Wednesday, June 04, 2014

சென்னை மெட்ரோ ரயில் -மௌனச்சாட்சிகள்

கோடை விடுமுறைக்காக சிங்கார சென்னை போய் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில இறங்கும்போது எல்லோரும் கூட்டமா நின்னு எதையோ பார்த்துக்கிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னதான் இன்னிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி இருந்தாலும், கழைக்கூத்தாடி முன்னாடி நின்னு கைத்தட்டுன பரம்பரைதானே நம்முதுன்னு ஒரு படத்துல விவேக் சொல்வார். வேடிக்கப் பார்க்குறது நம்ம ரத்தத்துலயே ஊறினது. கூடவே பிளாக்கரா வேற இருக்கேன். என்ன ஏதுன்னு அலசி ஆராய்ஞ்சுப் பார்த்து பதவு தேத்தலாமேன்னு கூட்டத்துக்குள் புகுந்தேன்.


அங்க, ”கூண்டுகுள்ளே உன்னை வச்சு கூடி நின்ன ஊரை விட்டு கூண்டுக்குள்ளே போனதென்ன சோலைக்கிளியே!!ன்னு நம்ம கேப்டன் பாடாமயே ஒரு கூண்டுக்குள்ளே மெட்ரோ ரயில் எஞ்சினை  பொதுமக்கள் பார்வைக்காக வச்சு இருக்கிறாங்க.



ஆஹா! பதிவு தேத்த நல்ல சான்ஸ் கொடுத்தே ஆண்டவா!ன்னு நினைச்சுக்கிட்டு உடனே படமெடுத்திக்கிட்டு அதுபத்தின தகவல்களை திரட்டினேன்.  டெல்லியில் இதுப்போல ”மெட்ரோ ரயில்” ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கியது. அதனால மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையிலும் ”மெட்ரோ ரயில்” தொடங்க அப்பொழுது ஆளும் கட்சியில் இருந்த அரசு திட்டமிட்டு   2007 ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்.

இந்த மெட்ரோ ரயில் பறக்கும் ரயிலாக மாடியிலும், சுரங்க ரயில் பாதையாக மண்ணுக்கடியிலும் கட்டப்படுகிறது. 10 ஜூன் 2009 அன்று கோயம்பேடு அசோக் நகர் இடையே கட்டுமானப்பணி தொடங்கியது. சுரங்கபாதை ரயில் வழித்தடத்திற்காக சீனாவிலிருந்து  மண்ணுக்கடியில் துளையிடும் 12 மெசின்கள் வாங்கப்பட்டு, 28 ஜூலை 2012ல் நேரு பார்க்கிலிருந்து தொடங்கப்பட்டது. இந்த சுரங்க பாதை இணையான இரண்டு பாதைகள் தரைமட்டத்திலிருந்து 9 மீட்டரில் ஆரம்பித்து 20 மீட்டர் ஆழத்தில் 37 மீட்டர் நீளத்தில் செல்லும்.



ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரை 23கிலோமீட்டர் தூரம். இரண்டாம் வழித்தடம் சென்ட்ரல் முதல் புனித தோமையார் மலை (செயின்ட்தாமஸ் மவுன்ட்) வரை 21.9 கிலோ மீட்டர் தூரம். மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட ரயில்பெட்டி தொடர் பிரேசில் நாட்டிலும்மீதமுள்ளவை ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள பிரேஸில் நிறுவன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரேஸிலில் தயாரான ஒரு ரயில்பெட்டி தொடர் (06.11.2013) சென்னையில் 800 மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.


பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்டுள்ள இந்த ரயிலின் சிறப்பம்சங்கள்:

1) அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.
2) ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஓட்டுனர் அறையில் ஒளிபரப்பாகும்.
3) ரயில் பெட்டியின் வெளிப்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
4) பயணிகள் உட்காரும் இடங்களின் அருகே ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கும்.
5) ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் நிலையத்தின் பெயர் அறிவிக்கப்படும்.
6) நிலையத்தின் பெயர் ரயிலுக்குள் இருக்கும் திரையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிவிக்கப்படும்.
7)அவசர அழைப்புகளுக்கு பயணிகள் பகுதியில் பிரத்யேக தொலைப்பேசி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
8) பெண்கள் மற்றும் முதல்வகுப்பு பெட்டிகள் ஓட்டுனர் இருக்கைக்கு அருகே இருக்கும்.
9) மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுக்கு தனி வசதி உண்டு.

இது, தரைக்கு மேலே பாலத்தின் வழியே பறக்கும் ரயிலாக செல்லும் வழித்தடத்தையும், மண்ணுக்கு அடியில் சுரங்க ரயில் பாதையாக செல்லும் வழித்தடத்தையும் காட்டும் வரைபடம்.  இது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வடபழனி,  வள்ளுவர் கோட்டம், ஆற்காட்ரோடு, ஜெமினி ஃப்ளைஓவர், ராதாகிருஷ்ணன் சாலை, சோழ சர்ட்டன் வழியாக ஸ்மித்ரோடு, போலீஸ் கோர்டேர்ஸ் வரைக்கும் முதல் கட்டமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில அப்பப்ப வெள்ளோட்டம் பார்க்கிறாங்க. நான்  சென்னை சென்ற சமயம் எல்லா ரயில் பெட்டிகளையும் இணைத்து மெதுவாக ஓட்டிக்கொண்டு வெள்ளோட்டம் பார்த்தார்கள் உடனே என்னுடைய மொபைல் கேமராவில் கிளிக்கிட்டேன். அதை பார்க்கும் போது நமது சிங்கார சென்னையின் வளர்ச்சி நன்றாக தெரிந்தது. அறிவியல் வளர்ச்சியினால் சென்னையில் எவ்வுளவு மாற்றங்கள்!!??

மீண்டும் சந்திப்போம்......, 

29 comments:

  1. அருமையாக பதிவுசெய்துள்ளீர்கள்

    இந்த மாதம் மட்டும் மூன்று முறை
    சென்னை சென்று வந்துவிட்டேன்
    இதனைப் பார்க்கும் எண்ணமில்லை
    இந்த வாரப் பயணத்தில் நிச்சயம் பார்த்துவிடுவேன்
    மிகச் சிறப்பான படங்களுடன்
    முழுமையான விவரங்களையும்
    சேர்த்துக் கொடுத்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல பொது மக்கள் பார்வைக்காக மெட்ரோ ரயில் எஞ்சின் வச்சு இருக்காங்க.

      Delete
  2. சென்னை ஹை-பை ஆ மாறப் போகுதுன்னு சொல்லுங்க!!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் போல!

      Delete
  3. சிறப்பான தகவல்கள்! சென்னைக்கு எப்போ வந்தீங்க?

    ReplyDelete
    Replies
    1. மே 9, 10ம் அங்கதான் இருந்தேன் சகோ. கணேஷ் அண்ணா, ஸ்பை, சீனு, ரூபக்லாம் சந்தித்துக்கொண்டோம்.

      Delete
  4. இருக்கறதே நாலு பெட்டி அதிலும் முதல் வகுப்பா? எல்லாத்துலயும் வகுப்பை நுழைப்பான் நம் ஆள்.

    ReplyDelete
    Replies
    1. இதுல எதாவது உள்குத்து இருக்கா!?

      Delete
  5. என்னக்கா கேப்டன் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க :)

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் பிரபலம் ஆகனும்ன்னுதான்.

      Delete
  6. படங்களும் பதிவும் அருமை தோழி.

    நான் பிரான்சுக்கு வந்த புதியதில் முதன்முதலில் நான் கண்டு வியந்தது இந்த மெட்ரோ தான்.

    ReplyDelete
    Replies
    1. இனி நம்மூர்லயும் மெட்ரோ ரயிலை பார்த்து வியக்கலாம் அருணா!

      Delete
  7. அதானே ஏதாவது ஒரு விஷயம் உங்கள் கண்ணிலிருந்து தப்பா முடியுமா என்ன!!!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்க்க்கும் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி என் சோலியை முடிச்சுடுங்க சகோ!!

      Delete
  8. முதல் வரி தொடங்கி கடைசியாய் இட்ட கையெழுத்து வரை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள். மெட்ரோ ரெயில் பற்றிய நிறைய தகவல்கள் இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றிகள் சகோதரி. தொடருங்கள்.

    ReplyDelete
  9. சிறப்பம்சங்கள் என்றும் சிறப்பாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பல்லிலிக்காம இருந்தா சரிதான்.

      Delete
  10. சூப்பர் பதிவு ராஜி. இப்பவே வந்து பார்க்கணுமுன்னு ஆசையா இருக்கு!

    உங்கள் உழைப்பு தெரிகிறது. இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!

      Delete
  11. இது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வடபழனி, வள்ளுவர் கோட்டம், ஆற்காட்ரோடு, ஜெமினி ஃப்ளைஓவர், ராதாகிருஷ்ணன் சாலை, சோழ சர்ட்டன் வழியாக ஸ்மித்ரோடு, போலீஸ் கோர்டேர்ஸ் வரைக்கும் முதல் கட்டமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    என்ன குழப்பமாக இருக்கிறது? இந்த ரூட்டில் இது வரை ரயில் பாதையே போடப் படவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. இது நானாய் சொல்லைங்க. அரசு வெளியிட்டிருக்கும் குறிப்புகளில் இருக்கு. அதுமட்டுமில்லாம இதுவரை முப்பது சதவீத வேலைகள் மட்டும்தான் முடிஞ்சிருக்கு சகோ.

      Delete
  12. இதான் நல்லது. குறைவான சீட்டுகளும் றிறையப் பேர் நிக்கறதுக்கு இடம் விட்டும் இருக்கற இந்த மாதிரி கம்பார்ட்மெண்ட்தான் நம்மூருக்கு ஏத்தது.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா! அதான் அப்போதைய ஆளும் அரசு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கு.

      Delete
  13. உண்மையில் சென்னைக்கு இப்பயணசேவை கிட்டினால் மிக வசதி..படங்களுடன் செய்திக்கு நன்றி!
    இதிலும் அரசியல் செய்யாமல் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதற்குப் பணம் ஒதுக்கி இத் திட்டத்தை முடித்து, புதிய வழித்தடங்களையும் குறிப்பாக நிலத்தின் கீழ் இதை அமைத்தால், எதிர்காலத் தலைமுறையுடன் இன்றைய தலைமுறையும் போற்றும்.
    இங்கு 16 தடங்கள் இயங்குகின்றன. முதல் தடம் ஆரம்பித்து நூற்றாண்டுக்கு மேல்..கடைசித்தடம் சாரதியின்றிச் செல்கிறது. அதிகாலை 5.30 லிருந்து நள்ளிரவு 12.45 வரை சேவையுண்டு. வேலை நேரங்களில் 2 நிமிடங்களுக்கு ஒரு வண்டியும் இரவு 9 மணிக்குப் பின் 7 நிமிடத்துக்கு ஒரு வண்டியும் ஏனைய நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு வண்டியும் மொத்தம் 303 நிலையங்களூடு இயங்குகிறது. பெரும்பான்மையான நிலையங்கள் நிலத்தடியில் உள்ளன.
    இது ஒரு வரப்பிரசாதம்.

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலும் இப்படி சுரங்க ரயில் பாதை இருக்குங்க சகோ! இதனால, கணிசமான அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்ன்னு எதிர்பார்க்கப்படுது.

      Delete
  14. சென்னையில் மெட்ரோ இயங்க ஆரம்பித்து விட்டதா, நான் வந்திருந்த சமயம் இன்னும் வேலை முடியலன்னு சொன்னார்கள்,
    அப்ப இனி போக்குவரது நெரிசல் கண்டிப்பாக குறையும் ...

    ReplyDelete
  15. தில்லியில் மெட்ரோ சேவை ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ராஜி. தில்லியில் சொன்ன தேதிக்கு இந்த வேலைகள் முடிவடைந்து விடுகின்றன. மேலும் மேலும் பல புதிய லைன்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

    சென்னையைப் பொறுத்த வரை சொன்ன தேதியில் இது முடிவடையவில்லை. பல முறை தொடங்கும் தேதியை மாற்றி விட்டார்கள்.

    விரைவில் ஆரம்பித்து பயணிகளுக்கு வசதி செய்து விட்டால் நல்லது.

    ReplyDelete