Tuesday, August 13, 2013

ரயில் சினேகம்


எப்புள்ளியிலும் சந்திக்கா
 நீண்ட நெடும் தண்டவாளங்கள்!!
மாறும் மனிதர்களையும், 
மாறா அவர்தம் நினைவுகளையும் சுமந்து
நிற்கிற இரயில் வண்டிகள்.

பயணங்கள் புதிதில்லை. ஆனால்,
பாரங்கள் மட்டும் புதிது!!
வெளியே கண்திறந்து,  உள்ளே கண்மூடிய மனது!!
பிரியா விடைதரும் உறவுகள் கூட்டம்...,
இருக்கைகளின் ஆட்டம், மரங்களின் ஓட்டம்...,

உள்ளூரில் கொடிகட்ட தெரியாதவர் ,
அமெரிக்க அரசியலை அலசும் அவலம்!!
கண் காணா தூரத்தில் இருக்கும் உறவுகளோடு 
அலைபேசியில் அளாவும் பயணிகள்!!

வாங்கிய புத்தகத்தின் வாசித்த வரிகள் 
கண்களில் மட்டும் பதிந்து...
மனதில்  பதியா மாயம்!!

கண்மூடி  பயணிக்கையில் 
அடுத்து இருப்பவரையும்,   
எதிர் இருப்பவரையும் மறந்து ,நினைவுகள்  
இரயிலை விட வேகமாய்  பின்னோக்கி....,

என் காதல்  தண்டவாளமாக...,
உன்  இதயம் இரயிலாக..,
நம் ”பதிவுகள்” மட்டும் பயணப்படும்
பயணமாய் ஒரு பயணம்!!

சிறுவயதில் பயணித்த முதல் 
ரயில் பயணத்தின் உற்சாகம். உன்னுடன் 
கைகோர்த்து உடல் உரசி, உன்னுடன் 
பயணித்தபோது உணர்ந்தேன்!!

அன்று -
என் தோள் சாய்ந்து கிடக்கும் உன் தேகம்,
  என் கை பிடித்து தாளமிடும் உன் விரல்கள்
இன்று- அந்த 
உணர்வுகளின்  ஊற்றாய் என் மனம்!!

மன ஓட்டதோடு, நிகழ்காலம் முரண்பட்டு
 கண்விழிக்கையில்..,
விழி முன்னே மீண்டும்
அரசியல் அலைபேசி உரையாடல்கள்!!

மீண்டும்,
நீ இல்லாமல்...,  நான் மட்டும்!!
உன் நினைவுகளுடன்
ஒரு இரயில் பயணம்!!

23 comments:

  1. நினைவு வந்திருச்சோ? பெங்களூரு பயணத்துக்கு..

    ReplyDelete
    Replies
    1. இல்லை, பதிவர் சந்திப்புக்கு!!

      Delete
  2. பயணங்கள் புதிதில்லை. ஆனால்,
    பாரங்கள் மட்டும் புதிது!!
    வெளியே கண்திறந்து, உள்ளே கண்மூடிய மனது!!
    பிரியா விடைதரும் உறவுகள் கூட்டம்...,
    இருக்கைகளின் ஆட்டம், மரங்களின் ஓட்டம்...,//


    அருமையான வரிகள். எனக்கும் ரயில்ல பயணம் செய்யிறப்போ பின்னால ஓடி மறைஞ்சி போற செடி,கொடி, மரங்கள மாதிரியே நம்மோட தோல்விய பத்திய நினைவுகளும் மறைஞ்சி போய்ட்டா எவ்வளவு நல்லாருக்கும்னு நினைச்சிக்குவேன். அது மட்டும் ஏங்க மனசுக்குள்ளவே இருந்துக்கிட்டு அறுக்குது?

    ReplyDelete
    Replies
    1. அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி கவிதை எழுதி கொல்ல போறேன்?!

      Delete
  3. அட, என்னைக்கு தம்பியோட பதிவும் ரயில் பற்றிதான்...

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒற்றுமை?! அக்கா தம்பிக்குள்!!

      Delete
  4. இரயில் பயணங்கள் அற்புதமான அனுபவங்களை தரும்...

    ReplyDelete
  5. ''..நீ இல்லாமல்..., நான் மட்டும்!!

    உன் நினைவுகளுடன்

    ஒரு இரயில் பயணம்!!..''
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  6. கவிதை கலக்கல் அக்கா.. டைட்டில்ல மட்டும் இரயில் என்று மாற்றிக்கொள்ளவும்.. ;-)

    ReplyDelete
  7. நினைவுகளுடன் தொடரும் இரயில் பயணம் அருமை..

    ReplyDelete
  8. ரயில் பயணங்களின் அனுபவங்கள் மறாக்க முடியாதவை.அருமையான நினைவுகள்

    ReplyDelete
  9. நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையில்
    நாம் அதிகம் அல்லாடுவது இந்த ரயில் பயணங்களில்தான்
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ரயில் பயணங்கள் தரும் (சுகமான) ரணங்கள்

    ReplyDelete
  11. ரசித்த வரிகள் :)

    அன்று -
    என் தோள் சாய்ந்து கிடக்கும் உன் தேகம்,
    என் கை பிடித்து தாளமிடும் உன் விரல்கள்
    இன்று- அந்த
    உணர்வுகளின் ஊற்றாய் என் மனம்!!

    ReplyDelete
  12. நினைவுகளுடன்
    ஒரு இரயில் பயணம்!!ரசிக்கவைத்தது பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பழைய நினைவுகளா!! மலர்கின்றன போலும்.

    ReplyDelete
  15. பெங்களூருக்கா?

    ReplyDelete
  16. நினைவுகளுடன் தொடரும் பயணம் அருமை

    ReplyDelete