Monday, June 17, 2013

ராவணனின் பத்து தலைக்கான காரணம் -ஐஞ்சுவை அவியல்


  ஏ புள்ள! மணி பத்தாச்சு.., டிவி பொட்டியை போடு.., ராமாயணம் போட்டிருப்பாங்க பார்க்கலாம்..,

என்ன மாமா திடீர்ன்னு இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீரு? சரி, அந்த புராணத்துல ராவணனுக்கு ஏன் பத்து தலை வந்துச்சுன்னு தெரியுமா?

அது, கடவுளோட திருவிளையாடல்.., அதுமில்லாம கோவம், காமம், பொய்ன்னு எதாவது பத்து கெட்ட பழக்கத்தை பத்து தலையாக்கி அதை கடவுள் அழிக்குறதா கதை வரும்ன்னு நினைக்குறேன் சரியா புள்ள?!

அதான் இல்ல மாமா! அந்த காலத்துல விச்ரவசு மகரிஷின்னு ஒரு சாமியார் இருந்தாரு. அவரோட பையந்தான்  குபேரன்..

(ஏழுமலையான் கல்யாணத்துக்கு கடன் குடுத்தாரே அவர்தானே?

ஆமா மாமா!இவன், பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். தனது தாத்தா பிரம்மாவை நினைச்சு  தவமிருந்து சகல செல்வங்களையும் பெற்றான். அதுல முக்கியமானது நவரத்தினங்களால் ஆன புஷ்பக விமானம். அதுல  நினைச்ச இடத்துக்குப் பறந்து போய், செல்வத்தைக் கொண்டு வந்து குவிச்சு. உலகிலேயே பெரும் பணக்காரனான். 

சுமாலின்ற அசுரன் இதைக் கவனிச்சான்.  தனக்கும் குபேரனைப் போல ஒரு பையன்  இருந்தா, உலகையே கட்டி ஆளலாம்ன்னு கணக்குப் போட்டான். தன் மகள் கைகனிக்கிட்ட, மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை கல்யாணம் கட்டிக்கிட்டு சீக்கிரம் குழ்ந்தைப் பெத்துக்கோ அந்தக் குழந்தை மூலம் நம்ம வம்சம்  சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைகனும்ன்னு சொன்னான். கைகனியும் சம்மதிச்சு..,காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை போய் பார்த்தா..,

ரொம்ப அழகான   அவளை பார்த்ததும் அவர் மயங்கிட்டாரு.  தன்னை  கல்யாணம்  செய்யும்படி அவளே கேட்டதால அவரும்  சம்மதிசாரு. அந்த நேரமே தன்னோடு உறவு  கொள்ளும்படி அவ கேட்டுக்கிட்டா.  அதுக்கு, அந்த சாமியாரு.., கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் உறவு கொள்கிறார்களோ, அவர்களுக்கு விகாரமானதாகவும், குறையுள்ளதாகவும் குழந்தை பிறக்கும், அதனால, ராத்திரி வரை பொறுன்னு சாமியார் சொன்னாரு.

எங்கே சாமியாரு மனம் மாறிடுவாரோ! அப்பாவோட வாக்கை காப்பாத்த முடியாம போய்டுமோன்னு பயந்து.., இப்பவே குழந்தை வேணும்ன்னு அடம்பிடிச்சா. அந்த சாமியாரும் வேற வழியில்லாம   உறவு கொள்ளவே, அவ கர்ப்பமானா.  பேறு காலம் வந்துச்சு.., ஆண்குழந்தை பொறந்துச்சு. ஆனா,  பத்து தலைகள், இருபது கைகள், பயங்கர விழிகள் கொண்ட ஒழுங்கற்ற  வடிவத்துல பிறந்தது. குழந்தையை பார்த்து அம்மாவே பயந்துட்டா. சாமியார் பேச்சைக் கேட்காம போனதுக்காக  மன்னிப்பு கேட்டா. அவரது தவ வலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு  ஒற்றைத்தலை வேணும்ன்னு  கேட்டா கைகனி! அது நடக்காத காரியம். ஆனா, என் தவ வலிமையினால, அழகற்ற இவனை அழகாக மாத்துறேன். இவனது பத்து முகங்களும் அழகா இருக்கும். ஆனால், தலைகளை குறைக்க முடியாது. இவன் வஜ்ரம் பாய்ந்த உடல்,கைகளுடன் பலவானாக இருப்பான்னு சொன்னார்..,

பத்துமுகம் கொண்ட அவனுக்கு தசமுகன்ன்னு பேர் வெச்சார். . தசம் ன்னா பத்து. தசமுகன், ஒருமுறை கைலாயம் போனான். தன்னால, எதையும் சாதிக்க முடியும்ன்ற எண்ணத்துல கைலாய மலையை தூக்கிப் பார்க்க ஆசைப்பட்டு மலையை தூக்கும்போது..,  சிவன் தன் கால் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக்கிச்சு. . அவன் வலி தாங்காம ஓன்னு கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முச்சூடும் கேட்டுச்சு. அப்போ அங்க வந்த வாகீச முனிவர், தசமுகா! சிவனைப் பணிந்து பாடு. அவர் உன்னை  மன்னிப்பார்ன்னு சொன்னார்.  தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். 

அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்து.., தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப்படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்ட காலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு ”விடாமல் அழுபவன்”ன்னு அர்த்தம் . ராவணன் இலங்கைக்கு அரசனா ரொம்ப நாள் நல்ல பேரோட  ஆட்சி செய்தான்.,  விருப்பமில்லாத பொண்ணை அதும் அடுத்தவன் பொண்டாட்டியை தொட்ட பாவம்தான் அவனை கெட்டவனாக்கியது..,

ம் ம் ம் தன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., அடுத்தவன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., ஆக மொத்தம் பொண்டாட்டின்னாலே ஆம்பிளைங்களுக்கு பிரச்ச்னைதான் புள்ள..,

என்ன மாமா! பேச்சு ஒரு மாதிரியா போகுது..,

அதொன்னுமில்ல புள்ள!  என் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கு..,

பெண்: டாக்டர்!  ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி பண்ணனும்..,
டாக்டர்: குட்.., இப்படிதான்மா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்.., 
பெண்: நீங்க வேற! பட்டுசேலை வாங்கி வந்திருக்கேன். அந்த பில்லை என் வீட்டுக்காரர்க்கிட்ட காட்டனும்..,அதான் கேட்டேன்..,

ம்க்கும்.., எப்ப பாரு பொண்டாட்டிங்களை குறை சொல்லி சிரிக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்குலாம்..,

ம் ம் ம் ராஜி வீட்டுக்கு போய் இருந்தியே! எப்படி இருக்கா உன் ஃப்ரெண்ட்? பசங்கலாம் எப்படி இருக்காங்க? அப்பு எப்படி இருக்கான்?

எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.., அப்பு இந்த வருசம் 9 வது வகுப்பு போறான்.., 

அப்படியா! அம்புட்டு பெரிய ஆளாகிட்டானா?! இப்போதான் நடந்தது போல இருக்கு..,  அப்புக்கு ஒரு மூணு இல்ல நாலு வயசிருக்கும்.., காது வலின்னு அழுதுட்டு இருந்தான்.., அப்போ,  ராஜி அவனை எவ்வளவோ சமாதான படுத்தி பார்த்தா., முடியலை.., அப்பு அழுதிக்கிட்டே இருந்தான்.

அப்போ ராஜியோட அம்மா,  ஒரு கிண்ணத்துல எண்ணெய் கொண்டு வந்து அவன் காதுல ஊத்துனாங்க,, ஒரு ரெண்டு நிமிசம் போய் இருக்கும்.., இன்னும் பெருசா கத்த ஆரம்பிச்சான்.., ஏன்னு கேட்டதுக்கு.., பாட்டி, இப்போ என் காதுல திரி போட்டு விளக்கேத்த போறாங்கன்னு அழுதான்.., எனக்கு ஒண்ணும் புரியாம கேட்டதுக்கு.., பாட்டி டெய்லியும் சாமி படத்துக்கு முன்னாடி ஒரு விளக்குல எண்ணெய் ஊத்தி, திரி போட்டு விளக்கேத்துவாங்க.., இப்போ என் காதுல எண்ணேய் ஊத்தி இருக்காங்க.., இனி திரி போட்டு விளக்கேத்துவாங்கன்னு அழுதான்..,

அப்படி புரியாம அழுத புள்ள இன்னிக்கு 9வது வகுப்பு போறானா? பலே! பலே!

ஆமா  மாமா! நல்லாதான் வளார்ந்திருக்கான்.., என்கிட்ட ஒரு விடுகதைக்கு விடை கேட்டான்.., நான் ரொம்ப நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அவனேதான் சொன்னான்..,
                                       
நீதான் எல்லாத்துக்கும் முழிச்சுக்கிட்டு நிப்பியே! சரி, சரி  முறைக்காத என்ன கேட்டான் சொல்லு.., என்னால முடியுதான்னு பார்க்குறேன்..,

ஓடும் சங்கிலி,
 ஒதுங்கும் சங்கிலி,
 பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி 
அது என்ன சங்கிலி?
இதான் கேட்டான் மாமா!

ம் ம் ம் இரு யோசிச்சு சொல்றேன்.

கடைக்கு போகனும் மாமா! சீக்கிரம் சொல்லுங்க..,

சொல்றேன் இரு.., கடைக்கு போகும்போது என்னென்ன கவனிக்கனும்ன்னு தெரியுமா?

பை, பணம் எடுத்துக்கிட்டு, வீட்டு கதவை பூட்டிட்டு போனா போதாதா?!

           
அது மட்டும் போதாது.., வீட்டுலயே என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது.., அவசியமற்ற பொருளை வாங்கவும் முடியாது..,

ஹெல்மெட் கொண்டு போகக் கூடாது.., வண்டிலயோ இல்ல பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு போகனும் இல்லாட்டி வாங்க வேண்டிய பொருளை எடுத்து பார்த்து வாங்குறது சிரமம்..,

ட்ரெஸ் வாங்கும்போது, இப்போ இருக்குற அளவுக்கே வாங்கனும்.., டயட்ல இருக்கேன் இன்னும் சில நாள்ல மெலிஞ்சுடுவேன் இல்ல குண்டடிச்சுடுவேன்னு.., அப்புறம் அது உடம்புக்கு சேராம   காசை வேஸ்ட் பண்ண வேணாம்.

கூட்டம் அதிகமில்லாத கடையா பார்த்து போகனும்.., குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கலைன்னா அவங்களை கூட்டி போக வேணாம்.., வீட்டுலயோ இல்ல ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடனும்..,அவங்க வந்தா உடம்புக்கு ஒத்துக்காத நொறுக்கு தீனிகளை கேப்பாங்க.., பொம்மை, ஐஸ்ன்னு கேட்டு அடம்பிடிச்சு வாங்கி தேவை இல்லாம காசு செலவாகும்..,

வயசு பசங்க தனியா ஷாப்பிங் போறேன்னு சொன்னா  தனியா போக விடாம பெரியவங்க யாராவது கூட போகலாம்.., அவங்களுக்கு பணத்தோட அருமை தெரியாது.., அதனால வேண்டாத பொருளை அவங்க வாங்காம தவிர்க்கலாம்..,  வாங்க வேண்டிய அளவுக்கு கட்டை பையோ இல்ல மஞ்சப்பையோ அசிங்கம்  பாக்காம எடுத்து போனா கொஞ்சம் பிளாஸ்டிக் கவர்ங்க குப்பைக்கு போறது குறையும். எதோ நம்மால முடிஞ்ச அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கலாமே!

ம்ம் சரி மாமா! வாங்க கிளாம்பலாம்..., இப்பவே போய் வாங்கிட்டு சின்ன மண்டையன் இஸ்கோலுல இருந்து வர்றதுக்குள்ளே வந்துடலாம்..,

ம்ம்ம் நீ கடைக்குள்ளாற போனா எப்போ வருவியோ தெரியாது. அதனால, எதாவது சாப்பிட்டு வரேன். இல்லாட்டி பசி மயக்கத்துல அங்க வந்து எரிச்சல் பட்டு தேவை இல்லாத பொருளை வாஙகவோ இல்ல தேவையான பொருளை வாங்கமயோ வரப்போறேன்..

சரி மாமா! வாங்க உப்புமா கிண்டி தரேன்..,

நீ செஞ்சிக்கிட்டே இரு..  அதுக்குள்ள ராஜி ஒரு லிங்க் அனுப்பி இருக்கா பார்த்துட்டு வரேன்..

என்னது மாமா?!

தந்தையர் தினம் பத்தி அவளுக்கு முதல்யே தெரியாதாம்.., தெரிஞ்சிருந்தா எதாவது கிறுக்கி இருப்பாளாம். அதனால, போன வருசம் அவ அப்பா ரிட்டைய்ர்மெண்ட்க்கு போட்ட போஸ்ட்டை பார்க்க சொல்லி எனக்கு அனுப்பி இருக்கா. அதான் பார்த்துட்டு வரேன். நீயும் இங்க போய் படிச்சு பாரு.., 

10 comments:

  1. எப்ப பாரு பொண்டாட்டிங்களை குறை சொல்லி சிரிக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்குலாம்..,

    ReplyDelete
  2. அவரோட நிலைமையை சொல்லி பேச்சை மாத்திட்டார்...!

    சங்கிலி = தண்ணீர்...?

    ReplyDelete
  3. கதையின் கோர்வைகளும் தொடர்ச்சியாக கொண்டு போகும் விதமும் மிக அருமை

    ReplyDelete
  4. அழகான ராவணன் கதை... புதிதாக அறிந்து கொண்டேன்... நன்றி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ராவணனின் கதையும், அவனது பெயர்க்காரணமும் அறிந்தேன், மகிழ்ச்சி. ''என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது.., அவசியமற்ற பொருளை வாங்கவும் முடியாது''.கடைக்குப் போகிறவர்களுக்கு உதவும் அருமையான பயனுள்ள டிப்ஸ். நன்றியும் பாராட்டும்

    ReplyDelete
  6. புராணக் கதை புதிதாய் அறிந்தேன். கடைக்குப் போகும்போது மனத்தில் இருத்தவேண்டிய குறிப்புகள் பயனுள்ளவை ராஜி. பகிர்வுக்கு மிக்க நன்றி. அப்புவின் விடுகதைக்கு விடை பாம்பென்று நினைத்தேன். திண்டுக்கல் தனபாலனின் விடையைப் பார்த்தபிறகு அவர் சொன்னதுதான் சரியென்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்தான் சரியான விடை கீதா. தனபாலன் அண்ணா சொன்னது சரிதான்

      Delete
  7. ///வீட்டுலயே என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது///

    இது அந்த காலப் பெண்கள் நினைப்பது ஆனால் இந்த காலப் பெண்களுக்கு கடையில் என்ன என்ன இருக்கிறது என்பதை பார்த்த பின் தான் வீட்டுக்கு என்ன என்ன தேவையென்றே தெரியும்

    ReplyDelete
  8. நமது நாட்டில் எல்லவற்றிற்கும் ஒரு கதை உண்டு. பத்துதலை ராவணனுக்கும் ஒரு கதை. நீங்கள் எழுதியவிதம் எளிமையான நடை


    ReplyDelete