Monday, October 21, 2013

கடவுள் என்ன சொல்லியிருப்பார்!? - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க! காப்பி தண்ணி ஆறுது பாருங்க.

தினமலர் ஆன்மீக மலர்ல ஒரு கதை படிச்சுட்டு இருக்கேன் புள்ள.

அப்படி என்ன சுவாரசியம் அதுல!?

ஒண்ணுமில்ல, ஒரு துறவியோட ஆசிரமத்துல ஏதோ பூஜை,  அதுக்கு நிறைய மக்கள் வந்திருக்காங்க. பூஜை ரொம்ப நேரம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு குழந்தைக்கு பசி வந்திட்டுது. அதனால, யாருக்கும் தெரியாம சாமிக்கு நைவேத்தியம் பண்ண வச்சிருந்த படையல்ல இருந்து ஒரு பலகாரத்தை எடுத்துக்கிட்டு தூரமா போய் உக்காந்து சாப்பிட்டுச்சு.

ஐயையோ! சாமிக்கு படைக்க எல்லோரும் சுத்தபத்தமா எச்சில் பண்ணாம சமைச்சிருப்பாங்களே! அந்த குழந்தையால எல்லாமே நாசமா போச்சு. 

ம்ம்ம் உன்னை மாதிரி ஆளுங்கதான் அப்படி நினைப்பீங்க. அதை தப்புன்னு சொல்ல வர்றதுதான் இந்த கதை. இதை பார்த்த ஒரு சீடன் அந்த குழந்தையை பிடிச்சு, யாரும் பார்க்காம பலகாரம் எடுத்துட்டு வந்தியே! இதை கடவுள் பார்த்துட்டே இருப்பார். அவருக்குண்டான சாப்பாட்டை இப்படி எச்சில் பண்ணிட்டியே! அவர் உன்னை தண்டிக்க போறார்ன்னு சொல்ல, அந்த குழந்தை பயந்து அழுதுக்கிட்டே துறவிக்கிட்ட போச்சாம். 

என்ன!? ஏதுன்னு விசாரிச்சு, அன்போடு அந்த குழந்தையை மார்போடு அணைச்சுக்கிட்ட துறவி,  பாப்பா பசிக்குதா!? அப்படின்னா உனக்கு வேண்டியமட்டும் பலகாரங்களை எடுத்துக்கோன்னு கடவுள் இப்படித்தான் குழந்தையை பார்த்து சொல்லி இருப்பார்ன்னு தன் சீடனை பார்த்து சொன்னாராம். எந்த கடவுளும், பக்தர்கள் மெய் வருத்தி செய்யும் பூஜைகளை விரும்புவதில்லைன்னு இந்த புத்தகத்துல போட்டிருக்கு.

புரிஞ்சுது மாமா!  உங்க ஃப்ரெண்டோட அப்பா இறந்துட்டாதாகவும், அவர்  இறுதி சடங்குக்கு போக முடியலைன்னு துக்கம் விசாரிக்க போனீங்களே! எப்படி இறந்தாராம் அவர்!? அவரை பத்தி நல்ல விதமா சொல்லுவீங்களே! வாழ்ந்தா அவரை போல வாழனும்ன்னு!!

ம்ம்ம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார் புள்ள! ஆனா, இத்தனை நாள் அவர் மேல் வச்சிருந்த மரியாதையை இந்த ஒரு நாளில் போக்கிட்டாங்க. நான் அவங்க வீட்டுக்கு போன போது மூணாம் நாள் சடங்குக்கு படைக்க எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க. அவர் ட்ரெஸ், மூக்கு கண்ணாடி, செல்போன், முறுக்கு, போளி, ன்னு அவருக்கு பிடிச்சமான, அவர் யூஸ் பண்ண பொருளெல்லாம் வச்சு அடுக்க ஆரம்பிச்சாங்க, கூடவே ஒரு குவார்ட்டர் பாட்டலும், சிகரெட் பாக்கட்டும் வச்சாங்க. அதைப் பார்த்ததும் அங்கிருந்தவங்க முகம் மாறி அவங்களுக்குள் ரகசியமா எதோ பேச ஆரம்பிச்சாங்க.

நான் நைசா என் ஃப்ரெண்டை ஓரங்கட்டி கூட்டி போய் ஏன் இப்படின்னு கேட்டதுக்கு, என் அப்பா ஞாயித்து கிழமைகள்ல வீட்டுக்குள்ளயே குடிப்பாராம். குடிக்கும்போது சிகெரெட்டும் பிடிப்பார், அதனால, அவருக்கு பிடிச்சமானதுலாம் வச்சு படைக்குறோம்ன்னு சொன்னாங்க. இதுநாள் வரை அவர் குடிப்பதோ சிகரெட் பிடிப்பதோ அவர் குடும்பத்தார் மற்றும் சிலர் தவிர வேற யாருக்கும் தெரியாது. ஆனா, நான் உட்பட அங்க வந்திருந்த அம்பது பேருக்கு ம் தெரிஞ்சுடுச்சு. இது ஊரெல்லாம் பரவும், அவர் மேல இருந்த மரியாதை போகும். ம்ம்ம் தேவையா இதுப்போல சடங்குலாம்?! 

சரிதான் மாமா! நீங்க நினைக்குறதும் சரிதான், செத்த பிறகு அந்த மனுசன் அவமானப் படனுமா!? ஆனா, இப்பவும் இதுப்போல சடங்கு, சம்பிராதயம்லாம் கடைப்பிடிக்கிறாங்களே! பராகுவேல ஒரு அதிசய கல்யாணம் நடந்துச்சாம் மாமா!

அப்படி என்ன புள்ள கல்யாணத்துல அதிசயம்!?

80 வருசம் ஒண்ணா குடும்பம் நடத்தி புளைங்களை பெத்த    பராகுவே நாட்டைச் சேர்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா, அவரது காதலி மார்டினா லோபஸ். அவஙக் ஊர் வழக்கப்படி சர்ச்ல கல்யாணம் பண்ணிக்காமயே 49 வருசம் சேர்ந்து வாழ்ந்திருக்காங்க.   இது அவங்களுக்கு மனக்குறையாவே இருந்திருக்கு. அதனால, தங்களோட 50வ்து கல்யாண நாளை குடும்பத்தார் சம்மதப்படி பாதிரியார் முன்னாட்டி சர்ச்ல வச்சு கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. 
கிறிஸ்துவ முறைப்படி பெரிய வெள்ளை கவுனை போட்டுக்கிட்டு வீல்சேர்ல வந்தாங்க அந்தம்மா. அவரும் வீல்சேர்லயே வந்து மோதிரம் மாத்திக்கிட்டாங்க,  இந்த கல்யாணத்துக்கு அவங்க 8 பசங்களும், 50 பேரப்பசங்களும், 35 கொள்ளு பேரப்பசங்களும், 20 எள்ளுப் பேரப்பசங்களும் வந்ததுதான் இதுல ஹைலைட்டே!
கலாச்சாரம், பண்பாடுன்னு வாய்க்கிழிய பேசும் நம்மூருலயே ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு மாறிப்போச்சு !! அந்த ஜோடியை நினைச்சா ஆச்சர்யமதான் இருக்கு புள்ள!
    
ஆமாங்க மாமா! நேத்து ராஜி வீட்டுக்கு போயிருந்தேன். வீட்டு வாசப்படி ஏறும்போதே ராஜி தன் பையனை திட்டுறது கேட்டது. என்னன்னு பஞ்சாயத்து பண்ண்லாம்ன்னு என்ன விசயம்? ஏன் புள்ளையை திட்டுறேன்னு கேட்டேன். 

காலைல டிவில திருவிளையாடல் படத்துல வரும் முருகன் கோவிச்சுக்கிட்டு பழனி மலைக்கு போன போது ஔவ்வையார் முருகனை சமாதான படுத்தி ஒன்றானவன்..,ன்னு பாடும் பாட்டு போய்க்கிட்டு இருந்துச்சாம்.  பாருடா, சின்ன புள்ளைங்க நீங்க கோவிச்சுக்குறீங்க. ஆனா, அப்பா, அம்மாலாம் எம்புட்டு கஷ்டப்படுறாங்க. அதனால, உன் கோவத்தை குறைச்சுக்கோடான்னு சொல்லி இருக்கா. அதுக்கு அவ பையன், எல்லாம் தெரிஞ்ச சாமிக்கே கோவம் கட்டுப்படுத்த தெரியாம இருக்கு. இந்த லட்சணத்துல என்னை கோவப்படக்கூடாதுன்னு சொல்றியே! எப்படின்னு கேட்டிருக்கான்.

ஹா! ஹா! நல்லா அறிவுப்பூர்வமாதான் கேட்டிருக்கான். கேள்விக்கேட்டாதான் உன் ஃப்ரெண்டுக்கு பிடிக்காதே!! அதனால, குழந்தை திட்டுறதா!? அவன் எம்புட்டு அறிவாளி தெரியுமா!? நான் ஒரு முறை அவங்க வீட்டுக்கு போய் இருக்கும்போது என்னை ஒரு விடுகதை போட்டு பதில் சொல்ல சொன்னான், இன்னிக்கு வரைக்கும் எனக்கு விடை தெரியாதுன்னா பர்த்துக்கோயேன்.

என்ன விடுகதைன்னு சொல்லுங்க. விடை சொல்ல என்னால முடியுதான்னு பார்க்குறேன்!?

நடுவழிய ஓய்வுக்காம்..,
கடையிரண்டில் ஏதுமில்லை சொல்..,
மூன்றெழுத்தில் உடுத்தலாம்.., 
மொத்தத்தில் விலை அதிகம்.
அது என்ன?

இவ்வளவுதானே! இதோட விடையை நான் சொல்றேன். போய் சமைக்க கொஞ்சம் காய் வாங்கி வாங்க.

ம்க்கும், என்னை அப்படி கடைத்தெருவுக்கு அனுப்பிட்டு உங்காளுங்கக்கிட்ட விடை கேட்க போறியா!? ரைட்டு....,

 கண்டுப்பிடிச்சுட்டீங்களே! 

32 comments:

  1. Replies
    1. இப்படி சட்டுன்னு விடையை சொல்லீட்டீங்களே! இன்னும் கொஞ்சம் சிக்கலா கேட்டிருக்கனுமோ!?

      Delete
  2. அதிசய கல்யாணம் தான்... கல்யாணத்திற்கு அவங்க குடும்பம் (கூட்டம்) வந்தால் போதும் போல...!!!

    பையனின் திருவிளையாடல் நல்லாயிருக்கே... நல்ல எதிர்காலம் உண்டு... ஹிஹி...

    பட்(டு) டென்று சொல்லி விட்டேன்... சரியா சகோதரி...?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா! என் பையன்கிட்ட படும் பாடு இருக்கே! அதுக்கே தினம் ரெண்டு பதிவு போடலாம். பெண்பிள்ளைகள் சமர்த்தா வளர்ந்துட்டாங்க. இவந்தான் கேள்வி கேட்டு படுத்தி எடுக்குறான்.

      Delete

    2. பையன் சின்ன வயசில் அப்படிதான் இருப்பாங்க ஆனா கல்யாணம் ஆனா அடங்கி போய்விடுவாங்க என்னைப் போல உங்க வூட்டுகாரரைப் போல ஆனா பெண்கள் இப்போ சமத்தா இருப்பாங்க ஆன கலியாணம் ஆயிடுச்சுன்ன்னு வூட்டுல பேய்யாட்டம் போடிவாங்க உங்களைப் போல என் மனைவியைப் போல இது இயற்கைதான் கவலைப்படாதீங்க சகோ ஹீ.ஹீ

      Delete
    3. ம்க்கும் நீங்களும், உங்க மாப்பிள்ளையும் ரொம்ப யோக்கியம்தான்.

      Delete
  3. அவ பையன், எல்லாம் தெரிஞ்ச சாமிக்கே கோவம் கட்டுப்படுத்த தெரியாம இருக்கு//

    அண்ணன் DD சொன்னதுபோல பையனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு...

    ReplyDelete
  4. அக்கா,தீபாவளிக்கு பட்டு சேலை வேனும்ன நேர மாமாட்ட கேக்கறத விட்டுபுட்டு பையன வச்சி விடுகதை மூலமா கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லா

    ReplyDelete
    Replies
    1. முதல்ல இப்படித்தான் சாடை மாடையா ஆரம்பிக்கனும். அப்புறம் சண்டைல முடிச்சுக்கலாம்.

      Delete
  5. ஹஹஹா..சபாஷ் சரியான கேள்வி.. இப்போ பதில் சொல்லுங்க பார்க்கலாம்.. உங்க தம்பிங்க எங்ககிட்ட ஒரு அரைகிலோ அறிவு கம்மியா இருக்குங்கிற காரணத்தால கேள்வி மட்டுமே கேக்குறீங்க.. இப்போ மருமகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அக்கா.. மீ வெரி ஹேப்பி.. :)

    ReplyDelete
    Replies
    1. கூட்டணி சேர்ந்தாச்சா!? இனி என் பாடு திண்டாட்டம்தான்!!

      Delete
  6. அவியல் சுவை அருமை
    மிகவும் ரசித்துச் சுவைத்தேன்
    குறிப்பாக படையல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!

      Delete
  7. கடவுளுக்கு எவ்வளவு படைத்தாலும் அதிலிருந்து ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கு போவதே உண்மையான கடவுளுக்கு போவதாக அர்த்தம்...

    உண்மையான பக்தி என்னவென்று இன்னும் தெரியவில்லை யாவருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சௌந்தர். ஆன்மீகத்தை யாருமே சரியா புரிஞ்சுக்கலை

      Delete
  8. உண்மைதான் இறந்தவர்களின் வெளிவராத சில பழக்கங்களை வெளியில் சொல்லுவது அபத்தம்தான்...


    என்ன 50 வருடம் கழித்து திருமணமா... உண்மையில் இவர்கள் தான் நிஜமான காதலர்கள்....

    அனைத்தையும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சௌந்தர்

      Delete
  9. அவியல் சுவையுடன் இருந்தது தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அருணா!

      Delete
  10. சுவையான பகிர்வு! விடுகதை விடை பட்டா இருக்குமோன்னு நினைச்சு பின்னூட்டத்திற்கு வந்தா டி.டி பட்டுன்னு பட்டுன்னு சொல்லி அசத்திட்டாரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் எனக்கா? என் மகனுக்கா? டி.டி அண்ணாவுக்கா!?

      Delete
  11. ஐஞ்சுவை அறுசுவையாய் தித்திக்கிறது சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

      Delete
  12. எந்த தெய்வமும் பசித்தவனுக்கு எந்த படையலை கொடுத்தாலும் கோபம் கொள்வதில்லை, மனிதன்தான் கோபப்படுகிறான் - அருமை....!

    ReplyDelete
    Replies
    1. பக்தின்ற பேருல நாம பண்ணுற அலப்பறைகள் இருக்கே! அதை அந்த ஆண்டவன் கூட பொறுத்துக்க மாட்டான்.

      Delete
  13. பின்னே....நம்மகிட்டேயே கேள்வி கேட்டா திட்டாம விட்டுருவோமா என்ன ? பரம்பரை அப்பிடி இல்லையா என்னையும் சேர்த்துதான் ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்கண்ணா!

      Delete
  14. சுவையான பகிர்வு.

    ReplyDelete
  15. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அவியல் அற்புதம். கடைசியில் தூவலாகத் தேங்காயெண்ணெயாக ஒரு விடுகதை. அதுவும் பட்னு
    விட்டுப் போச்சா ராஜி:)ரசித்தேன் மா.

    ReplyDelete