Monday, November 20, 2017

சிவப்பெருமான் மனசுல இடம் பிடிக்கனுமா?!

சீமந்தினி’ன்ற  ராஜக்குமாரி சிறந்த சிவ பக்தை. அவள் சிவனுக்குண்டான அனைத்து விரதங்களை முறையாக கடைப்பிடித்து வாழ்ந்து வந்தாள். ‘சீமந்தினி’சிவனை நினைத்து அந்நாளில் விரதமிருப்பதை அறிந்த திருடர் இருவர், அவளிடமிருக்கும் செல்வத்தை களவாட,  கணவன் மனைவிப்போல வேடமணிந்து,  அவளிடம் வந்து, அம்மா நாங்கள் இருவரும் தம்பதிகள், சிவ பக்தை கையால் உணவருந்துவோம்ன்னு அவளை நம்ப வச்சு அவள் வீட்டுக்குள் போனாங்க..  அவளும், அவர்களை சிவனடியார்கள் என நம்பி, வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறினாள். என்ன ஆச்சர்யம்!! உணவு உண்ட திருடர் இருவரில் ஒருவன் , பெண்ணாய் மாறி நிஜ கணவன் மனைவியாய் மாறினர். அழுது புலம்பிய அந்த திருடர்களை அழைத்துக்கொண்டு காட்டில் இருக்கும் முனிவரை சந்தித்து நடந்ததை சொன்னாள். அவரும் ஞானதிருஷ்டியில் நடந்ததை உணர்ந்து, அம்மா! நீ இன்று சோமவார விரதம் இருந்தாயா?! என வினவினார். ஆமாம், என உரைத்தாள் சீமந்தினி.  சோமவாரம் விரதம் இருப்பவர்களின் கையால் சாப்பிட்டல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்சுபிட்சம் ஏற்படும்சோமவாரம் விரதம் இருப்வர்களை எந்த துஷ்ட சக்திளும் அண்டாதுதீயசக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள். என உரைத்ததோடு சீமந்தினியின் வேண்டுகோளின்படி அந்த திருடர்களை உருமாற்றி அனுப்பி வைத்தார்.



வசிஷ்ட மகரிஷிசோமவாரம் விரதத்தை தவறாமல் கடைபிடித்ததால், கற்புக்கரசியான  அருந்ததியை திருமணம் செய்தார்வசிஷ்டரை மறந்த இந்த உலகம் அருந்ததியை மறக்கவில்லை.  இன்றும் திருமணம் செய்யும்போது அருந்ததி பார்க்கும் வழக்கம் உள்ளது. அந்த சடங்குக்கு சொந்தக்காரி இந்த அருந்ததிதான்.
விபுன்ற அரசனுக்கு குழந்தை செல்வம் இல்லை. ஆட்சி, அதிகாரம், படைபலம், திரண்ட செல்வம் இருந்தும் தனக்கு பின் தன் நாட்டை கட்டி காத்து ஆள ஒரு வாரிசு இல்லையே என வருந்தி, ஒரு முனிவரிடம் சென்று தன் வேதனையை சொல்லி குழந்தை வரம் வேண்டினான்.  சோமவார விரதத்தின் மகிமையை சொல்லி,  மன்னா! இந்த விரதத்தை கடைப்பிடி. உனக்கு குழந்தை செல்வம் உண்டாகும் என ஆலோசனை கூறினார். பட்ட மரம் தழைக்குமா?! காலம் பல கடந்து, யௌவனம் மாறி முதுமை நெருங்கும் இக்காலத்தில் பிள்ளை உண்டாகுமா என மன்னனின் எதிரிகளின்  பேச்சை கேளாமல் இறை சிந்தனையோடு சோமவார விரதத்தினை கடைப்பிடித்ததால் அரசனுக்கும், அரசிக்கும் பிள்ளைப்பேறு உண்டானது. 

கீசகன் என்ற அந்தணர், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இறைவனே உலகம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.   எது நமக்கு கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு சோமவார விரதம் இருந்தார். அதன்பலனாக, அவருக்கு பிச்சை அளித்தவர்கள் அவரிடமே உதவி கேட்கும் பெரும் செல்வந்தரானார். அதுமட்டுமின்றி, தான் அடைந்த வறுமையின் கொடுமையை வேறு யாரும் படக்கூடாதுன்னு எல்லா செல்வத்தையும் வாரி வாரி வழங்கினார். 


குசேலன் முன் ஜென்மத்தில் யாருக்கும் கொடுக்காத கருமியாய் இருந்து இறைவன் கொடுத்த எல்லா செல்வத்தையும் தானே  அனுபவித்து இறந்தான், அதனால், மறுபிறவியில் குசேலனாய் பிறந்து வறுமையில் அல்லல் பட்டான். அதேநேரம் கீசகன் குசேலனாய் பிறந்து இன்றளவும் செல்வத்துக்கு அதிபதியாய் உள்ளான். சோமவார விரதத்தை முறையாய் கடைப்பிடித்ததால் மூதேவியையும், எமனையும் தன்னிடம் நெருங்கா வண்ணம் இருக்கின்றான். 

தர்ம வீரியன் என்ற ராஜவம்சத்து இளைஞன் தங்குவதற்கு சிறுகுடிசைக்கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தான் . அவன் சோம வார விரதம் இருந்ததன் பலன் மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு அதிபதியானான்.  விரடன் என்ற திருடன் அரண்மனை களஞ்சியத்தில் களவாட, அவனை சிரச்சேதம் செய்ய மன்னன் உத்தரவிட்டான். தண்டனைக்கு பயந்து அவன், காட்டில் சென்று மறைந்துக்கொண்டான். அவனை, வீரர்கள் தேட, மரத்தில் ஏறி அமர்ந்துக்கொண்டான். மழையில் உடல் தூய்மையாகி,   பசிக்கு உணவில்லாமல் பகலெல்லாம் தவித்து, இரவில் காட்டில் கிடைத்த பழத்தை உண்டு ஜீவித்திருந்தான். அவ்வழியே வழித்தவறி வந்த பெண்ணை கண்டு அவளுக்கு வழிக்காட்டி நகரின் எல்லையில் விட்டு வந்தான். அவள் அந்நாட்டு இளவரசி, அரண்மனை சென்று தன் தந்தையிடம் நடந்ததை சொல்லி, தான் அந்த மனிதனை மணக்க வேண்டுமென கூற, தந்தையும் தீர விசாரித்து, அவனை திருத்தி அவனுக்கே மணமுடிக்க சம்மதித்தான். திருடனுக்கு தெரியாது, அந்த பெண், இளவரசியென்றும், அன்றைய தினம் சோமவார தினமென்றும்... அவன் அறியாமல் பசியோடு இருந்ததன் பலன், அந்த இளவரசியே அவனுக்கு மனைவியாகி, எந்த களஞ்சியத்தில் களவாடினானோ அந்த களஞ்சியமே அவனுக்கு சொந்தமானது. 


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,...  இத்தனை பலனை அளிக்கவல்ல சோமவிரதம் எப்படி உண்டாகிச்சுன்னு இனி பார்ப்போம்...  சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் பெரியவன் ஆனதும் ராஜசூய யாகம் நடத்தி பெரும் புகழை அடைந்தான். அவனது புகழை கண்ட தட்சன், தன்னுடையை 27 பெண்களை கொடுத்தான், 27 பேரை மணந்தாலும், 27 பேரில் ஒருவளான, ரோகினி மீது மட்டும் மிகுந்த அன்பு கொண்டான். இதனால், மற்ற பெண்களை ஏறெடுத்தும் பாராமல் இருந்தான். தந்தை தட்சனிடம் சென்று எல்லா பெண்களும் முறையிட்டனர். தட்சன் சந்திரனை எச்சரித்தும் சந்திரனின் போக்கில் மாற்றமில்லை.  அதனால், அழகன் என்ற கர்வத்தால் என் பெண்களை அலட்சியப்படுத்தியதால், நாளுக்கு நாள் தேய்ந்து போகக்கடவது என சாபமிட்டான். 


தட்சனின் சாபத்தால் உடல் நாளுக்கு நாள் தேய்வதைக்கண்ட சந்திரன், சிவனை தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் சொல்வr. சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.


ஒருமுறை கயிலை மலையில் சிவபெருமான், தேவர்கள், முனிவர்கள் புடைசூழ வீற்றிருந்தனர். அத்தருணம் பார்வதிதேவி அங்கு வந்து சிவபிரானைப் பணிந்து வணங்க, பதிலுக்கு எம்பிரானும் தமது தலைமுடியை அசைத்தருளினார். அதிலிருந்த சந்திரனைக் கண்ட , பார்வதிதேவி இறைவனிடம், சந்திரன் தங்கள் ஜடாமுடியில் அமர்ந்த மர்மமென்ன வினவ, அவன் சோமவார விரதம் கடைப்பிடித்ததன் பலன் என சிவன் சொல்ல, தனக்கும் அந்த விரதம் பற்றி சொல்லக்கேட்டு, பார்வதிதேவியும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தாள் என்கிறது புராணங்கள். 



பார்வதி தேவிக்கு சிவப்பெருமான் சொன்ன  சோமவார விரதம் கடைப்பிடிக்கும் முறை....

கார்த்திகை மாத முதல் கார்த்திகை மாதத்து திங்கட்கிழமை அதி காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகுசிவனை முதலில் வணங்கி . ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு வில்வ இலையிலும்,  அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை  செய்யவேண்டும். அன்னதானம் செய்வது அவசியம். வயது முதிர்ந்த தம்பதியை சிவன் பார்வதிதேவியாய் நினைத்து பாத பூஜை செய்து, உணவிட்டு அவர்களின் ஆசியை பெறவேண்டும்., அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம். மறுநாள் குளித்து முடித்து இறைவனை வணங்கி உணவு உட்கொள்ளலாம். இயலாதவர்கள் இரவு மட்டும் பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம்.  இவ்வாறு முறையாய், 6, 12 வருடங்களென சங்கல்பமிருந்து ஆண்டுமுழுவதும் வரும் அனைத்து திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைப்பிடித்து வந்தல், ஈசனுக்கு பிரியமானவராகி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்...  ..


ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

சோமவார விரதமிருப்போம்.. 
இறை அருள் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்போட வரிசை..

நட்புடன்,
ராஜி.

13 comments:

  1. எம்பூட்டு கதை எல்லாம் சொல்றீங்க...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சொன்ன கதையை உங்களுக்கு சொல்றேன். அவ்வளவ்தான்ண்ணே

      Delete
  2. .அடடா..... சோமவாரம் முடிந்த பிறகு பார்க்கிறேனே... பதிவு போன வாரமே போட்டிருக்கக் கூடாதோ? !

    ReplyDelete
    Replies
    1. பையனுக்கு ஸ்டடி ஹாலிடே, பொண்ணுங்களுக்கு லீவ், ஊர் பயணம், நோன்புன்னு கொஞ்சம் பிசி சகோ. மன்னிச்சு. இனி முதல் நாளே விரத விவரங்களை போட்டுடுறேன்

      Delete
  3. சோம வார விரதம் குறித்த பூர்வீகக் கதைகள்,அற்புதம்.......... நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. கேட்ட கதைகள் - மீண்டும் உங்கள் வாயிலாக படிக்கக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கேட்ட கதையாயினும் எனக்காக மீண்டும் படித்து கருத்திட்டமைக்கு நன்றிண்ணே

      Delete
  5. கதைகள் என்பவை நம்மை மேம்படுத்துகின்றன. குறிப்பாக இறையுணர்வோடு பகிரப்படுபவை மனதிற்கு நிறைவைத் தருகின்றன.

    ReplyDelete
  6. சோமவாரத்துக்கு ஏற்ற கதை இதுவரை கேள்விப்படாதது

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாத விவரமா?! ஆச்சர்யமா இருக்குப்பா

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete