Friday, October 04, 2013

அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில், குரண்டி - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கன்னியாகுமரியில “கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை” அவர்கள்  பிறந்த இடம் இருக்குன்னு அங்க போகலாம் ன்னு பிளான் பண்ணி போகும்போது, பச்சை பசேல்ன்னு வயல் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. சரி, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு வண்டியை விட்டு இறங்கி அக்கம் பக்கம் நோட்டம் விட்ட போது, த்த்த்தூரத்துல இயற்கை கொஞ்சும் இடத்துல  சின்னதா ஒரு கோவில் தெரிஞ்சுது. நீதான் பதிவராச்சே!?  என்னை பத்தி ஊரு உலகத்துக்கு நீதான் அறிமுகப்படுத்தனும்ன்னு கோவில் கெஞ்சுற மாதிரி இருக்கவே,  கோவிலுக்கு போனேன். கேமராவோடு...., 

சுத்தி முத்தியும், ஒரு ஈ, காக்காவை காணோம். துணைக்கு கூப்பிட்டா எங்க வீட்டு நண்டு,. சிண்டு கூட எதும் வரலை. இருந்தாலும், பதிவருக்குண்டான கடமை நம்மை வரவேற்க.., கொஞ்சம் உதறலா இருந்தாலும் பயத்தை மனசுலயும், சிரிப்பை உதட்டுலயும் வச்சுக்கிட்டு கோவிலுக்கு போனேன்......

ஆளே இல்லாத கோவிலில இந்து அறநிலைய துறை சார்பா ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதை பார்த்துதான் சகலமும் தெரிந்து கொள்ளவேண்டியதா இருக்கு.  இந்த கோவிலோட பேரு ”அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில் ” , குரண்டி இந்த ஊர் தேரூர் பக்கத்தில இருக்கு.

போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடக்கிறது கவனமா தான் போகனும். சரி வாங்க கோவிலுக்கு கிட்டக்க போய் பார்க்கலாம்

முழு கோவிலும் இடிந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலில் தென்பக்கமா காலபைரவர் அருள் புரிகிறார்.  அவரை வணங்கிட்டு கோவிலை வலம் வர தொடங்கினோம். அங்க சிலர் பூஜைகள் செய்வது போல தான் தெரியுது.

கோவிலின் முன்னே பலி பீடங்களும்,  வரிசையா அடுத்தடுத்து காணபடுது. அங்க பாதம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுது.   ஒவ்வொரு பலிபீடங்களிலும் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ததற்கான தடங்கள் இருக்கு.

கொஞ்சம் பயத்தோடுதான் கோவிலை சுத்தி பார்த்தேன். உள்ள போலாமா?  வேணாமா!?ன்னு மனசுக்குள் ஒரு பயம். ஏன்னா. மேற் கூரைகள் இடிந்து விழும் நிலைல பாழடைந்து இருக்கு இக்கோவில். 

கட்டிட கலை அமைப்பு கூட பல்லவக்காலதது அமைப்புல இருக்கு. ஆனா,  குமரி மாவட்டத்தில் சேர, சோழ,பாண்டியர்கள் தான் ஆட்சி செய்திருக்காங்க. சில நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் யோசித்து கொண்டே கோவிலை சுத்தி வந்தேன்.  

கற்கள் எல்லாம் பெயர்ந்த நிலையில் விரிசல்களுடன் இருக்கு.  கற்சுவர்கள் உள்ளே பாசிப்படர்ந்தும், சுவர்கள்லாம் மரங்களின் வேர்களால் உடைந்து காணப்படுது.  வரிகற்கள்,  மேற்கூரையே இல்லாத கருவறை இதெல்லாம் பார்த்துக்கிட்டே சிவனே நீயே துணைன்னு கோவிலுக்கு போனேன்.

 இரண்டாம் நிலையில் சக்கரம் போன்ற அமைப்பும்,  அபிஷேகம் செய்யும் நீர் வடிந்து செல்லும் அமைப்பும் காணபடுது.  அதைத்தாண்டி போனா கருவறை உள்ள சில நாக சிலைகளும், ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் கைகூப்பிய நிலையில் ஒரு மன்னருடைய சிலையும் காணப்படுது.

இடப்பக்கமும் ஒரு மன்னர் கும்பிட்ட நிலையிலும்,  ஒரு சிலையும் நடுவே கொன்னை மரமும் வளர்ந்து காணபடுது.   சரி கோவிலின்  வரலாறை தெரிந்து கொள்ளலாம்ன்னு அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டா யாருக்கும் சரியா சொல்ல தெரியலை.  ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் கோவிலுக்குள்ளயா போனே!?ன்னு  ஆச்சர்யமா கேக்க, ஏன், போனா என்னம்மான்னு நான் கேக்க!?

கோவிலுக்குள்ள,  அங்க பெரிய நாகம் ஒண்ணு இருக்கு, இந்த ஊர்க்காரங்க பார்த்திருக்காங்கன்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி சொல்ல, என்னமோ என் மேலயே பாம்பு ஏறி இறங்குன மாதிரி ஒரு எஃபெக்ட் உடம்புக்குள்ள.. 

கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள நெட்டோ!? போல்டோ இருக்காமே! அதுல இது கோரக்கரருடைய சமாதி ன்னு யாரோ சொல்லி, பலர் வந்து இங்க பூஜை பண்ணிட்டு போறங்கன்னு அந்த அம்மா சொன்னாங்க. இந்த கோவில் பத்தி தெரிஞ்சே ஆகனும்ன்னு மண்டை குடைச்சல் எடுக்க இந்த  கோவிலில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் யோகிஸ்வரர் குடும்பதினருக்குதான் இதைபத்தி   முழு விவரமும் தெரியும் என்பதால் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை 
வருடத்துக்கு சிலமுறை பூஜை செய்வதற்கு போகும் முன்,ஆட்களை கொண்டு அங்க இருக்குற புதர்களைலாம் வெட்டிட்டு,  2 நாள் கம்பு வச்சி சத்தம் எழுப்பி பின் தான் அங்கேபோவாங்களாம் . ஏன்னா, பாம்பு பயம்.   அதனால, யாரும் இதனுள் பாதுகாப்பு இல்லாம போக வேணாம்ன்னு சொன்னார் ஆனாலும் சிலர் இங்க வந்து பூஜை செய்துட்டு போறாங்களாம்.  இந்த கோவிலை இந்து அறநிலைய துறை புதுப்பித்து கட்ரி தருவதா சொல்லி இருக்காங்களாம். 
இங்கே18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் வரும்போது எதிரிகள் அவரை தாக்க வந்ததாகவும்,  அப்ப,   கால் காட்டி மறையும் வித்தைகாட்டி தன்னுடைய பாதங்கள் மட்டும் காட்சியாக விட்டு சென்ற இடம் இத்திருத்தலம் எனபது மட்டும் அவர்களுக்கு தெரிந்த வரலாறு . அதுக்கு சாட்சியா இரண்டு பாதங்கள் மட்டும் இங்க காணப்படுது . பூஜையோ, வழிபாடோ இல்லைன்னாலும் அதன் அழகு பார்பதற்கு மனதை கொள்ளை கொள்ளுது .

கால் வைக்க இடமில்லாத கூட்டம், எட்டுகால பூஜை, புனஸ்காரம், அன்னதானம், தேரோட்டம், நித்தம் ஒரு திருவிழான்னு இருக்குற கோவில்ல மட்டும்தான் இறைவன் திருவருள் கிடைக்குமா!? இதுப்போன்ற பூஜையே இல்லா கோவிலில்கூட இறைவன் திருவருள் கிடைக்கும்தானே!? 

அடுத்த வாரம் வேறொரு கோவில் பத்தி புண்ணியம் தேடி போற பயணத்துல பார்க்கலாம். 

27 comments:

  1. எங்கெங்கோ போய்... கோயிலின் சிறப்புகளை திரட்டியதற்கு பாராட்டுக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி அண்ணா!

      Delete
    2. ஐயா தாங்கள் அளித்த பதிவுக்கு மிகவும் நன்றி

      Delete
  2. அடடா..... கோரிக்கையற்று இருக்காரே கோரிக்க நாதர்:(

    இதுவரை கேள்விப்படாத கோவில். தகவல்களுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
    Replies
    1. நம் கோரிக்கைகலை நிறைவேற்ற காத்திருக்கிறார் கோரிக்க நாதர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா

      Delete
  3. இப்படி நிறைய கேள்விபடாத கோவில்கள் எல்லாம் உங்களின் பதிவுகளின் மூலம்தான் என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.... நல்ல பதிவு, தொடருங்கள் !

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவு எதுவரை தொடரனும்ன்னு கடவுள் சித்தம் இருக்கோ அதுவரை தொடரும் சகோ!

      Delete
  4. தெரியாத இடங்கள் புண்ணிய பயணம் தொடரட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. கடவுள் சித்தம் அமிர்தா

      Delete
  5. நானும் இந்த கோவிலை பத்தி கேள்வி பட்டு இருக்கிறேன் கோவை அன்பர் ஒருவர் இதைபற்றி கூறி இருக்கிறார் அங்கே செல்லும் புண்ணியம் கிடைக்கவில்லை உங்கள் மூலமாக நிறைவேறியது ..

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ புண்ணியம் சேர்ந்தால் சரி

      Delete
  6. இடிபாடுகளுடன் இருக்கும் கோரிக்க நாதர் கோயில் பராமரிப்பாரற்றுப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையிலும் துணிந்து தைரியமாக உள்ளே சென்று பார்த்த உங்களைப் பாராட்டவேண்டும் ராஜி. உங்கள் பதிவுக்குப் பிறகாவது கோயில் பற்றிய சிந்தனை அறநிலையத்துறைக்கு வரட்டும். பகிர்வுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  7. அருமையான பதிவு! உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!

    ReplyDelete
  8. கூட்டம் உள்ள கோயில்களில்தான் அருள் கிடைக்குமா என்ன?

    இந்த மாதிரி கோயில்களில் கிடைக்கும் மன நிம்மதிக்கு ஈடு இல்லை.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. மிகவும் பழமையான கோயிலை காணதந்துள்ளீர்கள். நன்றி..

    ReplyDelete
  10. பழமைவாய்ந்த பல கோயில்கள் பராமரிப்பின்றி பாழாகிக் கொண்டுள்ளன! சிரமங்கள் இருப்பினும், சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
  11. Akka, Please send your email-id to goviblog@gmail.com. I will send your 'Pathivar thiruvizha' photos. Sorry for the delay. Thanks - Aathimanithan.

    ReplyDelete
  12. நேரடியாக சென்று தரிசனம் செய்த திருப்தியைத் தந்த்து படங்களும், பதிவும். மிக்க மகிழ்ச்சி.

    பகிர்வினிற்கு மிக்க நன்றி.

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
  13. நிஜம் தான் பல ஆலயம் இப்படி கைவிடப்பட்ட நிலையில் இருக்கு ராஜி அக்காள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. பெரிய பெரிய கோவில்களை விட இந்த சிறு சிறு கோவில்களுக்கு செல்வது தான் மகிழ்ச்சியை கொடுக்கும். எனக்கு திருமணம் ஆண் புதிதில் எவ்வளவு சிறு சிறு கோவில்கள் என் மனைவியுடன் சென்றுள்ளேன். என் மனைவி ஒரு சாமிப்பண்டாரம்!

    வித விதமா சாப்பாடு கட்டிக் கொண்டு வருவதில் என் மனைவிக்கு அலாதி இன்பம். பெரிய கோவில் என்றால் தட்டி கழித்துவிடுவேன். யாரு கூட்டத்தில் போய் கஷ்டப்படுவது.

    ReplyDelete
  15. ஒரு வேண்டுகோள்:
    இந்த கோவில்கள் பற்றி ஒரு தொகுப்பாக (under one label), உதாரணமாக "சிறு கோவில்கள்" என்று போட்டால் படிப்பது எளிது; செல்வதும் எளிது!
    நன்றி!

    ReplyDelete
  16. கோயிலின் உட்புறத்தினைப் படத்தில் பார்க்கும் போதே அங்கு ஒரு நாகம் குடியிருப்பது போல்தான் தெரிகிறது. நீங்கள் தைரியமான பொண்ணுதான். கோயிலின் உள்ளே பயமின்றி படம் எடுத்து இருக்கிறீர்கள். நல்லவேளை நாகம் ஏதும் அங்கு உங்கள் முன் படம் எடுக்கவில்லை. படங்களுடன் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!



    ReplyDelete
  17. இதுவரை கேள்விப்படாத கோவில். தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
  18. மிக்க நன்றி

    ReplyDelete
  19. I know so contact me 9578072596

    ReplyDelete
  20. கன்னியாகுமரி மாவட்டம்
    சுசீந்திரத்திருந்து 5Km
    தூரத்தில்
    குறண்டி என்ற கிராமத்தில்
    வரலாற்று சிறப்புமிக்க ஆனால்
    பலரால் அறியப்படாத
    கோரக்கநாதர்
    சித்தர் ஆலயம் உள்ளது,
    பல வருடங்களாக யாராலும்
    கவனிக்கபடாமல் இருந்த இந்த
    புனித
    தலமானது இப்போது இதன்
    மகத்துவத்தை உணர்ந்த சில
    மக்களாலும் மற்றும்
    ஜோதிடர்களின்
    வழிகாட்டலினாலும் தாம்
    நினைத்த
    காரியத்தை நிறைவேற்ற
    வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்....
    !
    இந்து அறநிலைத்துறையின்
    கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த
    கோவிலானது பராமரிக்க படாமல்
    இருப்பது பக்தர்களின் மனதில்
    சற்று வேதனைக்குரிய
    விசயமாகவே உள்ளது.

    ReplyDelete
  21. பஸ் ரூட் இறங்கும் இடம் கோயில் சார்ந்த ஏதாவது செல் நம்பர் கிடைக்குமா தரிசனம் செய்ய வேண்டும் ஐயா நன்றி

    ReplyDelete