Monday, June 10, 2013

குழந்தைக்கு பேர் வைக்குறதுல இப்படியும் ஒரு நன்மையா?! - ஐஞ்சுவை அவியல்

 
ஏனுங்க மாமா! நம்ம பூவாத்தாளுக்கு பொம்பளை புள்ளை பொறந்திருக்கு. அதுக்கு மாடர்னா பேரு வெக்க ஆசைப்படுறா. நான் திட்டிட்டு வந்தேன்..,  தமிழ்ல அழகான பேருலாம் இருக்கு. அதுல ஒண்ணு வை. இல்லாட்டி உன் பாட்டி, அம்மா, மாமியார் பேரு வை.., அப்படியும் இல்லாட்டி எத்தனை சாமி நம்மளை சுத்தி இருக்கு அதுல ஒரு பேரை வைடின்னு சொல்லிட்டு வந்துட்டேன் மாமா.

ஏன் புள்ள? அவ ஆசையில என்ன தப்பு? மாடர்னா பேர் வைக்கட்டுமே! அதை விட்டு லட்சுமி, மாரியாத்தான்னு கூப்பிட முடியுமா? அப்படி கூப்பிட்டாதான் என்ன யூஸ்?!

லூசு போல பேசாத மாமா.., ஸ்ரீரங்கத்துல ஒரு அம்மாவும், பிள்ளையும் இருந்தாங்க. அந்த பையனோட பேரு ரங்கன். ஒரு நாள், அந்த பையன் குளிக்க ஆத்துக்கு போறேன்னு சொல்லிட்டு போயி ரொம்ப நேரம் ஆகிட்டுது. அவன் வரவே இல்ல. அந்தம்மா, தன் மகனுக்கு பிடித்த புளித்த கீரை கடைந்து, சோறு வடிச்சு காத்திருக்கா..,

ம்ம் அப்புறம் புள்ள!

சூடு ஆறிட்டா டேஸ்ட் மாறிடும்ன்னு நினைச்சு..  தெருவில் இறங்கி ரங்கா! ரங்கா!ன்னு சத்தமா கூப்பிட்டா.., வீட்டுக்கும் ஆற்றுக்கும் தூரம்ங்குறதால அது அந்த ரங்கன் காதில் விழவேயில்லை.., ஆனா,காவிரியையும் தாண்டி, ராஜகோபுரத்தையும் தாண்டி, கருடாழ்வார் சந்நிதியையும், திருமணத் தூணையும் தாண்டி சயனத்தில் இருந்த ரங்கநாதரின் காதில் அது விழுந்தது. ஆஹா! இப்படி அன்போடு கூப்பிட தனக்கொரு அம்மா இல்லியேன்னு ஏங்க ஆரம்பிச்சுட்டார்.

சரி, அந்த அம்மா, ராங்கா! ரங்கா!ன்னு தானே கூப்பிட்டாங்க. அதனால, அந்த ரங்கன் போனால் என்ன? நான் போனால் என்னன்னு? அந்த பையன் உருக்கொண்டு அந்த வீட்டுக்கு போய்ட்டார். அம்மா! ஆத்துல குளிச்சதால் பசிக்குது.., சாப்பாடு எடுத்துவைன்னு சொல்லிக்கிட்டே தட்டெடுத்துக்கிட்டு உக்காந்துட்டார். அந்த அம்மா, சோறும், புளிச்ச கீரையும் பரிமாறினாங்க, நீயே பிசைந்து ஊட்டி விடேன்!... பிள்ளை ஏக்கமாகக் கேட்டான்.ஒருநாளும், தன் பிள்ளை இப்படிகேட்டதில்லையே! அம்மா ஆனந்தமாக ஊட்டி விட்டா. ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்ட ஸ்ரீரங்கன்.., அம்மா! என்றுமில்லாம இன்னிக்கு சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லி மொத்தத்தையும் சாப்பிட்டு , பாடசாலைக்கு நேரமாச்சுன்னு ஓட்டமா ஒடிட்டார் கடவுள்.

கொஞ்ச நேரத்துல குளிக்க போன ரங்கன் திரும்பி வந்து அம்மா பசிக்குது.., சாப்பாடு போடுன்னு சொன்னதை கேட்டு.., இப்போதானேடா சாப்பிட்டு போனே! அதுக்குள்ள எப்படி பசிக்கும்ன்னு அம்மா கேட்டாங்க.  என்னம்மா சொல்றே! அப்போ குளிக்க போன நான் இப்போதானே வர்றேன்னு கோவமா சொன்னான் ரங்கன். அப்போ யார் வந்து சாப்பிட்டு போனதுன்னு யோசிக்கும்போது.., அந்தம்மாவோட மனக்கண்ணில் ரங்கநாதன்,ஆதிசேஷனில் சயனித்த கோலத்தில், அவள் கண்முன் காட்சி தந்தான். அடுத்து, அவள் பிள்ளையாக மாறி தோற்றமளித்தான்.

ரங்கா! ரங்கா!...நீயா? இங்கு வந்து என் கையால் சாப்பிட்டே. நான் ஏதுமறியாதவளாச்சே!  வேதமும் மந்திரமும் தெரியாதவளாச்சே! என் பிள்ளைக்கு உன் பெயர் வைத்ததால், எனக்கு இப்படி ஒரு கொடுப்பினையா?ன்னு பரவசத்தின் உச்சிக்கே போய்ட்டாங்க அந்தம்மா. இன்னிக்கும், ரங்கநாதர் புளிப்புக்கீரை சாப்பிட்ட, அந்த்தாய் வசித்த ஜீயர்புரத்திற்கு எழுந்தருளுகிறார். அந்தக்கீரையும் பிரசாதமாகவும் தரப்படுது மாமா.

அட, அப்பிடியா! கடவுள் பெயரை அதன் அர்த்தங்கள் தெரியாம, முழு மனசா தூய அன்போடு கூப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும்ன்னு சொல்றே. இதுவும் சரிதான்னுதான் தோணுது புள்ள. அதை விட்டு வாயில நுழையாத பேரை ஏன் வைக்கனும்?!ஆமா! நம்ம பய சின்ன மண்டையன் எங்கே?! 
                      


ஏனுங்க மாமா! எந்த நினைப்புலதான் இருக்கீரு நீங்க?!  இன்னிக்குஇஸ்கோலு தொறந்திட்டாங்க. அவன் இஸ்கோலுக்கு போய் இருக்கான்,

ஓ அப்பிடியா புள்ள! ம்ம் நேத்து கடைவீதில ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனேன். அங்க கூட்டம் நிரம்பி வழிஞ்சுது புள்ள. நாமலாம் இஸ்கோலுக்கு போகும்போது ஒரு மஞ்சப்பைல, ஒரு தட்டு, சிலேட்டு, சிலேட்டுக்குச்சி, ஒரு நோட்டுதான் இருக்கும் எட்டாப்பு வரைக்கு. புக்குலாம் குடுக்க ஒரு மாசம் ஆகும். ஆனா, இப்போ லீவுலயே புக்குலாம் குடுத்து அட்டை போட்டு வரசொல்றாங்க. நாம நியூஸ்பேப்பர்லதான் அட்டை போட்டு போவோம். ஆனா, இப்போ, பள பள பிரவுன் சீட்டுல அட்டை போட்டு.., பல டிசைன்ல வர்ற லேபிள்லை ஒட்டி, யூனிஃபார்முக்கு மேட்சா வாட்டர் கேனு, பென்சில்பாக்ஸ், லஞ்ச் பேக், பென்சில்,பேனா, இஸ்கோலு பேக்ன்னு என்னா அழகா போகுதுங்க இஸ்கோலுக்கு!!?

ம் ம் ம்ம் ஆமா, மாமா இது ஒரு ஃபேசனா போய்ட்டுது.., இஸ்கோலு திறக்குற அன்னிக்கு பூஜை, புது புது பொருட்கள் வாங்குறதுன்னு செம களை கட்டுது...,
 நீங்க என்னமோ இஸ்கோலுக்குலாம் போன மாதிரி பெருமை பீத்திக்குறீங்களே! ஒரு கணக்கு சொல்றேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்...,
                                  


யாருக்கிட்டபோட்டி?! என்கிட்டயா? கேளு புள்ள.., ஒரு நொடில சொல்லிடுறேன் பதிலை...,

ம் ம் ம் பார்க்கலாம் உங்க சாமர்த்தியத்தை..., உங்க சட்டையைவிட, உங்கள் ஃபேண்டின் விலை 100 ரூபாய் அதிகம்.., இரண்டும் சேர்ந்து 110 ரூபாய் எனில், தனித்தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க. பார்க்கலாம்!!

நான் சொல்றது இருக்கட்டும்.. ராஜி பிளாக்குக்கு வர்றவங்ககிட்ட முதல்ல கேப்போம்.., அவங்க சொல்லட்டும்.., அப்புறம் நான் பதில் சொல்றேன்.  

ம் ம் ம் அவங்ககிட்ட சவாலா?! பார்க்கலாம்! 
                                   


சரி, அவங்க சொல்றதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லவா?!
என்னது?!
கணவன்:  முன்னலாம் கொஞ்சமா சாப்பிடுவே! இப்போ அதிகமா சாப்பிடுறியே ஏம்மா?! உடம்புக்கு எதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போலாமா?!
மனைவி: அதெல்லாம் ஒண்ணுமில்ல! முன்ன உங்களுக்கு ஒழுங்கா சமைக்க வரலை. இப்போ நல்லா சமைக்குறீங்க, நானும் நல்லா சாப்பிடுறேன்..,

ம்க்கும் எப்போ பார்த்தாலும் பொண்டாட்டியை கேலி பண்ணுறதே இந்த ஆம்பிளைங்களுக்கு பொழைப்பாகிட்டுது.. எம்புட்டு வேலை செய்யுறாங்க பொம்பளைங்க.., ஒரு  நாளைக்கு வீட்டை விட்டு போனா, எப்படி வீட்டை அலங்கோலமாக்கி வெச்சிருக்கீங்க நீங்க?

ம்க்கும் என்னடி பெரிய வேலை, ச்மைக்குறதும் கூட்டுறதுமா??

இது மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்.., க்டைக்கு போய் நீங்க வாங்கி வரும் பொருளை அந்தந்த டப்பவுல போட்டு வைக்கனும்..,  அப்பப்போ அதை சரி பார்க்கனும் பருப்பு, தான்ய பொருட்களில் சீக்கிரம் வண்டு வச்சிடும்.., அதை வெயிலில் கொட்டி, சலிச்சு அள்ளி வைக்கனும்.  அதிகமா உபயோகப்படுத்தும் பொருட்களை நாம் சின்ன சின்ன பிளஸ்டிக் டப்பகளில் போட்டு வைக்கனும். உதாரணத்துக்கு கடுகு, எண்ணைய், உளுந்து, க.பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்கள் தூள், மற்றும் இதர தூள்வகைகள், அரிசில பட்டை மிளகாயை போட்டு வச்சா அதுல  பூச்சிவராது..,, அதில்லாம அ அரிசி அளக்கும் படி இல்ல டம்பளரை இவை எப்போழுதும் அதிலேயே போட்டு வெச்சா  தேட வேணாம்.

அதில்லாம..,  காய்கறிகளை வாங்கி வந்ததும் கழுவி ஈரம் போக காய செச்சு தனித்தனி பிளாஸ்டிக் கவர்ல எடுத்து வைக்கனும் அப்பதான் எல்லாத்தையும் கொட்டி தேடுற அவஸ்தை இருக்காது. எலுமிச்ச காய்ந்து போகாம இருக்க, கவர்ல இல்லாட்டி அலுமின்யம் ஃபாயில் பேப்பர்ல போட்டு எடுத்து வைக்கலாம். கொத்தமல்லி, புதினா, கீரை வகைகளை, வேர்லாம் கிள்ளி, ஆய்ந்து, அலசி, ஈரம் போன பின் கவர்ல எடுத்து வச்சுக்கலாம். பச்சை மிளகாயை காம்பை கிள்ளி வெச்சா சீக்கிரம் பழுக்காது.., இஞ்சி, பூண்டு அரைச்சு ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா கரண்ட் கட் ஆனாலும் பதட்டபடாம சமைக்கலாம்.., இப்படி நாள் முச்சூடும் எதாவது வேலை இருந்துக்கிட்டேதான் இருக்கும் மாமா.

அம்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன். நிறைய வேலைதான் இருக்கு.., ஒத்துக்கிறேன். நீ போய் வேலை பாரு தாயி.., நான் வேணா எதாவது ஹெல்ப் பண்ணட்டா?!

ஒண்ணும் வேணாம் நொட்டை சொல்லு சொல்லாம இருந்தாலே போதும்..,
 

18 comments:

  1. விடுகதைக்கு விடை என்ன ?

    ReplyDelete
  2. சட்டை 5
    பேன்ட் 105
    சரியா ?

    ReplyDelete
  3. கடவுள் பெயர் வைத்தால் இறக்கும் தறுவாயில் பையனை அழைத்தாலும் கடவுளை அழைத்த மாதிரி!நல்ல குட்டிக் கதை

    ReplyDelete
  4. இவ்வளவு தான் வீட்டு வேலைகளா...? வீடு நிர்வாகம் பெரிய விசயம்...

    ReplyDelete
  5. ரங்கன் கதை அருமை! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. நான் கணக்குல வீக்கு

    ReplyDelete
  7. கடவுள் பெயர் வைத்தால் இன்னொரு நன்மை இருக்கு சகோ. கல்யாணம் ஆன பின் மனைவி நம்மை பேர் சொல்லி திட்ட முடியாதே. அதனால யாரவது உங்க மனைவி உங்களை திட்டுனா என்று கேட்டால் அது என்னை இல்லைங்க என்று ஈஸியா தப்பித்து கொள்ளலாம். அதனால இந்த பதிவை படிக்கும் தாய்மார்களே உங்கள் ஆண் குழந்தைக்கு கடவுள் பெயரை வைத்து எதிர் காலத்தில் பெண்கள் கையில் அகப்பட்டு கொண்டு பாடுபடுவதில் இருந்து தப்பித்து கொள்ள வழி செய்யுங்கள். காரணம் உங்கள் பிள்ளையின் மானம் உங்கள் கையில்தான்..

    ச்சே எங்கம்மா எனக்கு கடவுள் பெயர் வைக்கல இப்ப பாருங்க என் மனைவி என்னை பெயர் சொல்லி திட்டுறாங்க.....ஆனாலும் எனக்கு மானம் எல்லாம் போகல காரணம் மானம் இருந்தா தானே போவதற்கு... ஹீ.ஹீ.ஹீ

    ReplyDelete
  8. ///கணவன்: முன்னலாம் கொஞ்சமா சாப்பிடுவே! இப்போ அதிகமா சாப்பிடுறியே ஏம்மா?! உடம்புக்கு எதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போலாமா?!
    மனைவி: அதெல்லாம் ஒண்ணுமில்ல! முன்ன உங்களுக்கு ஒழுங்கா சமைக்க வரலை. இப்போ நல்லா சமைக்குறீங்க, நானும் நல்லா சாப்பிடுறேன்..,///

    சகோ நீங்க கொஞ்சம் வெயிட் போட்டு இருப்பதற்கு இப்ப காரணம் புரிஞ்சு போயிடுச்சு.. ஆனா அதுக்காக நம்ம குடும்ப விஷயத்தை இப்படியெல்லாம் போட்டு உடைக்க கூடாது ஓகேவாம்மா....

    ReplyDelete
  9. //ம்க்கும் என்னடி பெரிய வேலை, ச்மைக்குறதும் கூட்டுறதுமா??///

    ஆமாம் இதை நாங்க தினசரி செய்ய வேண்டியிருக்கிறது ( அதாவது ஆண்கள் உங்க வீட்டுகாரரும் & உங்கள் சகோவாகிய நானும்தான்)

    ஆனா நீங்க மாசத்திற்கு ஒருக்காக இப்படி பொடிவாங்கி , அரிசி சாமான் வாங்கி அதற்குரிய இடத்தில் போட்டு வைப்பதற்கு இப்படி சலிச்சுகீறிங்களே சகோ

    ReplyDelete
  10. குட்டி கதை,, சூப்பர் ..

    ReplyDelete
  11. ஆமா! நம்ம பய சின்ன மண்டையன் எங்கே?!

    முடிச்ச விதம் நல்ல நகைச்சுவை !

    ReplyDelete
  12. காய்கறிகளை வாங்கி வந்ததும் கழுவி ஈரம் போக காய செச்சு தனித்தனி பிளாஸ்டிக் கவர்ல எடுத்து வைக்கனும் அப்பதான் எல்லாத்தையும் கொட்டி தேடுற அவஸ்தை இருக்காது. எலுமிச்ச காய்ந்து போகாம இருக்க, கவர்ல இல்லாட்டி அலுமின்யம் ஃபாயில் பேப்பர்ல போட்டு எடுத்து வைக்கலாம். கொத்தமல்லி, புதினா, கீரை வகைகளை, வேர்லாம் கிள்ளி, ஆய்ந்து, அலசி, ஈரம் போன பின் கவர்ல எடுத்து வச்சுக்கலாம். பச்சை மிளகாயை காம்பை கிள்ளி வெச்சா சீக்கிரம் பழுக்காது.., இஞ்சி, பூண்டு அரைச்சு ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா கரண்ட் கட் ஆனாலும் பதட்டபடாம சமைக்கலாம்// ஆஹா.. இப்படி எல்லாம் பயனுள்ள டிப்ஸ் ஆ!

    ReplyDelete
  13. ரொம்ப சுவராஷ்யமா இருந்தது ..நல்ல தொகுப்பு அப்படியே சிறியவயதில் நியூஸ் பேப்பரில் அட்டை போட்டதையும் அதுவும் மிக்கியமான பரிட்சை நோட்டுக்கு தான் பிரவுன் கலர் அட்டை கிடைக்கும் ..ஆனா இப்ப எல்லாத்துக்கும் வித விதமான அட்டை வாழ்த்துக்கள் ..மலரும் நினைவுகளோடு ஒரு பகிர்விற்கு

    ReplyDelete
  14. குட்டி கதை நன்றாக இருந்தது, கணக்கு புதிருக்கு விடை ராஜபாட்டை ராஜா விடையை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  15. கணக்கு புதிருக்கான விடை
    $5சட்டை,$105பேண்ட்

    ReplyDelete
  16. அட சுவையான ஐஞ்சுவை அவியல்.....

    சின்ன மண்டையன் - :))))

    ReplyDelete