Wednesday, February 15, 2012

இன்று என் தேசத்தில் காதலர் தினம்....,

        முதல் நாள்  பள்ளி சென்றது, முதல் சைக்கிள் பயணம்,   முதல் காதல், முதல் முத்தம், முதல் மழலை, நம் வாரிசின் முதல் அழுகை, முதல் சிரிப்பு, அவை அம்மா(ப்பா)ன்னு கூப்பிட்டதுன்னு        இப்படி நிறைய  ”முதல்”கள் அவங்கவங்க வாழ்க்கையில நடந்திருக்கும். நாம் நம்  வாழ்வின் எந்த கடைக்கோடிக்கு போனாலும் அந்த”முதல்”களை மறக்க முடியாது..

         அதுப்போல. இன்னிக்கு நானும் நல்லா எழுதுறேன்னு வெகு சிலரால்  பாராட்டப்பட்டு 150பதிவை தாண்டினாலும் என் படைப்புகளில் எல்லாமும் நினைவில் இல்லை. (ம்க்கும் எழுதியிருந்தால்தானே பாதி சுட்டதுன்னு எங்களுக்குலாம் தெரியாதாக்கும்). ஆனால், என் ஃப்ரெண்ட் நான்  வலைப்பூ எழுதுறேன்ன்னு நீ வந்து பாரு. கமெண்டும் போட முடியும்ன்னு சொல்லி 2009 ல எனக்கு பிளாக்கை அறிமுகப்படுத்தினார்.

               அவர் பிளாக் படிச்சு, சிலதுக்கு மட்டும் கமெண்ட் மட்டும் போட்டேன்.  எனக்காக என் ஃப்ரெண்ட் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி நான் கிறுக்குறதைலாம் வாங்கி பதிவா போட்டார், அப்போதான் ஒரு விபரீதமான ஆசை தோணுச்சு. நாமளே ஏன் பிளாக் ஆரம்பிக்கக்கூடாதுன்னு யோசிச்சு..., 
                                      
                ஒரு நல்ல நாளில் வீடு பார்த்து பாலும் காய்ச்சியாச்சு. என்ன பதிவா போடலாம்ன்னு யோசிச்சு பார்க்கும்போது இந்த கவிதைதான் எனக்கு பெஸ்ட்டா பட்டுச்சு. எவ்வளவோ கவிதைகள் எழுதியிருந்தாலும்...., என்னவரின் மேல் நான் அதீத காதல் கொண்டிருந்தபோது (இப்போ காதல் இல்லையாக்கும்ன்னு யாரும் கேட்டுடப்படாது. இப்பவும் காதல் இருக்கு.)  எழுதிய  இந்த கவிதையே பெஸ்ட்ன்னு தோணுனதால இந்த கவிதையை பதிவா போட்டுட்டேன்.
                                         
            
       நேத்தே காதலர் தின ஸ்பெஷல் பதிவா இதை போடலாம்ன்னு நினைச்சேன். ஆனால், என் பொண்ணோட பிளாக் அறிமுகமும், என் நண்பரின் மகனோட பிறந்த நாளும் முக்கியமா பட்டதால்... என் காதலை ஒரு நாள் தள்ளி இன்று காதலர் தினம் கொண்டாடுகிறேன்.


                                                                        
இனியொருப் பிறவியில்
நீ கிடைப்பாயோ? இல்லையோ?
எனக்குத் தெரியாது..!!!
ஆனால்,

இப்பிறவியில் எனக்கு,
தாயாய், தந்தையாய்,
சகோதரனாய், நண்பனாய்,
ஆசிரியனாய், சேயாய்,
இணையாய்,கடவுளாய்.....,,,,

உருமாறிய உனக்கு,
என் நன்றிக் கலந்த வணக்கம்.
என் "தாயுமானசுவாமிக் கடவுள்" நீயல்லவா? 



டிஸ்கி: இதே  வலைப்பூவில் என் முதல் கவிதையை பார்வையிட  இது ஒரு மீள்பதிவுதான். என்ன, கொஞ்சம் பட்டி டிங்கரிங்க்லாம் செஞ்சு...., ஒரு பதிவை தேத்தியாச்சு

20 comments:

  1. இன்று காதலர் தினம் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துகள்.வலையின் முதல் பதிப்பையும் பார்வையிட்டேன்.அதை மீள் பதிவாக்கியதும் சிறப்பு.

    ReplyDelete
  2. அருமையான கவிதை ..

    ReplyDelete
  3. ///இப்போ காதல் இல்லையாக்கும்ன்னு யாரும் கேட்டுடப்படாது//

    உங்களை அப்படி எல்லாம் கேட்டு வம்புல மாட்டிவிடமாட்டோம்

    இப்பவும் காதல் இருக்கு.)

    அப்ப புதுசா கவிதை எழுதியிருக்கலாமில்ல....பாவம் எங்கள் அண்ணண்.

    கவிதை அருமை ஆனால்
    என் ////நன்றிக் கலந்த வணக்கம்.//
    என் ///"தாயுமானசுவாமிக் கடவுள்" ///நீயல்லவா?
    இந்த வரிகளை கலரில் போட்டு இருட்டடிப்பி ஏன் செய்தீர்கள். முடிந்தால் டார்க் கலரில் போடவும்

    ReplyDelete
  4. //.என் "தாயுமானசுவாமிக் கடவுள்" நீயல்லவா? //

    வாழ்த்துக்கள்.இதைவிட சிறப்பான கவிதை இருக்க முடியாது.அருமை.

    ReplyDelete
  5. இந்தக் காதல் என்றென்றும் பசுமையாய் தொடர்ந்திருக்க இன்று காதலர் தினத்தைக் கொண்டாடும் தங்கைக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை..தங்களது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு எனது நன்றிகள்/

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  7. இதைப் பார்த்தால் நேற்று நான் எழுதிய கவிதை நினைவில் வருகிறது.

    http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_3060.html

    காதல் உங்களை ரசிக்க வைக்கும்
    காதல் உங்களை கிறுக்க வைக்கும்
    இறுதில் உங்களை கவிஞனாக்கும்

    அருமை கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  8. >>என் நண்பரின் மகனோட பிறந்த நாளும் முக்கியமா பட்டதால்... என் காதலை ஒரு நாள் தள்ளி இன்று காதலர் தினம் கொண்டாடுகிறேன்.

    அடடா உங்க தியாகத்தை பார்த்து புல் அரிக்குதுங்க சாரி புல்லரிக்குதுங்க

    ReplyDelete
  9. லேட்டானுலும் லேட்டஸ்ட்தான்!

    ReplyDelete
  10. ஆம் சகோதரி
    எப்போதும் " முதல்களை "
    மறக்கவே முடியாது.....

    தங்களின் மகளின் வலைப்பூ
    நன்கு மலர்ந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. 'தாயுமான சுவாமி'யை மெச்சியக் கவிதை வெகு அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. மிக அருமை தோழா

    ReplyDelete
  15. மிகவும் அருமை காதலுக்கே நன்றி சொல்வது .இதுவல்லவோ காதல் .

    ReplyDelete
  16. சிறப்பான கவிதை ...காதலர் தினம் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete