Tuesday, November 07, 2017

பிடிக்கருணைக்கிழங்கு, வேர்க்கடலை குழம்பு - கிச்சன் கார்னர்

 கருணைக்கிழங்கில் ரெண்டு வகை இருக்கு(எனக்கு தெரிஞ்சு)..  பெருசா முட்டைக்கோஸ்  போல  உருளையா இருக்கும் ஒரு வகை கருணைக்கிழங்கும், கொழுக்கட்டை போல இருக்கும் பிடிக்கருணைக்கிழங்குன்னு ரெண்டு வகை  எனக்கு தெரியும். ஆமா, இதுக்கு ஏன் கருணைக்கிழங்குன்னு பேர் வந்திருக்கும்ன்னு சின்னதா ஒரு ஆராய்ச்சி பண்ணதுல நான் புரிஞ்சுக்கிட்டது.. இந்த கருணைக்கிழங்கை பறிச்சதும் உடனே செய்ய முடியாது. கொஞ்சம் தண்ணிலாம் வத்தினப்பிறகுதான் சமைக்கமுடியும். இல்லன்னா சாப்பிடும்போது காரும்..  வெட்டும்போது கை அரிக்கும்.  அதனால, அப்படிலாம் இல்லாம சமர்த்தா இருக்கனும், கருணை காட்டுன்னு யாராவது கேட்டதால இந்த பேரு வந்திருக்கலாம்ன்னு விடை கிடைச்சது.  இது சரியா?! தப்பான்னு நீங்கதான் சொல்லனும்..

 தேவையான பொருட்கள்....
பிடிக்கருணைக்கிழங்கு
வேர்க்கடலை,(பச்சை வேர்க்கடலையை உரிச்சுக்கலாம். இல்லன்னா வேர்க்கடலை பருப்பை 5 மணி நேரத்துக்கு முந்தி ஊற வச்சுக்கனும்)
வெங்காயம்,
பூண்டு,’
தக்காளி,
மிளகாய்தூள்
புளி
உப்பு
எண்ணெய்
கடுகு
கரிவேப்பிலை
 15 இல்ல 20 நாளான பிடிக்கருணைக்கிழங்கை மண் போக நல்லா கழுவி வேக வச்சுக்கனும்... ஒருவேளை கிழங்கு புதுசா இருந்தா கொஞ்சம் புளி சேர்த்து வச்சுக்கிட்டா காராது, இல்லன்னா கையும், நாக்கும் அரிக்கும். வெந்த கிழங்கை வீட்டுக்காரர் தோலை உரிக்குற மாதிரி தோல் எடுத்து வெட்டிக்கனும்... வெங்காயம் தக்காளியை பொடியா நறுக்கிக்கனும். பூண்டை உரிச்சு தட்டி வச்சுக்கனும். புளியை ஊறவச்சுக்கனும்.
 
அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிய விட்டு பூண்டை போட்டுக்கனும்.

அடுத்து வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கி கறிவேப்பிலை சேர்த்துக்கனும்...


வெங்காயம் வதங்க உப்பு சேர்த்துக்கனும்...


வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்துக்கனும்...

ஊற வச்சிருக்கும் வேர்க்கடலைய சேர்த்துக்கனும்....

எல்லாம் வதங்கினப்பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.


மிளகாய் தூள் வாசனை போனதும் புளித்தண்ணிய சேர்த்துக்கனும்..

நல்லா கொதிச்சு புளி வாசனை போனதும் நறுக்கி வச்ச கருணைக்கிழங்கை போட்டு கொதிக்க விடுங்க. 


நல்லா கொதிச்சு வந்ததும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கிடுங்க...



குண்டுடல் பெற உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைய கருணைக்கிழங்குன்னு ஒரு சொலவடை உண்டு... இது மூலநோயை குணப்படுத்தும்.  மாதவிடாய் போது வரும் இடுப்பு வலி, உடல் வலியை போக்கும்.  மாரடைப்பு, கேன்சர் வருவதை தடுக்கும். ஈரலுக்கு பலம் கொடுக்கும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1477216

நன்றியுடன்,
ராஜி.

18 comments:

  1. கொண்டைக் கடலை, மொச்சை போட்டும் செய்வதுண்டு. நிலக்கடலை போட்டா ரொம்பவே பிடிக்கும். கருணைக் கிழங்கு (பெரிது) நாங்க சேனைக் கிழங்கு நு சொல்லுவோம். முதல்ல இங்க எல்லாம் கருணைக் கிழங்குனு சொன்னதும் எனக்குப் புரியவே இல்லை. கருணைக் கிழங்குனா எங்க ஊர்ல அதான் நீங்க இப்ப சொல்லிருக்கறது. பிடி கருணைனும் சொல்லலாம் இந்தப் பிடி கருணைலையே கொஞ்சம் பெரிய கிழங்கும் உண்டு.

    மிளகாய்த் தூள்னு நீங்க சொல்வது சாம்பார் பொடியா இல்லை குழம்புப் பொடியா? நாங்க மிளகாய் தூள்/பொடி நு சொல்லுறது ரெட் சில்லி பௌடர். நாங்க சாம்பார் பொடினு சொல்லுறது.. இதெல்லாம் முதல்ல ரொம்ப குழம்பிருக்கேன். அப்புறம் பழகிடுச்சு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாகர்கோவில்காரங்களுக்கு தனி பாஷைப்பா. வெங்காயத்தை உள்ளின்னும்... மணி நேரத்தை மணிக்கூர்ன்னும், தேதியை திகதின்னு உசுரை வாங்குவீங்க,

      மிளகாய்தூள்ன்னா சாம்பாருக்கு போட அரைப்பது. இதுல மல்லி விதை, மஞ்சள், பெருங்காயம், வெந்தயம்லாம் போட்டு அரைப்பது... நீங்க சொல்லும் சில்லி பவுடர் எங்க ஊர்ல தனி மிளகாய்தூள்ன்னு பேரு.

      Delete
  2. கடைசியில் அதுபற்றிய நலன் குறிப்புகளுடன் கருணைக்குழம்பு நல்ல இருக்கு ரெடி பண்ணிடலாம்

    ReplyDelete
    Replies
    1. புளிப்பும் காரமுமா செமயா இருக்கும்.

      Delete
  3. இந்த கருணைக்கிழங்கு மூல வியாதிக்கு நல்லதுன்னு சொல்வாங்க. நாங்க எலுமிச்சம்பழம் பிழிந்து மசியல் மட்டும்தான் செய்வோம். அல்லது புளித்தண்ணீர் விட்டு!

    ReplyDelete
    Replies
    1. பெரிய கருணைக்கிழங்குலதான் மசியல் செய்வோம். இந்த கிழங்கின் தோலை காய வச்சு துவையல் செய்வோம்

      Delete
  4. நல்ல குறிப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றிண்ணே

      Delete
  5. இந்த கருணைக்கிழங்கு மட்டும்தான் இங்கே கிடைக்கவே கிடைக்காது ஹும்

    ReplyDelete
    Replies
    1. சரி சரி, எனக்கு டிக்கெட்டு, விசாவும் எடுத்து கொடுத்து அனுப்புங்க. நான் கிழன்ஃப்கை கொண்டுட்டு வரேன்

      Delete
  6. முட்டை கோஸ் மாதிரி பெரிதாக இருப்பது சேனைக்கிழங்கு

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்ல கருணைக்கிழங்குன்னுதான் சொல்வோம். சேனைக்கிழங்குன்ற வார்த்தையே இங்கன கிடையாது

      Delete
  7. டாஷ்போர்டில் ஒரே சமையல் குறிப்புகள்

    ReplyDelete
    Replies
    1. யாரோட டேஷ்போர்டில்?! என்னுதுலன்னு சொல்லி இருந்தீங்கன்னா வெரி சாரி. அப்படிலாம் இல்ல. உங்க டேஷ்போர்ட்லன்னு சொல்லி இருந்தா சீக்கிரம் பதிவு போடுங்க. தெரிஞ்சுக்கலாம்.

      Delete
  8. பொருட்கள் எதற்கும் அளவு சொல்லப்படவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பயும் அளவு சொல்றதில்லை சகோ. அவங்கவங்க வீட்டுக்கும், ருசிக்கும் தகுந்த மாதிரி செஞ்சுக்கலாம். ஒருவேளை பிரியாணி, கேக், மாதிரி சரியான அளவில் இருந்தால்தான் நல்லா வரும்ன்னு இருக்கும் உணவு வகைன்னா சொல்லிடுவேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  9. ஆஹா...சுவையா இருக்கு....

    ReplyDelete
  10. கிராமத்திலே இருந்த போதுதான் பிடி கருணையை கண்டதும் உண்டதும் உண்டு

    ReplyDelete