Tuesday, June 04, 2013

உன் கோவத்தை அறிமுகப்படுத்தேன்..., ப்ளீஸ்!!

   

என்னவளே!
திக்குமுக்காட வைக்கும் உன் முத்தங்களும்..,
மென்சாரல் போன்ற உன் அணைப்புகளும்...,
மனக்காயத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் உன் புன்சிரிப்பும்...,
என்றும்......, அலுக்காததுதான் எனக்கு.

இருந்தாலும்,
இவையெல்லாம் பழக்கமாகிவிட்ட என் காதலுக்கு....,
உன் உதாசீனம், வெறுப்பு, அலட்சியம், வெகுளி போன்றாவற்றை..,
என்னவென்று நான் அறிய!!
எனக்கு அறிமுகப்படுத்த மாட்டா??!!

15 comments:

  1. வித்தியாசமாய் ஒரு காதல்..

    ReplyDelete
  2. நியாயமான கோரிக்கை?

    ReplyDelete
  3. இப்படியும் ஒரு ஆசையா
    என முதலில் நினைத்தேன
    பின் நன்றாய் யோசித்தவுடன்தான்
    அபூர்வமான பொருட்கள் மீதுதானே
    ஆசை அதிகம் வைப்போம் எனப் புரிந்தது
    மனம் கவர்ந்த படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரசிக்கும் மனம் இருந்தால் எதுவும் காதல் தான்...

    ReplyDelete
  5. எல்லாம் அறிமுக படுத்திவிட்டால் அதில் சுவாராயம் இருக்காது அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ”ஊடுதல் காமத்திற்கின்பம்”-வள்ளுவர்

    ReplyDelete
  7. இப்படியும் காதல் ....வித்தியாசமான கவி.


    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  9. வித்தியாசமான ஆசைகள்

    ReplyDelete
  10. அதற்காக இப்படியா?...
    பார்த்து... விபரீதமாகிவிடப் போகிறது... :).
    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    த ம.7

    ReplyDelete
  11. இவையெல்லாவற்றையும் அறிமுகப் படுத்திவிட்டால்...
    பிறகு...
    பாவம் தான் உங்களவர்....!!.))

    ReplyDelete
  12. முத்தமும் வேண்டும் கோபமும் வேண்டும் ..ஆனால் சத்தமில்லாமல் இருக்கட்டும்

    ReplyDelete
  13. இவற்றையெல்லாம் கூடக் கேட்டுப் பெறுவார்களா என்ன? வித்தியாசமான கோணத்தில் கவிதை ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  14. வித்தியாசமான வேண்டுகோள்..... காதலில் அனைத்தும் சாத்தியம்! :)

    ReplyDelete