Wednesday, June 26, 2013

அவன்..., அவள்..., அது...,



அவன்:
சிணுங்கும் தொலைப்பேசியை
செல்லமாய் காதோடு எடுத்தணைக்க.,
யாரோ எதற்கோ பேச!!
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக .....,
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்...,
அமிர்த சுவை தேடி, அள்ளி
காதுமடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தைகள்..,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"?ன் னு
துடிதுடிக்க, துண்டிக்கிறாய் இணைப்பை...,
கூடவே நம்பிக்கை நரம்பையும்....

அவள்:
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி, அமைதிப் படுத்தி,
நின்று, நிதானமிழந்து,
உன் எண் ஒத்தி
வேறு ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொட முடியாமல்துவண்டு..,
இன்னொரு முயற்சியில், இணைப்பில்.....,
ஏங்கித்தவிக்கும் , காதுமடலோடு
இனிக்கும் உன் குரல் தேட

பதட்டத்தில்
உதடு உதறி பொய்
உதிர்கிறது...,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"? னு
துவண்டு துண்டிக்கிறேன்
  இணைப்பை...,
தோல்வி வலையில்
இறுக பிணைந்தபடி!!??

17 comments:

  1. எனக்கு புரியவில்லை.. யாரவது முதலில் கமெண்ட போட்டால் அதன் மூலமாவது ப்ரிந்து கொள்ளலாம் என்று பலதடவை வந்துவிட்ட்டேன் உஆரும் போடல அதனால் நானே பொறுக்க முடியாமல் போட்டு விட்ட்டேன் சகோ

    ReplyDelete
  2. நோட்ஸ் நோட்ஸ் எனக்கு கோனார் நோட்ஸ்
    தேவை சகோ

    ReplyDelete
    Replies
    1. ஊடல்ல இருக்குற ஒரு ஜோடி, ஈகோ பார்த்துக்கிட்டு யார் முதல்ல பேசறதுன்னு ஆசை இருந்தும்.. பேசாம இருக்குறதை பத்தி கவிதை போட்டிருக்கேன்.., இது புரியலியா உங்களுக்கு?! ஒண்ணு ஒழுங்கா படிச்சிருக்கனும் இல்லாட்டி ஒழுங்கா லவ பண்ணி இருக்கனும்..

      Delete
  3. முதல் படம் சூப்பர்...

    ReplyDelete
  4. அடடே உங்க பக்கத்துக்குள்ள வந்துட்டேனா? மாத்தீஈஈ வந்துட்டேனா?... ஹிஹிஹி அழகு.

    ReplyDelete
  5. இந்த விளையாட்டும் நல்லாத் தான் இருக்கு...

    ReplyDelete
  6. அருமை
    சிறுபிள்ளைத்தனமாக கோபித்துக் கொள்வதும்
    பின் சிறுவர்கள் போலவே ஈகோ பாராது
    இணைந்து கொள்ளும் காதலர்கள் நிலையைச்
    சொல்லும்விதமாக சிறுவர்கள் படத்தைப் போட்டது
    மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அதாவது பூனைக்கு யார் முதலில் மனிகட்டுவதுன்கிற போட்டியில் ..பேச ஆசை இருந்து பேசா மடந்தைகளானதோ .

    ReplyDelete
  8. அவனுக்கும் அவளுக்கும் நடுவில் இருக்கும் ‘அது’ இல்லா விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா...? ஆனால் அப்படி இருந்து விட்டால் இப்படியொரு நல்ல கவிதை எங்களுக்குக் கிடைத்திருக்காதே. சூப்பரு!!

    ReplyDelete
  9. ஆஹா...இப்படியுமா?

    ReplyDelete
  10. //ஒழுங்கா படிச்சிருக்கனும் இல்லாட்டி ஒழுங்கா லவ பண்ணி இருக்கனும்.. //

    அது சரி..... :)))

    ReplyDelete
  11. காதலில் ஊடல் குறுக்கிடலாம். ஊடலில் ஈகோ குறுக்கிடக்கூடாது. நெருங்கிவரத்துடிக்கும் நெஞ்சங்களை நெருங்கவிடாமல் இடைவெளி விட்டு இழுத்துப்பிடிக்கும் ஈகோ கயிற்றின் இருமுனைகளையும் இருமனநிலைகளில் காட்டிய கவிதை மனம் தொட்டது ராஜி.

    ReplyDelete
  12. அருமையான கருத்துக் கவிதை.
    வாழ்த்துக்கள் ராஜி மேடம்.

    ReplyDelete