Thursday, August 29, 2013

பதிவர் சந்திப்பை மேலும் கலகலப்பாக்க என்ன விளையாடலாம்?! ஆலோசனை கூட்டம்


மதுமதி: வரவேற்புரை, சுய அறிமுகம், பதிவர்கள் தனித்திறமைன்னு நிகழ்ச்சிகள் இருந்தாலும் எல்லாரும் சின்ன பிள்ளைகளா மாறி இந்த ஒரு நாள் பொழுதை சந்தோசமா போக்கனும். என்ன செய்யலாம்?!

ஆரூர் மூனா செந்தில்: நாம வேணும்ன்னா யார் அதிகமா தண்ணி அடிக்குறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாமா?!

வீடு திரும்பல்” மோகன்குமார்: ம்க்கும், உனக்கும், ஜீவாவுக்கும்தான் பலத்த போட்டி நடக்கும்ன்னு எங்க எல்லாருக்குமே தெரியுமே!! அதுமட்டுமில்லாம தண்ணிக்கான செலவை எப்படி ஈடுகட்டுறது?!

”மின்னல் வரிகள்”கணேஷ்: என்ன மிஸ்டர் மோகன், இது லேடீசுலாம் கூட கலந்துக்குற நிகழ்ச்சின்றதை மறந்துட்டு, அவங்களோடு சேர்ந்து நீங்களும்  இப்படி கூத்தடிக்குறீங்களே!

”வீடு திரும்பல்” மோகன்குமார்: ஸ்ஸ்ஸ் ஆமா, சாரி மறந்துட்டேன் கணேஷ் அண்ணா. தண்ணி அடிக்குற போட்டிலாம் வேணாம்.

ஆரூர் மூனா செந்தில்: ஹலோ தண்ணி அடிக்குற போட்டின்னுதான் சொன்னேன். சரக்கடிக்குற போட்டின்னு சொன்னேனா?! இப்படி ஓட்டுறீங்க ரெண்டு பேரும்?! (ஸ்ஸ்ஸ் அபா! எப்படிலாம் தப்பிக்க வேண்டி இருக்கு?! ஓசில லேசா தொண்டையை நனைச்சுக்கலாம்ன்னு பார்த்தா விட மாட்டாங்க போல?!)

மதுமதி: சரி, திடீர்ன்னு தலைப்பு கொடுத்து ஒரு கவிதை, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள எழுத சொல்லலாமா?! 

”மின்னல் வரிகள்”கணேஷ்: ஐயையோ! வேணாம், ஏற்கனவே கைக்கு, மரபுக்கவிதை, புதுக்கவிதை, சுட்டது, சுடாததுன்னு டெய்லி 150 கவிதை வருது. அந்த இம்சையை இங்கயும் படனுமா?!

”வீடு திரும்பல்” மோகன்குமார்: பிளாக் எழுதுற எல்லாருக்கும் முக்கியமான சில HTML மேட்டர் தெரியுதா?!ன்னு டெஸ்ட் வச்சு பார்க்கலாமா?!

”தமிழ்வாசி” பிரகாஷ்: ம்ம்ம் சரி, சரி, நான் ரெடி.

”கோவை நேரம்”ஜீவா: இரு இரு எதுக்கு இப்போ இப்படி ஆளா பறக்குற?! உனக்கு தெரிஞ்ச மேட்டர்ங்குறதால, ஈசியா ஜெயிச்சுடலாம்ன்னு கணக்கு போடுறீயா?! அதுதான் நடக்காதுடி மாப்ள! வேணும்ன்னா ஸ்கூல் போல மாறுவேட போட்டி வைக்கலாமா?!

”கவிதை வீதி”சௌந்தர்:  ம்ம்ம்ம் ஓக்கே! ஓக்கே! நான் போலீஸ் ட்ரெஸ்ல வரேன்.

”மின்னல் வரிகள்” கணேஷ்: எதுக்கு?! நிகழ்ச்சிக்கு வர்றவங்க கண்ணை நொள்ளையாக்கவா?! ஏற்கனவே, ஃபேஸ்புக்குல நீ போட்ட போட்டோக்களை பார்த்து ரெண்டு குழந்தைகளுக்கு ஜுரம் வந்துட்டுதாம். வேணும்ன்னா புகைப்பட போட்டி வைக்கலாம்.

”வீடு திரும்பல்” மோகன்குமார்: ஐயோ! வேணாம், வேணாம், உங்க தங்கச்சி ராஜி புதுசா கேமரா வாங்குனாலும் வாங்குச்சு, ஆடு, மாடு முதற்கொண்டு அரிசி, பருப்புன்னு ஒண்ணு விடாம ஃபோட்டோவா எடுக்குது. அதனால இதும் கேன்சல். வேணும்னா சமையல் போட்டி வைக்கலாம். ஈசியா ருசியா யார் சமைக்குறாங்கன்னு பார்க்கலாம்!!

”தமிழ்வாசி” பிரகாஷ்” ஐயையோ! இங்க வந்தும் அதை செய்யனுமா?! ஒரு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னுதானே வந்தோம்! இங்க வந்தும் சமைங்கன்னு சொன்னா என்ன நியாயம்?!

மதுமதி: அதும் சரிதான், வேணும்னா விழாவுக்கு வர்ற லேடீசுக்கு இந்த போட்டியை வைக்கலாமா?!

”தென்றல்” சசிகலா: போங்க மது, சமைக்குறதா?! பிளாக், போட்டோ இணைக்குறது, ஃபேஸ்புக்குல அரட்டை, கவிதை எழுதுறது, மத்தவங்களுக்கு கமெண்ட் போடுறதுன்னு 24 மணிநேரமும் பிளாக்குக்கே அதெல்லாம் டச் விட்டு போச்சே!!

”மின்னல் வரிகள்” கணேஷ்: என்னமமா சசி! எனனமோ டைப் ரைட்டுறல டப் பண்ணுற மாதிரி சொல்லுறே!! சரி, கயிறு இழுக்கும் போட்டி வைக்கலாமா?!

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” ரமணி:  வைக்கலாம் கணேஷ். ஆனா, ஆரூர் மூனா மட்டும் இந்த போட்டில கலந்துக்க வேணாம்.

ஆருர் மூனா செந்தில்: என்னது?! நான் போட்டில கலந்துக்க கூடாதா?! ஒரு மாசமா இந்த நிகழ்ச்சி நல்லப்படியா நடக்க நாயா பேயா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்னை கலந்துக்க கூடாதுன்னு சொல்லுறீங்களே! இந்த அநியாயத்தை தட்டி கேக்க யாருமே இல்லியா?! ராஜியக்கா சும்மாதானே உக்காந்திருக்கீங்க நீங்களவாது இது தப்புன்னு சொல்லுங்களேன்.

ராஜி: யாராவது எந்த போட்டியாவது நடத்திக்கோங்க, பரிசு வாங்கிக்கோங்க. ஆனா, நான் போட்டோ எடுக்குறதுல்யும், பதிவு தேத்துறதுலயும்தான் பிசியா இருப்பேன். அதுமில்லாம, புது புடவைல ஒரு வாரமா ஸ்டோன் வொர்க் பண்ணி அதைதான் சந்திப்புக்கு கட்டி வரப்போறேன். அந்த சேலை கசங்கிட கூடாது பாருங்க. அதனால, நான் எந்த போட்டிலயும் கலந்துக்கலை!!

ஆரூர் மூனா செந்தில்:  இந்த அக்காக்களே இப்படிதான்!! புடவை, நகைக்குன்னு குடுக்குற மதிப்பை உறவுகளுக்கு குடுக்க மாட்டாங்க. என் டிடி அண்ணன் இருக்கார். எனக்காக, அவர் உங்களைலாம் கேள்வி கேப்பார்,

திண்டுக்கல் தனபாலன்: ஏம்பா! பாவம் செந்தில், அவரையும் சேர்த்துக்கலாம்.

”மின்னல் வரிகள்” கணேஷ் : ஏம்பா டிடி!! நீ எல்லாம் புரிஞ்சுதான் செந்திலை சேர்த்துக்க சொல்லுறியா?! செந்திலோட ஒரு இழுப்புக்கு நீ தாங்குவியா?!

திண்டுக்கல் தனபாலன்:  எல்லாம் யோசிச்சுதான் சொல்லுறேன். ந்ந்த போட்டி வச்சாலும், யார் கலந்துக்கிட்டாலும் முதல்ல வரப்போறாதென்னமோ நாந்தானே?! அதான் செந்திலையும் கலந்துக்க சொல்லுறேன்.

மதுமதி அண்ட் கோ : ????????!!!!!!!!!!!!

31 comments:

  1. அருமையான கற்பனை !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்!!

      Delete
  2. அருமை அருமை
    கடைசியில் போட்டி குறித்து எந்த முடிவும்
    எடுக்காமல் போனதுதான் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தர், ரெண்டு பேர் இருந்தாலே முடிவெடுக்க முடியாது. இதுல பத்து பேருக்கு மேல இருக்காங்க. நான் வேற இருக்கேன். முடிவு எடுத்துட முடியுமா?!

      Delete
  3. எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...

    ராஜி மனதில்: பதிவ தேத்தறதுன்னா சும்மாவா??

    ReplyDelete
    Replies
    1. அதானே!! ஒரு பதிவரோட கஷ்டம் இன்னொரு பதிவருக்குதான் தெரியும்ங்குறது சரிதான் போல இருக்கு!!

      Delete
  4. சந்தடி சாக்குல நீங்க புது புடவையில், அதுவும் ஸ்டோன் ஒர்க் செஞ்ச புடவைன்னு அள்ளி வுட்டுடிங்களே...

    ReplyDelete
    Replies
    1. அள்ளியும் விடலை, அள்ளாமயும் விடலை. புடவைக்கு ஸ்டோன் வொர்க் பண்ணது நிஜம்தானுங்க. வேணும்ன்னா போட்டோ ஆதாரம் இருக்கு. பதிவா போடவ?!

      Delete
  5. சூப்பர்ர்..டிடி அவர்களை கலாய்த்தது சூப்பர்ர் சகோ!! பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கும் ,பதிவை ரசித்தமைக்கும் நன்றி மேனகா!!

      Delete
  6. ரெண்டு நாளைக்கு இன்னும் ரெண்டு பதிவு தேத்திடுவீங்க போலிருக்கே?? நல்ல கற்பனை..

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போட்டால் ஒத்துக்க மாட்டீங்களோ!?

      Delete
  7. //புது புடவைல ஒரு வாரமா ஸ்டோன் வொர்க் பண்ணி அதைதான் சந்திப்புக்கு கட்டி வரப்போறேன்.// பெண் பதிவர்கள் மத்தியல இந்த போட்டி வேற சத்தமில்லாம நடக்குதா ?

    ReplyDelete
  8. நல்ல கற்பனை... ஆரூர் மூனாவுக்கும் பாலகணேஷ்க்கும் மல்யுத்த போட்டி வைக்கலாம் அல்லது உங்களுக்கும் சசிக்கும் போட்டி வைக்கலாம் எப்படி என் ஐடியா?

    ReplyDelete
    Replies
    1. சசி சின்ன பொண்ணு. பாவம் அவளை விட்டுடுங்க!

      Delete
    2. அப்ப உங்க அண்ணண் சண்டை போட்டா பரவா இல்லையா....

      Delete
    3. கணேஷ் அண்ணா ரொம்ப நல்ல அண்ணா!! அவர் சண்டைலாம் போட மாட்டார் முதல் இடத்தை செந்திலுக்காக விட்டு கொடுத்துடுவார்!!

      Delete
  9. //ஸ்ஸ்ஸ் அபா! எப்படிலாம் தப்பிக்க வேண்டி இருக்கு?! ஓசில லேசா தொண்டையை நனைச்சுக்கலாம்ன்னு பார்த்தா விட மாட்டாங்க போல?!)
    // ஹா ஹா ஹா செம செம...

    தினசரி சுவாரசியமாக எழுதுவது எப்படின்னு ஒரு கிளாஸ் எடுங்க

    ReplyDelete
    Replies
    1. அட! நல்ல ஐடியாவா இருக்கே சீனு!! சந்திப்பு முடியட்டும். அப்புறமா கிளாஸ் எடுக்கலாம்!!

      Delete
  10. ஹா... ஹா... இருக்கும் நிலைமையை மறந்து சிரித்தேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உங்க கவலைகளை ஒரு சில நிமிடங்கள் மறந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே அண்ணா!

      Delete
  11. சூப்பர், இன்னும் ரெண்டு பேரை சேர்த்திருக்கலாமோ...
    கணேஷ் அண்ணன் பேசுற டயலாக் படிக்கும்போது அவரே நேரில் சொல்ற மாதிரி இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் அண்ணா எப்படி பேசுவார்ன்னு அவர் தங்கச்சிக்கு தெரியாதா?! என்ன பதிவு தேத்தலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது திடீர்ன்னு தோணுச்சு. அதனால, அதிக ஆட்களை இழுக்கலை!!

      Delete
  12. கலக்கிட்டீங்க!
    ஆமாம்!.......29 நாள்ல 23 பதிவு.போற வேகத்தை பாத்தா மோகன்குமாரை மிஞ்சிடுவீங்க போல இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. அவர் விசய ஞானத்தோட எழுதுவார். நான்?!

      Delete
  13. "நான் போட்டோ எடுக்குறதுல்யும், பதிவு தேத்துறதுலயும்தான் பிசியா இருப்பேன்" பதிவு போடறது இப்படித்தானா?
    "புது புடவைல ஒரு வாரமா ஸ்டோன் வொர்க் பண்ணி அதைதான் சந்திப்புக்கு கட்டி வரப்போறேன்" சந்தடிசாக்குல ஸ்டோன் ஒர்க் புடவை பத்தியும் சொல்லிட்டீங்க சந்தோஷம்தானே!

    ReplyDelete
  14. ஆங் பதிவை பத்தி சொல்ல மறந்திட்டேனே! நல்ல கற்பனை அருமையா வந்திருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. ராஜி: யாராவது எந்த போட்டியாவது நடத்திக்கோங்க, பரிசு வாங்கிக்கோங்க. ஆனா, நான் போட்டோ எடுக்குறதுல்யும், பதிவு தேத்துறதுலயும்தான் பிசியா இருப்பேன். அதுமில்லாம, புது புடவைல ஒரு வாரமா ஸ்டோன் வொர்க் பண்ணி அதைதான் சந்திப்புக்கு கட்டி வரப்போறேன். அந்த சேலை கசங்கிட கூடாது பாருங்க. அதனால, நான் எந்த போட்டிலயும் கலந்துக்கலை!!//

    அட இது நல்ல கதையாருக்கே.... அந்த புதுசேலை கசங்கி கந்தலாக வேணாம்? அதனால நீங்க எல்லா போட்டியிலயும் கலந்துக்கறீங்க. இது அனைத்து பதிவர்களோட ஆர்டர்!

    ReplyDelete
  16. சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete