Tuesday, October 29, 2013

பலகாரம் சுடும் பிரபல பதிவர்கள் - கிச்சன் கார்னர்

ட்ரிங்க்..., ட்ரிங்க்...,

ஹலோ ராஜிம்மா! எப்படி இருக்கே!? என்னம்மா விசயம்!?

நல்லா இருக்கேன் அண்ணா! தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பலகாரம்லாம் சுடனும்..., எப்பவும் அம்மாவும், தூயாவும் ஹெல்ப் பண்ணுவாங்க. இந்த வருசம் அம்மாக்கு உடம்புக்கு முடியல. தூயா படிக்க போய்ட்டா. எல்லா வேலையும் நானே செய்யனும். வேலைகளை நினைச்சாலே பயம்மா இருக்குண்ணா!

நீ ஏன்மா பயப்படுறே!? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வாங்க.  நீ ஏகப்பட்ட தம்பிகளோடு, அண்ணன்களையும் இணையத்தால சேர்த்து வச்சிருக்கே! அதனால, நாங்கலாம் இருக்கோம். என்ன பலகாரம் சுடனும், அதுக்கு தேவையானதைலாம் வாங்கி வை. நான் போய் நம்ம சீனு, ஜீவா, ஆஃபீசர், மனோ, ஆரூர் மூனா செந்தில், சசி, சௌந்தர், ரூபக், மோகன்குமார்ன்னு எல்லோரையும் கூட்டி வரேன். பலகாரம்லம் ருசியா செஞ்சு அசத்திடலாம்.

சரிங்கண்ணா!


ராஜிம்மா! எல்லோரும் வந்துட்டாங்க பாரு.

வாங்க ! எல்லாரும் வாங்க! என்ன சாப்பிடுறீங்க!? டீ? காஃபி? கூல் ட்ரிங்க்ஸ்?

நாய் நக்ஸ்: தங்கச்சிம்மா! டீ, காஃபி தான் உங்கண்ணி போட்டு கொடுத்து கொல்லுறாளே! வேற எதாவது கிடைக்குமா!?

”மின்னல் வரிகள்”கணேஷ்: யோவ் நக்ஸ்! இந்த பலகாரம்லாம் சாமிக்கு படைக்குறதுக்காக செய்யுறது. அதனால, சுத்த பத்தமா செய்யனும். பலகாரம்லாம் சுட்டு முடிச்சு ஊருக்கு கிளம்பும்போது ஒரு குவார்ட்டர் வாங்கி தரேன்.

”கோவை நேரம்” ஜீவா : எங்களுக்கு குவார்ட்டர்லாம் எந்த மூலைக்கு!? அதனால, வீட்டுக்கு போகும் போது ராஜியக்கா கிட்ட சொல்லி ஒரு கேஸ் பகார்டியாக்கு காசு வாங்கி தாங்க!

”மின்னல் வரிகள்”கணேஷ்: சரி, வாங்கி தரேன். ராஜிம்மா! பலகாரம் செய்ய மளிகைப்பொருட்கள்லாம் வாங்கி வந்தாச்சா!?




இல்லண்ணா! வீடுதிரும்பல் மோகன்குமார் அண்ணாவை அனுப்பி இருக்கேன். இன்னும் வரலை. கடைக்கு போயும் 2 மணி நேரம் ஆச்சு.

”மின்னல் வரிகள்”கணேஷ்:  அப்படியா! பொருட்கள்லாம் வந்ததும் ஊற வைச்சு அரைக்க வேண்டியதைலாம் அரைச்சா பலகாரம் செஞ்சுடலாம். இதோ வந்துட்டாரே! என்னங்க மோகன் கடைக்கு போய் ரொம்ப நேரம் ஆனதா ராஜி சொன்னாளே!


வீடு திரும்பல் மோகன்: ம்ம்ம் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு போனேன். மளிகைக்கடைக்காரர்கிட்ட பேசி ஒரு பதிவு தேத்தினேன். மளிகைக்கடைக்காரர் அறியாத தகவல்கள்ன்னு. அப்புறம், அரிசியும், சர்க்கரையும் வாங்க ரேஷன் கடைக்கு போனேன். அங்க அவங்ககிட்ட பேசி ரேசன் கடைக்காரர் அறியாத தகவல்கள்ன்னு பதிவு தேத்துனேன்.

நாஞ்சில் மனோ: உங்கக்கூட எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்கன்னு உங்க வூட்டம்மாக்கிட்ட யாராவது பேட்டி எடுத்து பதிவா போட்டா தேவலாம். சரி, வாங்க போய் பலகாரம் சுடலாம்.

திடங்கொண்டு போராடு சீனு: வாங்க போகலாம். செந்திலண்ணா, நீங்க ஏன் பேப்பர் பேனா கொண்டு வந்திருக்கீங்க.

ஆரூர் மூனா செந்தில்: அதுவா! பலகாரம் சுடுறதுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு பதிவு போட வேணாமா?! அதுக்குதான். சினிமாவுக்கு போகும்போது எல்லாமே தெரிஞ்ச வழி, தியேட்டர் அதனால ஒரு வழியா ஒப்பேத்திடுவேன். ஆனா, அக்கா வீட்டு கிச்சன், ஹால், மிக்ஸி, கடாய் பத்தி தெரியாதுல்ல. நான் என்னத்தையாவது எழுதி வைக்க..., அக்கா ஃபோட்டோ போட்டு அப்படி இல்ல. செந்தில் பொய் சொல்லிட்டான்னு மானத்தை வாங்குவாங்க தேவையா!? அதான் குறிப்பெடுத்துக்குறேன்.
திடங்கொண்டு போராடு சீனு: அதும் கரெக்ட்தான். அக்கா, இப்படி கூப்பிடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, முன்னாடியே ஒரு போட்டி வச்சிருப்பேன். காதலன் அல்லது காதலி மனசை கவரும் விதமா பலகாரம் சுடுவதெப்படின்னு..., 

கோவை நேரம் ஜீவா: சரி விடு சீனு! அடுத்த தீபாவளிக்கு அப்படி ஒரு போட்டி வச்சுடலாம். சரி, நாமெல்லாம் வந்துட்டோம். எப்பவும், எங்கயும் முதல்ல வரும் டிடி எங்க ஆளை காணோம்.

திண்டுக்கல் தனபாலன்: நான் காலைலயே வந்துட்டேன். நாந்தான் மளிகைப்பொருட்கள் என்னென்ன வாங்கனும்ன்னு லிஸ்ட் எழுதி கொடுத்தனுப்பினேன். என்னை கேக்குறீங்களான்னு பார்க்கத்தான் மாடில உக்காந்துட்டிருந்தேன். தமிழ்வாசி கைல எதோ புத்தகம் வச்சிருக்கிறாறே ஏன்!?

தமிழ்வாசி பிரகாஷ்:  இதெல்லாம் பலகாரங்கள் எப்படி சுடுவதுன்னு புத்தகம். இதை பார்த்து டெக்னிக்கலா நாம பலகாரம் சுடனும். 

ரூபக் ராம்: இப்படியே பேசிக்கிட்டு இருங்க.  உங்க வூட்டம்மா ஒரு நாளைக்கு உங்களை டெக்னிக்கலா உதைக்க போறாங்க. ராஜியக்கா! ஏன் இம்புட்டு கஷ்டப்பட்டு பலகாரம் செய்யனும். அடையாறுல எனக்கு தெரிஞ்ச ஒரு ஹோட்டல் இருக்கு. அங்க போனா அதிரசம் நல்லா இருக்கும். சேலம் பக்கத்துல ஒரு வீட்டுல முறுக்கு சுட்டு தர்றாங்க. அதை வாங்கிக்கலாம்.

மின்னல் வரிகள் கணேஷ்: அதெல்லாம் எப்படி செய்தாங்களோ! நாம சுத்தபத்தமா செய்யலாம் ராம்.  மனோ நீஞக் ஏன் கைல அருவா எடுத்து வந்திருக்கீங்க!? பலகாரம் சுடுறதுக்கு எதுக்கு அருவா!?

நாஞ்சில் மனோ: அரிசி, பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி வாங்கி வரும் கவர்களை கிழிக்க அருவா கொண்டாந்தேன். அது மட்டுமில்லாம, அதிரசம், முறுக்கு மாவுகளை சின்ன சின்ன உருண்டையா உருட்ட ஒரே லெவலா மாவு வெட்டறதுக்கும் அருவா கொண்டாந்தேன்.

உணவு உலகம் சங்கரலிங்கம்: கவரை பிரிக்கவும், மாவை உருட்டவும் அருவாவா!? பலகாரம்லாம் வெளங்குன மாதிரிதான். சரி, அந்த பருப்பு, அரிசி, சர்க்கரைலாம் இப்படி கொண்டாங்க. அதுல கலப்படம் இருக்கா. பேக்கிங் சரியா இருக்கா?ன்னு பார்க்கனும். கேசரிக்கு போடுற கலர் பவுடர் யார் வாங்கி வந்தாங்க.

திண்டுக்கல் தனபாலன்:  குலோப் ஜாமூன்ல கொஞ்சம் கலர் பவுடர் சேர்த்தா நல்லா இருக்குமேன்னு நாந்தான் லிஸ்ட் எழுதி கொடுத்தேன் ஆஃபீசர்.
உணவு உலகம் சங்கரலிங்கம்: நோ! நோ! இந்த கலர்லாம் சேர்க்க கூடாது. இதுல்லாம் சேர்க்குறதால உடம்புக்கு கேடு, அதுமிட்டுமில்லாம இந்த பாக்கெட்டுல என்னிக்கு தயாரானது?ன்ற தகவலும் இல்ல. ஏம்மா ராஜி! அரிசி, பருப்பு ஊற வைக்க தண்ணி பிடிச்சு வச்சிருக்கியா!?

பிடிச்சு வச்சிருக்கேண்ணா! ரெண்டு தவளை, ஒரு அண்டாவுல இருக்கு.

உணவு உலகம் சங்கரலிங்கம்: அதை விம் போட்டு நல்லா துலக்கி, கழுவினியா?! தண்ணி என்னிக்கு பிடிச்சே!? தட்டு போட்டு மூடி வச்சிருக்கியா!? தண்ணி பிடிக்கும் இடத்துல க்ளீனா இருக்கா!? இல்ல தண்ணி தேங்குதா!?

விக்கியுலகம் வெங்கட்:  இப்படியே ராஜியை கேள்வி கேட்டுட்டு இருந்தா தீபாவளி முடிஞ்சு பொங்கலே வந்துடும். நான் இருக்குற வியட்னாம்ல பூச்சிலாம் சாப்பிடுறாங்க. அப்படி நினைச்சு சாப்பிட்டுக்கலாம். இன்னும் பலகாரம் சுடவே ஆரம்பிக்கலை. ஆனா, அதுக்குள்ள என்ன நாய் நக்ஸ் இப்படி தூங்குறாரு!? நக்ஸ்ண்ணே! எந்திரிங்க! ஏன் இப்படி தூங்குறீங்க!!
நாய் நக்ஸ்: ஊருல இருந்து கார்ல வரும்போது முன்னாடி போய்க்கிட்டிருந்த கார்க்காரன் மேல இடிச்சு பெரிய சண்டை வந்துட்டுது. அப்புறம் கமிஷ்னருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து அவர் வந்து பஞ்சாயத்து பண்ணி இங்க வர்றதுக்குள்ள டயர்டாகி போச்சு. 

விக்கியுலகம் வெங்கட்: கமிஷனருக்கே மிஸ்டு காலா!? சுத்தம். ஏன்யா, மதுரை தமிழா! உனக்கு இம்புட்டு நேரமா!? நாங்கலாம் எப்பவோ வந்திட்டோம். போ உன் சகோதரி ராஜி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

மதுரை தமிழன்: உங்களுக்கென்னப்பா, நீங்கலாம் உள்ளூர்லயே இருக்கீங்க சீக்கிரம் வந்துட்டீங்க. ஆனா, நான் அமெரிக்காவுல இருக்கேன். இதுக்கே ஒபாமாக்கிட்ட பேசி ஸ்பெஷல் ஃப்ளைட் அனுப்ப சொல்லி வந்திருக்கேன். தீபாவளி அதுவுமா இந்தியாவுக்கு போறீங்க, உங்க பழைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு சேலை எடுத்து கொடுக்க போறீங்களா?!ன்னு ஆயிரம் கேள்வி கேட்ட பொண்டாட்டிக்கிட்ட சரியா பதில் சொல்லாம அவ கையால பூரிக்கட்டை அடி வாங்கிட்டு வந்திருக்கேன். ஏம்பா சதீஷ்! நீ ஏன் துப்பாக்கி கொண்டாந்திருக்கே!?

” ரௌத்திரம் பழகு” சதீஷ் செல்லதுரை: காலைல நம்ம வாத்தியார் போன் பண்ணி இருந்தார். பார்டர்ல இருந்ததால, என்ன சொல்றாருன்னு சரியா காதுல விழல. ராஜி அக்கா, வீடு, சுடனும், புறப்பட்டு வான்னு மட்டும்தான் காதுல விழுந்துச்சு. திருடன், தீவிரவாதி யாராவது அக்கா வீட்டுக்குள் வந்துட்டாங்களோன்னு துப்பாக்கி கொண்டு வந்தேன்.

தமிழ்வாசி பிரகாஷ்: ம்க்கும், ராஜி அக்கா, திருடன், தீவிரவாதியை பிடிச்சு ஆட்டி வைக்காம இருந்தா போதாதா!? ராஜி அக்கா வீட்டுல பலகாரம் சுட ஹெல்ப்க்கு நம்மை கூப்பிட்டு இருக்காங்க. அதுக்கு துப்பாக்கி சரிப்படாது. கரண்டி, கடாய்தான் வேணும். சசியக்கா! நாங்களே பேசிட்டு இருக்கோமே! நீங்க மகளிரணியாச்சே! எதாவது பலகாரம் செய்யுங்களேன்.

தென்றல்” சசிகலா:  
என் ஆசை மச்சானே! 
நீ பிறந்ததென்ன திருநெல்வேலியா!?
எனக்கு பதில் சொல்லாம,
 இப்படி ஜவ்வா இழுக்குறியே!? 

நீ வளர்ந்தென்ன மணப்பாறையா!? 
அந்த முறுக்கு போல என் மனசை நொறுக்குறியே!

”கோவை நேரம்” ஜீவா! யக்கா! யக்கா! உங்களை கவிதை படிக்க வரச்சொல்லலை. தீபாவளி பலகாரம் செய்ய கூப்பிட்டோம்.
தென்றல்” சசிகலா: இப்பதான் பாட்டி வைத்தியத்துக்காக, தீபாவளி லேகியம் செய்யுறது பத்தி படிச்சேன். அதை வேணும்ன்னா செய்யுறேன். மத்தப்படி பலகாரம் செய்யுறதுலாம் எனக்கு தெரியாது.

நாஞ்சில் மனோ” நீ கிண்டுற அல்வாவே மருந்து மாதிரிதான் இருக்கும்ன்னு மச்சான் சொல்ல கேட்டிருக்கேன். நீ அமைதியா போய் கவிதை எழுது. நாங்க பார்த்துக்குறோம் தாயி. ஆமா, இங்க இந்த கலாட்டா நடக்குது, இந்த ஆவிப்பய மட்டும் அமைதியா இருக்கானே! ஏன்? 

”மின்னல் வரிகள்: கணேஷ்: ஆவி, என்னாச்சுப்பா!? ஏன் டல்லா இருக்கே!

”பயணம்” ஆவி: ராஜி அக்கா மேல கோவம். அதான் அமைதியா இருக்கேன்.

”அஞ்சறைப் பெட்டி” சங்கவி: ஏன்? என்னாச்சு!? நீ வரும்போது சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலியா!? நம்ம அக்காதானே! இதெல்லாம் பெருசா எடுத்துக்காத ஆவி!

பயணம்” ஆவி: என்னை வரவேற்கலைன்னா கூட என் மனசு ஆறி இருக்கும். ஆனா, இம்புட்டு பேரை கூப்பிட்ட அக்கா என் செல்லம், அம்மு, பட்டுக்குட்டி நஸ்ரியாவை கூப்பிடாம விட்டுடுச்சே! கூப்பிடதான் இல்ல. என் செல்லத்துக்கு என்ன பிடிக்கும்ன்னு என்னை கேட்டாங்களா!? அதான் கோவம்.
அஞ்சறைப் பெட்டி” சங்கவி: எனக்கும்தான் கோவம் என் செல்லம் லட்சுக்குட்டியை கூப்பிடலைன்னு. 

”மின்னல் வரிகள்” கணேஷ்: ராஜிம்மாக்கு ஹெல்ப் பண்ண கூப்பிட்டா, என் செல்லத்தை கூப்பிடலை, உன் செல்லத்தை கூப்பிடலைன்னு வெட்டிக்கதையா பேசுறே! யோவ், மனோ! உன் அருவாவுக்கு வேலை வந்துட்டுது. என் சிஷ்யன்னு பார்க்காத. ரெண்டு பேரை ஒரு இழுப்பு இழுத்துட்டு வா.

ஆவி & சங்கவி: டேய்! நம்ம வாத்தியாருக்கே கோவம் வந்துட்டுது. இந்த இடத்தை விட்டே ஓடிப்போகலாம். வந்திடு.

கவிதை வீதி” சௌந்தர்: அக்கா, இந்த பசங்கலாம் அரட்டை. கொஞ்சம் கூட பொறுப்பில்லாத பசங்க, நீங்க வேற யாரையாவது பலகாரம் சுட கூப்பிட்டு இருக்கலாம், என்கிட்ட கேட்டிருந்தா நல்ல சமையல்காரரை அரேஞ்ச் பண்ணி இருப்பேன்.  உங்க கிச்சன் இத்தனை பேர் சமைக்க இடம் பத்தலை. வாங்கி வந்த அரிசில வண்டும், கல்லும் இருக்கு. மிக்சி சீக்கிரத்துலயே சூடாகிடுது. அடுத்த வருசத்துக்குள்ள இதெல்லாம் சரி பண்ணிடுங்கக்கா!

திக்கி திணறி நானே எதாவது பலகாரம் சுட்டிருப்பேன். ஆனா, இப்ப!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????

48 comments:

  1. ஹா ஹா.... பதிவர்கள் அல்லாரும் ராஜி அக்கா வீட்டில் ஒன்று சேரவும்....

    தீபாவளி பலகார ஆர்டர் எடுத்திருக்கோம்ல/////

    ReplyDelete
    Replies
    1. அட, இதும் நல்லதான் இருக்கு. அடுத்த வருசம் கடை போட்டுடலாமா!? பதிவர் சந்திப்பு நடந்த மாதிரியும் ஆச்சு. வீட்டுக்கு பலகாரம் சுட்ட மாதிரியும் ஆச்சு. பிசினஸ் பண்ண மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல மூணு மாங்கா.

      Delete
  2. ஹா...ஹாஹ்ஹா... செம ரகளை...!

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்தமைக்கு நன்றிங்க உஷா!

      Delete
  3. நக்கீரன்தான் சோதனை பெருச்சாளியா ..?
    எலி உள்ளே திங்கிறது ..வெளியே போய் தூங்குகிறது .........

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவே இந்த வருசம் நக்கீரன் அண்ணாதான் ஸ்பெஷல்.

      Delete
  4. ஹா... ஹா... கலக்கல்... முந்தைய வருடம் போல் இந்த வருடம் உங்களிடமிருந்து பதிவு வரவில்லையே என்று காலையில் தான் நினைத்தேன்... இதோ - அசத்தல் சகோதரி...! தீபாவளி பதிவுகள் இப்பவே களைகட்ட ஆரம்பித்து விட்டது...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க நினைச்சது எனக்கு தெரிஞ்சது. அதான் உடனே பதிவை எழுதிட்டேன். ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

      Delete
  5. மிக மிக சுவாரஸ்யம்
    பதிவுலக தீபாவளி தங்கள் பதிவின் மூலம்
    களைக் கட்ட ஆரம்பித்தது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிப்பா!

      Delete
  6. ராஜிம்மா...! நானாவது (எனக்கிருக்கற) ஒரே சரிதாவை வெச்சு தீபாவளி ஸ்பெஷல் பதிவு எழுதலாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்... ஆனா இங்க இவ்வளவு உறவுகளையும் நட்புகளையும் வெச்சு ஒரு ரகளை தீபாவளிய நடத்திக் காட்டி அசத்திட்டம்மா...! பாய்ஸ்...! நமக்கெல்லாம் ஒரு குவார்ட்டர் பத்தாதுன்ற தகவலை தங்கச்சிட்ட நான் போட்டுத் தரலைப்பா.... அவங்களாத்தான் எழுதிட்டாங்க! (மதுரைத் தமிழன் அமெரிக்காலருந்து வர்றப்ப... அவர்ட்ட கேக்காம நாமல்லாம் ராஜிட்டயா கேப்போம்...? இதுகூடத் தெரியாத அப்பாவி என் தங்கச்சி!)

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டுக்கு வர்றவங்களை நாமதானே கவனிக்கனும். அதானே முறை. மதுரைதமிழன்க்கிட்ட வாங்கிக்குறதுலாம் அவங்க தனிப்பட்ட விசயம்ண்ணா! பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

      Delete
  7. ஹா ஹா செம ரகளையான பதிவு...சூப்பர் சகோ!! தீபாவளி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி மேனகா!

      Delete
  8. சுவாரசியமான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றிங்கய்யா!!

      Delete
  9. சூப்பரா இருந்தது தீபாவளிக்கு பக்கத்து வீடுகளில் இருந்து வரும் பலகாரங்கள் போல...

    ReplyDelete
    Replies
    1. ரசம் வைக்கவே தெரியாத நமக்கு, பலகாரமா சுடத்தெரியும்!? பக்கத்து வீட்டு பலகாரம்தான் நாம ருசிக்க கைக்குடுக்கும்.

      Delete
  10. kalakurika akka, apa diwaliku ungalukum eakaluku oneum illaya? thampikalay sari illa akka. atleast diwali dress purchaseku amounta vathu vankitu anupie erukalam.

    happy DIWALI to U and U r FAMILY

    ReplyDelete
    Replies
    1. அடடா! மறந்துட்டேனே! சரி, விடுங்க. நம்ம தம்பிங்கதானே! கேட்டா கொடுத்துடுவாங்க!

      Delete
  11. சரியான கும்மாளம் தான் போங்க..
    நம்ம பதிவர்கள் நல்லாத்தான் சுட்டிருக்காங்க
    பலகாரம் .. பல காரம்....

    ReplyDelete
    Replies
    1. கும்மாளம் மட்டும்தான் நடந்திருக்கு. ஒரு சப்பாத்தி கூட சுடலை. நாந்தான் பலகாரம்லாம் செய்யனும்.

      Delete
  12. க்கும்....
    நானும் தீபாவளி பலகாரம் சுட்டுக்கினு இருக்கேனாக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் நாங்க இன்னும் பலகாரம் சுடவே ஆரம்பிக்கலையாக்கும். அதுக்குள்ளாதான் இத்தனை ரகளையும்.

      Delete
  13. வணக்கம்
    உங்கள் வீட்டுப்பக்கம் பலகாரத்துக்காக படை எடுக்க உத்தேசம் உள்ளது..... நேரம் இருந்தால் பார்க்கலாம்...பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....அக்கா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இங்க பலகாரமே சுடலையாம். அதுக்காக வர்றங்களாம். வாங்க வந்து பலகாரம் சுட்டு எங்களுக்கு கொடுத்துட்டு நீங்களும் எடுத்து போங்க.

      Delete
  14. ரைட்டு...தீபாவளி அங்க தான்.....செஞ்ச பலகாரம் சாப்பிடனும்ல...

    ReplyDelete
    Replies
    1. ”நீங்க செஞ்ச”ன்னு சேர்த்துக்கோங்க ஜீவா!

      Delete
  15. நல்ல பதிவு.
    தமிழமணம் பிளஸ் +1 வோட்டு போட்டு விட்டேன்.
    நன்றி!

    ReplyDelete
  16. செமையா எழுதியிருக்கீங்க... ஒவ்வொருத்தரை பத்தியும் தரோவா தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல.... அக்குவேற ஆணிவேறன்னு பிரிச்சி மேய்ஞ்சிட்டீங்க போங்க...
    சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா! ரெண்டு வருசமா இங்கதானே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். அதான் எல்லோர் பத்தியும் தரோவா தெரிஞ்சு வச்சிருக்கேன்.

      Delete
  17. ///உங்க பழைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு சேலை எடுத்து கொடுக்க போறீங்களா?!ன்னு ஆயிரம் கேள்வி கேட்ட பொண்டாட்டிக்கிட்ட சரியா பதில் சொல்லாம அவ கையால பூரிக்கட்டை அடி வாங்கிட்டு வந்திருக்கேன். ///

    நல்லவேளை என் புதிய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பற்றி என் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் தெரியவில்லை. அது தெரிஞ்சு இருந்தா உயிரோட ஊருக்கு வந்திருக்க மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஊரிலிருந்து வரும்போது தெரியாட்டி என்ன!? இப்ப தெரிஞ்சு போச்சே! போய் அடி வாங்குங்க.

      Delete
  18. நிஜமாகவே சமைக்க தெரிஞ்ச என்னை விட்டுட்டீங்களே,

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களை கூட்டி வந்தது கணேஷ் அண்ணா ! அவரை சண்டைக்கு பிடிங்க!

      Delete
  19. தீபாவளி பலகாரம் நல்லாயிருக்கு ....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ!

      Delete
  20. கலக்கல் பதிவு. பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல ரசனையான பதிவு. பாராட்டுகள் ராஜி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சிங்க கீதாம்மா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  21. அக்கா என்ன ஒற்றுமை இப்ப தான் லேக்கியத்தை கவிதையா போட்டு விட்டு இங்கு வந்தேன். இது தான் அக்கா தங்கை என்பதா நான் நினைப்பதையே நீங்களும் நினைச்சிருக்கிங்க.. அம்மா எப்படி இருக்காங்க.
    இல்லத்தில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
    அக்கா இந்த முறை பார்சல் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. அம்மாவும், மத்தவங்களும் பரிபூர்ண நலம் சசி! இந்த வருசமும் பலகாரம் உண்டு. தூயா கொண்டு வருவா!

      Delete
  22. பலே! பலே! குலேபகாவலி கதை போல அல்லவா இருக்கு? இருந்தாலும் இப்படி எல்லாம் செய்யக் கூடாது.
    எனது உளங் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஐயா!

      Delete
  23. கற்பனை கரைபுரண்டு ஓடுது. அதுலயும் டிடி பேர்ல எழுதுனதெல்லாம் சூப்பர். தீப ஒளி நல்வாழ்த்துக்கள், உங்களுக்கும் இந்த பதிவில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா!

      Delete
  24. இதுவல்லவோ கலக்கல் தீபாவளி சமையல் :)))

    பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி

      Delete
  25. பலகாரம் செய்றேன்னு பதிவர்கள் எல்லாரும் கூடி கும்மியடிச்சிருக்காங்களே... நான் ரொம்ப லேட்டாத்தான் பாக்கிறேன்.... த.ம.15

    ReplyDelete