Tuesday, March 10, 2020

ருசியான பாதாம் அல்வா - கிச்சன் கார்னர்

கோதுமை, பாசிப்பருப்பு, கேரட், பிரட்ன்னு. அல்வா எந்த ரூபத்தில் இருந்தாலும்  எனக்கு பிடிக்கும். மனுஷங்க கொடுக்கும் அல்வாவினை தவிர!! ஆனா, அடிக்கடி அதுதான் கிடைக்குதுன்றது வேற விசயம்.  பசங்களுக்காக வாங்கின பாதாம், பசங்கலாம் ஆளுக்கொரு திக்குக்கு போயிட்டபின் சாப்பிட ஆள் இல்லாம இருந்துச்சு. ஓடு யூட்யூப்க்கு.. பலவிதமா செய்யலாம்ன்னு  இருந்தாலும் பாதாம் அல்வாதான் என்னை ஈர்த்துச்சுன்னு சொன்னா அது பொய். இதுதான் ஈசியா இருந்துச்சு. அதான், உடனே செஞ்சுட்டேன்..

தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு- 25
சர்க்கரை- ஒரு கப்
நெய்
ஏலக்காய்பொடி
மஞ்சள் கலர்
பொடித்த முந்திரி, திராட்சை


பாதாமை எட்டு மணிநேரம் ஊறவச்சு தோலெடுத்து, கொரகொரப்பா அரைச்சு வச்சுக்கனும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தினை வச்சு சூடாக்கி நெய் ஊற்றி, அது உருகினதும் முந்திரி, திராட்சையினை வறுத்து எடுத்து வச்சுக்கனும்.
இன்னும் கொஞ்சம் நெய்யினை சேர்த்து அரைச்சு வச்சிருக்கும் பாதாமை சேர்த்து கிளறனும்.
பச்சை வாசனை போனதும் சர்க்கரையை சேர்த்து கிளறிவிடனும்..
ஏலக்காய் பொடி சேர்க்கனும்.. கூடவே கொஞ்சூண்டு மஞ்சள் கலர்பொடி சேர்க்கனும்..  இயல்பாவே பாதாம் பருப்பிலிருந்து மஞ்சள் நிறம் வரும். அதனால், சேர்க்கலைன்னாலும் பரவாயில்லை.  மஞ்ச்ள் கலருக்கு பதிலா குங்குமப்பூவை பாலில் கரைச்சு சேர்க்கலாம். இன்னும் ருசி கூடும் கலரும் வரும்.
வறுத்து வச்சிருக்கும் முந்திரி, திராட்சையினை சேர்த்து கிளறனும்..

சுவையான பாதாம் அல்வா தயார்.

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. அருமை. சிறப்பு.

    புதிய வலைத்திரட்டி: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது ருசியான பாதாம் அல்வா – கிச்சன் கார்னர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. சுவையான, ருசியான...   சூப்பர்.

    ReplyDelete
  3. செய்முறை என்னவோ சுலபம்தான். இதற்கு முன்பு செய்திருக்கிறேன்.

    ஆனா நீங்க நிறைய பில்டப் கொடுத்து கடைசில, 1 ஸ்பூன் பாதம் அல்வாவைச் சுத்தி 1 கிலோ பாதாம் பருப்பை வைத்து படம் எடுத்ததுதான் இவ்வளவு வேலை செய்து இவ்வளவுதான் அல்வா வருமா என்று யோசிக்க வைக்குது. ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. அப்படியே வடைசட்டியோடா படமெடுக்க முடியும்?! கொஞ்சம் கிரியேட்டிவிட்டியா யோசிச்சா விடமாட்டீங்களே!

      Delete
  4. பாதாம் ஹல்வா... சுவை.

    ReplyDelete