மாமா! சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது மறக்காம விபூதி பாக்கட் வாங்கி வாங்க. தீர்ந்து போய்ட்டுது.
ஏன் ஒரு நாள் கூட விபூதி வைக்காம இருக்க மாட்டியளோ!?
போங்க மாமா! டெய்லியும் குளிச்சுட்டும், வெளில போகும்போதும் நெத்தில விபூதி வச்சே பழகிடுச்சு. வெறும் நெத்தியா பார்க்க என்னவோ போல இருக்கு. ப்ளீஸ் வாங்கி வா மாமா!!
விபூதி இல்லாட்டி என்ன புள்ள!? பவுடர் எடுத்து பூசிக்க. யாருக்கு தெரிய போகுது!?
மாமா! விபூதி பூசுறது பழக்கத்துக்காகவும், அழகுக்காகவும், பக்திக்காகவும் தாண்டி அறிவியல் ரீதியாவும் காரணம் இருக்கு.
என்ன காரணம் புள்ள!?
நம் உடம்புல எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டிருக்கு. அதுல எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாச் செல்லுது. அதனால, நெற்றிப் பகுதி அதிக சூட்டோடு இருக்கும். நம் அடிவயித்துலயும் நெருப்பு சக்தியிருக்கு. ஆனா, அந்த சூட்டின் தாக்கம் அதிகமா உணரப்படுவது நெத்திப் பொட்டில்தான். அதனாலதான் காய்ச்சல்ன்னா நெத்தியில கைவைச்சு பார்த்து சூட்டை தெரிஞ்சுக்குறோம். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைச்சு எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பின் வேலை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணிலாம் நாம என்னதான் துண்டு வச்ச்சு துடைச்சாலும் கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிடும். இதனால தலைவலி, தூக்கமின்மைலாம் வரும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேத்ததான் விபூதி வைக்குறதோட நோக்கம். நெற்றிப்பகுதி அதிகமா சூடாவதால கிருமித் தொற்று ஏற்படும். கிருமித் தொற்றைத் மஞ்சள் தடுக்கும். அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதனாலதான் விபூதி, குங்குமம், சாந்துலாம் வைக்கும் பழக்கம் உண்டாச்சு.
அப்படியா! நான் அது ஏதோ பக்திக்காக வைக்குறதுன்னு நினைச்சுக்கிட்டேன். இனி நானும் அதுப்போல வைச்சுக்க பழகுறேன்.
நல்லது மாமா! இந்தாங்க மாமா சாக்லேட்!!
ஏது புள்ள!? இது புதுசா இருக்கே யார் வாங்கி வந்தது!?
நம்ம ராஜியோட பொண்ணு தூயா இருக்காளே! அவ ஃப்ளைட்ல வேலை செய்யுறது உங்களுக்கு தெரியுமில்ல. அவ, ஆயுத பூஜைக்காக லீவுல வந்திருக்கா. அவ எடுத்து வந்தான்னு சின்ன மண்டையனுக்கு கொடுக்க சொல்லி சாக்லேட் 4 சாக்லேட் கொடுத்தா.
ஓ! சரி, ஏன் ஃப்ளைட்ல சாக்லேட் கொடுக்குறாங்கன்னு தெரியுமா!?
ம்ம் தெரியும் மாமா! தூயா சொல்லிச்சு. சிலருக்கு ஃப்ளைட்ல போகும்போது மயக்கம், தலை சுத்தல்லாம் வரும். அப்படி வரும்போது, அந்த சாக்லேட்டை சாப்பிட்டா சாக்லேட்டில் இருக்கும் குளுக்கோஸ் இதெல்லாம் வராம தடுக்குமாம். அது மட்டுமில்லாம. மஞ்சக்காமலை இருக்குறவங்க சாப்பாட்டு விசயத்துல அக்கறை இல்லாம இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு டேஸ்டும், எனர்ஜியும் கிடைக்கவே சாக்லேட் தர்றாங்கன்னு சொன்னா.
ம்ம் சரியாதான் சொல்லி இருக்கா. பக்கத்து வீட்டுல யாரோ அழும் சத்தம் கேக்குதே என்ன!?
அதுவா மாமா, நம்ம பூவாயியை தேள் கொட்டிடுச்சு.
ஓ டாக்டர்கிட்ட கூட்டி போனீங்களா!? இன்னும் இல்ல மாம, வண்டி கொண்டு வர போய் இருக்காங்க. அதுக்குள்ள, நம்ம லட்சுமி பாட்டி வெங்காயத்தை ரெண்டா அறிஞ்சு தேள் கடிச்ச இடத்துல வச்சு அழுத்தி பிடிச்சாங்க. வலி லேசா குறைஞ்சிருக்குன்னு பூவாயி சொல்றா.
ம்ம்ம்ம் எலுமிச்சை பழ விதையோடு உப்பையும் வச்சு அரைச்சு தண்ணில கலந்து குடிச்சாலும் விசம் இறங்கும். நவசாரத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்தா அது தண்ணியாகிடும், அதை தேள் கொட்டுன இடத்துல வச்சாலும் விசம் இறங்கி வலி குறையும்.
அப்படியா!? இனி நினைவில் வச்சுக்குறேன் மாமா! ராஜியோட பையனுக்கு 5 இல்ல 6 வயசிருக்கும்ப்பொது அவனை கூட்டிட்டு ஷாப்பிங் போனோம். அப்போ, கச்சா பைட் சாக்லேட் கேட்டான். ராஜியும் வாங்கி கொடுத்தா. சாப்பிட்டு முடிச்சதும், மிண்டும் கேக்கவே ராஜி தன் கிட்ட பைசா இல்ல. அதனால வாங்கி தர முடியாதுன்னு சொன்னா.
அதுக்கு அவன், அதான் மார்க்கட்டுல வாங்குன மாங்கா பைல இருக்குல்ல நம்ம பெரியப்பா கடைல ஜெராக்ஸ் எடுத்துக்கலாம். ஜெராக்ஸ்க்கு பைசா கொடுக்க வேணாம். சாக்லேட்டும் கிடைக்கும்ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான்.
உன் ஃப்ரெண்ட் போலவே அவ பிள்ளையும் அதி புத்திசாலிதான் போ.
என் ஃப்ரெண்டையும், அவ பையனையும் குறை சொல்லுறீங்கல்ல. இப்ப ஒரு விடுகதை கேக்குறேன். விடை சொல்லுங்க பார்க்கலாம்.
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே.
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயர்.
அது என்ன?!
அது வந்து...,
யோசிச்சு வைங்க. நான் போய் டீ போட்டு எடுத்து வரேன்.
உரையாடலில் தகவல் மழை. விடுகதை.... யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
ReplyDeleteஒண்ணும் அவசரமில்லை. விடையை யோச்ச்ச்ச்ச்ச்ச்சிச்சு சொல்லுங்க.
Deleteநல்ல விளக்கங்கள் சகோதரி... நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா! விடுகதைக்கு விடை எங்கே!? நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேனே!!
Deleteவிளக்கங்கள் அருமை..
ReplyDeleteகருத்துக்கு நன்றி கருண்
Deleteவிடுகதைக்கு விடையை காதம்பரி, காந்தாரி என்று யோசித்துப் பார்க்கிறேன்...ஊஹூம்! முதலும் கடையும் சேரும் க்ளூ மட்டும்தான் தெரிகிறது!
ReplyDeleteமுதல் எழுத்து மட்டுமே சரி.
Deleteவிடுகதை விடையை யோசித்து மண்டைகாயுது ,டீயை கொண்டாங்க ..குடிச்சிட்டு யோசிக்கிறேன் !
ReplyDeleteமண்டைக் காய்ந்ததில் ஓட்டு போட மறந்துட்டேன் ..அதான் மறுபடியும் ....
Deleteத.ம 5
விடை சொல்லாட்டி டீ கிடையாது!!
Deleteகண்மணி!
ReplyDeleteதமிழ்மணம் plus vote 1
சரியான விடைதான் நம்பள்கி!!
Deleteஉங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவிங்களா இல்லை வந்தவங்க நெந்தியிலே பெரிய பட்டையா போட்டு அனுப்புவீங்களா?
ReplyDeleteமுதல்ல பட்டையை போட்டுட்டு அப்புறம் சாப்பாடு போடுவோம்
Deleteஉங்கள் சகோ தென்றல் கவிதையிலே மருத்துவ குறிப்பு சொல்லுறாங்க நீங்க சுவையா கதை போல அழகாக மருத்துவ குறிப்பு சொல்லுறீங்க...சபாஷ் சரியான போட்டி
ReplyDeleteஅக்கா, தங்கைக்குள் ஆரோக்கியமான போட்டி. போட்டி நல்லதுதானே!
Deleteஇந்தியாவிற்கு வரும் போது தூயா எந்த ப்ளைட்டில் போறாங்களோ அந்த ப்ளைட்டில் பயணி போல பயணம் செய்து அவளை கலாய்க்கணும்
ReplyDeleteகோவத்துல ஓங்கி ஒரு அப்பு அப்பிட போறா. பார்த்து சூதனமா நடந்துக்கோங்க.
Delete///யோசிச்சு வைங்க. நான் போய் டீ போட்டு எடுத்து வரேன்.///
ReplyDeleteநீங்க டீ போடப் போறீங்கன்னு சொன்னதுனால நான் யோசிக்கல
யோசனை டீ குடிக்கவா!? இல்ல விடுகதைக்கான விடையை கண்டுப்பிடிக்கவா!?
Deleteரொம்ப நாளைக்கப்புறம் சூப்பர் பதிவொன்று படிக்கக் கிடைச்சது.....
ReplyDeleteஅழகாக சொல்லியிருக்கிறீங்க ...
அப்புறம் விடுகதையெல்லாம் நமக்கிட்ட கேக்கதீங்க..... நமக்கு யோசிக்கவே தெரியாது :(
யோசிக்க தெரியாட்டி பரவாயில்ல. படிக்க தெரிஞ்சிருக்கலாமே! நம்பள்கி விடையை சரியா சொல்லிட்டாரு.
Deleteஇவ்வளவு நேரமா டீ சாப்பிடுறீங்க...
ReplyDeleteபதிலை சொல்லுங்க...
நம்பள்கி பதிலை சொல்லிட்டாரு சௌந்தர்
Deleteசத்தான சுவையான அவியலுக்கு
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும், பதிவை படித்து ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிப்பா!
Deleteவிபூதி குங்குமம் சந்தனம் பற்றிய விஞ்ஞான விளக்கங்களை
ReplyDeleteமிக எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் சகோதரி...
அருமை..
==
விமானத்தில் பயணிக்கும் குறைந்த அளவு சர்க்கரை வியாதி
உள்ளவர்கள் உடனடியாக மயக்க நிலைக்கு செல்வார்கள்...
சாக்கலேட் உடனடி சர்க்கரையை குளுகோஸ் மூலம் கொடுக்கிறது...
==
அருமையான விடுகதை சகோதரி...
நம்பள்கி சரியான விடையை சொல்லிவிட்டார்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!
Deleteஐஞ்சுவையும் அருமை தோழி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி அருணா
Deleteஅருமையான விளக்கங்கள். நன்றி சகோதரியாரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!
Deleteஅருமையான விளக்கங்களை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
ReplyDeleteபதிவை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி
Deleteவிபூதியின் மகத்துவம் பேசியது அருமை! ப்ளைட்டில் வருபவர்களை வெல்கம் பண்ணத்த்தான் சாக்லெட் தர்றாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன். மருமகளின் விளக்கம் எனக்குப் புதுசும்ம்மா! அதுக்காகவே தூயாவுக்கு ஒரு ஸ்பெஷல் சாக்லேட் தரணும்!
ReplyDeleteமருமகளுக்கு வெறும் சாக்லேட் மட்டும்தானா!? அதென்ன பரோட்டா கடை போல வார்த்தைகளை இப்படி துண்டாடி இருக்கீங்க!?
Deleteசிறப்பான அவியல். பல விஷயங்களுக்கு இந்த மாதிரி காரணம் உண்டு. தெரிந்து கொண்டால் நல்லது.
ReplyDeleteஆமாம், நம் முன்னோர்கள் செய்த எல்லா செயல்களுக்கும் எதோ காரண, காரியம் இருக்கு. அதை சரியா புரிந்து கொண்டு தேவையானதை கொண்டு, தேவையில்லாததை தள்ளி விட வேண்டும்.
Delete//ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது//
ReplyDeleteஜீவன் சுப்பு - அக்கா உன்னைப் பத்தி தான் ஏதோ கேக்குறாங்க பார்.. வந்து பதில் சொல்லுப்பா!!
ஏன் இந்த கொலை வெறி ஆவி!?
Deleteகதைக்குள் நிறைய தகவல் நன்றி...
ReplyDeleteVery interesting post. No brain to squeeze to find out the answer for the riddle but I enjoyed it
ReplyDeleteMy humble opinion regarding applying of vibuthi in the forehead is:-
Just to remind the humans that you are equal to this ultimately.
நல்லதொரு பகிர்வு.சில புதிய விடையங்களை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteகணி என்றால் கையிழந்த பெண் என்று தெரியாவிட்டாலும் மற்றைய க்ளூக்களை வைத்து கண்மணி என்று கண்டுபிடிக்க முடிந்தது
[[முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
Deleteகடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே.]]
இதிலே ஓரளவு பதில் வந்து விடும்: கண்மணி
அப்ப நான்காவது?
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
இது ரொம்ப ஈசி! கணிகை என்றால் பரத்தை, தாசி, பொதுமகள். இதில் கை-யை எடுத்து விடுங்கள் கணி! அவ்வளவு தான். கையிழந்த பெண் என்பது பொத்தாம் பொதுவாக போட்ட விடுகதை சரியில்லை என்று நினைக்கிறேன்! ஆனால், முதல் மூன்று வரியிலேயே பதில் கிடைத்தால் ஒகே!
கையிழந்த பெண் என்பதற்கு பதிலாக கையிழந்த பொதுமகளாம் என்று போட்டு இருக்கலாம்!