாப்பு உணர்வை இந்த சத்தம் குடுக்குதாம். அதுமில்லாம முன்னலாம் வீடு பெருசா இருந்துச்சு. யார் எங்க இருக்காங்கன்னு தெரியாம இருந்துச்சு. நைட்ல கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி பாத்ரூம் போக தோணும். அப்படி  பாத்ரூம் போகனும்ன்னு போகும்போது, அந்த வளையல் சத்தம் கேட்டு பெரியவங்க தெரிஞ்சுப்பாங்க. அந்த பொண்ணோட உடல்நிலை நல்லா இருக்குன்னு. உள்ள போய் வெளில வர நேரமாகி சத்தம் கேக்கலைன்னா, மயங்கிட்டாளாம்ன்னு உடனே போய் பார்ப்பாங்க,

வளைகாப்பு முடிஞ்சதும், அந்த பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதுக்கும் ஒரு காரணம் இருக்கு. சோமபல், பொருளாதார வசதி, கோபம்ன்னு அந்த பொண்ணை அவ மாமியார் வீட்டுல கவனிக்க முடியாம அந்த பொண்ணு சிரமப்படலாம். ஆனா, அம்மா வீடு அப்படி இல்ல. எப்பாடு பட்டாவது அந்த பொண்ணை பார்த்துக்குவாங்க. அதுமில்லாம, தன்னோட உடல் மாற்றத்தை மாமியார்க்கிட்ட சொல்ல தயங்கலாம் ஆனா, அம்மாக்கிட்ட எல்லாம் சொல்லலாமே! அதுக்குதான் அம்மா வீட்டுக்கு அனுப்புறாங்க. நம்ம கூட, அம்மா வீடு, மாமியார் வீடு, கணவன், சொந்தம்லாம் இருக்கும் போது நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு நம்பிக்கையை சொல்லாம கொள்ளாம உண்டாக்கத்தான் இதுப்போல நிகழ்ச்சிகள்லாம். 

தெரிஞ்சுக்கிட்டேன் புள்ள, அந்த காலத்துல எப்படிலாம் சிந்திச்சு செஞ்சிருக்காங்க எல்லாத்தையும். 

ஏன் மாமா! அந்த பக்கம் போகாம, இந்த பக்கம் போறீங்க?! இந்த பக்கம் போனா சுத்தாச்சே!

இல்ல புள்ளா, அங்க கீரிக்கும், பாம்புக்கும் சண்டை விடுறேன்னு ஒருத்தன் ஷோ காட்டுறான். கூட்டமா இருக்கு. அதான் இப்படி வந்துட்டேன்.

போங்க மாமா! அந்த பக்கம் போய் இருந்தா அதை பார்த்திருப்பேனே! பாம்பு கீரியை கடிக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
பெரும்பாலும் ரெண்டும் சண்டை போட்டுக்குறதில்லை. எப்பவாவது ரெண்டும்  கடுமையா சண்டை போடுறதை பார்க்கலாம்.  பாம்பு படம் எடுத்து பல தடவை கீரிப்  பிள்ளையைக் கடிக்கவும், படத்தால் அடிக்கவும் பார்க்கும். இருந்தாலும்,  கீரிப்பிள்ளை வேகமா விலகி தப்பிச்சிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும் நேரத்துல கீரிப்பிள்ளை  பாம்பின் தலையைப் பிடிச்சு கடிச்சுக் கொண்ணுடும். இப்படி பாம்பை கீரிப்பிள்ளை ஜெயிக்குறதுக்கு  காரணம் அதன் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்தான்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு  இருந்தாங்க.  நம்ம சினிமா ஹீரோக்கள்லாம், தலையை இப்படியும், அப்படியும் ஆட்டி, மெஷின் கன் குண்டுகளில் இருந்து தப்பிக்குறது மாதிரி, ‘‘கீரிப்பிள்ளை ரொம்ப சுறுசுறுப்பா   பாம்பின் தாக்குதல்கள்ல இருந்து தப்பிச்சிக்குது. தப்பித் தவறி விஷப் பாம்புக்கிட்ட  அது கடிபட்டா அது கண்டிப்பா செத்துடும்ன்னுதான் இத்தனை நாள் சொல்லி வந்தாங்க. ஆனா, நிஜம் என்னன்னா,   பாம்பு கடிசாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது.

அதோட உடம்புல  இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்தி இருக்குறதுதான் இதுக்கு காரணம்ன்னு கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க.  இஸ்ரேல் நாட்டு  வொய்ஸ்மான் நிறுவனத்துல வேலை செய்யுற  வாரா ஃப்யூடின் ன்ற சயிண்டிஸ்ட், பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நடக்குதுன்னு ஆராய்ஞ்சு பார்த்தார்.  சாதாரணமா மற்ற பிராணிகள் உடம்புல, மனுசன் உள்பட அந்த விஷத்தை செலுத்தினா, விஷம் செலுத்தின இடத்துல இருக்குற   செல்கள்  வேலை செய்யாது. விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளா செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ்! ஆனால  கீரியின் உடம்புல விஷத்தைச் செலுத்தியபோது, அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படலை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக்  காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு வர்றாங்க.  இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு  மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது ன்னு சொல்றாங்க அவங்க.

ம்ம்ம்ம்ம் அப்படி கண்டுபிடிச்சா நல்லதுதானே மாமா! எல்லாரும் என்னென்னவோ கண்டுப்பிடிக்குறாங்க. ஆனா, நம்மாளுங்க மொக்கை ஜோக்ஸை கண்டுபிடிச்சு கொல்லுறானுங்க. 

என்ன ஜோக் புள்ள?!
நேத்து என் மொபைலுக்கு என் ஃப்ரெண்ட் அனுப்பின மெசேஜ்.
ஹலோ.....எனக்கு தூக்கம் வருது ,அதனால நான் தூங்கப்போறேன்,
உங்களுக்கு தூக்கம் வராம போரடிச்சா .......
ஒரு ஒருரூபா காயினை "டாஸ்" போட்டு பாருங்க ....
பூ விழுந்தா குப்புற படுத்து தூங்குங்க,
தலை விழுந்தா மல்லாக்க படுத்து விட்டைதை நல்லா மொறச்சு பாத்துகிட்டே இருந்தீங்கன்னா "விடயறத்துக்குள்ள" தூக்கம் வந்துடும்!ன்னு  

மெசேஜ் அனுப்பி என்னை இம்சிக்குறாங்க மாமா,

ஹா! ஹா! உனக்கு இது தேவைதான். எத்தனை முறை என்னை இம்சிக்குறே. உனக்கு இதான் தண்டனை. ம்

ம்க்கும், என்னை கலாய்க்குற உங்களை நகரும் சிலை பக்கத்துலதான் இன்னிக்கு படுக்க வைக்கனும். அப்போதான் தூங்காம கொள்ளாம அவதி படுவீங்க.

சிலை எங்காவது நகருமா?! ஜோக்கடிக்காத புள்ள.
 

ஜோக் இல்ல மாமா! நிஜம்தான். பிரிட்டனின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்துலதான் இந்த  நகரும் சிலை இருக்கு.
இது 4000-ம் ஆண்டுகளுக்கும் முன்னாடி செஞ்ச  எகிப்து நாட்டு சிலையாம். 10 அங்குலம் உள்ள அந்த சிலை எகிப்துல  "மம்மி' புதைக்கப்பட்ட இடத்துல் இருந்து எடுக்கப்பட்டிருக்கு. சுமார் 80 ஆண்டுகளா இந்த அருங்காட்சியகத்தில் இருக்காம்.

பொதுமக்கள் பார்வையில படுற மாதிரி  நேரா வச்சிருந்த இந்த சிலை, 180 டிகிரி சுழன்று பின்பகுதி மட்டும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி மாறி இருக்காம். இது அருங்காட்சிய கண்காணிப்பாளர்களுக்குலாம்  ஆச்சரியத்தை கொடுத்திருக்கு. மறுபடியும், சிலையை   நேரா வச்சிருக்காங்க. ஆனா,  அடுத்த சில நாள்லயே சிலை மீண்டும் பின்புறமாகத் திரும்பிக்கிச்சாம்.

யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சு,  அந்த சிலை இருக்குற பக்கம்  "டைம் லேப்ஸ் விடியோ கேமரா' வச்சு ரெக்கார்ட் பண்ணி கண்காணிச்சு இருக்காங்க. நைட் டைம்ல அசையாம இருக்குற சிலை , பகல்  நேரத்துல தானாவே மெதுவா நகர்ந்து திரும்பிகுறது அந்த கேமராவுல பதிவா இருக்கு. .இது எல்லாருக்கும் ஆச்சர்யத்தை தந்திருக்கு.

"மம்மி' முறையில பதப்படுத்தி பாதுகாக்கப்படும் சடலம் அழிக்கப்பட்டா அந்த ஆவி அது கூடவே  புதைக்கப்படும் சிலையில் புகுந்துடும்ன்னு  எகிப்டுல அந்த காலத்துல சொல்லப்பட்டது. அதனால, இது ஆவியின் வேலையா இருக்கலாம் ன்னும் கொஞ்சம் பேர் சொல்றாங்க. அருங்காட்சியகத்துக்கு வர்றவங்க,  அங்கும், இங்குமா நடக்குறதால  ஏற்படும் அதிர்வலைகள் னாலதான்  சிலை திரும்பியிருக்கும்ன்னு அங்க இருக்குற விஞ்ஞானிகள் சொல்றாங்க மாமா!.எது எப்படியோ! நம்ம சினிமாக்காரங்களுக்கு அடுத்த படத்துக்கு ஒரு  கதை கிடைச்சுட்டுது மாமா.

ம்ம்ம் நீ சொல்லுறதும் சரிதான் புள்ள.

‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’!ன்ற வசனம் பாட்ஷா படத்துல ரஜினியால அடிக்கடி சொல்லப்பட்டு நண்டு, சிண்டு, நட்டுவாக்களி முதல் பல்லு போன தாத்தா வரை செல்போன் மெசேஜ் முதல் கல்யாணத்துல செய்யுற மொய் வரை கலாய்ச்ச ஒரு வசனம் நினைவிருக்கா உனக்கு.
இருக்கு மாமா! அதுக்கென்ன மாமா?! 

இந்த வசனம்,  18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில நாவலான “எம்மா”வில் இருந்துதான், எழுத்தாளார்  பாலகுமாரன் எடுத்திக்கிட்டார்ன்னு இப்போ ஃபேஸ்புக்குல சொல்றாங்க. 

’சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி’, ‘பிரைட் அண்ட் பிஜிடைஸ்’ ன்னு புகழ்மிக்க நாவல்களை எழுதிய ஆங்கில பெண் நாவலாசிரியர் ’ஜீன் ஆஸ்டின்’. இந்தம்மா  1816ம் ஆண்டு எழுதி,  பெரும் புகழ் பெற்ற ’எம்மா’ என்ற நாவலில் இடம்பெற்ற ”If I've told you once, I've told you a 100 times."ன்ற வரியே, பாட்ஷா படத்துல ரஜினி, “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” ன்னு வசனம் வச்சிருக்காங்க. 

நமக்கேன் மாமா இந்த சினிமா கதைலாம்!? அப்புறம் உனக்கு தெரியுமான்னு சண்டைக்கு வரப்போறாங்க.

ம்ஹூம் இங்கதான் படிச்சேன்னு லிங்க் குடுத்துடுவேன். அப்புறம் என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க நம்மாளுங்க. 

ம்ம்ம் சரி, சரி, அதோ! பச்சை கலர் பெயிண்ட் அடிச்சதுதான் கோமதி வீடு. அங்க வந்து, என்னை மட்டம் தட்டி பேசுறது, போற வர்ற பொண்ணுங்களை கிண்டலடிச்சு பேசுறதுன்னு இல்லாம வாலை சுருட்டிக்கிட்டு இருக்கனும்.

இல்லாட்டி என்ன பண்ணுவே செல்லம்?!

வூட்டுக்கு போகும்போது என் கூடதான் வரனும். ஞாபகம் வச்சிக்கோங்க.

இதுக்கெல்லாம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்காதா?!

இன்ன்னாது?!

ஒண்ணுமில்லியே! ஒண்ணுமில்ல புள்ள, மொய் எழுத சேஞ்ச் கிடைக்குமான்னு..,

அதானே பார்த்தேன்!!

22 comments:

  1. வளையல் விளக்கம் அருமை... நகரும் சிலை வியப்பு... கொடுத்த இணைப்பில் பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. ஆஹா அருமையான விளக்கம்.. இன்று தான் அறிந்தேன் வளைகாப்புக்கான விளக்கத்தை...

    ReplyDelete
  3. அறியாதன அறிந்தேன் விஷயமும் பகிர்ந்த விதமும் வெகு சுவாரஸ்யம் வாழ்ததுக்கள்

    ReplyDelete
  4. வளைகாப்புக்கான விளக்கம் அருமை.

    ReplyDelete
  5. கீரி-பாம்பு சண்டை குறித்த புதுத்தகவல்....

    ReplyDelete
  6. என்னக்கா... ரெண்டு மூனு பதிவா போடவேண்டிய விஷயங்களையெல்லாம் ஒரே பதிவுல போட்டுட்டீக...
    வளைகாப்பு பத்தி இப்படியொரு விளக்கம் நான் எங்கேயுமே கேள்விப்படாததுங்க அம்மணியோவ்...
    எல்லாத்தவிட சூப்பர் ''எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்காதா?''ன்னு மாமா கேட்டதுதான் அக்கா...(ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குவான் பாவம்!!!)

    ReplyDelete
  7. அருமையான அவியல்..!

    ReplyDelete
  8. வளைகாப்பு விளக்கமும் நகரும் சிலை பற்றிய தகவல்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமை சகோதரி நானும் ஏன் மனைவிக்கு இன்னும் 3 மாசத்துல்ல வளைகாப்பு நடத்தனும் எல்லாம் சம்பிரதாயம்ன்னு நினைத்து கொண்டு இருந்தேன் இப்போ அதுக்கு விளக்கம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே

    நிறைய தகவல்கள் உரையாடலாக அமைத்ததில் நன்றாக இருந்தது

    ReplyDelete
  10. பல புதிய விவரங்கள் அறிந்தேன். ஐஞ்சுவை அவியல் அசத்தல். நன்றி ராஜி.

    ReplyDelete
  11. அவியலின் சுவை மிகவும் அருமை! பல புதிய விவரங்கள் அறிந்தேன் நன்றி!

    ReplyDelete
  12. விளக்கம் அருமை
    அவியல் தனிச் சுவை

    ReplyDelete
  13. “மர்மம்“ நன்றாக இருந்தது.
    (ஆமாம்... தனி குடித்தன பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?)
    ஆனாலும்...மற்ற நாட்டு கர்ப்பிணி பெண்கள் எல்லாம் இந்த வகையில் பாவம் தான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ராஜி மேடம்.



    ReplyDelete
  14. தெரியாத நல்ல பல தகவல்கள். பகிர்விற்கு நன்றி!. எங்கேயிருந்துதான் இந்த மாதிரி தகவல்களை எடுக்கறீங்களோ. ஆனா எல்லாமே பயனுள்ள அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

    ReplyDelete
  15. அடேங்கப்பா! வளைகாப்பில் இவ்வளவு அறிவியலா? வளையல் சத்தத்திற்கு இவ்வளவு மழுமையா? நாமா யாரு? நம்ம முன்னோர்கள் முட்டாள்களா என்ன?

    ReplyDelete
  16. சுவையான அவியல்.....

    ரசித்தேன்.

    ReplyDelete
  17. அவியல் மிக அருமை சகோ!! வளைகாப்பு விளக்கத்துக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete

  18. உங்க ஊர்ல வளைகாப்பு அது போல அமெரிக்காவிலும் ஒரு ஃப்ங்கஷன் உண்டு இப்படி குழந்தை உண்டானவர்களுக்கு வளைகாப்பை இங்கு baby shower என்று அழைப்பார்கள். இங்கு உண்டாகி இருக்கும் பெண்ணி நண்பர்கள் மிகவும் சர்பரைஸாக அரேஞ்ச் செய்து நடதுவார்கள் இதற்கு அந்த பெண்ணிண் கணவரிடம் சொல்லி அந்த பெண்ணை வெளியே கூட்டிஸ் போக செய்துவிட்டு அவர்கள் வருவதற்குள் வீட்டை அலங்கரித்து பிறக்க போகும் கு

    ReplyDelete
  19. வளையல் காப்பு அனைத்து விவரங்களும் அருமை.
    ஒவ்வொரு செயலுக்குமான விவரங்களைத் தொகுத்துக் கொடுத்தது
    இனிமை. தொடருங்கள். நன்றி

    ReplyDelete
  20. வளைகாப்புங்கற நிகழ்வுக்குப் பின்னால இத்தனை விஷயங்கள் இருக்கறது உண்மையில இப்பத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். நகரும் கற்சிலைகள் பற்றிய தகவலும் அப்படியே. சினிமா டயலாக்கை சுட்டது போன நூற்றாண்டு புத்தகத்துலருந்தா? என்னமா ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கறாங்க நம்ம ஜனங்க! இந்த முறை அவியல் வழக்கத்தை விட ரொம்ப ரொம்ப டேஸ்ட்டும்மா! இதையே கன்டின்யூ பண்ணு!

    ReplyDelete
  21. அவியல் ரொம்பப் பிடிச்சிருந்தது..

    ReplyDelete
  22. வளைகாப்பு பற்றின தகலும், எழுதிய விதமும் மிக அருமை

    வளைகாப்பில் ஆரம்பித்து போக போக நகரும் சிலை, பாம்பு கீரி பிள்ள என்று கலந்த சாதமாக்கியதும் நல்லாதான் இருந்தது ..

    ReplyDelete