Tuesday, March 24, 2020

எல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் கார்னர்

செரிமானம், வாயுத்தொல்லை தொடங்கி இப்ப வந்திருக்கும் கொரோனா வைரசைக்கூட பூண்டு தீர்க்கும்ன்னு அடிக்கடி வசந்தி  பரவுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைகள் பூண்டை வெறுத்து ஒதுக்காம சாப்பிடுவாங்க. முக்கியமா புளிக்குழம்பில் ஊறிய பூண்டுக்கு அடிதடிலாம் நடந்த வரலாறுலாம் எங்க வீட்டில் உண்டு. அதுக்காகவே தலைக்கு இத்தனை பூண்டு பற்கள்ன்னு தட்டில் முதல்லியே எடுத்து வச்சதும் உண்டு.   அப்பேற்பட்ட பிள்ளைகளுக்கு பூண்டு சட்னின்னா சொல்லவா வேணும்?! சூடான இட்லி, அளவான காரத்தோடு சட்னி இருந்தால் அன்னிக்கு ஹாட் பாக்சில் இருக்கும் இட்லி காணாம போகும்.  தோசைக்கும் நல்லா இருக்கும். ஆனா, இட்லிக்குதான் செம மேட்சிங்கா இருக்கு

தேவையான பொருட்கள்..
தோல் உரித்த பூண்டு  பற்கள்
வெங்காயம்
காய்ந்த மிளகாய்
உப்பு
புளி
எண்ணெய்
கடுகு
ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க..
அடுத்து பூண்டு போட்டு வதக்குங்க...
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கனும்..


வெங்காயமும், பூண்டும் வதங்கினபின் தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்..
புளி கொஞ்சம் சேர்த்து அடுப்பை அணைச்சுட்டு நல்லா ஆறினதும், முதல்ல மிளகாயை அரைச்சுட்டு பிறகு வதக்கின வெங்காயம், பூண்டினை சேர்த்து கொரகொரப்பா அரைங்க.  முதல்லியே எல்லாத்தையும் சேர்த்து அரைச்சா மிளகா முழுக்க மசியாது.  பூண்டும், வெங்காயமும் மசிஞ்சு பிசுபிசுன்னு இருக்கும். 
அரைச்ச சட்னியில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டுங்க. சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி ரெடி.

பெரிய வெங்காயத்திற்கு பதிலா சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கிட்டா இன்னும் ருசி கூடும்.
நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. அருமை... வீட்டிலும் படித்து விட்டார்கள்...

    ReplyDelete
  2. மிகவும் பிடித்தமானது

    ReplyDelete
  3. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    ReplyDelete
  4. நல்ல சட்னி.  நானும் செய்துபார்க்கச் சொல்கிறேன்.  நாங்கள் பூண்டை மட்டுமே வைத்து அரைத்து வைப்போம்.

    ReplyDelete