புண்ணியம் தேடி போகும் பயணத்தில் இன்னிக்கு நாம பார்க்க படிக்க போறது.., பன்ருட்டியிலிருந்து ஒண்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற "சிவப்பிரகாச ஜீவ சமாதியை”.., என்னடா! வெள்ளிக்கிழமை அதுமா ராஜி சமாதிக்குலாம் கூட்டிப்போறாளேன்னு ஜெர்க் ஆக வேணாம்.., என்ன விசேசம்ன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க சகோ’ஸ்...,
சிவப்பிரகாச சுவாமிகள் காஞ்சிப்புரத்தில் பிறந்தவராம். அவருடைய காலம் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாம்.., அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகள் மட்டுமே.., ஆனா, அந்த முப்பத்திரண்டு வயத்துக்குள்ள முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் எழுதினாராம்..., அதனாலயே இந்த சிறப்பு.., சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்ட சிவப்பிரகாச சுவாமிகள் தனது தம்பி தங்கையுடன் “திருவண்ணாமலைக்கு வந்துவிட்டாராம், பிறகு அவரது தந்தையின் குருவான “குருதேவை” சந்தித்து அவருடன் தங்கி, கல்வி கற்றாராம்..,
திருவண்ணாமலை கிரிவலத்தி பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டாராம். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் அருனாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினமே 100 பாடல்கள் இயற்றினாராம் ...,
அதற்கு ”சோண சைலமாலை”ன்னு பெயரிட்டாராம். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால், தமது சகோதர்களுடன் தென்னகம் நோக்கி சென்று.., திருச்சிக்கருகில் உள்ள “பெரம்பலூரில்” இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தாராம்,,ம்
குருநாதரிடம் சொல்லி விடை பெற்று தமது சகோதரர்களுடன் “துறைமங்கலம்” வந்து, பின்னர் அங்கிருந்து, “வாலி காண்டபுர”த்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்து வந்தாராம். வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே “திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலபகம், திருவெங்கையுலா, திருவெங்க அலங்காரம் என்னும் நான்கு நூல்களை எழுதினாராம். பின்னர் தமது சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் தனது புனித பயணத்தை தொடங்கினாராம்...,
சிதம்பரத்திற்கு திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவப்பெருமானை தரிசனம் செய்து சில காலம் தங்கியிருந்துட்டு பிறகு காஞ்சிப்புரம் புறப்பட்டு போனாரம். பின்னர் புதுவை வந்து அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தாராம்.. காலம் வேகமாக சென்றது..
பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு, நல்லாத்தூர் வந்து சேர்ந்தார். அது ஒரு சிற்றூர். எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும் கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது.., அக்கோவிலின் முன்னே உள்ள நுணா மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டாராம்.
பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுப்பட்டிருந்தார். தவம் முடிந்து தவசித்தி பெற்றாற். சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.., தாம் சிவமாகும் காலம் நெருங்குவதை உணர்ந்து “புரட்டாசி மாதம் - பௌர்ணமி திதியில் ஐக்கியமானார் என்கின்றனர்..,
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப்பட்டது.., அந்த நுணா மரத்தின் கீழ்தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப்பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அப்படி போட்ட மறுகணமே பச்சை நுணா மரம் எரிந்து சாம்பலாகியது.., அதுமட்டுமில்லாமல் அவ்வீட்டில் இருந்த மற்ற பொருட்களுக்கு தீ பரவவுமில்லை.., அதனால் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை.
மேலும், இதை மூவர் சமாதி என்றும் சொல்வர்.., 3 சித்தர்கள் ஜிவ சமாதியான் இடம் இது..,
இவர் ”சீர்மன் குமாரசுவாமி தம்புரான்”. சிவப்பிரகாச சுவாமிகளுடைய சிஷயர்” என்று சொல்கிறார்கள்..,
இவர் ”சடை சுவாமிகள்” ன்னு சொல்லப்பட்டாராம்.., இவருடைய சமாதியும் இங்க இருக்கு..,
இவர் ஸ்ரீகுண்டலி பரதேசி சுவாமிகள்.., இவர் ”சீர்மன்னு குமாரசுவாமி” தம்பிரானுடைய சிஷ்யன் என்று சொல்றாங்க...,
மேலும் ஆலயத்துக்குள்ள நிறைய மகான்களின் சிலைகள் இருக்கு...,
ஸ்ரீசுக பிரம்ம ரிஷி..,
ஸ்ரீகாகபுஜண்டர் தன் பத்தினியுடன்..,
திலகவதி அம்மையாரும்.., அவர் அருகில் திருநாவுக்கரசருக்கும்..,
மேலும் நாங்க போகும்போது நிறைய பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க..., அவங்களை கேட்டபோது TNPCCதேர்வுகளில் நிறைய பேர் இங்க வந்து உக்காந்து படிச்சுட்டு போய் பரிட்சை எழுதி அரசு உயர் பதவிகளில் இருக்காங்களாம்.., அதனால.., இங்கு படிச்சா வெற்றி நிச்சயம்ன்னு படிக்கிறாங்களாம்..,
மாணவர்களும், சிலர் படிப்பதை பார்த்தோம்.., பகல் நேரங்களில் வயதானவர்களும் வெட்டியாய் கொஞ்ச நேரம் படுத்டிருக்காங்க.., இந்த கோவில வழிப்பட உகந்த நேரம் மாலை நேரமே!!
இந்த சமாதி.., இங்கிருந்து படித்து அரசின் உயர் பதவிக்கு சென்றவர்களின் நிதி உதவியுடன் இப்போ ரொம்ப அழகா பராமரிக்கப்பட்டு வருது..,
கோவிலின் வெளிப்புறம் ஒரு சின்ன கோவிலும், குதிரை சிலையும் இருக்கு. வெளியூர் போறவங்க தான் நினைச்ச காரியம் ஈடேற கற்பூரம் ஏற்றி கும்பிட்டு போறதை பார்க்க முடிஞ்சுது..,
அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பேசலாம்.., இப்போ வர்ட்ட்ட்ட்ட்ட்டா?!
அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பேசலாம்.., இப்போ வர்ட்ட்ட்ட்ட்ட்டா?!
அந்த இடத்திற்கு போவதற்க்கு பேருந்து வசதி உள்ளதா ,வெள்ளிகிழமை சித்தர்கள் ஜீவ சமாதி களுக்கு சென்று வந்தது போல் இருக்கிறது ..வாழ்த்துக்கள்
ReplyDeleteபேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி இல்லை. ஆட்டோல போகலாம். ஒண்றரை கி.மீ தூரம்தானே! அதனால கூட வர்றவங்களோட பேசிக்கிட்டே நடந்தே போகலாம்.., உடற்பயிற்சி போலவும் ஆச்சு.., புண்ணிய யாத்திரை போலவும் ஆச்சு.., கூட வர்றவங்களோட பேசி புரிஞ்சுக்கிட்ட மாதிரியும் ஆச்சு. இதுக்கு எதுக்கு ப்ரூ விளம்பரத்துல வர்ற மாதிரி 2 ரூபா செலவு பண்ணனும்?!
Deleteஎன்ன அதிசயம்.. ! திடீர்னு கோவில் குளமெல்லாம்..
ReplyDeleteஅதான் தலைப்புலயே சொல்லிட்டேனே! புண்ணியம் தேடின்னு..,
Deleteதகவல்களும் படங்களும் நேரில் பார்த்த நிறைவு.
ReplyDeleteஉங்களுக்கு கிடைச்ச புண்ணியத்தில் எனக்கும் பங்கு உண்டா சகோ
ReplyDeleteபல புதிய செய்திகள். பகிர்வுக்கும் நேரிலே பார்த்தாற்போன்ற உணர்வைத் தரும் படங்களுக்கும் மிக்க நன்றி ராஜி.
ReplyDeleteபதிவு அருமை.. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteDear Raji could you have said this place is 1 1/2 kms from Panruti but what is the name of the place kindly let us know....thanks
ReplyDeleteNALLA SEIDHI MIKKA NANDRI
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteAYYAVAI VALIPADU SEIDA DU POLA IRUKU INDA POSTING KU EN MANAMARA NANDRI
ReplyDeleteஉலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.
ReplyDeleteபிராணா அறக்கட்டளையின்
சித்தர்கள் ஆலயம்
126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்
ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்
ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116 - ஸ்ரீஜெய வருடம்
நடைபெறும் நாள் - 13-04-2014
சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
முன்பதிவு செய்ய : சென்னை : 7373735260 பிறமாவட்டம் : 7373735270
https://www.facebook.com/Siddhargalaalayam.org