Monday, March 03, 2014

பெண்கள் பாதுகாப்பு சட்டம் குடும்பத்தை சிதைக்குதா!? ஐஞ்சுவை அவியல்


வாங்க மாமா! எங்கப் போய் வர்றிங்க!? மூணாவது தெரு முனியனுக்கும் அவன் பொஞ்சாதிக்கும் சண்டை. அந்தப் புள்ள பொசுக்குன்னு போய் போலீஸ்ல பிராதுக் கொடுத்துட்டு வந்துருச்சு. இப்ப முனியன் ஜெயில்ல. அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சு அவனை வெளில கூட்டி வரலாம்ன்னு போனோம்.

ஏன் என்னாச்சு!? முனியன் அண்ணா ரொம்ப நல்லவராச்சே! அதிர்ந்துக் கூட பேச மாட்டாரே!!

ம்ம் அதான் நிஜம். முனியன் பொண்டாட்டி செல்வி தன்னோட நகைகளை தன் அண்ணன்கிட்ட கொடுத்திருக்கு. தன்கிட்ட சொல்லிட்டு கொடுத்திருக்கலாமில்ல! இது என்ன உன் அப்பா சம்பாதிச்சுக் கொடுத்ததான்னு முனியன் கேட்டிருக்கான். ரெண்டுத்துக்கும் சண்டை வந்திருக்கு. உடனே, போலீஸ்ல போய் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்துறான்னு சொல்லி அழுதிருக்கு. பொம்பளைக் கண்ணீரைப் பார்த்ததும் என்ன ஏதுன்னு விசாரிக்காம முனியனை தூக்கி உள்ள வச்சுட்டாங்க.

இப்பலாம் யாரையாவது பழைவாங்கனும்ன்னு நினைச்சா உடனே ஈவ் டீசிங், பாலியல் கொடுமை முயற்சி, வரதட்சணைக் கொடுமைன்னு பிராது கொடுக்குறதுதான் பேஷனாப் போச்சு!! மகளிர்க்காக மகளிர் காவல் நிலையம் வந்தாலும் வந்தது பொய் புகார்கள் அதிகமாப் போச்சு!!

ம்ம்ம்ம்ம் நீங்கச் சொல்றதும் சரிதான் மாமா!  சென்னைல உமான்னு ஒரு பொண்ணு கொலையாகிப் போச்சு! தெரியுங்களா!?

ம்ம்ம் கொலையானதும் தெரியும், கொலையாளிகளைப் பிடிச்சதும் தெரியும்.அதுக்கு முன்ன நடந்த கலாட்டாக்களும் தெரியும். வழக்கத்தை விட முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு உமா ஏன் கிளம்புனாங்க!? வீட்டுக்கு தெரியாத உமாக்கு எதாவது மறுபக்கம் இருக்கான்னு!? ஆயிரம் கேள்விகள்.

டெல்லி நிர்பயா விசயத்துல ராத்திரில, ஆண் நண்பரோட போனதுதான் காரணம்ன்னு வாய் கிழிய பேசினவங்க இப்ப என்ன சொல்லுவாங்க. உமா நடுராத்திரில போகலை, உடல் தெரிய உடை அணியலை!! ஆண் நண்பருடனும் செல்லலை!ஆனாலும் உமாவின் சிதைவுக்கு என்னக் காரணம்!? ஆரம்பத்துல இருந்தே நம்ம வீட்டுல ஆணை விட பொம்பளை பிள்ளைங்க மட்டம்ன்னு சொல்லிச் சொல்லி வளர்க்குறதுதான் காரணம். பெண்ணுக்கும் உணச்சி, மனம்  உண்டுன்னு பசங்களுக்கு சொல்லி வளர்க்குறாமா!? இல்லியே!!  எளியோரை வலியோர் வதைப்பது நம்ம சமூகத்துல சகஜம். தன்னைவிட எளியவரான பெண்ணை, ஆண்கள் வதைப்பதும் சகஜம்தான்னு நினைச்சு நடந்துக்குறாங்க.

நீங்க சொல்றதுலாம் சரிதான் மாமா! ஆனா, பெண்களும், எங்கப் போனாலும் வீட்டுல உண்மையான தகவலைச் சொல்லிட்டுப் போகனும், தனிமையான இடத்துக்குப் போக நேரும்போது கொன்ச நேரம் காத்திருந்து அந்தப் பக்கம் போகும் ஆட்கள் துணையோடு போகலாம். காதலன், உறவினரே ஆனாலும் தனிமையில் போறதை தவிர்க்குறது நல்லது. முடிஞ்ச அளவுக்கு எதாவது தற்காப்புக் கலையைக் கத்துக்குறதும் நல்லது.

நீ சொல்லுற பாயிண்டும் நல்லாதான் இருக்கும் புள்ள.
சீரியசான விசயமாவேப் பேசிட்டோம். என் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்குப் போயிருந்த சமயம். ராஜியோட பையன் அப்புக்கு அப்ப 5  இல்ல ஆறு வயசிருக்கும், நான்  போன நேரம் ராஜி வீட்டுக்கு அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பாட்டி வந்திருந்தாங்க. ராஜி அந்தப் பாட்டிக்கிட்ட நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வருசமாகப் போகுது. இன்னும் தாத்தா பேர் தெரிஞ்சுக்கல. தாத்தா பேர் என்னன்னு கேட்டா.

அதுக்கு அந்த பாட்டி தாத்தா பேரு ரெண்டுப் பேரும்மான்னு சொன்னாங்க. உடனே, அப்பு என்னாது!!?? உங்க வீட்டுல தாத்தா ரெண்டு பேரான்னு கேட்டதும், பாட்டி ஒரு நிமிசம் திகைச்சாலும் உடனே பாட்டி சிரிச்சுட்டாங்க.

உன் ஃப்ரெண்டை போலவே அவ பையனும் எகணை மொகனையாவே சிந்திக்குறான் பாரு. சரி நான் ஒரு ஜோக் சொல்லவா புள்ள!!??
சொல்லுங்க மாமா!

டீச்சர்: உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் அனைவரும் நடிகர்கள்.

மாணவி: சார்! சார்!! அப்போ எனக்கு விஷால ஜோடியா போடுங்க சார்!
டீச்சர்: !!!!!!!!!!????????
நீங்க ஜோக் சொன்னீங்க. நான் ஒரு விடுகதை கேக்குறேன் அதுக்குப் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!


நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அதெல்லாம் என்ன கல்!?
வெயில்ல அலைஞ்சது தலை வலிக்குது! ஒரு காஃபி போட்டு கொண்டு வா! அப்புறம் பதில் சொல்றேன்.

விடை தெரியலைன்னாலும் சமாளிக்குறதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல மாமா! இருங்க காஃபி போட்டு கொண்டாறேன். 

43 comments:

  1. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.. பயணிகள் நிழற்குடை, மொறுமொறு மிக்சர், கலர் பென்சில், ஐந்சுவை அவியல் ன்னு ஒரே நாள்ல வருதே.. அந்த பூ கிராபிக்ஸ் அழகு.. நானும் அதுபோல ட்ரை பண்றேன்.. ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ட்ரைப் பண்ணுங்க சாரே!

      Delete
  2. //மகளிர்க்காக மகளிர் காவல் நிலையம் வந்தாலும் வந்தது பொய் புகார்கள் அதிகமாப் போச்சு!!// உண்மைதானுங்கோவ்..

    ReplyDelete
    Replies
    1. அக்கா எப்பவும் உண்மைதான் பேசுவேன் ஆவி! இந்த கமெண்ட் படிச்ச என் பையன் அப்பு சிரிக்குறான்.

      Delete
    2. just read below webside about FALSE dowry case (498a)

      http://ipc498a-victim.blogspot.com

      Delete
  3. பொண்ணுங்க ஏன் அழகா பொறக்குறாங்க.. அதுதான் தப்பு.. அப்புடீன்னு வாதாடினாலும் வாதாடுவாங்க அக்கா ..

    ReplyDelete
    Replies
    1. அழகாய் பிறப்பதோ வெளியில் செல்வதோ தப்பில்ல ஆவி! ஆனா, பெண்கள் பாதுகாப்பாய் நடமுடியாத இடங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கத்தான் சொல்றேன். அஞ்சுவது அஞ்சாமை பேதமை இல்லையா!?

      Delete
  4. ஹஹஹா ஹிஹிஹி ஹுஹுஹு..

    ஜோக்குன்னு சொல்லீட்டீங்க.. சிரிக்காம போக முடியுமா? :)

    ReplyDelete
    Replies
    1. ஆவி சிரிப்புங்கறது சரியாய்தானே இருக்கு!!

      Delete
  5. விடுகதையா.. விடு ஜூட் ஆவி!!

    ReplyDelete
    Replies
    1. மேல் மாடி காலியா ஆவி!?

      Delete
  6. அமெரிக்காவில் வெளிவரும் தென்றல் மாத இதழில் 'வலையுலகின் வளைக்கரங்கள்' என்ற தலைப்பில் உங்களின் வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சித்ரா!

      Delete
    2. அமெரிக்கா புகழ் அம்மணிக்கு எனது வாழ்த்துக்கள்

      Delete
    3. ஐஞ்சுவை அவியலில் கலக்கும் உங்களுக்கு கூடிய சீக்கிரம் ஒபாமா கூட சாப்பிட அழைப்பு வரும்...அதனால இப்பவே ஜீன்ஸ் கோட்டு சூட்டு எல்லாம் போட்டு பழகிங்கோ சகோ

      Delete
    4. ஏன் பட்டுப்புடவைக் கட்டி வந்தா ஒபாமா பேச மாட்டாரா!?

      Delete
  7. ஐஞ்சுவை அவியல் நன்று!சில வேளைகளில் சில பெண்கள்..........உலகில் புரிந்து கொள்ள முடியாத ..........சரி விடுங்கள்.சட்டங்கள் தவறான நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை.தவறாகப் 'பயன்படுத்த' அல்ல!

    ReplyDelete
    Replies
    1. காலப்போக்கில் இதுவே எதையும் தவறாகப் பயன்படுத்துவதே வழக்கமாகிவிட்டது.

      Delete
  8. //நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அதெல்லாம் என்ன கல்!//
    இதென்ன சிக் "கல்"

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டுல காலை டிஃபன் பொங்கல்!?

      Delete
    2. //உங்க வீட்டுல காலை டிஃபன் பொங்கல்!//
      இல்லையே

      Delete
  9. அவியலின் சுவை அருமை! உமா மகேஸ்வரி கொலையானது அதிர்ச்சியான ஒன்று. பெண்கள் பாதுகாப்பு குறித்து மென்பொருள் நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். பெண்களும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உங்க பையன் பாட்டியை கேட்டானே ஒரு கேள்வி? சூப்பர் போங்க! கிராப்ட் ஒர்க்கில் மட்டுமல்ல கிராபிக்ஸ் ஒர்க்கிலும் கலக்குறீங்க! எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித்தரலாமே! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. அது நெட்டில் சுட்டப் படங்க சகோ!

      Delete
  10. இன்னைக்கு அவியலில் பச்சைமிளகாய் தூக்கல் !
    பாருங்க சகோக்கள் எல்லாம் இந்த சட்டத்தையும்,
    சகோதரிகள் எல்லாம் இதன் அவசியத்தையும் நினைத்து
    கண்ணீர் விடுறாங்க பாருங்க !!

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தின் அவசியம் சரிதான். ஆனா, அநாயசமாய் பயன்படுத்தக் கூடாதுன்னுதான் சொல்றேன்.

      Delete
  11. பல்சுவை அவியல்! சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  12. சுவையான அவியல்... கல்லு தான் என்னென்னே புரியலை....

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் யோசிங்க ஸ்பை.

      Delete
  13. ஐஞ்சுவை அவியல் அருமை சகோதரி...

    1. விக்கல்
    2. உப்புக்கல்
    3. கறுக்கல்

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் அண்ணா

      Delete
  14. +1
    498a பற்றி மாமியார்கள் கருத்து என்ன?
    மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
    ஹலோ! நான் குறிப்பிடும் மாமியார்கள் பையனைப் பெற்ற அம்மணிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பள்கி

      Delete
  15. நான் விரும்பித் தொடரும் பதிவர்
    அகில உலகப் புகழ் பெறுவது அதிக
    மகிழ்வளிக்கிறது
    புகழும் பதிவுகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தங்களாஇப் போன்ற உறவுகளின் ஆசியும், ஆதரவும்தான் அப்பா!

      Delete
  16. அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  17. இப்பலாம் யாரையாவது பழைவாங்கனும்ன்னு நினைச்சா உடனே ஈவ் டீசிங், பாலியல் கொடுமை முயற்சி, வரதட்சணைக் கொடுமைன்னு பிராது கொடுக்குறதுதான் பேஷனாப் போச்சு!! மகளிர்க்காக மகளிர் காவல் நிலையம் வந்தாலும் வந்தது பொய் புகார்கள் அதிகமாப் போச்சு!!//

    அப்படியா சொல்றீங்க? எல்லாரையும் சொல்லிற முடியாது. சில புகார்கள் உண்மையாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  18. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இதழில் தங்களது வலைத்தளம் பற்றி வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    அவியலும் சிறப்பாக இருந்தது. விக்கல் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது....:))

    ReplyDelete
  19. அமெரிக்காவிலும் தங்கள் புகழ் பரவியதற்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  20. நல்ல அவியல்.....

    தென்றல் இதழில் உங்கள் வலைத்தளம் பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி தந்தது.

    ReplyDelete