Thursday, April 02, 2020

மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்

என் மகளின் கல்யாணத்துக்கு வந்திருந்த என் ஓரகத்தி நான் பின்னி வச்சிருந்த வயர் கூடைல ஒன்னை எடுத்துக்கிட்டு போனாள். சின்னதா அழகா இருக்குன்னு அவங்க பக்கத்து வீட்டில் கேட்டதா சொல்லி 3 வயர் கூடை வெவ்வேறு அளவுகளில் பின்னித்தர சொல்லி இருக்கா. 

2 ரோலில் பின்னிய கூடை இது... எட்டு கிலோ வரை தாங்கும்.  பொதுவா ஒரு கலரில் 3,4,5 எண்ணிக்கையில் வயர் எடுத்து கட்டம் கட்டமா பின்னி இருக்கேன். புதுசா இருக்கட்டுமேன்னு 1க்கு 1ன்னு மாத்தி மாத்தி பின்னினேன்.  நல்லா இருக்கா?!











கலர் காம்பினேஷன் செலக்‌ஷன் என் சின்ன பொண்ணு..   இந்த கூடையை என்ன விலைக்கு விக்கலாம்?! இதுவரை வெளியில் விற்றதில்லை. அக்கம்பக்கம், சொந்தம்ன்னு பின்னி கொடுத்ததால், அதிகமா விலை வைக்க மாட்டேன். அதனால் மார்க்கெட் விலை எனக்கு தெரில. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. ஒயர் வாங்க எவ்வளவு ஆச்சு? பின்னி முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்டீர்கள்னு ஒரு கணக்குப் போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. நான் கணக்கில் வீக். ஒரு வயர் ரோல் 45 ரூபா. அப்ப என்ன விலை சொல்லலாம்?!

      Delete
  2. நல்ல வேலைப்பாடு சகோ.

    இந்தக் கூடையை என்னைப் போன்றவர்களுக்கு விலை இல்லாமல் கொடுக்கலாமே..

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கலாமே! ஆனா, வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடனும். அதான் கண்டிஷன். பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்கனும்ன்னு மீடியம் சைஸ் கூடையை என் வீட்டுக்கு வரும் சொந்தங்களுக்கு போட்டு கொடுப்பது வழக்கம்.

      Delete
  3. இந்தக் கூடைக்கு 125 ரூபாய் வரை கொடுக்கலாமா?!!!

    ReplyDelete
  4. ராஜி செமையா இருக்கு. நான் காலேஜ் படிக்க சமயத்துல அப்ப வயர் கூடை ரொம்ப ஃபேமஸ். மீன் கட்டி தொங்க விடுறது, வயர் கூடை எங்க டிபன் பாக்ஸ் கொண்டு பொக வயர் ல பின்னர டப்பா கூடை, பூக்கூடை, கொலுவுக்கு சின்ன சின்னதா மீதி இருக்கற வயர்ல செய்யுறதுனு நிறைய. அதுக்கு அப்புறம் செய்யவே இல்லை.

    ஒரு கூடை பின்ன 2 ரோல். இல்லையா ஒரு ரோல் 45...ரெண்டு ரோல்90...உங்க நேரம், உழைப்பு (எனக்குத் தெரியும் வயர் கூடை பின்னறது எம்புட்டு கை வேலைன்னு...) க்கான கூலி போட்டா 125. நட்பு உறவு வட்டத்துக்குள்ள...வெளிய நா 150 கொடுக்கலாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சரியான விலையாதான்க்கா இருக்கும். அப்படியே செய்றேன்

      Delete
  5. கடைகளில் இப்படியான கூடைகள் விற்கிறார்கள். அங்கே விலை கேட்டு அதற்குத் தகுந்த மாதிரி நீங்கள் விலை வைத்துக் கொள்ளலாம் - திருச்சி மங்கள் & மங்கள் கடைகளில் இந்த மாதிரி ஒயர் கூடைகள் விற்கிறார்கள் என நினைக்கிறேன் - பார்த்த நினைவு! உங்கள் ஊரிலும் கூட கடைகளில் கேட்டுப் பாருங்கள்.

    150/- ரூபாய் என கீதாஜி சொன்னது ஓகே எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் கேட்டு பார்க்கிறேன்.

      Delete
  6. அமேசான் தளத்தில் கூட இந்தக் கூடைகளை விற்பனை செய்கிறார்கள். இப்போது விலை எதுவும் போட்டிருக்கவில்லை! இந்த லாக் டவுன் முடிந்த பிறகு தளம் சென்று பாருங்கள். உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. யோசனைக்கு நன்றிண்ணே. ஆனா 2 ரோல் கூடை 400, 500ன்னு அமேசான்ல பார்த்தேன். அது சரிப்பட்டு வராதுண்ணே.

      Delete
  7. மிகவும் அழகு...

    பின்னுவதற்கு எவ்வளவு பொறுமை தேவை என்பது எனக்குத் தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கும் நமக்கும்தான் வாய்க்கா தகராறு இருக்கே!

      Delete
  8. மிகவும் அழகாக இருக்குங்க. கலர் காம்பினேஷன் நல்ல இருக்குங்க. 😍😍

    எத்தனை கூடை, கவர், கட்டைபை வந்தாலும் இந்த கூடை கூட ஒப்பிட முடியாது...
    அம்மா முன்னாடி பின்னிட்டு இருந்தாங்க இப்ப கழுத்து வலி வந்ததுல இருந்து பின்னுவதை விட்டுட்டாங்க..

    கூடை விற்பனைக்கு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம் கேக்குறவங்களுக்கு பின்னி தருவேன்.

      Delete
  9. ஒரு காலத்தில் ஒயர் கூடைகளுக்கு அதிகத் தேவை இருந்தது
    பலரின் குடும்பங்களை இந்த ஒயர் கூடை பின்னல்தான் வாழ வைத்தது
    இன்று விதவிதமான பைகள் வந்து வயர் கூடையின் தேவையைக் குறைத்துவிட்டன

    ReplyDelete