Thursday, May 30, 2019

கிளாசுக்கு போயும் பிரயோசனமில்லையே!! - கைவண்ணம்


 வீடு சுத்தம் செய்தபோது இந்த ஆல்பம் கண்ணுல பட்டது. 2014ல் டெய்லரிங் கிளாஸ் போனபோது செஞ்ச ஆல்பம்.  இலவசமா சொல்லிக்கொடுத்த கிளாசுக்கு போயும், காசு கொடுத்து கத்துக்கிட்டும் எனக்கும் தையலுக்கும் எட்டாம் பொருத்தமே! இத்தனைக்கும் வீட்டிலேயே மெஷின் இருந்தும் அந்த பக்கம் போறதே இல்ல :-(






 சுடிதார் மற்றும் ஜாக்கெட்களுக்கான பின்கழுத்து மாதிரிகள்..., ”ரவுண்ட்” கழுத்தும், ”பானை” கழுத்து மாதிரியும்...,

 ”பா” கழுத்து மாதிரி...,


 “வி”கழுத்து, படிக்கட்டு கழுத்து மாதிரி....,

இரண்டு விதமான “ஸ்டார்” கழுத்து மாதிரி...,

”மாங்காய்” கழுத்தும், “அரும்பு” கழுத்து மாதிரியும்....,

பைப்பிங் கழுத்து மாதிரி....,


“நெக்லெஸ்” கழுத்து மாதிரி...., 

இப்பலாம் உள்ளாடைகளை வீட்டிலயே தைச்சி யாரும் பயன்படுத்துறதில்ல. ஆனாலும் தையல் வகுப்பில் இதான் முதல் பாடம்..,

அடுத்து நிக்கர்....,



சின்ன குழந்தைக்களுக்கான “ஃப்ராக்”...,

அடிப்படையான சுடிதார் டாப்...,

சுடிதார் ஃபேண்ட்...,

 பெண்பிள்ளைகளுக்கான பாவாடை மாதிரி..., 

கடைசியாய்தான்  ஜாக்கெட்...

கிளாசில் நல்லா தைப்பேன். வீட்டில் மெஷினில்..... ம்ஹூம் முடில...

ஒரு புடவைக்கு ஓரம் அடிச்சு தந்தால் 15 ரூபா. லுங்கிக்கு மூட்டு அடிச்சு தந்தா 20ரூபா. பிளவுஸ் மினிமம் 70ரூபா. நல்லா சம்பாதிக்கலாம். மத்த கிராஃப்ட்லாம் பார்த்தாலே கத்துக்குறேன். இதுமட்டும் முடில.  இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. திறமை இருக்க பயமேன்...?

    ReplyDelete
  2. ரொம்ப அழகா தைச்சுருக்கீங்க ராஜி. நீங்க சாரி ஃபால்ஸ் அடிச்சுக் கொடுக்கலாம். ரிப்பெர் வொர்க் செய்வதே கூட நிறைய சம்பாதிக்கலாம். தலையணை உறை. ஓரம் அடிச்சுக் கொடுக்கறது கடையில வாங்குற ரெடி மேட் ட்ரெஸ்ஸுக்கு இன்னொரு தையல் போட்டுக் கொடுப்பது இப்படி...உங்க பொண்ணுங்களோட காட்டன் சல்வார் தைச்சது போக பிட்ஸ் இருந்துச்சுனா அதுல கர்சீப்ஃப்.

    என் சல்வார் செட் வீட்டிலேயே தைச்சுக்கறது.. ஜீன்ஸ்/பேன்ட் க்கான டாப்ஸும்..
    .ப்ளவுஸ் பக்கம் போறதில்லை. ஏனோ எனக்கு அதில் நாட்டமில்லை.

    பெண் பிள்ளைகள் ஃப்ராக் தைத்ததுண்டு. டெய்லரிங்க் முறையாகக் கற்றதில்லை. என் நாத்தனார் வைத்திருந்த புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டதுதான். ட்ரயல் அண்ட் எரர் ப்ராஸஸ் ஹா ஹா ஹா..இப்ப நெட்டிலியே எல்லாம் கற்றுக் கொள்ள முடிகிறதே.

    கீதா

    ReplyDelete
  3. பரிகாரம் வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் சகோ.

    ReplyDelete
  4. பாராட்டப்பட வேண்டிய திறமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஹா.. ஹா.. என்னுடைய தையல் வகுப்புக் காலங்களும் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் மெஷினைத் தொடவே அலுப்பாக உள்ளது.

    ReplyDelete
  6. நானும் சேர்ந்து கொள்கிறேன் :)

    ReplyDelete
  7. குட்டி குட்டி யா எல்லாமே அழகு ராஜி க்கா...



    ReplyDelete