ஸ்கூல் விட்டு வரும் பிள்ளைகளுக்கு கடையில வாங்குன நொறுக்கு தீனி வாங்கி தர்றதுக்கு பதிலா, வீட்டிலேயே செய்த பலகாரத்தை கொடுத்தா உடம்புக்கும் நல்லது. நம்ம குழந்தைகளுக்காக நாம் கொஞ்சம் மெனக்கெடுறோம்ன்னு ஒரு சின்ன திருப்தி நமக்கு. அதுவே கொஞ்சம் சத்தானதா இருந்தா நல்லதுதானே!! அப்படி ஒரு சத்தான பலகாரம்தான் பால் போண்டா.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 1 கப்
நொய் - ஒரு கைப்பிடி
பால் - 200 மிலி
சர்க்கரை- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிது
ஏலக்காய் பொடி - சிறிது
நொய், உளுத்தம்பருப்பை தனித்தனியே ஊற வைக்கவும், முதலில் நொய்யை மையை அரைத்து, அதனுடன் உளுத்தம்பருப்பை கொட்டி,, லேசா தண்ணி தெளிச்சு கெட்டியாக அரைக்கவும். மாவுடன் உப்பு, ஆப்ப சோடாவை சேர்த்து ஆட்டி எடுத்து வைக்கவும்.
பாலை காய்ச்சி அதனுடன் சர்க்கரை கொட்டி கலக்கவும்
வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணேய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறு, சிறு போண்டாக்களாக இட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுட்டெடுத்த போண்டாக்களை சூடு ஆறும் முன் பாலில் போடவும்.
ஐந்து நிமிசம் கழிச்சு பாலில் ஊறின போண்டாக்களை எடுத்து பரிமாறவும்.
உளுத்தம்பருப்புல புரோட்டின் இருக்கு. பால்ல புரோட்டீன், கால்சியம், கொழுப்பு, மக்னீசியம், மாவுச்சத்துலாம் இருக்கு. ரெண்டுமே வளரும் பிளைகளுக்கும், பெண்களுக்கும் நல்லது. அதுக்காக ஆண்களுக்கு நல்லதில்லையான்னு கேக்காதீங்க, ஆண்களோட எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
எங்க ஊர் பக்கம் புதுசா கல்யாணம், ஆனவங்களுக்கு வைக்கும் விருந்துக்கும், கல்யாணம், காது குத்து, சடங்குக்கு பத்திரிகை வைக்க வரும்போதும் கிடா வெட்டு விருந்துலாம் கிடையாது. ஒன்லி சைவசாப்பாடுதான். அந்த மாதிரியான விருந்துக்கு காலைல டிஃபனுக்கு இந்த பால் போண்டா கண்டிப்பா இருக்கும்.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.
சத்தான பலகாரம் தான்... செய்முறைக்கு நன்றி... (இதற்கு முன் இட்ட கருத்துரையை காணாம்...?)
ReplyDeleteவித்தியாசமான ரெசிப்பி !
ReplyDelete"வளரும் பிளைகளுக்கும், பெண்களுக்கும் நல்லது. ஆண்களோட எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது." என்று போட்டிருக்கலாமே. இப்படி எங்களை கேள்வி கேட்க விடாமல்
ReplyDeleteவித்தியாசமா இருக்கு..... பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன்
ReplyDeleteஅருமையான படங்களுடன்
செய்து பார்க்கத் தூண்டுது பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வித்தியாசமான குறிப்பு! அறிந்ததில்லை!
ReplyDeleteஅவசியம் செய்து பார்க்கின்றேன். அருமை!
பகிர்விற்கு நன்றி!
வீட்டம்மாகிட்ட சொல்லி இருக்கேன்.,
ReplyDeleteநல்ல சத்தான உணவு போல...... வீட்டில செய்ய சொல்லணும் ! பார்த்தபோதே பசியை தூண்டுதே.....
ReplyDeleteசூப்பரா இருக்கு..நல்லதொரு சத்தான குறிப்புக்கு நன்றி!!
ReplyDeleteஇந்த பலகாரத்தை எங்கேயோ சாப்பிட்ட ஞாபகம் இருக்கு! வீட்டுல செய்ய சொல்லிட வேண்டியதுதான்! நினைவூட்டியமைக்கு நன்றி!
ReplyDeleteரெசிபி எளிதா இருக்கே.. செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteபோண்டாவை பாலில் போட்டா..அது பால் போண்டா ஆகாதா?
ReplyDelete