எங்காவது ஊருக்கு போய்ட்டு வரும்போது ஹோட்டல்லயும் சாப்பிட முடியாம, வீட்டுக்கு வந்தும் சாம்பார், ரசம், பொறியல்ன்னு சமைக்க முடியாத நேரத்துலயும், வீட்டுல காய்கறிகள் எதும் இல்லாத போது சட்டு, புட்டுன்னு சமைச்சு அசத்த சூப்பர் குழம்பு இது...,
எல்லா வீட்டுலயும் எப்பவும் துவரம்பருப்பும், காய்ந்த மிளகாய், மிளகு கண்டிப்பா இருக்கும். அதைலாம் வச்சு 10 நிமிசத்துல இந்த குழம்பை ரெடி பண்ணிடலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 10
பூண்டு - பத்து பல்
தக்காளி - 1
புளி - சின்ன எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வடகம் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
அடுப்பில் வாணலியை சூடாக்கி, சமையல் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊத்தி காய்ந்ததும் சுத்தம் பண்ண பருப்பை (கழுவாமல்) போடவும்...,
கூடவே காய்ந்த மிளகாயை போடவும்...
மிளகு போட்டு.., பருப்பு நல்லா சிவக்கும் வரை வறுத்து தண்ணி ஊற்றவும்...,
பருப்பு கொதிச்சு வரும்போது தக்காளியை நாலா, எட்டா வெட்டி போடவும்...,
கூடவே உரிச்ச பூண்டை சேர்த்து கொதிக்க விடவும்..,
பருப்பு வெந்தால் போதும் ரொம்பவும் குழையனும்ன்னு அவசியமில்ல. கூடவே, உப்பும், புளியும் சேர்த்து கல்சட்டில மைய, மைய கடைஞ்சுக்கோங்க...., புளியை கறைச்சு ஊத்தனும்ன்னு அவசியமில்ல. சுத்தம் பண்ணி அப்படியே சேர்த்துக்கலாம்,
வாணலியில் எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு காய்ந்ததும் வடம் போட்டு தாளிச்சுக்கோங்க....,
பொறிஞ்ச வடகத்துல, கடைஞ்ச குழம்பை ஊத்தி சூடு பண்ணால் போதும்..., கொதிக்க வைக்கனும்ன்னு அவசியமில்ல. ஒரு வேளை காரம் கம்மியா இருக்குற மாதிரி இருந்தா வடகம் தாளிக்கும் போது காய்ஞ்ச மிளகாயை கிள்ளி போட்டுக்கிட்டா காரம் சேர்ந்துக்கும்.
பத்தே நிமிசத்துல கார சாரமான குழம்பு ரெடி. சாதம் ரெடி ஆகுறதுக்குள்ள இந்த குழம்பு ரெடி ஆகிடும். தொட்டுக்க வத்தல், அப்பளம் இருந்தால் இன்னும் ஒரு பிடி கூடுதலா இறங்கும். இதை கேப்பை களிக்கு தொட்டுக்கிட்டா நல்லா இருக்கும். விருப்பப்பட்டா பருப்போடு கொஞ்சம் வெந்தயம் சேர்த்துக்கலாம். சளி, வரட்டு இருமல் இருக்கும்போது கேப்பை களி கிளறி இந்த குழம்பை தொட்டுக்கிட்டு சாப்பிட்டால் குணமாகும். என் பிள்ளைகளுக்கு பிடிச்ச குழம்பு இது.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்..., பை பை, டாட்டா, சீ யூ.
இதுக்கு ஏன் வத்தக்கொழம்புன்னு பேரு?
ReplyDeleteமிளகாய் வத்தல் சேர்க்கிறாதால இருக்குமோ! இல்லாட்டி பருப்பு வறுத்து ஊத்தும் தண்ணி கொதிச்சு வத்திடறதால இருக்குமோ!!
Deleteஉங்க செய்முறை வித்தியாசமா இருக்கு,விரைவில் செய்து பார்க்கிறேன் சகோ..
ReplyDeleteஎன் அம்மா செய்யும் முறை மேனகா. நான் எப்படி வச்சாலும் என் அம்மாவின் கைப்பக்குவம் வர மாட்டேங்குது.
Deleteஎனக்கு ரொம்பவும் புடிச்ச குழம்புகள்ல இதுவும் ஒன்னு. இதோட அப்பளத்தையும் இல்லன்னா பொட்டுக்கடலை துவையல வச்சிக்கிட்டு சாப்ட்டா..... ஆஹா நினைக்கறப்பவே நாக்குல ஊறுது.....
ReplyDeleteரெண்டு நாள் ஊர் சுத்திட்டு வீட்டுக்கு வந்ததும் இந்த குழம்பை சாப்பிட்டா.., அடக்கம் பண்ண வேண்டிய நாக்குக்கு உயிர் வந்திடும்ப்பா!
Deleteஉங்கள் செய்முறை படி செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
ReplyDeleteதங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html
கண்டிப்பா செஞ்சு பாருங்கண்ணா! உங்களுக்கு பிடிக்கும்.
DeleteA favourite dish of mine....
ReplyDeleteஅப்படிங்கள்!? இது எங்க பக்கத்து உணவுன்னு நினைச்சேன்!!
Deleteநாங்கள் து.ப வுக்கு பதில் க.ப போடுவோம்! மிளகு சேர்த்ததில்லை.
ReplyDeleteஅப்படிங்களா! நானும் செஞ்சு பார்க்குறேன். மிளகு சேர்த்துக்கிட்டா சளி, வறட்டு இருமல் குறையும்ன்னு நாங்க சேர்த்துப்போம்!!
Deleteகிட்டத்தட்ட வெங்காயம் போடாத சாம்பார் போல இருக்கிறது.
ReplyDeleteசெய்து பார்க்கிறேன்.
(ஆமாம்.... அது என்ன காய்ந்த மிளகாயா...? இப்படி குண்டுகுண்டாக நான் மிளகாயைப் பார்த்ததில்லை! பதிவைப் படித்ததும் இணைத்தில் தேடி தெரிந்து கொண்டேன்.)
பகிர்விற்கு நன்றி தோழி.
இதென்ன கலட்டா? இது குண்டு மிளாகாய் அருணா! காரம் அதிகமா இருக்கும் இதுல! மிளகாய் தூள் அரைக்க இதுதான் எங்க ஊருல பயன்படுத்துவோம்.
Deleteநானம் செய்வேன். ஆனாலும் உங்கள் படமும், செய்முறை குறிப்பும் சாப்பிடத் தூண்டுகிறது.
ReplyDeleteஇது எங்க ஊர் ஸ்பெஷல்ன்னு நினைச்சேன்!!
Deleteநன்றி...
ReplyDeleteநன்றிங்க கருண்
Deleteநல்ல ரெசிப்பி...... நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா
Deleteஎனக்கு மிகவும் பிடித்த குழம்பு, இந்த வத்தக்குழம்பு!
ReplyDeleteரைட்டு...,
Deleteஇலகுவான செய்முறை தான் எதுக்கும் கொஞ்சக் குழம்பு வச்சுத்
ReplyDeleteதரச் சொன்னால் மாட்டேன் என்று சொல்லவா போறீங்க :)))
வாசனை மூக்கைத் துளைக்கிறதே .நீங்க வாறது எப்போ குழம்பு
சாப்பிடுவது எப்போ ?..நானே சமைத்து உடனும் சாப்பிட வேண்டும் .
செய்முறை பார்த்ததில் மனம் பறிபோய் விட்டதே ....
நீங்க செஞ்சு சாப்பிட்டுட்டு எனக்கும் பார்சல் அனுப்புங்க அக்கா!
Deleteஅவசரக் குழம்பு தயார்..
ReplyDeleteவிவரிப்பு மிக அருமை சகோதரி...
ராஜி அவர்களே!
ReplyDeleteவிரைவில் பால் போண்டா என் செய்முறையில்!
டைஃபாய்ட் பற்றியும், வயிற்ருப்புண் பற்றியும் இடுகை வரும்!
வத்தக்குழம்பு செய்முறை விளக்கiம் அருமை... செய்து பார்க்கலாம்
ReplyDeleteசுவையான குறிப்பு. இது மாதிரி செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteநாங்க வேற மாதிரி செய்வோம். நல்லெண்ணெயில் தாளித்து மணத்தக்காளி, சுண்டைக்காய் வத்தல் சேர்த்து புளிக்கரைத்து விட்டு குழம்பு பொடி சேர்த்து கொதித்து வற்றியதும் இறக்குவோம்..
வத்தக்குழம்புக்கு கீரை மசியல் நல்ல காம்பினேஷன் என்று என் மாமியார் எப்போதும் சொல்வாங்க. நானும் ருசித்திருக்கிறேன்.
எங்க வீட்டில் எல்லோருமே இந்த குழம்புக்கு அடிமைகள்.....:))
வித்தியாசமா இருக்கு .. ட்ரை பண்ணி பார்க்கிறேன். உண்மையில் கிச்சன்ல மட்டும் நான் சோம்பேறி.. இப்பத்தான் என்னை மாத்திக்கிட்டு ரெசிப்பி எல்லாம் விரும்பி படிச்சி செஞ்சிகிட்டிருக்கேன்.. இப்ப நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் தேடறது கிச்சன் பதிவுகளைத்தான்...!
ReplyDeleteஉங்க வத்தக்குழம்பு போட்டோவில் பார்க்கிறப்பவே நல்லாருக்கு...! பாராட்டுக்கள்!
its different from usual vathakulambu....nice pictures.will try and see
ReplyDeleteஎன் மனைவி சற்றே வித்தியாசமாய் வத்தற்குழம்பு செய்வாள். து. பருப்பு இவ்வளவு தேவையா.?நானும் சமையல் குறிப்புகளை அவ்வப்போது எழுதி வருகிறேன்”பூவையின் எண்ணங்கள்” kamalabalu791.blogspot.in.
ReplyDeleteதவறான சுட்டியைக் கொடுத்து விட்டேன் சாரி.....!
ReplyDeleteசரியான சுட்டி. kamalabalu294.blogspot.in வாருங்கள்.