பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த பக்கத்து வீட்டு பொண்ணு இந்தக் குழம்பை செய்வா. அதன் ருசி பசங்களுக்குப் பிடிச்சுப் போகவே அவக்கிட்ட கேட்டு அதே மாதிரி சில மாற்றங்களுடன் நான் செய்ய ஆரம்பிச்சேன். தூயா எப்போ வீட்டுக்கு வந்தாலும் இந்தக் குழம்பு கண்டிப்பா அவளுக்குச் செஞ்சு கொடுத்துடனும்.
தேவையானப் பொருட்கள்:
சின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.
வாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.
மீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.
வெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.
தக்காளி சேர்த்து வதக்குங்க.
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.
அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.
மிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.
மிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.
மிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.
கோடைக்காலம் வந்திடுச்சே! கஞ்சி வத்தல்லாம் விட்டு வச்சுக்கிட்டா உபயோகமா இருக்கும்ல. அதனால, கஞ்சி வத்தல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.
கண்டிப்பா செஞ்சுடுறேன்..நன்றி ராஜி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்!
Deleteநல்லாயிருக்கும்போல தெரியுது.
ReplyDeleteசெஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.
Deleteகுழம்பு வாசம் மூக்கைத் துளைக்குது ராஜிம்மா ஒரு பிடி சாதம்
ReplyDeleteகுழைச்சுக் குடுங்க அப்புடியே சாப்பிட்டிற்று ஓடிடுவேன் ம்ம்ம் ...
ஒரு பிடி சாதம் போதுமாக்கா!?
Deleteஎண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லுவாங்களே அதுவா இது? ஓக்கே! பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteஅது வேறு. இது வேறு.
Deleteசெய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி... நாலைந்து கத்திரிக்காய் தெரியிற மாதிரி கடைசி படம் போட்டிருக்கலாம்... சந்தனம் கலந்து வைச்ச மாதிரி இருக்கு...!
ReplyDeleteசெஞ்சக் குழம்பை படம் எடுக்கும் முன் கத்திர்க்காய்லாம் பசங்க ஸ்கூலுக்கு கொண்டுப் போய்ட்டாங்க. ஒரு கத்திரிக்காயும், கொஞ்சம் குழம்பும்தான் மிச்சம்ண்ணா .
Deleteநேற்று கத்திரிக்காய் காரக்குழம்பு செஞ்சேன்... கடலை அரைத்து சேர்ப்பதில்லை.... அடுத்த முறை செய்து பார்த்துவிடுவோம்...
ReplyDeleteவேர்க்கடலை அரைச்சு விட்டா ரிச் டேஸ்ட் கிடைக்கும் சகோ!
Deleteஅருமை,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி
Deleteசூப்பர், இந்த வாரம் செஞ்சு பாத்துடலாம்
ReplyDeleteஅவசியம் செஞ்சுப் பாருங்க
Deletehttp://pettagum.blogspot.in/2014/03/blog-post_7358.html
ReplyDeleteஇது நான் செஞ்சதுதான் சகோ! என்னைப் பார்த்து அவங்கதான் காப்பி அடிச்சு இருக்கான்க. நான் காப்பி அடிக்கல.
Deleteஇங்கே ஆப்பிரிக்கர்கள் அவர்களின் அனைத்துச் சமையலிலும் வேர்கடலையை அரைத்துச் சேர்க்கிறார்கள்.
ReplyDeleteஅவர்களின் கடைகளில் வேர்கடலை பேஸ்ட்டாகவே டப்பிகளில் கிடைக்கிறது.
நீங்கள் செய்தது இட்லி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம் போலிக்கிறது. செய்து பார்க்கிறேன். ஆனால் இங்கே இந்த மாதிரி குண்டு கத்திரிக்காய் கிடைக்காது.
எந்த கத்திரிக்காயிலும் செய்யலாம் அருணா! இட்லி, தோசைக்கும் என் பசங்க சாப்பிடுவாங்க.
Deleteரொம்ப அருமையா இருக்கும் போல இருக்கே, நாளை சமையலில் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteத.ம.7 போட்டு மகுடம் ஏத்தியாச்சு.
செஞ்சு சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுங்க சகோ!
Deleteநல்லா இருக்கும்போல இருக்கு.... செய்திடுவோம்!
ReplyDelete