அதும் இந்த விடுமுறையில பசங்களை
வீட்டில் வச்சுக்கிட்டு.., எங்க வீட்டு வாண்டுகளையே சமாளிக்க முடியாது.., இதுல மச்சினர், மூத்தார் பிள்ளைங்களும்.., மனசுக்கு சந்தோசமா
இருந்தாலும்..,
வீட்டு வேலைகள் சில நேரம்
எரிச்சல் தந்ததால எல்லாரும் எங்கிட்டாவது போகலாம்ன்னு சொன்னதால.., எல்லாரும் கிளம்பிட்டோம்.., கோவில்,குளம்ன்னு..., அதையெல்லாம் இனி ஒவ்வொண்ணா
பதிவா போடப் போறேன்.. ஏன் சகோஸ் ஜெர்க்காகுறீங்க? வாரம் ஒண்ணுதான்..., சரி இந்த வாரம் கடலூர் மாவட்டத்துல இருக்குறா “திருமாணிக்குழி”ன்ற ஊருல இருக்குற
திருத்தலம் பத்தி பார்ப்போம்...,
இறைவர்திருப்பெயர் : வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர்,
மாணிக்கவரதர்.
இறைவியார்திருப்பெயர் : அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.
தலமரம் : கொன்றை.
தீர்த்தம் : சுவேததீர்த்தம், கெடிலநதி.
வழிபட்டோர் : திருமால்.
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச் செய்த தேவாரத்திருப்பதி கம்
824 பாடலில் இக்கோவில் இடம்பெற்றிருக்குதாம்..,
பொன்னியல்பொருப்பரையன்மங்கையொரு பங்கர்புனல்தங்குசடைமேல்
வன்னியொடுமத்தமலர்வைத்தவிறல்வி த்தகர்மகிழ்ந்துறைவிடங்
கன்னியிளவாளைகுதிகொள்ளவிளவள்ளை படர்அள்ளல்வயல்வாய்
மன்னியிளமேதிகள்படிந்துமனைசேரு தவிமாணிகுழியே.
இந்த கோவிலோட தல வரலாறு பற்றி கோவில் குருக்கள் சொன்னது..,
இந்தத்தலம் தேவாரப்பாடல்களில்
"உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது .இதனால் 'உதவி ' என்பது ஊர்ப்பெயராக இருந்து,
காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்கும் பெயராகி இருக்கலாம். வடநாட்டு வணிகன் ”அத்ரி” என்பவன் இப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட,
இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமி ருந்து காத்து உதவிபுரிந்தார்;
இதனால் இத்தலம் 'உதவி ' என்றும்.., இறைவன் 'உதவிநாயகர்.., ' இறைவி 'உதவிநாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு சான்றாக கல்வெட்டிலும்
இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது. திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண் கேட்டு அவனையழி த்த பழி தீர ...,இங்கு, வந்து வழிபட்டதால் இக்கோயில்
'மாணிகுழி ' என்றும் பெயர்பெற்றது. (மாணி
- பிரம்மசாரி)பெரியபுராணத்தில்..,சுந்தரர் கெடிலநதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறி ப்பிருந்தும்.., அப்பெருமான் பாடி ய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.
நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனி யில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டு ள்ளது என்கின்றனர்;
அதைப்பார்க்கும்போது அவ்வடிவமா கத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது. .
சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப் பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரை ப்போடப்பட்டுள்ளது.( இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதசருத்திரர்களி ல் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.)
மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் கா வலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் சிறப்புகள்:
மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வா யிலில் வாமனாவதார வரலாறு சிற்பங் களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை,
தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரரு க்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடக்குமாம்..,
இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப் பதாகச் சொல்லப்படுவதால்,
இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இத்தலத்தில் கார்த்திகையில்
(பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகி ன்றது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் இத் தலத்திற்கு உள்ளது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெ ட்டுக்களில் இறைவன்பெயர், 'உதவிநாயகர் ', 'உதவிமாணிகுழிமகாதேவர் ' என்று குறிக்கப்படுட்டுள்ளது.
இக்கோவில்.., திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து,
திருவகீந்திபுரம் வழியாகப் பானூர் , பண்ருட்டி செல்லும் பாதையில் திரு வகீந்திபுரம் சென்று,
அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தா ங்குப்பம் என்னும் வழிகாட்டி காட் டும் வழியில் சென்று..,
கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறி து தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம்.
கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமா ணிக்குழி வழியாகச்செல்கிறது.
இந்த ஸ்தலமானது மூர்த்தி ,தீர்த் தம்,வனம் ,கிரி ,நதி ,சங்கமம் ,ஆரண்யம் ,பதிகம் முதலியவைகளால் பிரசித்தி பெற்ற திவ்ய ஸ்தலம் ஆகும்
இந்த ஸ்தல விநாயகர் பெயர் செல்வவினா யகர் மூஷிகனை சம்காரம் செய்து பக் தர்களுக்கு அனுகிரகதை செய்யச்சொல்லி ஆணை இடுகிறார். ஆகையால், மற்ற திருஸ் தலங்களை போல அல்லாமல் இங்கே இருக்கு ம் மூஷிக வாகனம் பக்தர்களை நோக்கி இருக்கும் அது இவ்வாலயத்தின் சிறப் பு சென்னை போன்ற பெருநகரங்களில்தான் லவ் பண்றாவங்க தொல்லைன்னா இங்கயும்.., நமக்கு அரேஞ்ச்டு மேரேஜ்.., அதான் இந்த பொசுங்கல்..,
இவ்வாலயத்தில் இருக்கும் 4 தூண்களும் 4 வேதங்கள், 6சாஸ்திரங்கள் மனித வாழ்வுக்கு முக்கியம் என்பதால், 6 கால் சாஸ்திர மணபமாகவும்.., அதன் தெற்கு பிரகாரத்தில் 28 தூண்கள்.., 28 ஆக மண்டபத்தையும் குறிக்கிறது என்பது வரலாறாம்.
அகத்திய முனிவர் சிவப்பெருமானை தரிசனம் செய்ய வரும்போது காட்சி தராமல் திரை மூடிய நிலையில் இருந்ததால் அவர் கோபித்துக் கொண்டு மலை அடிவாரத்தில் சிவலிங்கத்தை தோற்றுவித்து வழிப்பட்டார். அதுவே அகத்தியர் சுயம்பு லிங்கம் இக்கோவிலிருந்து 1 கிமீ தூரத்தில் மலை அடிவாரத்தில் இருக்கு. அதை படமெடுக்க அனுமதியில்லை.
மனிதனாக பிறந்து புண்ணியம் அடைய ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் என்னும் வாக்கிற்கு இணங்க இக்கோவிலை ஒருமுறை சென்று தரிசித்திட்டு வாங்களேன் சகோ’ஸ்..,
சோழர் கால கட்டமைப்பு உடைய கோவில் இதுன்னு சொல்றாங்க...,
இவ்வாலயம், 72 ஆயிரம், வருடங்களுக்கு முன்னே வாமனன் தரிசிக்க வரும்போது சிவ ப்பெருமான் ஆகாயத்திற்கும் பூமிக்கும் காட்சி கொடுக்கிறார்.., ஆகையால், வாமனன் சிவப்பெருமானை ஆத்மார்த்தமாக பூஜை செய்ய வேண்டும் என் குழிக்குள் சென்று அமர்ந்து பூஜைச் செய்ததால் திருமாணிக்குழி என்றும் அழைக்கப்படுவதாகவும் வரலாறு..,
அம்பிகையின் சன்னிதியில் முதலாம் குலோத்துங்க சோழன் முடி சூட்டி கொண்டாராம்..,அதன் அடையாளாமாய் 4 சிம்மத்தை வைத்திருக்கிறார். இதற்கு ஆதாரமாய், குலோத்துங்கன் வெட்டிய கல்வெட்டு ஒன்று இச்சன்னிதியில் உள்ளது..,
63 நாயன்மார்களுக்கும் சன்னிதியில் முக்கிய இடம்...,
அட்வைஸ் நம்பர் 1: கோவில் வாசலில் சின்ன பெட்டிக்கடை கூட கிடையாது.., அதனால, கற்பூரம், தேங்காய், பழம், பூ லாம் போகும்போதே வாங்கி கொண்டு போறது நல்லது..,
அட்வைஸ் நம்பர் 2 : பிள்ளை, குட்டிகளை கூட்டி போகும்போது சாப்பிட, குடிக்கன்னு எதாவது கைவசம் கொண்டு போங்க. இல்லாட்டி, பசங்க நை நை ன்னு படுத்தி எடுப்பாங்க..,
அட்வைஸ் நம்பர் 3: கோவில் சுத்தி மரம், செடின்னு அதிகம் இல்லாததால் நட்ட நடு மத்தியானத்துல போய் வெயில்ல வேகாதீங்க.. காலையில இல்ல மாலையில போறது நல்லது..,
அட்வைஸ் நம்பர் 4 : ராஜி சொன்னதே வேத வாக்குன்னு எடுத்துக்கிட்டு பட்டுன்னு கிளாம்பிடாதீங்க.., அந்த இடத்துக்கு பக்கத்தில இருப்பவர்களிடம் விசாரித்து போய் வாங்க.. அடுத்த வாரம் வேற ஒரு கோவில் பத்தி சொல்றேன்.., வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?!
அருமையான பதிவு தெரியாத ஒரு கோவிலை பத்தி தெரிந்து கொண்டோம் நன்றி ...தொடரட்டும் உங்கள் பக்தி பயணம்
ReplyDeleteதள விவரங்கள், கோவிலின் சிறப்புக்கள் அனைத்தையும் தொகுத்து படங்களுடன் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... கவனிக்க வேண்டிய அட்வைஸ்கள்... நன்றி...
ReplyDeleteஅருமையான தரிசனப்பகிர்வுகள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅவ்வளவாக ஆர்வமின்மை ஆனா ராஜியின் எழுத்தில் இருக்கும் நகைச்சுவைக்காக முதல் மற்றும் கடைசி பத்திகள் படித்தேன்... ராஜி ராஜிதான்....
ReplyDeleteஅருமையான கோவிலை அடையாளம் காட்டியமைக்கு நன்றி! அட்வைஸ்கள் மிகவும் உதவும்! நன்றி!
ReplyDeleteஅறியாத கோயில்.. தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteபடித்து மகிழ்ந்தோம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅறியாத கோயில். படித்து மகிழ்ந்தேன் நன்றி
ReplyDeleteஅறியாத கோயில், படித்து மகிழ்ந்தேன் நன்றி
ReplyDeleteபானூர்? பாலூர்?
ReplyDeleteஏன்னா அந்த வழியை பாலூர் வழி என்று சொல்வார்கள்....
நல்ல கோவில் பற்றிய விவரங்களுக்கு நன்றி ராஜி!
பாலூர்தான் சாகோ! கை ஸ்லிப்பாகி பானூர் ஆகிட்டு
Deleteபடங்களுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.தொடருங்கள்
ReplyDelete7 வருடம் கழித்து படிக்கிறேன் இன்றும் அதே நிலை
ReplyDelete