Saturday, October 12, 2013

தசரா பண்டிகை, குலசேகரபட்டினம் - நவராத்திரி ஸ்பெஷல்

தசரா பண்டிகைக்கு பேர் போனது மைசூரும், வடநாடும்தான். நம்ம தமிழ்நாட்டுல நவராத்திரி விழாவை கொண்டாடினாலும் வெறும் கொலு வைக்குறதோட சரி, அதுவும் சிலர் மட்டும்தான் வைக்குறாங்க. நம்மை பொறுத்தவரை சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் கொண்டாடுவதோட நம்ம வேலை முடிஞ்சது. 


ஆனா, நம்ம தூத்துக்குடி மாவட்டத்துல, திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் இருக்கு குலசேகரன்பட்டினம்ன்ற ஊர். இயற்கையாவே அமைந்த துறைமுகக் கரையில் கடல் அலை தாலாட்டும் முகத்துவாரத்தில்- ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சுயம்பு வடிவாய் -சிவசக்தி சமேதராய் குடிகொண்டிருக்கிறாள்.
இங்கதான் தசரா பண்டிகையை வடநாட்டுல போல ரொம்ப கோலாகலமா கொண்டாடுறாங்க. உலகத்தின் பல்வேறு இடத்திலிருந்து இங்கு வந்து வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, அதை கோவிலில் செலுத்துவதை ஒரு பிரார்த்தனையாவே செஞ்சுக்கிட்டு வர்றாங்க. 


இந்த விழா பத்து நாள் கொண்டாட்டமா கொண்டாடப்படுது. விரதம் தொடங்கும் முதல் நாள்ல குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியின் ஆசியோடு காப்பு கட்டிக்கிறாங்க. எந்த வேடத்தையும் யார் வேணுமினாலும் போட்டுக்க முடியாது. பக்தர்கள் என்ன வேடம் போடனும்ன்னு பூசாரிங்க முத்து போட்டு பார்த்து அருள்வாக்கு சொல்வாங்க. அதன்படிதான் வேசம் போட்டு பத்து நாள் விழா கொண்டாடி கடல்ல குளிச்சு தங்களோட விரதத்தை முடிச்சுக்குவாங்க.

சுயம்புவா ஒரு சாமி இருப்பதென்பது ரொம்ப அபூர்வம். ஆனா, இக்கோவிலில் முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் ஆகிய இருவர் உருவங்களும் சுயம்பு வடிவங்கள். அப்படின்னா, இந்த கோவில் எம்புட்டு விசேஷமானதா இருக்கும்ன்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க. 

சுயம்பு உருவங்களா அருள் பாலிச்சாலும் விக்கிரக வடிவில் அம்மையும், அப்பனும் இருந்தால் நல்லதுன்னு நினைத்த கோவில் பூசாரியின் கனவில் முத்தாரம்மன் வந்து. தென் திசையில் இருக்கும் மயிலாடிக்கு போய், அங்க இருக்கும் சுப்பையா சிற்பியை பாரு. உன் எண்ணம் நிறைவேறும்ன்னு சொல்லி மறைஞ்சுட்டுதாம்.

அதே நேரத்துல சுப்பையா சிற்பி கனவுல வந்த அம்மன், நாளை காலை தெந்திசை நோக்கி போ. அங்க, ஆண்பாறையும், பெண்பாறையும் அடுத்தடுத்து இருப்பதை பார்ப்பே. அதில் எங்களுக்கு சிலை வடித்து, குலசேகரப்பட்டினத்திலிருந்து வரும் பூசாரிக்கிட்ட கொடுத்துடுன்னு சொல்லி மறைந்து விட்டாராம் அம்மன். அதுமாதிரியே சிலை வடித்து, கோவில்ல பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடற்கரை கோவிலான இக்கோவிலில் சுவாமியும், அம்மனும் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து அருள் செய்யுறாங்க. அம்மை நோய் கண்டவங்களும், பிள்ளை வரம் வேண்டியவர்களும் இங்க வந்து வேண்டிக்கிட்டா அவங்க விருப்பம் நிறைவேறும்ன்னு ஐதீகம். இப்பவும் , இந்த சிலைகளின் பாதங்களில் சுயம்பு உருவங்களும் இருந்து அருள்பாலிக்கின்றது.

ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தா அதை `பரிவர்த்தனை யோகம்` ன்னு சொல்வாங்க. அதுமாதிரி குலசேகரன்பட்டினத்தில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் பெற்று `சிவ`மயமா இருக்கார். அம்பாள் ஆற்றலை சுவாமி பெற்று சக்தி மயமாக வீற்றிருக்கிறார். இது `பரிவர்த்தனை யோக நிலை`   இங்க அம்பாளின் அருளாட்சியே கோலோச்சுது. எனவே, சக்தி தலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுது. தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம், யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்திப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.




குலசேகர பாண்டிய மன்னன், தன் நாட்டை சுற்றி இருந்த சின்ன நாட்டோடு சண்டை போட்டு, ஜெயிச்ச்சு தன் ஆதிக்கத்தை மதுரை முழுசும் பரப்பினார். இதனால, கேரள நாட்டை ஜெயிக்க நினைச்சு திருவனந்தப்புரத்து மன்னனோடு சண்டைக்கு போயி தோல்வி அடைந்து வரும் வழியில் ஓய்வெடுக்க எண்ணி சற்று உறங்கி போனான். அப்ப, அவன் கனவில் வந்த அம்மன், மன்னா! தூங்கிவிடாதே! தூங்கி உன் நாட்டின் பெருமையை இழந்து விடாதே! ஒரு முறை தோற்றால்தான் என்ன!? மீண்டும் முயற்சி செய். வெற்றி கிட்டும்ன்னு சொல்லி மறைந்து போனாள். அம்மனின் வாக்குப்படி மீண்டும் படை திரட்டி போரிட்டு கேரள மன்னனை ஜெயித்து இக்கோவிலை கட்டினான். அவன் நினைவாகத்தான் ”குலசேகரப்பட்டினம்”ன்னு இந்த ஊருக்கு பெயர் வந்ததாம்.

முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாம். நவமணிகளில் `முத்து` மட்டும் பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிரும் தன்மை கொண்டது. அதே போல் குலசேகரன் பட்டினத்தில் அம்பாள் தானே தோன்றி மக்களை பாதுகாத்து வருவதால் `முத்தாரம்மன்` ன்னு பேர் வந்ததா சொல்றாங்க.  கிராமங்களில் அம்மை நோயை, `முத்துப் போட்டதாக` சொல்வாங்க.அப்படி அம்மை நோயால் பாதிக்க பட்டவங்க, இந்த கோவிலுக்கு வந்து நேர்ந்துக்கிடு அம்மை நோய் குணமாவதால், அம்மனுக்கு, முத்தாரம்மன்னு பேர் வந்ததாகவும் சொல்றாங்க.

இங்க நடக்கும் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியா பிரம்மாண்டமானது. திருச்செந்தூரில் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவுக்கு வரும் கூட்டத்தை விட இங்கு வரும் பக்தர்கள் அதிகம்.

வருசம்தோறும் புரட்டாசி மாசம் வரும் அமாவாசைக்கு அடுத்த திருநாளில் அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்தோடு திருவிழா தொடங்குது. அங்கிருந்து பத்து நாட்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அசைவு உணவு சேர்க்காம விரதமிருக்குறாங்க. விரதமில்லாவிட்டாலும்கூட இவ்வூர் மக்கள் அசைவம் சாப்பிடாம இருப்பாங்களாம்.

நவராத்திரி கடைசி நாள், விதவிதமா வேஷம் போட்டு 15 லட்சத்திற்கும் மேல பக்தர்கள் வந்து பிச்சை எடுத்து நேர்த்தி கடன் செலுத்துறாங்க. பத்து நாளும் ஒவ்வொரு அம்மனா மக்களுக்கு காட்சி அளித்து, பத்தாம் நாள் ராத்திரி முத்தாரம்மன் விஸ்வரூபமெடுத்து அசுரனை வதம் செய்வதுதான் தசரா திருவிழா. 

பத்து நாள் காப்பு கட்டி விரதமிருந்தவங்களாம், அன்னிக்கு ராத்திரி 11 மணிக்கு நடக்கும் அம்மனுக்கும், அசுரனுக்கும் நடைபெறும் சூரசம்ஹாரத்துல கலந்துக்குறாங்க. அன்னிக்குதான் அம்மனுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை செலுத்துறாங்க, சூர்சம்ஹாரம் முடிந்ததும் தங்கள் கைகளில் உள்ள காப்புகளை காளியம்மன் மூலம் அவிழ்க்குறாங்க என்பது ஐதிகம். 


ஈரேழு உலகத்தையும் அரசாள நினைத்த, அந்த வரத்தை சிவனிடம் பெற நினைத்த அரக்கன் ஒருத்தன் கடுமையான தவமிருந்து அவ்வரத்தையும் பெற்றான். வரம் கிடைத்ததும் சிவனையே கொல்ல பார்க்குறான் அசுரன். பார்வதி தேவி துர்க்கையாய் மாறி அவனை அழிக்கிறாள்.


இந்த நிகழ்ச்சிதான், பத்தாம் நாளில் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுது, சூரசம்ஹாரம் முடிவில் கீழே விழும் அசுரனின் தலையை துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து தன் கையில் ஏட்ந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டு அதன் மூலம் மீண்டும் ஒரு அசுரன் உருவாக்கக்கூடாதுன்னு நினைச்ச துர்க்கை அம்மன், அந்த ரத்தத்தை குடிக்க சண்டி அம்மனை கட்டளை இடுகிறாள். அவ்வாறு, உறிஞ்சிய ரத்த துளிகள் கீழே விழும்போது காளி அம்மனாக உருவெடுத்ததாம்.
அப்படி உருவான கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன் , பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் என எட்டு வகை காளி அம்மன்கள் இவ்வூரில் குடியிருப்பது சிறப்பு அம்சம். இதில் வீர காளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்திருக்கு.


இப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த தசரா திருவிழாவிற்கு வாய்ப்பு கிடைப்பின் போய் வாங்க. 

நன்றி:
தகவலுக்கு : நம்தோழி
படங்கள் : இணையம்

15 comments:

  1. வணக்கம்
    இறை நாமங்களை மனிதர்கள் போட்டு மனிதனை மனிதன் மகிழ்விக்கும் நிகழ்வு . பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வடுகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி ரூபன்

      Delete
    2. மகிழ்ச்சி ரூபன் Sir

      Delete
  2. குலேசேகரபட்டினத்தில் நடக்கும் இந்த விழாவில் வேஷம் போட்டு எங்கள் ஊருக்கெல்லாம் கெல்லாம் வருவார்கள் அந்த நிகழ்வுகளை உங்கள் பதிவு நினைவுபடுதுகின்றன

    ReplyDelete
    Replies
    1. சிறுவயது நினைவுகளை அசைப்போடுவதே தனி சுகம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. படங்களுடன் தகவல்களும் அருமை சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  4. எங்க ஊரு அருகிலிருக்கும் கோயில்...ஆனா நான் பத்து வயதில் ஊரைவிட்டு மதுரை போய்விட்டேன்...எனக்கு தெரியாதா நிறைய தகவல்களை உங்கள் பதிவில் பகிர்ந்துள்ளதை வாசித்து...பிரமித்தேன் ...தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் அவசியம் போய் பாருங்க

      Delete
  5. எங்க ஊருல இருந்து குலசை 10 கிலோ மீட்டர்தான்.
    ரொம்ப நாள் கழித்து போன வருடம்தான் தசரா திருவிழா போய் வந்தேன்.
    இந்த வருடம் போக முடியவில்லை.
    உங்கள் பதிவு என் மனக்குறையை போக்கியது.
    நன்றி.

    ReplyDelete
  6. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் விழாக்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த கோவிலின் நவராத்திரி விழா கொண்டாட்டங்களை அழகிய வண்ணப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. மைசூருக்கு அடுத்த இடம் இந்த குலசேகரப் பட்டினத்திற்கு...
    தசரா பண்டிகை அவ்வளவு சிறப்பாக இருக்கும்..
    என் வீட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தான் இந்தக் கோவில்..
    அழகும் பரசமும் நிறைந்திருக்கும்...
    அம்பாளும் சுவாமியும் ஒரே மூலஸ்தானத்தில்
    அமர்ந்திருக்கும் கோலம் காண கண்கோடி வேண்டும்..
    அழகிய பகிர்வு சகோதரி...

    ReplyDelete
  8. தசராவுக்கு பெயர் போன ஊரா? பெயர் பெற்ற ஊரா சிஸ்டர்? இந்தப் பதிவு இருக்கற ஒவ்வொரு படமும் கண்ணை இழுத்துடுச்சு நகர விடாம. சூப்பரு! மேட்டர் பத்திச் சொல்லவா வேணும்? நாமளும் போகணும்கற ஆசைய வரவழைச்சுட்ட தாயி!

    ReplyDelete
  9. படங்களும் விளக்கமும் அருமை

    Typed with Panini Keypad

    ReplyDelete
  10. இந்த தகவல் வாசிக்கும் போது எணக்கு உடம்பு எல்லா சிலர்க்கு அந்த அளவு இந்த கோயில் ஏதோ உள்ளது என்று நினைக்கிறேன். நல்லது ஒண்று இருத்தால் நல்லதே நடக்கும் ஓம் சக்தி

    ReplyDelete