Wednesday, November 22, 2017

குளவி பிஸ்கெட் வாங்கலியோ! குளவி பிஸ்கெட் - அருவருப்பான உணவுகள்



நம்ம ஊரில்  ஒருத்தர் கம்மங்கூழ்  விரும்பி குடிப்பார். ஆனா, அவரோட நண்பர், கைவிட்டு கரைக்குறதால, கூழை கண்டாலே குமட்டிக்கிட்டு இருப்பார். ஒருத்திக்கு சுட்ட கருவாடாவது இருக்கனும் சமையல்ல. ஆனா, அவளை கட்டிக்கிட்ட புண்ணியவானுக்கு நான் வெஜ்ன்னாலே அலர்ஜி. இந்த மாதிரி ஆளுக்காள், பிறந்து வளர்ந்த இடம், சூழலுக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்கள் வேறுபடும். ஆனா, நாம கனவில்கூட நினைச்சு பார்த்திராத உணவுகளை, அருவருப்பான உணவுகள்ன்னு இரண்டு பதிவில் பார்த்துக்கிட்டு வர்றோம். பார்க்காதவங்க ஓடிப்போய் பதிவு 1, பதிவு 2 னை ஓடிப்போய் பார்த்துட்டு வந்திடுங்க.  பார்த்துட்டு வந்தாச்சா?! வாங்க, இன்னிக்கு பதிவுக்கு போகலாம்....
ஷாங்காய் டின்னர்களில் பரிமாறப்படும் ஒரு வகை உணவு திகிலூட்டுவதா இருக்கு. இந்த உணவின் பெயர்  பிளட் கிளாம்ஸ்(Blood Clams). இதை சாப்பிட்ட 20 வினாடிகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நல்ல சுறுசுறுப்பை தருமாம். ஆனா, இந்த உணவால் ஹெபடைடிஸ் ஏ மற்றும், ஈ, டைபாய்ட், வயிற்றுப்போக்கை உண்டாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை விரைவில் தூண்டி உயிருக்கே சில சமயம் உலை வைத்துவிடும். உடலுக்கு மிகவும் முடியாதவர்களும், திரில்க்கு அலையும் சிலரும் இந்த உணவை உண்கின்றனர். இந்த உணவை தின்று கடந்த வருடம் மட்டும் 3 லட்சம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியதோடு 31 பேரும் இறந்தனர். இதைஅ சாப்பிட்டால் ஹெபடைடிஸ் நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு 15 % சதவீதம் அதிகமாகுமாம். பெரும்பாலும் இதை உண்பவர்கள் பெரும்பாலும் எதுக்கும் தயாரானா நிலையில் இருக்க வேண்டுமாம்.   


கால்விரல்  காக்டெய்ல்,
புளிப்பு சுவையாக்கப்பட்ட மனிதனி கால்விரலை எடுத்து அதை ஆல்கஹாலுடன் சேர்த்து குடிப்பது ஒரு சிலரின் ரசனை.  மனநோயாளிகளும், சைக்கோக்களும்தான் இப்படி குடிப்பாங்கன்னு நினைக்குறேன். ஆரோக்கியமான மனநிலையில் உள்ள மனிதன் எவன் இப்படி குடிப்பான்?!  ஊறுகாய் பதத்துக்கு மாற்றப்பட்ட கால்விரலை கிளாசில் போட்டு குடிக்குறாங்க,  இந்த பழக்கம் 1973 ஆம் ஆண்டில், கேப்டன் டிக் ஸ்டீவன்சன் என்பன் சில பையன்களின் கால்கட்டைவிரல்களை ஜார்களில் அடைத்து, நிலவொளியில் வைத்து,  சிலகாலம் கழிந்தபின், மதுவில் வைத்து குடிப்பானாம். இப்படித்தான் இந்த பழக்கம் வந்ததாம். இந்த புளிப்பு சுவையூட்டப்பட்ட கால் விரல்பகுதி மதுபான பழக்கம் 1920களிலிருந்தே இருக்கிறதென  அவரது குறிப்பில் இருக்கிறதாம்.  "நீங்கள் வேகமாக குடிக்கலாம், நீங்கள் அதை மெதுவாக குடிக்கலாம், ஆனாலும், உங்கள் உதடுகளை பெருவிரலை முத்தமிடும்ன்னு வர்ணிக்கிறார். ஐயோ கேட்கவே பயமா இருக்குல்ல!

மேலும், இதுபத்தின சுவாரசியமான கதை ஒன்று இருக்கு...  லிங்கன், லூயி மற்றும் ஓட்டோன்ற மூன்று சகோதரர்கள்,  இவர்கள் மில்லர் கிரீக் என்னும் இடத்திற்கு செல்லும்போது தடைவிதிக்கப்பட்ட ஆபத்தான பனிச்சரிவுகளை கொண்ட அலஸ்காவின்  பனிப்பிரதேசத்திற்குள் தவறுதலாக  நுழைந்துவிட்டனர். அங்கே கடுமையான பனிப்பொழிவு. லூயி தன்னுடைய காலை தவறுதலாய் பனியினுள் வைத்துவிட்டார்.  நீண்ட நேரம் போராடி தனது காலை வெளியில் எடுத்துவிட்டார்.  பின்னர் தன்னுடைய அறைக்கு திரும்பி வந்து தனது கால்களைப் பார்க்கும்போது கால் மரத்துப்போய் கட்டையாகி இருந்தது. உன் கால்விரல் அழுகிப்போய் உள்ளது. அது உன் உயிருக்கு ஆபத்தாய் முடியும். அதனை தவிர்க்க்க உன் கால்விரலை வெட்டிவிட வேண்டுமென கூறி லூயியின் கால்விரலை வெட்டி, அங்கிருக்கும் பரண்மேல் வீசிவிட்டார். காலங்கள் உருண்டோடி, 40 வருடங்கள் கடந்தபின்  அந்த இடத்திற்கு கேப்டன் டிக் ஸ்டீவென்சன் என்பவர் குடிவந்து, பரணிலிருந்த அந்த கால்விரலை கண்டெடுத்திருக்கிறார். அது மக்கிப்போய் புளிப்பு சுவையுடன் இருந்ததாம். அதை மதுவுடன் சேர்த்து குடிக்க தொடங்கினார். அப்படிதான் இந்த பழக்கம் வந்ததாம்!!!!!
பழம்தின்னும் வவ்வால் சூப் 
இது முழுக்க முழுக்க கைகளால் சாகசம் செய்யும் ஒருவகை உணவு. பழம் தின்னும் வவ்வால்களை நன்றாக கழுகி, அதை கொதிக்கவைத்த வெஜிடபிள் சூப் அல்லது தேங்காய்ப்பாலில் முழுவதுமாக வேக வைத்து சாப்பிடும்  முறையாகும். இந்தவகை உணவை சாப்பிடுபவர்கள் அதன் கண்கள் மூளை, குடல்ன்னு எல்லாத்தையும் சாப்பிடுவாங்களாம். ஆனா, இந்த எலும்பு, நகம் மட்டும் திங்க முடியாம தப்பிச்சுடுமாம்.. 
 
 ஜிங்  லீட்-Jing Leed   (Grasshoppers) – தாய்லாந்து 
பூச்சிகள் இனம், வெட்டுக்கிளின்னு எது கிடைச்சாலும் அதை பிடிச்சு ஒரு முறை சுத்தம் செய்து கழுவி,   சோயா சாஸ் மற்றும் தாய் வெள்ளை மிளகு தூள் ஒரு சிட்டிகை, சிறிது வெங்காயம், கொத்தமல்லி விதை பவுடர் மற்றும் பூண்டு  சேர்த்து செய்யப்படும் ஒரு வகை உணவு இது.இதனை சூடாகவோ இல்ல கூலாகவோ நம்ம விருப்பப்படி சாப்பிடலாம்.   இந்த உணவு செய்யவும் சில கண்டிஷன் இருக்கு.   தேயிலை செடிகளில் இருக்கும் பூச்சிகள்,  இறந்த   பூச்சிகளை சமைக்கக் கூடாது. சமைக்க ஆரம்பிக்கும்போது  பூச்சிகள் புதுசாவும்,  உசுரோடவும் இருக்கனுமாம். (என்ன கெரகம்டா இது?! எப்படியும் கொல்லத்தானே போறோம்?! அது செத்துப்போன பூச்சியா இருந்தால்தான் என்னவாம்?!)  இந்த பூச்சிகள்  1.25 "- 1.5" நீளமானதாகவும், 3.5 கிராம் அளவிலும் இருக்கனும். அதில்  14 முதல் 28 கிராம்  புரோட்டீன் உள்ளது பெண்களுக்கு...  30 முதல் 60 சதவிகிதம் வரை ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.  ஆண்களுக்கு  தினசரி 25 முதல் 50 சதவிகிதம் வரை தேவைப்படுகிறது. இது இதய நோயிலிருந்து நம்மை காப்பாத்துதாம் இதில் அதிகப்படியான இரும்பு சத்துக்களும் இருக்காம்.

குளவி பிஸ்கேட்ஸ்  -ஜப்பான்
நம்மூர்ல பேக்கரில லைட் வெளிச்சத்துக்கு ஈ, வண்டு, விட்டில்பூச்சின்னு வரும். அது சிலசமயம் தவறி, நாம வாங்கும் பண்டத்துல வந்திடுச்சுன்னா கடைக்காரனை உண்டு இல்லன்னு பண்ணிடுவோம். ஆனா, ஜப்பான்ல, குளவியை சேர்த்து பிஸ்கெட் பண்ணுறாங்களாம். பொதுவா, நம்மூர் பிஸ்கட்டுல நிலக்கடலை, பாதாம், முந்திரிப்பருப்புதான்  சேர்ப்பாங்க. வெளிநாட்டில், சாக்லேட் க்யூப் சேர்ப்பாங்க. ஆனா, இந்த வபாய் உணவில் குளவிகளை பிடித்து சேர்த்து சாக்லேட், பிஸ்கட்டை தயார் செய்து,  இதை  அவங்க,விரும்பி சாப்பிடுவதோடு. நாம அருவருப்பா அதை பார்த்தா,  அதை சாப்பிட  கொடுத்து வச்சிருக்கனும்ன்னு கமெண்ட் வேற! சாமி நான் கொடுத்து வைக்காதவளே இருக்கேன் :-)

அடுத்து நாம பார்க்கபோறது Jing Leed (Grasshoppers) – Thailand ஜிங் -லீட் .  இது சிப்ஸ் வகையை சார்ந்த நொறுக்குத்தீனி, உங்களுக்கு வேணும்னா உடனே புக் பண்ணிடுங்க ஏன்னா இதுக்கு அவ்வுளவு டிமாண்ட் தாய்லாந்துல.... நம்ம ஊரு உருளைக்கிழங்கு, பலாப்பழ, வாழைப்பழ, ஆளிவல்லிக்கிழங்கு சிப்ஸ் போல பூச்சிகளை வறுத்து, சுவைக்கு உப்பு, மிளகுப்பொடி தூவி பரிமாறுறாங்க. இது மாலை நேரத்து உணவாம்!

இத்தோடு இந்த டாப்பிக் பதிவை முடிச்சுக்கலாம்ன்னு இருக்கேன். முடிஞ்சா இன்னொரு முறை இந்த டாப்பிக்ல பதிவு வரும். இப்ப நான் பிச்சுக்குறேன்,


நன்றியுடன்,
ராஜி

22 comments:

  1. அடியாத்தி குமட்டிக்கிட்டு வருதே உங்கள் வீட்டில் எப்படித்தான் அயித்தான் இதையெல்லாம் சாப்புடுறாரோ...... ?

    இடைப்பட்ட ஐந்து பத்திகளில் எழுத்துகள் குழப்பமாக இருக்கிறது சரி செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சரியா தெரியுதேண்ணே. இருந்தாலும் புதுசா டைப்புறேன்.

      Delete
    2. காப்பி எடுத்து வேர்ட் பைலில் போட்டேன் சரியாக தெரிகிறது படித்து பயந்து விட்டேன் இந்த கால் ஸூப் குடிப்பதற்கு வரலாறு வேறா ?

      Delete
    3. ம்ம்ம்ம்ம் சரிண்ணே. எதுக்கும் மீண்டும் டைப்புறேன்

      Delete
    4. ஓ.எஸ் மாத்துன லாப்டா, மொசில்லா பயர்பாக்சுல பிளாக் ஒப்பன் பண்ணி டைப்புனேன். அதான் சொதப்பி இருக்கு, இப்ப எப்பயும் போல க்ரோம்ல டைப்பி இருக்கேன். இப்ப எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்கண்ணே.

      Delete
    5. இப்பொழுது சரியாக இருக்கு ஆனால் எழுத்தின் இடையி்ல் அதிகமான அளவு சதுரமானது வருகிறது இது இப்பொழுது பரவலாக எல்லோருக்கும் வருவதுதான்.

      Delete
    6. ம்ம்ம்ம்ம்ம்
      சரிண்ணே.

      Delete
  2. அருமையான பல்சுவை உணவுப் பதிவு..........அவரவர் ஊருக்கு/பழக்க வழக்கத்துக்கு/சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போல் உணவுப் பழக்க வழக்கங்கள்......... நன்றி பதிவுக்கு....////இப்ப நான் பிச்சுக்குறேன்.>>>>என்னத்த????

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரெடி பண்ணுறதுக்குள் முடிலண்ணே. குமட்டுது. ஒரு ஆசைக்கு பதிவை தொடங்கிட்டேன். இந்த பதிவு வேற மாதிரி வரும்

      Delete
  3. பார்க்கவே முடியால குமட்டுதே

    ReplyDelete
    Replies
    1. பதிவெழுதுறதுக்குள் நான் பட்ட இம்சை... அடடா.. சொல்ல முடில ஜலீலாக்கா

      Delete
  4. ஆகா வாந்தியே வந்திடும் போலிருக்கிறது
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆசைக்கு பதிவை ஆரம்பிச்சுட்டேன்ண்ணே. என்னாலயும் முடில. இனி வேற மாதிரி இந்த பதிவு வரும்

      Delete
    2. // இனி வேற மாதிரி இந்த பதிவு வரும் //

      ஐயோ.... சத்தியம்லாம் செஞ்சீங்க....?!!!!!

      Delete
    3. உணவுகள் பத்திய பதிவு வரும். இப்படி அருவருப்பான சாப்பாடு பத்தி வராது... மிகப்பெரிய தோசை, 70 வருட ஒயின், குறிப்பிட்ட இன மக்களின் திருமணத்துக்கு மட்டுமே சமைக்கப்படும் கறி இப்படி.....

      Delete
  5. ஏன் இப்படி! படிக்கவும் முடியாம, படிக்காம இருக்கவும் முடியாம....! அப்பாடி... இதுதான் லாஸ்ட்டா? ப்ராமிஸ்?

    ReplyDelete
    Replies
    1. காட் பிராமிஸ்....

      Delete
  6. நேற்று அழகு பதிவு, இன்று அருவருப்பு பதிவா?

    ReplyDelete
    Replies
    1. இன்பம், துன்பம், இரவு, பகல், மாதிரி அழகின் மறுபக்கம் அருவருப்பு....

      Delete
  7. படிப்பவர்களுக்கு தேவையோ இல்லையோ தொடர்ந்து இவ்வாறு எழுதுவதற்கு ஒரு துணிவு (?) வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆசையில் பதிவை ஆரம்பிச்சுட்டேன். இனி முடியாதுப்பா. குமட்டுது...

      Delete
  8. யப்பா ஸாரி ராஜி வாசிச்சேன்...கொஞ்சம் தான்...இதுக்கு முன்னாடி ஒன் படிச்சோம்னு நினைவு...2 வாசிக்கலை...ஐயோ இது முழுசும் போக முடியாட்டியும் எப்படியோ வேகமா முடிச்சேன்..ஹா ஹா ஹா...

    ஸோ விடு ஜூட்...உங்க ப்ராமிஸ காப்பாத்திட்டீங்களே ஐயப்ப சாமி பதிவு லேட்டஸ்ட் பார்த்துட்டுத்தான் இங்க வந்தேன்...தாங்க காட்!!

    கீதா

    ReplyDelete