வாங்க பேராண்டிகளா! பள்ளிக்கூடத்துக்கு போய் வந்துட்டீங்களா?! முகம், கை காலெல்லாம், கழுவி பலகாரம் சாப்பிட்டீங்களா!?
நான் செச்சேன் பாத்தி.., இதோ நம்ம சீனுதான் கை, காலெல்லாம் கழுவாம அப்பதியே சாப்புத்தான்.
சீனு.., நிஜமா?
அதில்ல பாட்டி.., பசிச்சுது அதான்.., இன்னிக்கு மட்டும்தான்...,
தப்பு.., இன்னிக்குன்னு விட்டா அப்புறம் அதே பழக்கத்துக்கு வந்துடும். அதனால இனி வெளில எங்காவது போய்ட்டு வந்தா கை, கால், முகம் கழுவிட்டுதான் மத்த வேலை பாக்கனும்..,
அவன் தர்த்தி ஃபெல்லோ பாத்தி.., நீ கதை சொல்லு..,
ம் ம் ம் அப்படிலாம் சொல்ல கூடாது ப்ரீத்தி.., அவனும் சமர்த்துதான்.., சொன்னா புரிஞ்சு செய்வான்.., செய்வேதானே சீனு?!
செய்வேன் பாட்டி,, நீங்க கதை சொல்லுங்க..,
சரி.., ஒரு ஊருல வசந்த், சுந்தர்ன்னு அண்ணன், தம்பிகள் இருந்தாங்க.., அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது
பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான்.
எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்..,
பாத்தி பிச்சைக்காரன்ன்னா பெக்கர்தானே!
ஆமா ப்ரீத்தி..,
அவங்க ஏன் அப்படி கிழிஞ்ச ட்ரெஸ் போட்டு, அழுக்கா இருக்காங்க?
அது வயசானவங்கன்னா பிள்ளைங்ககிட்ட சண்டை போட்டு வந்திருப்பாங்க. சிலரை வீட்டை விட்டு அவங்க பசங்க துரத்தி இருப்பாங்க.., சின்ன பசங்களா இருந்தா அம்மா, அப்பாவை தொலைச்சுட்டு இருப்பாங்க.., சிலர் உழைக்க சோம்பேறி தனம் பட்டு இப்படி ஆகிடுவாங்க..,
சரி பாத்தி..,
அந்த பெக்கர்.., அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது.., எதாவது தாங்கன்னு கேட்டான்., வசந்துக்கு அவனை பாத்ததும் பாவமாகிடுச்சு.., கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான்.., இதை பார்த்த சுந்தர்.., அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காட்டக் கூடாது, அதனால சாப்பாடு குடுக்காதேன்னு தடுத்தான்.
பேட் பாய் அந்த சுந்தர்.., குடுக்குற சாப்பாட்டை வேணாம்ன்னு சொல்லலாமா?!
ம் ம் ம் அதை கேக்காம வசந்த சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல வந்து அந்த பெக்கர் நின்னான். திரும்பவும் பிச்சைக்கு வந்து நின்னுட்டானேன்னு கோவம் வந்திடுச்சு சுந்தருக்கு..,
ஐயையோ! அப்புறம் என்ன ஆச்சு பாத்தி?!
ஒண்ணும் ஆகலை... டேய்! சோம்பேறி பையா!! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன் தொலைச்சுன்னு கத்தினான் சுந்தர். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க
வந்தான் அந்த பெக்கர். வந்த கோபத்துல சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை
எடுத்துக்கிட்டு அவனைத் தரதரன்னு இழுத்துக்கிட்டு ஏரிக்கரைக்கு
வந்தான்.
இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா?! உனக்கு மீன் பிடிக்க கத்து தரேன்.., இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோன்னு சொல்லி.., மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக் கொடுத்திட்டு போய்ட்டான்.
அப்புறம் என்ன ஆச்சு பாத்தி?
ரொமப் நாள் ஆச்சு, அந்த பெக்கர் வரவே இல்ல.., அவனை மறந்தும் போய்ட்டாங்க வசந்தும், சுந்தரும்.., ஒரு நாள் ஹாய்யா டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ.., ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார்.., அவர் கையில தங்கத்தால் செஞ்ச
தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தாங்க.. தங்கத்
தூண்டிலை சுந்தரிடம் குடுத்தாரு வந்தவரு. குடுத்துட்டு . “”என் கிஃப்டா இதை வச்சுக்கோங்கன்னு சொன்னார்.
தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன்னு வசந்த்துக்கு தெரிஞ்சுது
அவனுக்கு சரியான கோவம். “”நீ சாகப் பிழைக்க இருந்தப்போ இங்க வந்து சாப்பாடு கேட்டே..,. உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா!” ன்னு கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்க
தம்பிக்குத்தான் சேரனும்!”ன்னு சொன்னார். இதை வசந்த் ஒத்துக்கவே இல்ல. வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான் வசந்த். நடந்ததை எல்லாம்
விசாரிச்சார் ஜட்ஜ்.
வசந்தை பார்த்து , “”நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது
உண்மைதான். நீ செய்த அந்த ஹெல்ப் இவரோட லைஃப்ல எந்த மாற்றத்தையும்குடுக்கலை. ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப்
பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த
சுந்தருக்கு இவர் தூண்டிலை கிஃப்டா குடுத்தது சரிதான் . இந்தத் தங்கத் தூண்டில்
சுந்தருக்கேசேரனும் இதுவே என் தீர்ப்பு!”ன்னு சொன்னார்.
கதை நல்லா இருக்கா?! இதனால என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க குட்டீஸ்..,
நம்ம செய்யுற ஹெல்ப் அப்போதைக்கு அவங்க கஷ்டத்தை சரி செஞ்சா மட்டும் போதாத.., எப்பவும் அவங்களுக்கு கஷ்டமே வராம இருக்குற மாதிரி ஒரு ஹெல்ப் பண்ணனும்ன்னு புரிஞ்சுக்கிட்டோம் பாட்டி..,
ம் ம் ம் ரொம்ப சரி.., சரி கண்ணுங்களா! ரொம்ப நேரம் கதை பேசி உக்காந்துட்டோம்.., போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு.., ஹோம் வொர்க் பண்ணுங்கோ! அடுத்த சனிக்கிழமை வேற ஒரு கதை சொல்றேன்..,
சரி பாத்தி! நாங்க கிளம்புறோம்..,
எந்த ஊர் கோர்ட்ல இந்த கேஸ் நடந்தது பாத்தி .
ReplyDeleteநீங்க வக்கீலா இருக்குற கோர்ட்ல இல்ல பேராண்டி!
Deleteஇந்தக்கதைல வர்ற பாட்டி தான் கதை சொல்லியா? சும்மா ஜி கே வை வளர்த்திக்க கேட்டேன் ;-)
ReplyDeletesuper.,
ReplyDeleteபாட்டிக்கு ருக்மணின்னு பேரு வச்சிட்டேன் ஓகேவா...?
ReplyDeleteசிபி..........
ReplyDeleteஅடேய் உனக்கு ஜி கே"ன்னு ஒன்னு இருக்கா என்ன...ராஸ்கல்....
சரி பாத்தி! நாங்க கிளம்புறோம்..,கதை நல்லா இருந்துச்சு அடுத்த வாரமும் இதேமாதிரி ஒரு கதை போடுங்க வர வர உங்கள் பக்கம் பல்சுவை விருந்தாக இருக்கிறது பக்தி .அறுசுவை ,கதைகள் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஅருமையான கதை.
ReplyDeleteஅருமையான கருத்துடன் கூடிய கதை
ReplyDeleteசொன்னவிதம் அதைவிட அழகு
அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து
பேராண்டிகள் மட்டுமல்ல...நாங்களும்
வாழ்த்துக்களுடன்...
கருத்துள்ள கதை... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநல்ல கதை பாத்தி.. இன்னொரு கதை சொல்லுங்க..
ReplyDeleteஒரு சீனப் பழமொழியை அழகான கதை ஆக்கி விட்டீர்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் சொல்லவேண்டிய கதை. பாராட்டுக்கள்
ReplyDeleteகதை ரொம்பவே நல்லா இருந்தது பாட்டி.... /
ReplyDeleteராஜின்னு டைப் பண்ணினா ஏன் பாட்டின்னு வந்தது புரியலையே :))))))
கதை பிரமாதம்!
ReplyDelete