Friday, March 13, 2020

அருட்குரு ஸ்ரீதேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்- பாண்டிச்சேரி சித்தர்கள்.


கடந்த வாரம் ஸ்ரீசிவசடையப்பர் கோவிலில் ஜீவசமாதியான சடைதாயாரம்மாவின் ஜீவசமாதி கோவிலை பற்றி பார்த்தோம்.  இந்தவராம் நாம பார்க்கபோறது தேங்காய் சுவாமி சித்தர். என்ன பெயரே அதிசயமா இருக்கே என நினைத்து, தேங்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதிக்கு போகும் வழியைk கேட்டு சித்தரை தரிசிக்க பயணமானோம். வழியெங்கும் ஒரே போக்குவரத்து நெரிசல். போதாக்குறைக்கு ரயில்வேகேட்டைவேற கிராஸ் பண்ணி போகணும்நாங்க போனபோது  ட்ரெய்னுக்காக கேட் போட்டு வச்சிருந்தாங்க. போக்குவரத்து நின்னுட்டதால்  கூட்டம் அதிகமா சேர ஆரம்பிச்சுது.  ஒருவழியா அடிச்சுப்பிடிச்சு சித்தர் ஜீவசமாதி கோவிலுக்கு போய்ட்டோம். இதுதான் கோவிலின் நுழைவாயில்இங்கு வரிசையாக தூண்களில் சித்தர்களின் உருவங்களை அழகாக வடிவமைத்துள்ளனர். அவர்களை தரிசனம் செய்துவிட்டு தேங்காய் சுவாமி சித்தரை தரிசிக்க சென்றோம். மிக எளிமையாக கட்டப்பட்டுள்ளது இந்த சித்தர் ஜீவசமாதி.
தேங்காய் சித்தரின் ஜீவசமாதிக்கு செல்லும் பாதைதான் அரக்கப்பரக்க ஆட்களும் வண்டி .வாகனங்களுமாய் ஓடிக்கிட்டு இருந்துச்சே தவிரஅந்த சாலையில் உள்ள நிகழ்வுகளுக்கும், அவ்விடத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லாமல்  சித்தர் சமாதி அமைதியாக காட்சியளித்தது. இங்குள்ள தூண்களில் எல்லா சித்தர்களின் உருவங்களும்,அவர்களின் பெயரோடு சேர்த்து சுதை உருவமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாங்க போன நேரம் கூட்டம் குறைவா இருந்ததால்  அமைதியாக சித்தரின் சமாதியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்ய முடிந்தது. அப்ப,  நமக்கு இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு தோன்றுவதை இங்கு வந்து தியானம் செய்பவர்கள் இயல்பாகவே உணரலாம்.
சரி யார் இந்த தேங்காய் சித்தர் என அவரைப்பற்றிய விவரங்களை தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தால் அங்கிருக்கும் எவருக்கும் சரியான விவரங்கள் ஏதும் தெரியலை. சுவற்றில் இருக்கும் சித்தர்களின் படங்களுக்கு கீழ் அவர்களின் விவரம் இருக்கும்போது இந்த சுவாமிகளின் பிறப்பிடம்குடும்பம், வயது என எதும்  தெரியலியே எப்படின்னு யோசிக்க,  இங்கிருக்கும் சித்தர்களைவிட முந்திய வரலாறு கொண்டவராக ஸ்வாமிகள் இருந்திருப்பார் என நினைச்சுக்கிட்டோம்.
யாருக்கும் சரியான விவரம் தெரியலைன்னாலும் சுவாமிகள் பாண்டிச்சேரியில் இருக்கும் முதுகுளம்ன்ற ஊரில் இருந்துதான் இங்க வந்ததாக சொல்றாங்க. அதன்பிறகு மணவெளி கிராமத்திற்கு அருகிலுள்ள தண்டுகரை மேடுன்ற இடத்தில், முதலில் சிறு குடிசை அமைத்து அதில்தான் வசித்து வந்தாராம். சுவாமிகளின் அருமையை தெரிந்துகொண்ட சிலர் அவரைத் தேடிவந்து தரிசனம் செய்தனராம். சுவாமிகள் எப்பொழுதும் அந்த குடிசையில்  பரம்பொருளை நோக்கி தீவிரமான ஆத்மதியானத்திலேயே இருப்பாராம். 
இவரைத் தேடிவரும் மக்களுக்கு குறைகளை தீர்த்து வைத்துள்ளார். அதேசமயம் சிலருக்கு அவர்களுடைய பிரச்சனையை அவர்கள் கையாலே தேங்காய் கொண்டு வரச்செய்து அதை உடைத்து சுவாமிகள் பார்க்கும்போது, அந்த தேங்காயில் சுவாமிகளின் கண்களுக்கு மட்டும் நீல நிறத்தில் எழுத்துக்கள் தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாராம். அதனாலேயே ”தேங்காய் சித்தர்”ன்ற பெயர் வந்ததா சொல்றாங்க. பில்லி சூன்யம் ஏவலால் பாதிக்கப்பட்டவங்க வந்தால், அவர்கள் கொண்டுவரும் தேங்காயை வைத்தே துஷ்ட சக்திகளை விரட்டி அடிப்பாராம். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வைத்து வணங்க எல்லா துயரமும் போய்விடுமாம். சிலருக்கு பச்சிலை மூலிகைகளைக் கொண்டு  வைத்தியம் செய்து தீராத நோய்களை குணமாக்கியும் வந்தாராம்.
அப்படியே சில ஆண்டுகள் அங்கயே தங்கி இருந்து தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு பிரச்சனைகளை தீர்த்துவைத்தும், ஆத்ம சாதனையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் சுவாமிகள். ஒருநாள் வில்லியனூரில் ஒரு மரத்தடியில் தியான நிலையலிருந்தபடியே ஜீவ சம்தியாகிவிட்டாராம். அங்கேயே அவருக்கு சமாதி எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். அவர் ஜீவ சமாதியான வருடம், தேதி என எந்த விவரமும்  யாருக்கும் சரியாக தெரியவிலை.  ஆரம்பத்தில் மிக எளிமையான முறையில் சமாதி எழுப்பி வழிபட்டுவந்துள்ளனர். நாட்கள் செல்லசெல்ல பக்தர்கள் கோவில் இப்ப இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். 
இன்றும் சுவாமிகளுக்கு தேங்காயை வைத்து வழிபட்டுவந்தால் தீராத பிரச்சனைகளும் தீரும்ன்ற நம்பிக்கை இங்குள்ளது. இவரது ஜீவசமாதிக்கு செல்ல,புதுச்சேரிபஸ்டாண்டில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் சென்றால் அங்கெ இருக்கும்   வில்லியனுர் துணை மின் நிலையத்திற்கு எதிரில்  இவரது ஜீவ சமாதி உள்ளது.
தேங்காய் சித்தரின் பதிவுக்காக இணையத்தில் தகவல்களை தேடும்போது ,வில்லியனூரில் எடுக்கப்பட்ட ஒரு பழமையான பிரெஞ்ச் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த விடியோவும் இந்த சித்தர் பதிவுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்குமென்று நம்புகிறேன்.
இந்த சித்தர் சமாதி 2010-ம் ஆண்டு ஒரு சிறிய வழிபாட்டு ஸ்தலமாகவே இருந்தது.வருடங்கள் செல்ல,செல்ல சித்தரின் பெருமை உலகுக்கு தெரிய,அவரது அருளாசிகளை போல் அவரது ஜீவ சமாதியும் பெரியதாக கட்டப்பட்டு,வழிபாடுகளும் சிறப்பாக கொண்டாட படுகின்றன .இதோ தேங்காய் சித்தர் சமாதி 2010 ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
அடுத்த வாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.

நன்றியுடன்
ராஜி  

10 comments:

  1. இப்படி எல்லாம் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதாய்த் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் இல்லை அண்ணா..எப்படியும் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் சிந்தை எப்பொழுதும் பரம்பொருளையே தியானித்துக்கொண்டிருக்கும் அவர்களே சித்தர்கள்...

      Delete
  2. சித்தரின் புராணம் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க அண்ணா...

      Delete
  3. அருமை. தங்கள் பயணம் தொடரட்டும்.

    தங்கள் பதிவில் Page Break தெரிவை பயன்படுத்தவும்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது அருட்குரு ஸ்ரீதேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்- பாண்டிச்சேரி சித்தர்கள். பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை இணைத்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் சேவை தொடரட்டும் நாங்களும் பலன் பெறுகிறோம்.எங்களை போன்று வலைத்தளம் எழுதுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமே.

      Delete
  4. Replies
    1. அறிந்துகொண்டமைக்கு நன்றிங்க அண்ணே.....

      Delete
  5. தேங்காய் சித்தர் - தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அறிந்தது நல்லது,அறியாதது சென்று தரிசித்து சித்தரின் பெருமைகளை அறிந்துகொள்வது.சரிதானே அண்ணா..

      Delete