Thursday, June 20, 2013

கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் சில...,

           

*வீட்டை சுத்தமா வச்சுக்க தெரியாது.., பெண்கள் அப்போதான் வீட்டை துடைச்சிட்டுக்கிட்டு  இருப்பாங்க..., பின்னாடியே, ஈரக்காலோடு போய் அழுக்கு பண்ணுவாங்க... 

2. எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க மாட்டாங்க..,  டைனிங் டேபிள் மேல சீப்பு..,   சோஃபால சாக்ஸ்.., கட்டில்ல ஈரத்துண்டுன்னு போட்டு படுத்துவாங்க..

  * டெய்லி  ஷேவ் பண்ணாம  இருப்பாங்க. வாரக்கணக்குல கூட ஷேவ் பண்ணாத ஆளுங்க கூட உண்டு.., அதைச் செய்றக்கு சோம்பேறித்தனம் அந்த சோம்பேறித்தனத்துக்கு அழகு, ஸ்டைல்ன்னு அயிரம் சப்பைக்கட்டு கட்டுவாங்க...,

* வெளில போய்ட்டு வந்ததும் கை, கால், முகம் கழுவாம  டி.வி பார்த்துக்கிட்டு, நின்னுக்கிட்டு  பொழுதை ஓட்டுவாங்க.. அப்படியே பிள்ளைங்களையும் தொட்டு பேசுவாங்க..,

. * லீவ் கிடைச்சா போதும் ரூமுக்குள்ளாற போய் லாக் பண்ணிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சுடுவாங்க.., வெளில கூட்டி போகனும், வீட்டை க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணனும்ன்னு தோணாது.., கொஞ்சம் ஹெல்ப்க்கு வாங்களேன்ன்னு கூப்பிட்டா இன்னிக்கு ஒரு நாள்தான் எனக்கு ரெஸ்ட் கிடைக்குது.., நான் தூங்குனா உனக்கு பொறுக்காதேன்னு கத்துவாங்க..,

  * என்ன மாயமோ! மந்திரமோ எல்லா ஆம்பிளைங்களுக்கும் கிரிக்கெட் பிடிக்கும்.. சீரியல்ல முக்கியமான சீன் போகும்போதுதான் ரிமோட்டை பிடுங்குவாங்க.., அதுமட்டுமில்லாம நல்லா சமைச்சோ, இல்ல ட்ரெஸ் பண்ணியோ வந்து நின்னாலும் கண்ணுக்கே தெரியாது

  * இப்போலாம் ரொம்ப பேர் ஃபேஸ்புக்குலயும், கம்ப்யூட்டர் கேம்ஸ்லயும் நேரம் போக்குறாங்க.., .அது தப்பில்ல.., அதுக்காக பொழுதன்னிக்கும் அதே வேலையா இருந்தா எப்படி?! பசங்க படிக்கும் நேரம் கூட பக்கத்துல உக்காரதில்லை..,

 * பெண்களும் புத்தகம் படிப்பாங்க.., எப்போன்னா எல்லா வேலையும் முடிச்சுட்டு ரிலாக்சா உக்காந்து படிப்பாங்க. ஆனா, சாப்புடுற டைம்ல வெளில போற டைம்ல படிப்பாங்க.., இல்லாட்டி சமைச்சதை எந்த கருத்தும் சொல்லாம புத்தகம் படிச்சுக்கிட்டே சாப்பிடுவாங்க..,

* அவங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 நாளைக்கு  லீவே கிடைக்கும்.., ஆனா, நம்ம வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 மணிநேரம்  பர்மிஷன் கூட கிடைக்காது .., ஏம்மா! நீ போய்ட்டு வந்திடேன்.., எனக்கு ஆடிட்டிங், மீட்டிங்குன்னு சாக்கு சொல்லுவாங்க.

*  வீட்டுல என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாமயே.. வீட்டுக்கு வந்தவங்க எதிர்க்கவே டீ போட்டு கொண்டு வா.., டிஃபன் எடுத்து வைன்னு அதிகாரம் பண்ணுவாங்க.., அதுலயும் அவங்க வீட்டு ஆளுங்கன்னா இன்னும் சவுண்ட் ஜாஸ்தியா இருக்கும்...., எதோ இருக்குறதை சமைச்சு வச்சு பரிமாறும்போது எனக்கு இனொரு பஜ்ஜி கொடேன், இன்னும் கொஞ்சம் கேசரி கொடேன்னு கேட்டு இம்சிப்பாங்க..,

* சவுண்ட் விட்டுக்கிட்டே சாப்பிடுவாங்க..,ஆஃபீஸ் விட்டு வந்ததும் சட்டை ஃபேண்டை துவைக்க போடாம அதை இன்னொரு நாளைக்கு போட்டு போக ஆங்கர்ல மாட்டி வைப்பாங்க.., ஏன் இப்படி பண்ணுரீங்கன்னு கேட்டா சோப், தண்ணி, அயர்ன் பண்ண கரண்ட் பில் வேஸ்ட், உனக்கு வேலை மிச்சம்ன்னு சப்பை கட்டு கட்டுவாங்க..,

* கடைக்கு போனதும் முதல்ல கண்ணுக்கு படுற பொருளையே எடுத்துக்குவாங்க.., இன்னும் பார்க்கலாம்ன்னு எண்ணமே வராது.., ஏன் இப்படி பண்ணுறீங்கன்னு கேட்டா இந்த கலர்ல உனக்கு ஒரு புடவை எடுக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்.., முந்தி டிசைன் சூப்பர் அப்படி இப்படின்னு கதை விடுவாங்க...,

* வெளில எங்காவது போகும்போது அவஙக ஃப்ரெண்ட்சை பார்த்தா நாம இருக்குறதை கூட மறந்து கதை பேசுவாங்க.., ஆனா, நாம நின்னு ரெண்டு வார்த்தை பேசினதும், ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாயேன்மா.., இப்போ பஸ்சுக்கு டைமாச்சுன்னு எதாவது சாக்கு சொல்லி நம்மளை விரட்டுவாங்க..,

* 30 வருசத்துக்கு முன் ஒரு தலையா காதலிச்ச முன்னாள் காதலி வீட்டு நாய்க்குட்டி பர்தே டே தேதி நினைவிருக்கும்.., ஆனா, பொண்டாட்டி பொறந்த நாள் மறந்து போகும்..,

* பத்து பொருட்களை வாங்கி வர கடைக்கு அனுப்பினா அதுல 4 பொருளை மறந்துட்டு.., கழிச்சு கட்டுனது.., மீந்ததுலாம் வாங்கி வருவாங்க.., இவங்களுக்குன்னே கடைக்காரன் எடுத்து வச்சிருப்பானோ! ஏன் இப்படி காய் வாங்கி வந்திருக்கீங்க? நல்லதா பார்த்து பொறுக்கி போட்டு வாங்கி வரப்படாதான்னு கேட்டா! அப்புறம் அவன் அந்த காய்லாம் வச்சுண்டு என்ன பண்ணுவான்னு கேப்பாய்ங்க...,

ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்பா! இப்போதைக்கு இது போதும்.., கைலாம் வலிக்குது.., அடுத்த பாகத்துல மிச்சத்தை சொல்றேன்..,

மனைவிக்கிட்ட பிடிக்காத விசயங்களை தெரிஞ்சுக்கனுமா?!  இங்க போய் பார்த்துக்கோங்க.., நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்.., வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?!
               

22 comments:

 1. ஆகா இதெல்லாம் படித்து அறிந்து கொண்டதா இல்ல சொந்த கதை சோகக்கதையா இல்ல கேள்வி ஞானமா ..எதுவாக இருந்தாலும் ஆண்களே இதை படித்து மாறி கொள்ளுங்கள் ..இல்ல இதைவிட அடுத்த பதிவில நம்ம மானம் போய்டும்

  ReplyDelete
 2. பின்னுட்டம் ரெடியா ஆகிட்டிருக்கிறது பதில் சூடா வரும்

  ReplyDelete
  Replies
  1. வரட்டும் பதில் சொல்ல பதிலும் ரெடியாகிட்டு இருக்கு சகோ!

   Delete
 3. *////வீட்டை சுத்தமா வச்சுக்க தெரியாது.., //// என்னங்க வேலைக்கு போய்விட்டு வருவதுமட்டுமல்லாம வீட்டையும் அவங்கதான் சுத்தமா வச்சுகுனமா என்ன?
  //பெண்கள் அப்போதான் வீட்டை துடைச்சிட்டுக்கிட்டு இருப்பாங்க..., பின்னாடியே, ஈரக்காலோடு போய் அழுக்கு பண்ணுவாங்க... //
  என்னங்க நாள் முழுவதும் டிவியில சீரியல் பாத்து நேரம் வேஷ்டா ஆக்கிட்டு புருஷன் வர நேரம் பாத்துதான்னா வீட்டை துடைப்பிங்க

  2. //எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க மாட்டாங்க.//
  என்னங்க தலை துடைக்க துண்டை பிரோவில் இருந்து எடுத்தா துடைச்ச ஈரத்துண்ண்டை பிரோவுலாயா வைக்க முடியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க


  */// டெய்லி ஷேவ் பண்ணாம இருப்பாங்க. வாரக்கணக்குல கூட ஷேவ் பண்ணாத ஆளுங்க கூட உண்டு.., அதைச் செய்றக்கு சோம்பேறித்தனம் அந்த சோம்பேறித்தனத்துக்கு அழகு, ஸ்டைல்ன்னு அயிரம் சப்பைக்கட்டு கட்டுவாங்க...,///

  என்னங்க சகோ மதுமதியை இப்படி போட்டு தாக்குறீங்க

  * ///வெளில போய்ட்டு வந்ததும் கை, கால், முகம் கழுவாம டி.வி பார்த்துக்கிட்டு, நின்னுக்கிட்டு பொழுதை ஓட்டுவாங்க///..
  அட சகோ நாங்க என்ன பொண்ணுங்களா டிவி பார்க்க போகும் போது புல் மேக்கப் போட்டுகிட்டு பார்கிரதுக்கு

  . * ///லீவ் கிடைச்சா போதும் ரூமுக்குள்ளாற போய் லாக் பண்ணிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சுடுவாங்க.., வெளில கூட்டி போகனும்,///

  இப்படி படுத்துவீங்க் என்பதாலதானே ரூமை பூட்டிகிட்டு தூங்க்றாங்க

  // வீட்டை க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணனும்ன்னு தோணாது..///, அப்ப வாரம் முழுவதும் வீட்டை சுத்தம்பண்ணாம வார இருதியில் புருசனுக்காக வெயிட் பண்ணினா வேற என்ன செய்ய முடியும்

  உஷ் அப்ப்பா இப்பவே பதில் சொல்லி சொல்லி கண்ணை கட்டுதே....

  இன்னும் வரும்..,

  ReplyDelete
  Replies
  1. செய்யுற தப்பை சுட்டிக்காட்டுனா அதை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேக்குற ஆளுங்கதான் மதுரைக்காரங்கன்னு இதுவரை நினைச்சிருக்கேன். ஆனா, அது சிலப்பதிகாரத்துல இருக்குற பாண்டியன் மட்டும்தான், என் சகோதரர் இல்ல போலன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிடேன்.., சரி இப்போ பதில்....,

   மனைவி தான் டைமை வேஸ்ட் பண்ணிட்டு எதோ பொறுப்பு வந்து வீட்டை துடைக்குறாங்களேன்னு ஒதுங்கி நிக்காம நடந்தா எப்படி?!

   ஈரத்துண்டை பீரோவுல வைக்கனுமான்னு கேக்க தெரியுற உங்களுக்கு அதை கட்டில் மேல போடக்கூடாதுன்னு தெரியலியே! ஈரத்துண்டை ஒண்ணு கொட்ல போட்டு காய வக்கனும் இல்லாட்டி அழுக்குத்துணி கூடையில போடனும்..,

   இதுல மதுமதியை ஏன் கோர்த்துவிடுறீங்க??!! அப்ப்டியே இருந்தாலும் சகோ கொச்சுக்க மாட்டார்..,

   முகம் , கை கால் கழுவி சுத்தமா இருக்குறதுக்கும்.., மேக்கப்புக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு என் சகோதரர் அவ்வளவு அப்பாவியா?!..,

   வாரம் முழுக்க வீடு க்ளீனாதான் இருக்கும்.., வாரக்கடைசில வீட்டுக்குள்ள உக்காந்துக்கிட்டு சாப்பிட்டு போடுற பாப்கார்ன் கவர், அழுக்கு ஃபேண்ட், சட்டை, பழைய கடிதம்ன்னு நீங்க போடுற குப்பையைத்தான் க்ளின் பண்ண கூப்பிடுறோம்...,

   Delete
 4. /// நல்லா சமைச்சோ, இல்ல ட்ரெஸ் பண்ணியோ வந்து நின்னாலும் கண்ணுக்கே தெரியாது//

  நல்ல சமையல் என்றால் கண்ணுக்கு தெரியாது வாய்க்கு தெரியும். தினமும் கட்டுற அதே சேலையை கட்டிகிட்டு நின்ன அதுக்கு தினம் கமெண்டா தர முடியும் உஷ் அப்பாட  * ///அவங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 நாளைக்கு லீவே கிடைக்கும்.., ஆனா, நம்ம வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 மணிநேரம் பர்மிஷன் கூட கிடைக்காது .., ஏம்மா! நீ போய்ட்டு வந்திடேன்.., எனக்கு ஆடிட்டிங், மீட்டிங்குன்னு சாக்கு சொல்லுவாங்க.///

  என்னங்க உங்க மாமியார் நாத்தனார் கொளுந்தன் வீட்டு விஷசத்திற்கு எல்லாம் 2 நாளைக்கு மேல் லீவு எடுக்குறாங்கலே எல்லாம் உங்க சொந்தம்தானே பாருங்க அவருக்கு அவர் மாமியார் மைத்துனன் அழகான கொளுந்தியா வீட்டுக்கு போக நேரம் கிடைக்கலை இருந்தாலும் அவர் என்ன குறையாய் சொல்லுராரு

  * ///வீட்டுல என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாமயே.. ///
  வூட்டுல நாள் முழுக்க இருக்கிரவங்க பொறுப்புதானே என்ன என்ன இருக்கிரது இல்லை என்று பார்த்து வாங்கி வைக்கிரது


  * //கடைக்கு போனதும் முதல்ல கண்ணுக்கு படுற பொருளையே எடுத்துக்குவாங்க.., இன்னும் பார்க்கலாம்ன்னு எண்ணமே வராது//..,
  என்னங்க உங்கலை பொண்ணு

  ReplyDelete
  Replies
  1. நல்ல சமையலா இல்ல நாலு நாளுக்கு முன்ன சமைச்சதான்னு பார்த்தாதான் சாப்பிடலாம்.., அப்புறம் வருசத்துக்கொரு புடவை எடுத்து குடுத்தா பழசை மட்டுமேதான் கட்ட முடியும்.., அதையே புது மாதிரி கட்டி நிறைவடையுற எங்க நல்ல குணத்தை பாராட்டலாமே!!

   பீரோ சாவியை பூட்டி கையில எடுத்துக்கிட்டு.., கிரெடிட் கார்டையும் கையில எடுத்துக்கிட்டு போனா எப்படி வாங்குறதாம்?!

   Delete
 5. //கடைக்கு போனதும் முதல்ல கண்ணுக்கு படுற பொருளையே எடுத்துக்குவாங்க.., இன்னும் பார்க்கலாம்ன்னு எண்ணமே வராது//..,
  என்னங்க உங்கலை பொண்ணு பார்க்கும் போதும் இப்படிதானே செலக்ட் பண்ணுனாங்க அப்ப இன்னும் நாலு பொண்ணு பாத்துட்டு வாங்கன்னா சொன்னீங்க

  ReplyDelete
  Replies
  1. அவங்கவங்க வீட்டுல உங்களைலாம் செலக்ட் பண்ணதே அதிகம் இதுல 4 பொண்ணை பார்த்துட்டு வான்னு அனுப்பி இருந்தா ஆம்பிள்ளாஇ ஔவ்வையார்தான் நீங்கலாம்.

   Delete
 6. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல. இதில ஒரு சில "பிடிக்காதவை" ரெண்டு பேருக்குமே பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம சகோவை நாம கலாய்க்காமா வேற யாரு கலாய்க்க போறாங்க ஹீ.ஹீ,

   Delete
 7. ///, ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாயேன்மா.., இப்போ பஸ்சுக்கு டைமாச்சுன்னு எதாவது சாக்கு சொல்லி நம்மளை விரட்டுவாங்க..,///

  சாக்கு போக்கு சொல்லுற ஆளா இருந்தா உங்கள் நண்பர்களை வீட்டுக்கு வாயேன்மா என்றா சொல்லுவார்கள்

  */// 30 வருசத்துக்கு முன் ஒரு தலையா காதலிச்ச முன்னாள் காதலி வீட்டு நாய்க்குட்டி பர்தே டே தேதி நினைவிருக்கும்.., ஆனா, பொண்டாட்டி பொறந்த நாள் மறந்து போகும்..,//

  முன்னாள் காதலி வீட்டு நாய்க்குட்டியும் நீங்களும் ஒன்னாங்க?????

  ///கழிச்சு கட்டுனது.., மீந்ததுலாம் வாங்கி வருவாங்க.., இவங்களுக்குன்னே கடைக்காரன் எடுத்து வச்சிருப்பானோ! ஏன் இப்படி காய் வாங்கி வந்திருக்கீங்க? நல்லதா பார்த்து பொறுக்கி போட்டு வாங்கி வரப்படாதான்னு கேட்டா! ///
  நாங்க இப்படி வாங்கி வந்தா குறை சொல்லுவீங்க ஆனா அதே மாதிரி நீங்க வாங்கி வந்தா நல்லா டீல்ல வாங்கி வந்ததா பெருமை பட்டுகுவிங்க  //ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்பா! இப்போதைக்கு இது போதும்.., கைலாம் வலிக்குது.., அடுத்த பாகத்துல மிச்சத்தை சொல்றேன்..,//

  எனக்கும் இப்போ கை வலிக்குது அதனால மிச்சம் அடுத்த பாகத்துலா

  அப்ப இப்ப வரேன் நான் தூங்க போகனும்

  ReplyDelete
  Replies
  1. அந்த நாய்க்குட்டிக்கு குடுக்குற மரியாதைக்கூட எங்களுக்கு தரலியேன்னுதான் கேக்குரோம்?!

   ஆமா, நாங்கலாம் பார்த்து நல்லதா தேர்ந்தெடுப்போம். உங்களைலாம் தேர்ந்தெடுத்து இருக்கோமே இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம்..

   Delete
 8. ரொம்பத்தான் துணிச்சல் உங்களுக்கு!...:)
  அசத்தல்! ரசித்தேன்.

  வாழ்த்துக்கள் தோழி!

  த ம.4

  ReplyDelete
 9. அடுத்த பாகமா..............?!!!!!!??????

  ReplyDelete
 10. \\என்ன மாயமோ! மந்திரமோ எல்லா ஆம்பிளைங்களுக்கும் கிரிக்கெட் பிடிக்கும்.. சீரியல்ல முக்கியமான சீன் போகும்போதுதான் ரிமோட்டை பிடுங்குவாங்க.\\ அதானே பார்த்தேன். இந்த அழுகாணி சீரியல் நடக்கும் போது எந்த தடை வந்தாலும் அதை பெண்களால் பொறுத்துக்கவே முடியாதே. நீங்க திருந்தவே மாட்டீங்களா?

  \\இல்லாட்டி சமைச்சதை எந்த கருத்தும் சொல்லாம புத்தகம் படிச்சுக்கிட்டே சாப்பிடுவாங்க..,\\ புத்தகம் படிச்சிகிட்டு சாப்பிட்டா தானே இவங்க சமையலை சாப்பிடவே முடியும்..........

  ReplyDelete
 11. அக்காவோட அனுபவமோ...

  ReplyDelete
 12. ராஜி மேடாம்... என்ன இவ்வளவு தானா...?

  இன்னும் எவ்வளவு எழுத வேண்டி இருக்கிறது...
  அதுக்குள் கைவலியா...?
  நான் மீதியை எழுதட்டுமா...?

  ஒரு ஆம்பளையோட மனச
  இன்னொரு ஆம்பளையால தான்
  புரிஞ்சிக்க முடியும் என்பதற்காக
  எத்தனைபேர் வக்காலத்து வாங்க வந்திட்டாங்க...!!

  நீங்க தைரியமா எழுதுங்க தோழி.
  நாங்கள் பெண்கள் எல்லோரும் உங்களுக்குச்
  சப்போட்டாக இருக்கிறோம்.

  தொடருங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. என் மனைவியை உங்களுக்கு தெரியுமா? அது எப்படி அவ்வளவு சரியாக எழுதுனீர்கள்--சிலதை தவிர...

  இங்கு தமிழ் TV சீரியல்கள் கிடையாது. TV -ல் கிரிக்கெட்டும் கிடயாது; இது இப்போ.

  திருமனத்திர்க்கு முன்பு..சென்னையில்...வெளியில் சென்று வாந்தால் கை கால் கழுவவேண்டும் எனபது வீட்டில் எழுதப்படாத விதி. கை காலை துடைத்து விட்டு மறுபடியும் --பீரோவிர்க்குள்ளே வைத்துவிடுவேன்---துண்டை அல்ல; என் அம்மாவின் புடவை, பாவடை, அப்பாவின் வேஷ்டி..இப்படி எது கையில் கிடைக்குதோ அதை....!

  அப்புறம் தான் தெரியும்....இது எங்க குடும்ப வியாதி என்று...!

  ReplyDelete
 14. அசத்தல் தோழி,எல்லார் வீட்லயும் இதான் நடக்குது போல....

  ReplyDelete
 15. அடடா, குடும்ப வாழ்க்கையில் இவ்ளோ விஷயங்கள் + சிக்கல்கள் இருக்கா?? நமக்கு கல்யாணமே வாணாம் பா :))

  ReplyDelete
 16. அன்பின் ராஜி - இவ்வளவுதானா - நான் நெரெய எதிர்பார்த்தேன் - பரவால்ல்ல - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete