எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வாங்க. ஆனா, எங்க ஊர்ல கல்யாண, காதுகுத்து, சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்யும் முன் குல தெய்வத்துக்கு சாமி கும்பிடும்போதும், பொங்கல் பண்டிகை கழிந்ததும் சாமி கும்பிட, ஆடி மாசம் மாரியம்மனுக்கு கூழ் ஊத்தன்னு எப்படியும் மாசம் ஒரு தரமாவது கொழுக்கட்டை செய்ய வேண்டி வரும்.
அதனால, எனக்கு கொழுக்கட்டை நல்லாவே செய்ய வரும். ரொம்ப ஈசியா அதே நேரம் ருசியா எப்படி கொழுக்கட்டை செய்யலாம்ன்னு இனி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 ஆழாக்கு (ரேஷன் அரிசின்னா கொழுக்கட்டை நல்லா வரும்)
வெல்லம் - கால் கிலோ
வேர்க்கடலை - 100 கிராம்
உப்பு - கால் டீஸ்பூன்
பச்சரிசியை குறைஞ்சது 2 மணிநேரம் ஊற வச்சு கழுவி, காட்டன் துணில மூட்டைக் கட்டி ஈரம் காய்ஞ்சதும் மிக்சில இல்ல மெஷின்ல அரைச்சுக்கோங்க. வெல்லத்தை பொடிப் பண்ணி வச்சுக்கோங்க. வேர்க்கடலையை வறுத்து, ஆறினதும் தோல் நீகி சுத்தம் செஞ்சுக்கோங்க. வெல்லத்தை பொடிச்சு வச்சுக்கோங்க.
வேர்க்கடலையை மிக்சில ரெண்டு சுத்து ஓடவிட்டு, கூடவே பாதி வெல்லத்தை சேர்த்து பொடிச்சுக்கோங்க. ரொம்ப நைசா இல்லாம கரகரப்பா அரைச்சுக்கோங்க.
அரைச்ச பச்சரிசி மாவை ஜலிச்சு இட்லி பானைல வச்சு வேக விடுங்க. கைல மாவு ஒட்டாம வரும்வரை குறைஞ்சது கால் மணி நேரம் வேக வைங்க. ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊத்தி மிச்ச வெல்லம், உப்பைச் சேர்த்து சூடு பண்ணுங்க. கொதிக்க வைக்கனும்ன்னு அவசியம் இல்ல. வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணால் போதும்.
மாவு வெந்ததும், ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கட்டி இல்லாம ஆற வைங்க. வெல்லத்தை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமா மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைஞ்சுக்கோங்க.
சின்ன வயசுல விளையாட களி மண்ணுல சொப்பு செய்வோம். அதுப்போல பிசஞ்ச மாவு எடுத்து சொப்பு செஞ்சு பொடிச்ச வேர்க்கடலை, வெல்லப் பொடியை வச்சு மூடி உருட்டிக்கோங்க.
எல்லாத்தையும் உருட்டி வச்சு இட்லிப் பானைல தேவையான அளவு தண்ணி வச்சு உருட்டி வச்சிருக்கும் உருண்டைகளை கால் மணி நேரம்
வேக வைங்க.
டிப்ஸ்: கொழுக்கட்டை பூரணத்துக்கு வேர்க்கடலைப் போலவே எள்ளை வறுத்து வெல்லம் சேர்த்து பொடிப் பண்ணியும் வைக்கலாம். தேங்காய் துருவி சர்க்கரை ஏலக்காய் சேர்த்தும் பூரணம் வைக்கலாம்.
கொழுக்கட்டை உருட்டி வச்சது ஃபேன் காத்துல காய விடாம பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டைகள் வெடிக்கும். மாவு பிசையும் போது வெல்லம் தண்ணி பத்தலைன்னா சாதாரண தண்ணி சேர்த்தும் செய்யலாம். சிலர் மேல் மாவுக்கு வெல்லம் சேர்க்காம வெறும் உப்பு மட்டும் போட்டு பிசைஞ்சும் கொழுக்கட்டை செய்வாங்க.
மேல படத்துல உருண்டைகளில் வேர்க்கடலை பூரணம் வச்சு நான் உருட்டினேன். சோமாஸ் போல இருப்பதில் எள் பூரணம் வச்சு சின்னவ இனியா கொழுக்கட்டை பிடிச்சா. கொழுக்கட்டைப் பிடிக்குறதுல அப்புவோட ஹெல்ப் என்னன்னா.....,
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்னை திட்டிக்கிட்டே கொழுக்கட்டைப் பிடிக்குறதை படம் பிடிச்சது.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.
நாங்க மேல் மாவு உப்பு சேர்த்து பிசைந்து செய்வோம்,உங்க செய்முறையிலும் செய்து பார்க்கிறேன் அக்கா..
ReplyDeleteநாங்களும் அப்படி செய்வோம் சாதியா. ஆனா, பசங்க உள்ளிருக்கும் பூரணத்தைச் சாப்பிட்டுட்டு மாவை அப்படியே வச்சுடுதுங்க. அதுக்குதான் இந்த ஐடியா.
Deleteருசியா இருக்கே..நிறைய வேலை மாதிரித் தெரியுதே...
ReplyDeleteசெஞ்சு பாக்குறேன்
அதிக வேலைலாம் இல்ல கிரேஸ். உருண்டைப் பிடிக்குறதுதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். மத்தப்படி ஈசிதான்.
Deleteஅட எங்க சகோ பதிவுக்காகதான் இந்த மாதிரி கஷ்டப்பட்டு சமைப்பாங்க மற்ற நேரங்களில் இப்படியெல்லாம் கிடையாதுங்க கிரேஸ்
Deleteஅந்தக் கடைசி படம் மட்டும் அப்படியே உண்மையாய்க் கண்முன் வராதா... என்று மனம் ஏங்குகிறது.
ReplyDeleteம்ம்ம்.... செய்து தான் பார்க்கனும்.
இதுதான் நோகாம நோன்புக் கும்பிடுறதுங்குறது அருணா!
Deleteரொம்பவும் வித்தியாசமான ருசியான கொழுக்கட்டை குறிப்பு தந்ததற்கு அன்பு நன்றி!! சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும்!!
ReplyDeleteசெய்துப் பார்த்துட்டு ருசி எப்படின்னு சொல்லுங்கம்மா!
Deleteசோமாஸ் சூப்பர்...!
ReplyDeleteமருமகளுக்கு சப்போர்ட்!? ம்ம்ம் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
Delete///எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வாங்க.//
ReplyDeleteஆனா எங்க வீட்டுல எங்கவூட்டம்மா நினைச்ச நேரமெல்லாம் பூரிக்கட்டையை கொண்டு தினமும் செய்வாங்களாக்கும்
கொழுக்கட்டை, கொழுக்கட்டையா வீங்குமா உடம்பில்!?
Deleteஇந்த கொழுக்கட்டை பதிவை போட்டதன் மூலம் இந்த சகோதரனை மறக்கவில்லை என்று நீங்கள் மறைமுகமாக சொல்லியது எனக்கு மன ஆறுதலை தருகிறது..
ReplyDeleteஆற்தல் தந்ததக்கு சகோதரிக்கு ஒரு வளையல் செஞ்சுப் போடுறது!!
Deleteநல்ல வேளை வளையல் செஞ்சு போடுங்கன்னு சொல்லி என் மனதில் பால் வாத்திங்க. நல்லவேளை தங்கம் வைரம் என்று சொல்லாததால் குழந்தைக்கு கிராப்ட் வொர்க் செய்யும் மெட்டிரியல் நிறைய இருக்கு அதை வைச்சு வளையல் செஞ்சு போடுறேன்
Deleteவித்தியாசமான செய்முறையாக இருக்கு.. மாவில் வெல்லம் சேர்க்காமல் உப்பு மட்டும் போட்டு கொதிக்கும் தண்ணீரில் மாவை கொட்டி கிளறுவோம். வேர்க்கடலை பூரணமும் புதுமையாக உள்ளது. நாங்கள் தேங்காய், எள், உளுந்து போன்றவற்றில் தான் செய்வோம். மோதகமும், சோமாஸ், மற்றும் பூ மாதிரி வேறொரு வடிவமும் தான் எப்போதும்...:)
ReplyDeleteதில்லியில் இருந்த போது அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு வேண்டுதலாக 108 கொழுக்கட்டைகள் இருமுறை செய்து தந்திருக்கிறேன்...:) இப்போ 10 செய்தாலே ஜாஸ்தி...:)) நான் மட்டும் தான் சாப்பிடணும்....:))
என்னங்க நாங்கள் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று சொல்லி இருக்கீங்க எங்காவாவது நான் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று சொல்லவே இல்லை... இந்த கொழுக்கட்டை செய்யுறதுக்கெல்லாம் கணவர் உடன் இருக்க வேண்டுமா என்ன?
Deleteஅண்ணனுக்கு ரெண்டு பிளேட் பார்சல் பிளீஸ்...
ReplyDeleteஇந்த அண்ணனை பார்த்தியம்மா அவருக்கு நீ செய்த கொழக்கட்டை வேண்டாமாம் 2 ப்ளேட் மட்டும்தான் பார்சல் வேணாமாம். ஒரு வேளை இவருக்கு உன் கையால் யாருடைய உதவி இல்லாமல் கொழுக்கட்டை செய்து தந்து இருக்கியோ? அண்ணன் ரொம்ப உஷாராவே இருக்கார்
Deleteஆரோக்கியமான எளிய தின்பண்டம், அந்தக்காலத்தின் ஸ்பெஷல் இப்போது காணக் கிடைக்கவில்லை...
ReplyDeleteபடங்களுடன் செய்முறையைச் சொல்லிப்போனவிதம்
ReplyDeleteமிக மிக அருமை
பதிவராய் இருப்பது குடும்பத்தினருக்கு
எவ்வளவு நன்மையாய் இருக்கிறது
வகை வகையாய்ச் சாப்பிடலாம்
ம்...ம்..கொடுத்துவைத்தவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு.... தில்லிக்கு இரண்டு ப்ளேட் நிறைய கொழுக்கட்டை பார்சல்!
ReplyDeleteஆஹா அக்காள் பாரிஸ்சுக்கும் ஒருகொழுக்கட்டை செய்து பத்துப்பாசல் அனுப்புங்க! சாபிட்டது போக மிச்சத்தை குளிரில் வைத்து பாதுக்காத்து சாப்பிடுவோம்!ஹீ
ReplyDelete