Tuesday, June 18, 2013

சின்ன புள்ளையா இருக்கும்போது இப்படித்தான் இருந்தேன்!!??

                                       


1. பென்சில் சீவி வர்ற தூளை, சாதம் வடிச்ச தண்ணில போட்டு நைட் ஃபுல்லா வெச்சா மறுநாள் ரப்பரா மாறி இருக்கும்ன்னு நம்புனேன்..,

2. Iceland ஐ இஸ்லேண்ட் ன்னு படிப்பேன்.., (இப்பவும் சில வார்த்தைகளில் இந்த தடுமாற்றம் உண்டு..,)

3. வெத்தலை, பாக்கு போட்டா படிப்பு வராதுன்னு நினைச்சுப்பேன்..,(ம்க்கும் இல்லாட்டி மட்டும் எல்லாத்துலயும் நூத்துக்கு நூறு எடுத்திடுவியாக்கும்ன்னு ஃப்ரெண்ட் சொன்னது நினைவிருக்கு..,)

3.விடுமுறைல   கொடிக்காப்புளி விதையை சுரண்டி பரிட்சை ரிசல்ட் தெரிஞ்சுக்கிட்டேன்..,(நம்ம ரிசல்ட் எழுதுன நமக்குதானே தெரியும்!!!)

4. கணக்கு வாத்தியார் ஆஸ்துமா குணமாக பெரிய ஊசியா போடுறதுக்காகவே டாக்டருக்கு படிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்.., (பின்னே கணக்கு தப்பா போட்டா நறுக்குன்னு கொட்டுனா இப்படித்தான் நினைக்கனும்..,)

5.ரோட்டுல பொணத்தை தூக்கிக்கிட்டு போனா, தலைமுடி பிடிச்சுப்பேன். (இல்லாட்டி நைட்டுல செத்தவங்க ஆவியா வந்து பிடிச்சுப்பாங்களாம்!!)

6.  தூங்குறப்போ சுத்துற ஃபேன் கழண்டு தலைமேல விழுதுட்டா என்ன பண்றதுன்னு கேக்குற  தம்பிக்கிட்ட.., இல்லடா, அது சுத்தி, சுத்தி தூர போய் விழும்டா உதாரணத்துக்கு பந்து பாரு.., அது அப்படித்தானே விழுதுன்னு புத்தி சொல்லுவேன். 

7. ஒரே ஒரு அண்டங்காக்கையை பார்த்தா ஞாபக மறதி வந்துடும்ன்னு சொன்னதை நம்பி அடுத்த அண்டங்காக்கையை தேடி ஓடி இருக்கேன்..,

8. கிரீம் பிஸ்கட் நடுவுல இருக்குற க்ரீமை மட்டும் சாப்பிட்டுட்டு, பிஸ்கட்டை ஒட்ட வச்சு வீட்டுல திட்டு வாங்குவேன்..,

9. சித்தி விநாயகர் போல, பெரியம்மா விநாயகர் இல்லியான்னு கேட்டு பூசாரிக்கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்..,

10.உள்ளே பூட்டி இருக்குற வீட்டுல காலிங்க் பெல் அடிச்சுட்டு ஓடி வந்துடுவேன்.., 

 11. லாரிக்குப் பின்னாடி  TATA ன்னு  இருந்தா , நமக்கு டாட்டா சொல்றாங்கன்னு நினைச்சு.., நானும் டாட்டான்னு கத்திச் சொல்லிக்கிட்டே கைக்காட்டுவேன்..,

12. டாக்டர் சிரிச்சு பேசிக்கிட்டே.., ஊசி போட்டா வலிக்காதுன்னு நம்புனேன் (நர்ஸ்கிட்டயா?ன்னு கமெண்ட்ல கும்மாதீங்க சகோஸ்)

13  ஒவ்வொருத்தர் வீட்டுல இருந்தும் ஒவ்வொரு பொருள் கொண்டுவந்து கல்லு வச்சு அடுப்பு மூட்டி  கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடுவோம். அடிப்பிடிச்ச வாசனை இருந்தாலும் ருசியா இருக்கும்...,

14. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10 பைசா, 20 பைசாவை வச்சு.., அது மேல ரயில் ஏறி இறங்குனா அது காந்தமா மாறும்ன்னு நினைச்சு காசை வேஸ்ட் பண்ணி இருக்கேன்..,

15. சூட்டுக்கொட்டையை நல்லா தேய்ச்சு பக்கத்துல இருக்குறா பசங்க கை, இல்ல தொடைல வச்சு ரசிச்சு இருக்கேன்.,

ஏற்கனவே இதுப்போல மொக்கையை பதிவா போட்டிருக்கேன். அதை படிக்க  இங்கயும்...., போங்க.. அடுத்ததை படிக்க அங்கயும்..,  போங்க..., 

 
 
 
 


22 comments:

  1. இந்த பதிவை முன்பே உங்கள் தளத்தில் படித்தாக ஞாபகம் சகோ

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ! இதே தலைப்புல இதுப்போல ஏற்கனவே 2 பதிவு போட்டிருக்கேன். வேணும்ன்னா அதோட லின்க் இணைக்கலாமா?

      Delete
    2. இணைக்கலாமே

      Delete
  2. பென்சில் சீவி வர்ற தூளை, சாதம் வடிச்ச தண்ணில போட்டு நைட் ஃபுல்லா வெச்சா மறுநாள் ரப்பரா மாறி இருக்கும்ன்னு நம்புனேன்..,///
    இது நானும் பண்ணிருக்கேன்

    ReplyDelete
  3. நாங்களெல்லாம் இப்பவும் அப்படியேதான் இருக்கோம்.

    ReplyDelete
  4. ஆனா இந்த தலைமுறை இழந்து விட்ட அற்புதமான அனுபவங்கள் நம் எல்லோரும் கடந்து வந்த காலங்கள் ..ஒரு நிமிஷம் கால சக்கரதினுள் நுழைந்து சிறிய வயதில் அனுபவித்த காலங்களின் வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் இனிமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ட்ரைன் னுக்கு கீழே காசு வச்சா காந்தம் ஆகும்னு நானும் நினச்சு வச்சுருக்கேன்

    ReplyDelete
  6. பால்யத்தின் பக்கம் எப்போதும் சுவாரஸ்யம்தான் அந்த நினைவுகள் தான் இன்றுவரை வாழ்க்கையை ஓட்ட பெற்றோல்போல துணை புரிகிறது

    ReplyDelete
  7. நீங்களுமா? நானும் இவை எல்லாமே செய்ததுண்டு, மாங்காய், புளிக்காய் எல்லாம் திருடி தின்னதும் உண்டு. பழைய வாழ்வின் ஓர்மைப்படுத்தல்கள், மிக்க மிக்க நன்றி. :)

    ReplyDelete
  8. பெரியம்மா விநாயகர், டாட்டா..... ஹா......ஹா......

    சூட்டுக் காய் நாங்களும் செய்திருக்கின்றோம்.

    ReplyDelete
  9. ராஜி... நீங்க அப்பவே அப்படியா? கலக்கல்தான்.

    ReplyDelete
  10. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10 பைசா, 20 பைசாவை வச்சு.., அது மேல ரயில் ஏறி இறங்குனா அது காந்தமா மாறும்ன்னு நினைச்சு காசை வேஸ்ட் பண்ணி இருக்கேன்..,

    இத நான் பண்ணிருக்கேன். காசு ரெண்டா போனதுதான் மிச்சம்...

    ReplyDelete
  11. நானும் இதில சிலதை செய்திருக்கேன்..இப்ப நினச்சுப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது..

    ReplyDelete
  12. நமக்கு முந்தி பிறந்தவங்களும் நம்மள போல தான் இருந்திருப்பாங்க போல.....ஹஹஹஹ

    ReplyDelete
  13. இப்போ எப்படி? என்ன கண்டுபிடிப்பு?

    ReplyDelete
  14. நினைவுகள்.. எப்போதும் சுகம்...

    ReplyDelete
  15. ninaiivukalai thanthathu...


    nantri sako..

    ReplyDelete
  16. அடடா, அப்போ நாம எல்லோருமே சின்ன வயசுல ஒரே மாதிரிதானா? அந்த பென்சில் - ரப்பர் மேட்டர் எத்தனைவாட்டி செஞ்சு பார்த்திருப்போம்ம்!??

    ReplyDelete
  17. ம்ம்ம்... சின்ன புள்ளையாகவே இருந்திருக்கலாம்....

    ReplyDelete