வியாழன், மார்ச் 06, 2014

ஐஸ்குச்சி செல்போன் ஸ்டாண்ட் - கிராஃப்ட்

வலைச்சரத்துல பிசியா இருந்த சமயத்துல பதிவு போட ஒரு செல்போன் ஸ்டேண்ட் செய்யச் சொல்லி அப்புக்கு சொல்லிக் கொடுத்துட்டு நான் எப்பவும் போல வலை வீசிக்கிட்டு இருந்தேன். 

செல்போன் ஸ்டேண்டை செய்யும்போது ரெண்டு தப்பு செஞ்சுட்டான். ஒண்ணு என்னைப் போல வரிசையா  ஃபோட்டோ எடுக்கல. ரெண்டாவது பின்பக்கமா சாய்ச்சு செய்ய வேண்டியதை முன்பக்கமா சாய்ச்சு வச்சு செஞ்சுட்டான். பிழைகளை பொறுத்துக்கொள்ள என் சகோக்களுக்கு சொல்லியா தரனும்!?

தேவையான பொருட்கள்:
ஐஸ்குச்சி
ஃபெவிக்கால்
மேல் படத்துல இருக்குற மாதிரி குச்சிகளைத் தனித்தனியா முதலில் ஒட்டிக்கோங்க.

7 குச்சிகள் கொண்டதை அடிப்பாகத்துல வர மாதிரி வச்சுக்கிட்டு சைடு பாகத்தை ஒட்டுங்க.

அடுத்து மற்றொரு சைடு பாகத்தை ஒட்டுங்க.

அடுத்து பின் பாகம் ஒட்டனும். அதை பின்பக்கமா சாய்ச்சு ஒட்டுங்க. அப்பு, முன்பக்கமா சாய்ச்சு ஒட்டிட்டான். அந்த தப்பை நீங்க ஒட்டாதீங்க.

அடுத்து மற்றொரு சைடு பாகத்தை ஒட்டினா செல்போன் ஸ்டேண்ட் ரெடி.
பின்பக்கமா சாய்ஞ்சிருக்குற மாதிரி செஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!? இன்னொரு முறை செய்யும்போது நல்லா செய்றேன்னு சொல்லி இருக்கான்.

அடுத்து என்ன கிராஃப்ட் அப்புவை செய்யச் சொல்லலாம்ன்னு யோசிக்கனும். அதனால, டாட்டா!

25 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு. ரோஷ்ணி பார்த்து வெச்சுகிட்டா... இந்த வார இறுதியில் செய்வாள்.. அப்புவுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோஷ்ணி செய்த்ததைப் படமெடுத்துப் போடுங்க ஆதி!

   நீக்கு
 2. இதற்கு காப்புரிமை உண்டா நாங்க இந்த பார்முலாவை. யூஸ் பண்ணிக்கலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காப்புரிமை உண்டு. ஆனா, என் பிளாக் படிக்குறவங்க மட்டும் இலவசமா இந்த ஃபார்முலாவை பயன்படுத்திக்கலாம்

   நீக்கு
 3. அசத்தல்... அப்புவுக்கு பாராட்டுக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டை அப்புக்கிட்ட சேர்பிச்சுடுறேன் அண்ணா!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா!

   நீக்கு
 5. 'ரொம்பக் கஷ்டமோ?'ன்னு நெனச்சேன்.
  ஆனா, ஈசிதான் போல!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா! அதை செஞ்ச அப்புக்குதானே தெரியும் கஷ்டம்!?

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்ரி ஐயா!

   நீக்கு
 7. அழகா இருக்கு..வாழ்த்துக்கள் அப்புவுக்கும் உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்

   நீக்கு
 8. அழகா இருக்கு. அப்புவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 9. சிறப்பான முயற்சி அப்புவுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்துகளை அப்புக்கிட்ட சேர்த்துடுறேன் அக்கா!

   நீக்கு
 10. நல்ல கிரியேடிவ் வேலை. அப்புவுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புவோட கிரியேட்டிவ் மைண்ட் பல நேரத்துல நல்லது செய்யும். சில நேரத்தில் வீட்டில் சண்டை இழுக்கச் செய்யும்.

   நீக்கு
 11. வலைச்சரம் பார்த்துகிட்டு இந்த வேலை வேற செஞ்சீங்களா ?
  நீங்க சிட்டி ரோபோவே தான் !! அப்பு கலக்குறார் !! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தை அப்லோட் பண்ணி, பதிவு எழுதுனது மட்டும்தான் நான். செஞ்சதும், படம் எடுத்தது அப்புங்க மைதிலி!

   நீக்கு
 12. நல்ல முயற்சி. அப்புவிற்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு