Saturday, March 08, 2014

என்னைக் கவர்ந்த பெண்கள்

மீனாட்சி பாட்டி(அப்பாவை பெற்றவள்): 

சிறு வயதிலிருந்தே பாட்டிக்கும், எனக்கும் அதிகம் ஒட்டுதல் இல்லை. ஆனாலும், என் அம்மாவை என் பாட்டிக் கொடுமைப் படுத்தியும் கூடபாட்டியைப் பற்றி அம்மா பெருமையாய் சொல்வாங்க. கடுமையான உழைப்பாளி, இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப் பட்டு,  மூத்தாள் பிள்ளையையும் தன் பிள்ளையோடு தன் பிள்ளைகள் மூன்றை வளர்த்தவள்.  தனியாளாய் உழைத்து வீடு, கழனி வாங்கி மூத்தார் மகனுக்கு ஒரு வீடு தந்து கல்யாணம் கட்டி வைத்து அனுப்பி, தன் மகனுக்கு எங்கெங்கோ அலைந்து ஒரு அரசாங்க வேலையை வாங்கித் தந்து, பென்கள்ளுக்கு திருமணம் செய்து வைத்து..., யார் தயவும் இல்லாமல் தன் 82 வயது வரை கழனி, வீடு வாசல்ன்னு வாழ்ந்து கடைசி இரண்டு வருடத்தை என் அப்பாவின் நிழலில் இருந்து இறவனடி சேர்ந்தவர். யாரும் பசியோடு இருப்பதை காண சகியாதவர்.தன்னந்தனியாய் கழனியில் இரவு முழுக்க தங்கி உழைக்கும் தைரியசாலியும், கடின உழைப்பையும் கொண்ட பெண்மனி. உன் பாட்டியை போல இருன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.

விருதாம்பாள் பாட்டி(அம்மாவைப் பெற்றவள்):
நோயாளி கணவனுக்கு வாழ்க்கைப் பட்டு நான்கு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகனைப் பெற்றவர். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் நெசவு செய்து பிள்ளைகளைக் கரையேத்தியவர். பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து மகனுக்காகப் பாடுபட்டவர். மகன் நல்ல நிலைக்கு வந்ததும் சொன்ன ஒரு உதாசீன வார்த்தைக்காக உயிரையே விட்டவள். ரோசக்காரி. 
(என் அம்மா)
ஜானகி (என்னை பெற்றவள்):
கடின உழைப்பும் சிக்கனமும் சேர்ந்தவள். வீட்டு விசயம் வெளியில் வரக்கூடாதுன்னு சொல்லுவாங்க(ஆனா, அவங்களைப் பத்தியே பதிவுப் போடுறேன்). படிப்பறிவு இல்லாட்டியும்,எதை எப்படி செய்யனும்ன்னு அழகா யோசிச்சு செய்வாங்க. கல்யாண வயசுல யாரையாவது பார்த்துட்டாப் போதும் உடனே மனசுல கணக்குப் போட்டு கல்யாண புரோக்கரா மாறிடுவாங்க. அதுக்கு என்கிட்ட திட்டு வாங்கினாலும் அந்த பழக்கத்தை மட்டும் விட மாட்டாங்க. தன் மாமியார் போலவே யாரையும் பசியோட இருக்க விட மாட்டாங்க. கூடவே தன் அம்மாவைப் போல ரோசக்காரி. அதனால நான் எதும் அதிகம் எதிர்த்து பேச மாட்டேன்.

கமலா டீச்சர்: 
ஆனா, ஆவன்னா கைப்பிடித்து எழுத வைத்தவர். தனக்கு குழந்தை இல்லாத காரணத்துக்காய் தன் கணவர் இரண்டாவது மனைவி கட்டி வந்து கொடுமை படுத்திய போதும் புன்னகை மாறாதவர். தன் சோகத்தை, பள்ளியின் வளர்ச்சியில் மறந்தவர்.

மீனாட்சி டீச்சர்:
காதல் தோல்வியால் திருமணம் செய்யாதவர். படிப்பில் ஆர்வம் இல்லாதவங்கக் கூட இவர் பாடமான தமிழில் பாஸ் ஆகிடுவோம். அவரின் மடிப்புக் கலையாத காட்டன் சேலைக்கும், அமைதியான சுபாவத்தைப் பார்த்து தன் பிள்ளைகளை டீச்சருக்குப் படிக்க வச்ச பெற்றோர்கள் ஏராளம். எந்த காதலன் இவரை வேணாமின்னு ஒதுக்குனானோ அவன் மனைவி இறந்துவிட தன் பிள்ளைகளுக்கு தாயாய் இருக்க வேண்டி கல்யாணம் செய்துக்க வந்தவனை ஒதுக்கி, அவன் பிள்ளைகளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு தாயாய் இருந்தவர். 

தூயா(மகள்):
குழந்தைத் தனத்தோடு சுத்திக்கிட்டு இருந்தவளைத் தாயாய் மாற்றியவள். குழந்தையாய், ஆசிரியராய், தோழியாய், தாயாய், மகளாய் பல்முக காட்டுபவள். 

இனியா: 
தாயாய் ஆனப் பின்னும் விளையாட்டுத்தனமாய் இருந்த என்னை பொறுப்பானவளாய் மாற்றியவள்

மற்றவர்கள்: சமையல் கற்றுத் தந்த பக்கத்து வீட்டு அக்கா, பொழுதன்னிக்கும் வீடுகளில், ரைஸ் மில்லில், ஸ்கூலில் வேலை பார்த்து உழைக்கும் எதிர் வீட்டு செல்வியக்கா. ஒற்றை மகளாய் பிறந்து தாய்க்கும், புகுந்த வீட்டுக்கும் உழைக்கும் பக்கத்து வீட்டு விமலா, ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் திருமணமாகி பிள்ளை இல்லாததால் மாமியாரிடமும், கணவனிடமும் கொடுமைகளை அன்பவித்துக் கொண்டே அப்பா, அம்மாவிடம் சந்தோசமாய் இருப்பதாய் நடிக்கும் பக்கத்து வீட்டு ஹேமா. கணவன் இல்லாத போதும் கௌரவமாய், ஒழுக்கமாய் நெசவு செய்து குடும்பத்தை கரை சேர்த்த கோடி வீட்டு அத்தைன்னு இன்னும் மனம் கவர்ந்த பெண்கள் இருக்காங்க...

ஆனா, என் மகள்கள் தவிர்த்து மற்றவர்களுக்குலாம் மகளிர் தினம்ன்னு ஒண்ணு இருக்குறதாவது தெரியுமா!?

19 comments:

  1. அருமையான மகளிர் தின வாழ்த்துக்களை உங்களுக்கே உரிய பாணியில் பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோ.
    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஒவ்வொருத்தரும் ஓவ்வொரு விதத்தில் சிறப்பு... அதிலும் உங்களின் அம்மாவின் குணம் மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. அனைவருக்கும் என் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள் சகோதரி .
    http://rupika-rupika.blogspot.com/2014/03/2014.html

    ReplyDelete
  5. ஒரு வித்தியாசமான மகளிர் தின வலைப் பதிவு! எனது உளங்கனிந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  6. அருமையாஆன நினைவு கூறல்!!1 தங்களுக்கு மகளிர் தின நல்வழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சொன்ன விதம் மனசைத் தொட்டது !

    ReplyDelete
  8. நல்ல வேளை. அவரைப் பிடிக்கும் இவரைப் பிடிக்கும் என்று பிரபலங்களைப் பற்றி எழுதியிருப்பீங்களோன்னு நினைச்சு வந்தேன். அற்புதம். நினைக்க வேண்டிய மனிதர்கள் மற்றும் ஜீவன்கள் இவர்கள்.

    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமையான பெண்கள்...
    ஆமாம் அவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியாது...

    ReplyDelete
  10. இந்த மகளிர் தினத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்தில் வந்த பெண்களையும் வகை படுத்தி சிறப்பித்துள்ளது அருமையான விஷயம் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் பதிவில் குறிபிட்ட அனைத்து பெண்களுக்கும்

    ReplyDelete
  11. மகளிர் தின சிறப்புப் பதிவு அருமை சகோதரியாரே

    ReplyDelete
  12. போம்மா உன்னால எனக்கு இன்ன்று பூரிக்கட்டை அடி,,, உன் பதிவை படித்துவிட்டு கருத்து சொல்லும் முன் ஒரு கப் காபி சாப்பிடலாம் என்று கிச்சனுக்கு போய் காபி போட சென்ற நேரத்தில் என் மனைவி இதை படித்துவிட்டு என் மனைவி உங்க சகோதரிக்கு இருக்கும் ஒரவஞ்சனையை பார்த்தீங்களா பிடித்த எல்லாப் பெண்மணியையும் சொல்லிவிட்டு என்னை மட்டும் சொல்லவில்லை என்று என்னை வறுத்து எடுத்துவிட்டாளம்மா

    உனக்கு ஏன் இந்த அண்ணன் மேல் இவ்வளவு கொலை வெறி

    ReplyDelete
  13. அருமையான நினைவு கூறல்! வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  14. மிக வித்தியாசமான பகிர்வு! வாழ்த்துக்கள்! எல்லோரும் தவிர்த்து விடும் பெண்களை நினியவு கூர்ந்து எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. Good Post. Out of all these, only Meenakshi Teacher refuses to get out of the mind. Know not why?

    ReplyDelete
  16. அருமையான பகிர்வு... மகளிர் தினத்தில் உங்களைக் கவர்ந்த மகளிர் பற்றிச் சொன்னது பொருத்தம்!

    ReplyDelete