Saturday, June 22, 2013

பேராசைக்காரன் - பாட்டி சொன்ன கதை

                   
பாட்ட்ட்ட்ட்டீ!  கதை கேக்க வந்துட்டோம்...,

வாங்க கண்ணுங்களா! வாங்க! இந்தாங்க, இதை சாப்பிடுங்க முதல்ல அப்புறம் கதை சொல்லுறேன்.

என்னது பாத்தி?! இது கருப்பா அக்லியா இருக்கு? எனக்கு வேணாம்..,

அப்படிலாம் சொல்லக்கூடாது பாப்பா. அது கேழ்வரகுல் செஞ்ச ஒரு பலகாரம்.., ”கேழ்வரகு புட்டு”.  உடம்புக்கு ரொம்ப நல்லது.., நீ வாங்கி சாப்புடுற பப்ஸ், சிப்ஸ், குர்குரே லாம் உடம்புக்கு கெடுதி. அதுலாம் என்ன எண்ணேய்ல செஞ்சிருக்காங்களோ?! ஆனா, இது எண்ணெய்  சேர்க்காம செஞ்சது..,  

எப்பவும் அரிசி ல செஞ்ச பலகாரத்தையே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா வெறும் கார்ப்போ ஹைட்ரேட் மட்டும்தான் உடம்புக்கு கிடைக்கும்.., அதனால, மத்த தான்யமான கேழ்வரகு, கோதுமை, சாமைலாம் சேர்த்துக்கனும்..,

கேழ்வரகு புட்டு எப்படி செய்யுறது பாட்டி?! எங்கம்மா ஏன் செய்ய மாட்டேங்குறா!?


சீனு!  பாட்டி வீட்டுலயே இருந்தேன்.., இதெல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். ஆனா, உங்கம்மா படிச்சு, வெளில போய் வேலை செய்யுறா! அதனால, வீட்டு வேலையும் செஞ்சு, ஆஃபீஸ் வேலையும் செஞ்சுக்கிட்டு இதெல்லாம் செஞ்சுத்தர நேரமில்லை. அதான் உண்மை. மத்தப்படி இதை செஞ்சுத் தரக்கூடாதுன்னு எண்ணம் ஏதுமில்லை அவளுக்கு..,  இதோட அருமை அவளுக்கு தெரிஞ்சா கொஞ்சம் மெனக்கெட்டு உங்களுக்காக கண்டிப்பா செஞ்சுத்தருவா. 

அதுவரைக்கும் நான் செஞ்சுத்தருவா.., இப்போ கதை சொல்றேன்.., வாங்க கண்ணுங்களா! ஒரு ஊருல  பேராசைக்காரன் ஒருத்தன்  இருந்தான்.. அவன் எந்த பொருளை பார்த்தாலும் தனக்கு வேணும்ன்னு நினைப்பான். அதனால, அவனை  பார்த்தசாரதின்ற அவன்  பேரு மறைஞ்சு  போய் பேராசைக்காரன்னு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..,

ஒரு நாள்

அவன் தன் பிஸினெஸ் மேட்டரா வெளியூருக்கு மாட்டு வண்டியில் பொருளையெல்லாம் கொண்டிட்டு போனான்....


பாத்தி மாட்டு வண்டின்னா?! 

 இப்போ மாதிரி முன்ன கார், லரிர, பெட்ரோல்லாம் கண்டுப்பிடிக்கலை.., அதனால, மரப்பலகைலாம் கொஞ்சம் அடிச்சு.., அதுல சக்கரம் ஃபிக்ஸ் பண்ணி, அதை இழுத்துட்டு போக மாடு, குதிரை, கழுதை, ஒட்டகம்ன்னு அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்குவாங்க. 

ரொம்ப வேகமா போகுமா பாட்டி?


ம் ம் ம் சில சமயம்தான் வேகமா போகும்.., மத்தப்படி மெதுவாதான் போகும்.., சரி, கதைக்கு போவோம்.., அந்த பேராசைக்காரன் பிஸினெஸ் முடிஞ்சு  காட்டு வழியாக வந்துக்கிட்டு இருந்தான். அவனுக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு .., சுத்து முத்தியும் பார்த்தான்.  தூரத்துல ஒரு கிணறு ஒண்ணு தெரிஞ்சது.. வண்டியை விட்டு இறங்கி  அந்தக் கிணத்துக்கிட்டே போனான். புளிச்சோறு கட்டிகொண்டு போன பக்கெட்டுல  கயித்தைக் கட்டி அதைக் கிணத்துக்குள்ளே விட்டுத் தண்ணீர் எடுத்தான்.

கிணத்துக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?'ன்னு  பயங்கரமா ஒரு குரல் கேட்டது.பயந்து போன  அவன் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இல்லை. பயந்துக்கிட்டே.., ""ஐயா! நான் ஒரு பிஸினெஸ்மேன். இந்தபக்கமா வரும்போது தாகமெடுத்துச்சு. அதான் தண்ணீ குடிக்க  இங்க வந்தேன். நீங்க யாரு?'' ன்னு கேட்டான்.

""விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' ன்னு சொல்லிச்சு அந்தக் குரல்.

""மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' ன்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே  கேட்டான் அவன்.

""உன்கிட்ட கோல்ட் காய்ன் இருக்கா?  இருந்தா  ஒரு கோல்ட் காய்னை  இந்தக் கிணத்துக்குள்ள போடு.  உனக்கு என்ன வேணுமோ அதை கேளு. உடனே அது நடக்கும். ஆனா, உனக்கு 2 டைம்ஸ்தான் இந்தக் கிணறு உன் ஆசையை நடத்திக்காட்டும்ன்னு சொல்லுச்சு அந்தக் குரல்.

"என்னதான் நடக்க்குதுன்னு  பார்ப்போமே' ன்னு நினைச்சுக்கிட்டே  ஒரு கோல்ட்காய்னை  கிணத்துக்குள்ள  போட்டான். ""காஸ்ட்லியான ஜுவல்சும், டயமண்ட், கோட்ல், சில்வர்,ன்னு என் மாட்டு வண்டி ஃபுல்லா வேணும்ன்னு கேட்டான்..

ஒரு செக்கண்ட்ல  அவன் வண்டி அவன் கேட்ட மாதிரியெ கோட்ல் காய்ன், டயம்னட்ன்னு ரொம்பி வழிஞ்சுது .அதை பார்த்து அவன் ஆச்சர்யப்பட்டு போய்ட்டான். ஆ! எவ்வாளவு காச்ட்லியான பொருட்கள் என்கிட்ட இருக்கு.. இப்போ இந்த வோர்ல்ட்லயே நாந்தான் நம்பர் ஒன் பணக்காரன்ன்னு நினைச்சுக்கிட்டே ஹேப்பியா வண்டியை எடுத்தான்..,

தன்கிட்ட இருந்த ஒரு கோல்ட் காயினை அந்த கிணத்துக்குள்ள போட்டான், இந்த வண்டில இருக்குற திங்க்ஸ்லாம் என் கண்ணுக்கு மட்டுமே தெரியனும். வேற யார் கண்ணுக்கும் தெரியக்கூடாதுன்னு கேட்டான். 


""அப்படியே ஆகட்டும்,''ன்னு பூதத்தோட  குரல் வந்துச்சு..,

வண்டியை ஓட்டிக் க்கிட்டு ஹேப்பியா வீட்டுக்கு கிளம்பினான். வழியில  திருடங்க வந்தாங்க. அவங்க கண்ணுக்கு வண்டியில இருந்த பொருளெல்லாம்  அவங்க  கண்ணுக்கு  தெரியலை. தன்னோடஐடியாவை நினைச்சு ரொம்பப் பெருமைப் பட்டுக்கிட்டான்.

வீட்டுக்குள்ள ஓடிப்போய் தன் வொயிஃப் கிட்ட ""இனி நாமளோ இல்ல பசங்களோ  ஏழையா இருக்க வேணாம். இனி நாம ஹேப்பியா நினைச்சதை சாப்பிட்டு, வாங்கி ஹேப்பியா இருக்கலாம். அவ்வளவு பொருள் கொண்டு வந்திருக்கேன் வந்து பாருன்னு சொல்லி மனைவியை கூட்டிக்கிட்டு போய் வண்டில இருக்குற பொருளையெல்லாம் காட்டினான்....,  


 வண்டி காலியா இருக்குறதைப் பார்த்து அவன் வொய்ஃப் ஷாக்காகி நின்னு ""என்னங்க! வண்டியில காஸ்ட்லி திங்க்ஸ் இருக்குன்னு சொன்னீங்க.., எதுவுமே இல்லியேன்னு சத்தம் போட்டா. அவனோட கண்ணுக்கு வண்டி நிறைய திங்க்ஸ் இருக்குறது தெரிஞ்சுது..,ஒழுங்கா பாருடின்னு சத்தம் போட்டான்.., 

நல்லாதான் பார்த்துட்டு சொல்றேன். சும்மாவே  ஜுவல், கோல்ட்ன்னு சொல்லி என்னை ஏமாத்த பார்க்குறீங்களா?! உங்களுக்கு சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டா.

அப்பதான் அவனுக்குத் தான் கேட்ட ரெண்டாவது வரம் எவ்வளவு தப்பானதுன்னு தெரிஞ்சுது  . தன் வொயிஃப்கிட்ட  நடந்ததை சொன்னான். அதிர்ஷ்டவசமா கிடைச்ச காஸ்ட்லி பொருளைலாம் யோசிக்காம யூஸ் பண்ண முடியாம போச்சேன்னு வருத்தப்பட்டுகிட்டே மறுபடியும் வண்டி கட்டிக்கிட்டு காட்டுக்கு போனான்.

அங்க போனா மந்திரக் கிணறும் இல்லை; ஒன்னும் இல்லை. பைத்தியம் பிடிச்சவனைப் போல வண்டியை எட்டி உதைச்சான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிந்திச்சு.ஆனாலும்  என்ன யூஸ்?! . அதுலாம் இவன் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். வேற யார் கண்ணுக்கும் தெரியாது.., அப்படி தெரியாட்டி எப்படி கடைல கொடுத்து திங்க்ஸ் வாங்குறது..,


இதுக்குதான் எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாம இருக்கனும், கடவுளே வந்தாலும் யோசிச்சு கேக்கனும்ன்னு புரிஞ்சுதா?! சரி, போய் ஹோம் வொர்க்லாம் எழுதி முடிச்சுட்டு.., விளையாடுங்க.., அடுத்த வாரம் வேற கதை சொல்றேன் பாட்டி..., 

சரி பாத்தி! நான் போய்  வரோம்.., பை, பை

17 comments:

 1. பேராசை எப்படியெல்லாம் மனிதனை ஆட்டிப்படைத்து கடைசியில் அவனை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி விடுகிறது.. பாட்டி நல்லாத்தான் கதை சொல்றாங்க..

  ReplyDelete
 2. "பேராசை பெருநட்டம் " என்று சொல்லிவைத்துவிட்டார்கள். கதை சொல்லும் விதம் நன்றாகவுள்ளது.

  ReplyDelete

 3. வணக்கம்

  நல்ல நெறியை நவிலும் கதைபடைத்தீா்!
  வல்ல பதிவா்க்கென் வாழ்த்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 4. மிக அருமையான அறிவுரைக்கதை. சொன்ன விதம் மிகச்சிறப்பு தோழி!

  அங்கு வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் இனிய நன்றிகள்!

  த ம.3

  ReplyDelete
 5. நல்ல கருத்துள்ள கதைகளை சொல்கிறீர்கள். ராஜி மேடம்! பாட்டியான சொல்றதுக்கு ஏகப்பட்ட கதைகள் பேரன் பேத்திகளுக்கு சொல்றதுக்காக வச்சுருக்கீங்க போல இருக்கு. தொடரட்டும்

  ReplyDelete
 6. குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நல்ல நல்ல கதைகளாக கதைக்கிறீர்கள் பாட்டி....!

  ReplyDelete
 7. என்ன தமிழ் பாதிக்கு பதிலா தாய்லாந்து பாட்டியா இங்கேயும் டப்பிங் நடக்குதுங்கோ

  ReplyDelete
 8. வெரி குட் ஸ்டோரி!அடுத்த வாரமும் இது மாதிரி(இதே)கதை சொல்லுவீங்களா?ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 9. பாட்டி சொன்ன கதை நல்ல கதை.

  ReplyDelete
 10. ஏற்கனவே படித்த கதை தான் என்றாலும் வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள்

  ReplyDelete
 11. அருமையான பாட்டி கதை - ரெண்டாவது வரத்தை அவரு கேட்கும் போதே மைல்டா டவுட்டு வந்திச்சு!!!!

  ReplyDelete
 12. பத்தாயிரம் கோடி படம் கதை போல இருக்கே!!

  ReplyDelete
 13. பேராசை பெருநஷ்டம் என்று முதலில் கூறியது யார்???

  ReplyDelete