Saturday, June 29, 2013

நன்றி மறப்பது நன்றன்று - பாட்டி சொன்ன கதை

  


 

 சீனு ஸ்கூல் விட்டு வந்துட்டியா? எங்கே உன் தங்கச்சி பாப்பா?! அவளை கூட்டி வர அப்பா போய் இருக்காங்க.., 


ம்ம்ம் நீ எப்படி வந்தே?! எனக்கு 30 மினிட்ஸ்  முன்னாடியே விட்டுட்டாங்க.., அதனால,  என்னை கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு அப்புறம் பாப்பாவை கூட்டி வரப்போனாங்க..,

அரை மணிநேரம்தானே கண்ணா! அங்கயே வெயிட் பண்ணிட்டு பாப்பவை கூட்டி வந்திருக்கலாமே! இப்போ பெட்ரோல் விக்குற விலையில் ரெண்டு முறை போகனுமா?!

 அப்பா இப்போதான் என்னை கூட்டி வரும்போதுதான் டேங்க் ஃபில் பண்ணிட்டு வந்தார்.., அது இந்த வாரம் முழுக்க வரும்..,

 உங்கப்பனுக்கு அறிவே இல்ல.. படிக்குற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா எல்லாம் தெரிஞ்சிருக்கும்..

 ஏன் பாட்டி அப்பாவை திட்டுறே?!

இல்ல கண்ணா! பெட்ரோலை எப்பவும் மார்னிங்க் இல்ல ஈவினிங் டைம்ல தான் போடுறது நமக்கு பெனிஃபிட்..,  னீ பெட்ரோல் பங்க போயிருக்கியா? அங்க பெட்ரோலை எங்க வெசிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?

 தெரியும் பாட்டி.., கீழ கிணறு தோணி அதுல ஃபில் பண்ணி வச்சு டேப்ல நம்ம வண்டிக்கு ஊத்துவாங்க..

 ம்ம்ம் கரெக்ட். ஏன், நம்ம வீட்டுல இருக்குற தண்ணி டேங்க் மாதிரி மேல கட்டாம பூமிக்கு கீழ வச்சிருக்காங்க..,

 அது தெரில பாட்டி., ஒரு வேளை பெட்ரோல் விலை அதிகமா இருக்குறதால திருடிப்பாங்களோன்னு நினச்சு அப்படி பண்ணிட்டாங்களோ!?

ஹா ஹா! அப்படி இல்ல செல்லம் அப்படி திருட்டு பயம் இருந்தா ஒரு நல்ல செக்யூரிட்டி போட்டு வைக்கலாமே?! ஏடிஎம் வாசல் போல?! 

அட ஆமா பாட்டி! அப்போ ஏன் அப்படி வெச்சிருக்காங்க?!

ம்ம் அப்படி கேளு .., பூமியோட  வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே பெட்ரோல்  அடர்த்தியா  இருக்கும். வெப்பநிலை படிப்படியா அதிகரிக்கும்போது, பெட்ரோலும் விரிவடையும். அதனால  ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா, அது சரியா ஒரு லிட்டர் இருக்காது. கம்மியாதான் இருக்கும். உன் பாஷைல சொல்லனும்ன்னா பெட்ரோல் எவாப்ரேஷன் ஆட்கிடும். அதே மாதிரி எப்பவும் டேங்க் ஃபுல் ஃபில் பண்ணக்கூடாது,,  ஏன்னா, நாம் பெட்ரோல் நிரப்பிட்டா அந்த டேங்ல காத்து கம்மியா இருக்கும். பெட்ரோல் ரொம்ப சீக்கிரம் எவாஃப்ரேஷன் ஆகிடும்..,

  பெட்ரோல் பங்க்ல   பெட்ரோல் சேர்த்து வைக்குற தொட்டில ”மிதக்கும் கூரைகள்” இருக்கும்.அதனால, உள்ளே இருக்குற பெட்ரோலுக்குதகுந்த மாதிரி அது மாறிக்கும். அதனால  காற்றுமண்டலத்துக்கும், பெட்ரோலுக்கும் இடையே இடைவெளி இருக்காது. அதனால ஆவியாதல் குறையும். ஆனா, நம்ம வண்டிகள்ல அந்த வசதி கிடையாது .அதனால  பாதி ஃபுல் ஃபில் பண்ணால் பெட்ரோல் ஆவியாவதை கொஞ்சம்  குறைக்க முடியும்.

அதே மாதிரி நீங்க பெட்ரோல் போடப்போகும் அந்த நேரத்துல லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கிட்டு இருந்தா பெட்ரோல் போடக்கூடாது. ஏன்னா,  குழாய் வழியா பெட்ரோலை தொட்டிக்குள்ள ஊத்தும்போது தொட்டிக்கடியில் இருந்த கசடுலாம் அதன்மூலமா மேல வரும்.அப்போ நாம் பெட்ரோல் போட்டா அந்த கலங்குன பெட்ரோலைதான் வாங்கனும்.., இது எஞ்சினை பாதிக்கும்... அதனால அடுத்த முறை பெட்ரோல் போடப்போகும் போது நீயாவது இதெல்லாம் கவனிச்சுக்கோ!

சரி பாட்டி! அதோ பாப்பாவும் வந்துட்டா. நீங்க கதை சொல்லுங்க..,

ம்ம்ம் முல்லை மலர்ன்ற காட்டுல  விறகு வெட்டுறதுக்காக போய்க்கிட்டு இருந்தான் மணி. அப்போ காட்டுல  எங்கயோ ஒரு  சிங்கம் கத்திக்கிட்டு இருந்துச்சு..

பாத்தி.., சிங்கம் கத்தாது., கர்ஜிக்கும்ன்னு எங்க மிஸ் சொல்லொ குதுத்து இருக்காங்க..

என் செல்லம்.., மிஸ் சொல்லுறதை நல்லாதான் கவனிச்சு கேட்டிருக்கே. சிங்கம் கர்ஜிட்டு இருந்துச்சு.. மணி குரல் வந்த திசை பார்த்து போனான். அங்க ஒரு சிங்கம், கூண்டுல சிக்கிக்கிட்டு இருந்ததை பார்த்தான்.  உடனே, அந்த சிங்கம்.., ஹலோ!  பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்'' ன்னு சொல்லுச்சு..,

பொய் சொல்லாத பாட்டி. சிங்கம் எங்காவது பேசுமா?!

டேய் சீனு இப்படிலாம் குதர்க்கமா கேள்விக்கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன்.. உன் அமெரிக்கா மாமாக்கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்டே. அவனைபோலவே தொணதொணன்னு கேள்வி கேட்டு என்னை படுத்துறே!கதைன்னா லாஜிக் இருக்காது சிங்கம் பேசும், மனுசன் பறப்பான்,  இப்படிலாம் கேள்வி கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன். போ...,

பாத்தி! அவன் அப்பதிதான்.  நீ சொல்லு பாத்தி..,

ம்ம்ம்  வேட்டைக்காக வந்தவங்க சிங்கத்தை உயிரோட பிடிக்க   கூண்டு செய்ஞ்சு.அதுக்குள்ளஒரு ஆட்டை விட்டு வச்சிருந்தாங்க. . ஆட்டை சாப்பிட நினைச்ச  சிங்கம் கூண்டுக்குள்ள  மாட்டிக்கிச்சு..,  அப்போதான் அந்த பக்கமா வந்த மணியை சிங்கம் பார்த்துட்டுது..,  ஏய் மனிதா! என்னை இந்த கூண்டுல இருந்து வெளிய வர ஹெல்ப் பண்ணா, நானும்  உனக்கு நிறைய ஹெல்ப் செய்வேன் ந்னு கத்துச்சு..

அதுக்கு மணி, “நீயோ மனுசங்களை அட்ச்சு கொண்ணு சாப்புடுற ஆள்.  உன்னை நான் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்ன்னு கேட்டான். மனுசங்களை கொண்ணு சாப்புடுறது நிஜம்தான். ஆனா, அதுக்காக உயிரை காப்பத்தி குடுக்குற உன்னை கூடவா சாப்பிடுவேன்னு சொல்லிச்சு.. அது சொன்னது, மணி மனசுக்கு சரின்னு படவே கூண்டை திறந்து விட்டான்.அப்படி கூண்டை திறந்து விட்டதும்.., மணி மேலயே  பாய்ஞ்சு அடிச்சு திண்ண பார்த்துச்சு..,

அச்சச்சோ! பாவம் மணி செத்து போய்ட்டானா?!

ம்ஹூம்,  “சிங்கமே, நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணேனே.... அதுக்கு நீ காட்டும் நன்றி'' இதானா?!ன்னு கேட்டான்.

“என் உயிரைக் காப்பாத்திக்குறதுக்காக  நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எப்படி நம்பலாம்? மனிதர்கள் ன்னாபகுத்தறிவுள்ளவர்கள் னுதானே மினிங்க்,  அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது ன்னு பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' ன்னு எகத்தாளமா கேட்டுச்சு சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாத்திய என்னையே சாப்பிடுறது நியாயமில்லை. ன்னு அதுங்கிட்ட வாதாடி பார்த்தான் மணி.. அ ப்போ அந்த பக்கமா ஒரு நரி வந்துச்சு. வா! அதுங்கிட்டயே ஒரு நியாயம் கேப்போம்ன்னு சிங்கத்தை கூட்டிக்கிட்டு அந்த நரிக்கிட்ட போய்.., நடந்ததைலாம் சொன்னான்..      

.“எங்கள் தொழில் அனைவரையும் அடிச்சுக் கொண்ணு  சாப்பிடுறதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீரனும். நீ என்ன சொல்ற நரியாரே....'' ன்னு சிங்கம் கேட்டுச்சு

ஒரு உயிர் அனாவசியமா போகப்போகுதேன்னு.., பாவப்பட்டு சிங்கத்தை காப்பாற்றியதற்கு இதான் தண்டனையான்னு மணி கேட்டான்...,

இதெல்லாம்  கேட்ட நரி, எனக்கு ஒண்ணுமே புரியலை.., அதனால, மறுபடியும் நீங்க சொல்லுங்க ராஜான்னு சிங்கத்துக்கிட்ட சொல்லிச்சு.. உடனே, சிங்கம் நடந்த கதையை சொல்ல ஆரம்பிச்சுது..,


நான் அந்த கூண்டுக்குள்ள அடைஞ்சுக் கிடந்தேன்..,

“எந்தக் கூண்டுக்குள்ள?'ன்னு கேட்டுச்சு நரி.

“அதோ இருக்குதே அந்தக் கூண்டுக்குள்ளதான்ன்னு சொல்லிச்சு சிங்கம்.

“எப்படி அடைஞ்சு இருந்தீங்கன்னு கேட்டுச்சு நரி.

சிங்கம் விடுவிடுவென்னு கூண்டுக்குள்ள  போச்சு . இதுதான் சரியான சமயம் ன்னு நினைச்ச நரி சட்டுன்னு கூண்டோட கதவை பூட்டிடுச்சு

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் சொல்றதா சொல்லி என்னை மறுபடியும் கூண்டுல  அடைச்சுட்டீங்களேன்னு   கத்திச்சு சிங்கம்.

“நீங்க பேசாமல் கூண்டிக்குள்ளயே  இருங்கராஜா. நான் ஒண்ணும் இந்த மனிதனைப் போல்முட்டாள் இல்ல. உங்களுக்குச் சாதகமா நியாயம் சொன்னா முதல்ல இந்த மனுசனை  அடிச்சு சாப்பிடுவீங்க. அப்புறம் என்னயே அடிச்சு கொன்னுடுவீங்க. அதனாலதான் உங்களை மீண்டும் கூண்டுக்குள்ளயே வச்சு பூட்டிட்டேன்ன்னு சொல்லிச்சு நரி.  

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைச்சு  நொந்து நூடுல்சா போனது.

அந்த நரியும், மணியும் பத்திரம் அவங்கவங்க இடத்துக்கு போய் சேர்ந்தாங்க.. இந்த கதை மூலம் என்ன குட்டி தெரிஞ்சுக்கிட்டீங்க..,

நல்லது செய்றதுக்கும் இடம், பொருள், ஏவல், மனுசன் தராதரம் தெரிஞ்சிருக்கனும்.., அதுமில்லாம ஒருத்தர் ஒரு ஹெல்ப் பண்ணா, நாம அதை எந்நாளும் மறக்க கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம் பாட்டி.

குட். நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க.. போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு, குளிச்சு, சாமி கும்பிட்டு படிங்க.., அம்மா சமைச்சு வைப்பா.., சாப்பிட்டு தூங்குங்க..

ம்ம்ம் பை பாத்தி!




14 comments:

  1. நல்ல கதை... அதை விட பெட்ரோல் விளக்கம் சூப்பர்...

    வெயிட் பண்ண வேண்டிய அப்பா தான் பாவம்... பாட்டி நல்லா படிக்க வைக்காம இருந்துட்டாங்க போல...

    ReplyDelete
  2. பெட்ரோல் பத்திக்கிற மாதிரி அருமையான விளக்கம்.

    பாட்டி கதை சிங்கத்தை அசிங்கம் ஆக்கிருச்சு..

    ReplyDelete
  3. இனி மறக்கவே மாட்டோம் சிறப்பான இந்த கதையைக் கேட்ட பின்னாலுமா ?..:))
    வாழ்த்துக்கள் தங்கசி நீங்களும் போய் நின்மதியாய் சாப்பிடுங்கோ எனக்கு
    ஊட்டி விட நேரமில்லை பை ..பை ...:)

    ReplyDelete
  4. ம்.. கலக்குங்க... இந்த பாட்டிங்களே இப்படித்தான்...

    ReplyDelete
  5. வித்தியாசமாய் சிறுவர் இலக்கியம்! அருமை! நன்றி!

    ReplyDelete
  6. பாட்டி என்ன டிச்கோவேரி சேனல் போல சைன்ஸ் எல்லாம் சொல்லி கொடுக்குது

    ReplyDelete
  7. நீங்க எப்போ கதை சொல்லப் போறீங்க

    ReplyDelete
  8. பாட்டி சொன்ன கதையை விட அவங்க சொன்ன பெட்ரோஸ் டிப்ஸ்தான் ரொம்பவே யூஸ்ஃபுல். வாழ்க பாட்டி!

    ReplyDelete
  9. பாட்டி பெட்ரோல் பற்றி அழகான விளக்கம் கொடுத்தாங்க..

    ReplyDelete
  10. பெற்ரோல் கதை, சிங்கம் கதை இரண்டுமே சிறப்பு. சிங்கம் கதையைச் சிறுவர் கதையாக நான் நினைக்கவில்லை. எமக்கும் பொருந்துகிறது

    ReplyDelete
  11. பெட்ரோல் டிப்ஸ் - நல்ல விஷயம்.

    இப்பதான் சிங்கத்துக்கு பதிலா புலி வைச்சு கதை படிச்சுட்டு வரேன்! எங்கேன்னு கேட்கறீங்களா ராஜி

    http://chuttikadhai.blogspot.in/2013/06/blog-post_29.html - இங்கே தான்.

    ReplyDelete
  12. நல்ல உபயோகமான தகவலகளை தேடிப் பிடித்து கதையாக சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்...

    வாழ்த்துகள்!! தொடர்ருங்கள்..

    திரைவிமர்சனம் எழுதலாம் வாங்க - தொழிற்களத்தில் வாசியுங்கள்

    ReplyDelete
  13. பாட்டி கதையை அக்கா சொன்னது அருமை...

    ReplyDelete