Friday, June 14, 2013

திருமாணிக்குழி - புண்ணியம் தேடி ஒரு பயணம்..,

வீட்டுலயே இருக்குறதுன்னா பெண்களுக்கு கொஞ்சம் போர்தான்.., வாய் திறந்து சொல்லாவிட்டாலும்..., சமையல், வீடு துடைக்குறது..,துணி துவைக்குறதுல இருந்து சில மணி நேரம் விடுதலையாகி வெளிய போய் ரிலாக்சா இருந்து வரனும்ன்னு தோணும்.., சிலருக்கு பீச், சிலருக்கு ஃப்ரெண்ட்ஸ் வீடு.., சிலருக்கு சினிமா, சிலருக்கு கோவில்ன்னு..,                                          
அதும் இந்த விடுமுறையில பசங்களை வீட்டில் வச்சுக்கிட்டு.., எங்க வீட்டு வாண்டுகளையே சமாளிக்க முடியாது.., இதுல மச்சினர், மூத்தார் பிள்ளைங்களும்.., மனசுக்கு சந்தோசமா இருந்தாலும்.., வீட்டு வேலைகள் சில நேரம் எரிச்சல் தந்ததால எல்லாரும் எங்கிட்டாவது போகலாம்ன்னு சொன்னதால.., எல்லாரும் கிளம்பிட்டோம்.., கோவில்,குளம்ன்னு..., அதையெல்லாம் இனி ஒவ்வொண்ணா பதிவா போடப் போறேன்..  ஏன் சகோஸ் ஜெர்க்காகுறீங்க? வாரம் ஒண்ணுதான்..., சரி இந்த வாரம் கடலூர் மாவட்டத்துல இருக்குறா திருமாணிக்குழின்ற ஊருல இருக்குற திருத்தலம் பத்தி பார்ப்போம்...,                  
இறைவர்திருப்பெயர்             : வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர்
                               மாணிக்கவரதர்.
இறைவியார்திருப்பெயர்     : அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.
தலமரம்                                         : கொன்றை.
தீர்த்தம்                                          : சுவேததீர்த்தம், கெடிலநதி.
வழிபட்டோர்                              : திருமால்.
தேவாரப்பாடல்கள்                : சம்பந்தர் -                                  
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம் 824 பாடலில் இக்கோவில் இடம்பெற்றிருக்குதாம்..,
பொன்னியல்பொருப்பரையன்மங்கையொருபங்கர்புனல்தங்குசடைமேல்
வன்னியொடுமத்தமலர்வைத்தவிறல்வித்தகர்மகிழ்ந்துறைவிடங்
கன்னியிளவாளைகுதிகொள்ளவிளவள்ளைபடர்அள்ளல்வயல்வாய்
மன்னியிளமேதிகள்படிந்துமனைசேருதவிமாணிகுழியே.

இந்த கோவிலோட தல வரலாறு பற்றி கோவில் குருக்கள் சொன்னது.., 
இந்தத்தலம் தேவாரப்பாடல்களில் "உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது .இதனால் 'உதவி ' என்பது ஊர்ப்பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்கும் பெயராகி இருக்கலாம். வடநாட்டு வணிகன் ”அத்ரி” என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும்.., இறைவன் 'உதவிநாயகர்.., ' இறைவி 'உதவிநாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு சான்றாக கல்வெட்டிலும் இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது. திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழி தீர ...,இங்கு, வந்து வழிபட்டதால் இக்கோயில் 'மாணிகுழி ' என்றும் பெயர்பெற்றது. (மாணி - பிரம்மசாரி)பெரியபுராணத்தில்..,சுந்தரர் கெடிலநதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும்.., அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.

நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப்பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது. .
சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது.( இத்திரையின்மேற்புறத்தில் ஏகாதசருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம்எழுதப்பட்டுள்ளது.)

மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலின் சிறப்புகள்:

சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில்இத்தலத்திற்கு வாமனபுரிஇந்திரலோகம்,  பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களாம் 
மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை  முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடக்குமாம்..,

இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.

இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம்  நடைபெறுகின்றது.

அருணகிரிநாதரின் திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன்பெயர், 'உதவிநாயகர் ', 'உதவிமாணிகுழிமகாதேவர் ' என்று குறிக்கப்படுட்டுள்ளது. 
இக்கோவில்.., திருப்பாதிரிப்புலியூர் பேருந்துநிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று.., கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயேகெடிலநதியின் தென்கரையில் கேபர்மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமாணிக்குழி வழியாகச்செல்கிறது.

இந்த ஸ்தலமானது மூர்த்தி ,தீர்த்தம்,வனம் ,கிரி ,நதி ,சங்கமம் ,ஆரண்யம் ,பதிகம் முதலியவைகளால் பிரசித்தி பெற்ற திவ்ய ஸ்தலம் ஆகும் 

இந்த ஸ்தல விநாயகர் பெயர் செல்வவினாயகர் மூஷிகனை சம்காரம் செய்து பக்தர்களுக்கு அனுகிரகதை செய்யச்சொல்லிஆணை இடுகிறார். ஆகையால், மற்ற திருஸ்தலங்களை போல அல்லாமல் இங்கே இருக்கும் மூஷிக வாகனம் பக்தர்களை நோக்கி இருக்கும் அது இவ்வாலயத்தின் சிறப்பு   சென்னை போன்ற பெருநகரங்களில்தான் லவ் பண்றாவங்க தொல்லைன்னா இங்கயும்.., நமக்கு அரேஞ்ச்டு மேரேஜ்.., அதான் இந்த பொசுங்கல்..,


இவ்வாலயத்தில் இருக்கும் 4 தூண்களும்  4 வேதங்கள்,  6சாஸ்திரங்கள் மனித வாழ்வுக்கு முக்கியம் என்பதால், 6 கால் சாஸ்திர மணபமாகவும்.., அதன் தெற்கு பிரகாரத்தில் 28 தூண்கள்.., 28 ஆக மண்டபத்தையும் குறிக்கிறது  என்பது வரலாறாம்.
அகத்திய முனிவர் சிவப்பெருமானை தரிசனம் செய்ய வரும்போது காட்சி தராமல் திரை மூடிய நிலையில் இருந்ததால் அவர் கோபித்துக் கொண்டு மலை அடிவாரத்தில் சிவலிங்கத்தை தோற்றுவித்து வழிப்பட்டார். அதுவே அகத்தியர் சுயம்பு லிங்கம் இக்கோவிலிருந்து 1 கிமீ தூரத்தில் மலை அடிவாரத்தில் இருக்கு. அதை படமெடுக்க அனுமதியில்லை.

மனிதனாக பிறந்து புண்ணியம் அடைய  ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் என்னும் வாக்கிற்கு இணங்க இக்கோவிலை ஒருமுறை சென்று தரிசித்திட்டு வாங்களேன் சகோ’ஸ்..,

சோழர் கால கட்டமைப்பு உடைய கோவில் இதுன்னு சொல்றாங்க...,

இவ்வாலயம்,  72 ஆயிரம், வருடங்களுக்கு முன்னே வாமனன் தரிசிக்க வரும்போது சிவ ப்பெருமான் ஆகாயத்திற்கும் பூமிக்கும் காட்சி கொடுக்கிறார்.., ஆகையால், வாமனன் சிவப்பெருமானை ஆத்மார்த்தமாக பூஜை செய்ய வேண்டும் என் குழிக்குள் சென்று அமர்ந்து பூஜைச் செய்ததால் திருமாணிக்குழி என்றும் அழைக்கப்படுவதாகவும் வரலாறு..,




அம்பிகையின் சன்னிதியில் முதலாம் குலோத்துங்க சோழன் முடி சூட்டி கொண்டாராம்..,அதன் அடையாளாமாய் 4 சிம்மத்தை வைத்திருக்கிறார். இதற்கு ஆதாரமாய், குலோத்துங்கன் வெட்டிய கல்வெட்டு ஒன்று இச்சன்னிதியில் உள்ளது..,

63 நாயன்மார்களுக்கும் சன்னிதியில் முக்கிய இடம்...,  

அட்வைஸ் நம்பர் 1: கோவில் வாசலில் சின்ன பெட்டிக்கடை கூட கிடையாது.., அதனால, கற்பூரம், தேங்காய், பழம், பூ லாம் போகும்போதே வாங்கி கொண்டு போறது நல்லது..,

அட்வைஸ் நம்பர் 2 : பிள்ளை, குட்டிகளை கூட்டி போகும்போது சாப்பிட, குடிக்கன்னு எதாவது கைவசம் கொண்டு போங்க. இல்லாட்டி, பசங்க நை நை ன்னு படுத்தி எடுப்பாங்க..,

அட்வைஸ் நம்பர் 3: கோவில் சுத்தி மரம், செடின்னு அதிகம் இல்லாததால் நட்ட நடு மத்தியானத்துல போய் வெயில்ல வேகாதீங்க.. காலையில இல்ல மாலையில போறது நல்லது..,

அட்வைஸ் நம்பர் 4 : ராஜி சொன்னதே வேத வாக்குன்னு எடுத்துக்கிட்டு பட்டுன்னு கிளாம்பிடாதீங்க.., அந்த இடத்துக்கு பக்கத்தில இருப்பவர்களிடம் விசாரித்து போய் வாங்க.. அடுத்த வாரம் வேற ஒரு கோவில் பத்தி சொல்றேன்.., வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?!

13 comments:

  1. அருமையான பதிவு தெரியாத ஒரு கோவிலை பத்தி தெரிந்து கொண்டோம் நன்றி ...தொடரட்டும் உங்கள் பக்தி பயணம்

    ReplyDelete
  2. தள விவரங்கள், கோவிலின் சிறப்புக்கள் அனைத்தையும் தொகுத்து படங்களுடன் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... கவனிக்க வேண்டிய அட்வைஸ்கள்... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான தரிசனப்பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அவ்வளவாக ஆர்வமின்மை ஆனா ராஜியின் எழுத்தில் இருக்கும் நகைச்சுவைக்காக முதல் மற்றும் கடைசி பத்திகள் படித்தேன்... ராஜி ராஜிதான்....

    ReplyDelete
  5. அருமையான கோவிலை அடையாளம் காட்டியமைக்கு நன்றி! அட்வைஸ்கள் மிகவும் உதவும்! நன்றி!

    ReplyDelete
  6. அறியாத கோயில்.. தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  7. படித்து மகிழ்ந்தோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அறியாத கோயில். படித்து மகிழ்ந்தேன் நன்றி

    ReplyDelete
  9. அறியாத கோயில், படித்து மகிழ்ந்தேன் நன்றி

    ReplyDelete
  10. பானூர்? பாலூர்?

    ஏன்னா அந்த வழியை பாலூர் வழி என்று சொல்வார்கள்....

    நல்ல கோவில் பற்றிய விவரங்களுக்கு நன்றி ராஜி!

    ReplyDelete
    Replies
    1. பாலூர்தான் சாகோ! கை ஸ்லிப்பாகி பானூர் ஆகிட்டு

      Delete
  11. படங்களுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.தொடருங்கள்

    ReplyDelete
  12. 7 வருடம் கழித்து படிக்கிறேன் இன்றும் அதே நிலை

    ReplyDelete