போன வாரம் தாழக்கோவிலில் தரிசனம் செய்தோம். இன்னிக்கு மலையடிவாரத்தில் இருக்கும் மருந்தீசர் கோவிலை பார்க்கலாம். கோவிலுக்கு போகும் வழியெங்கும் பச்சை பசேல்ன்னு சீனரிலாம் செமயா இருக்கு. அதெல்லாம் கேமராவுல கிளிக்கிட்டே கோவிலுக்கு போயாச்சு.
கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபத்துடன் அழகாக காட்சி தருது இராஜகோபுரம் இல்லாத கோவிலின் நுழைவாயில் ..
கோவிலின் முகப்பில் அதன் அமைவிடம், தொடர்புகொள்ளும் நம்பர், நடை திறக்கும் நேரம் முதலியவை அடங்கிய குறிப்பு பலகை இருக்கு.
அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே, நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம்!!
இக் கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும்.
தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே போனதும் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கு. .இத்தூண்களில் துவார பாலகர்கள் உருவங்களும் ,இலிங்கோர்பவர் மாவடி சேவை பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற காணப்படுது.
மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணபடுகிறது.
சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் ரம்மியான அமைதியான இடம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி காணபடுகிறது. சுவாமி மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான அமைப்பில் வீற்றிருக்கிறார் .இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். அதனால, அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு கோவிலுக்குள் போகலாம்.
விநாயகரை வழிபட்டு வரும்போது, சுவாமி சன்னதிக்கு எதிரில் சாரளம் உள்ள.து இதன் எதிரே வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் லாம் காணபடுகின்றன.
இங்கே வந்து சுவாமியிடம் வேண்டிகொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிகொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எதிரே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் காணபடுகின்றன
இந்திரன் தன்னோட தீராத வியாதிக்காக நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும் பலை ,அதிபலை என்ற மூளிகை வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம் . அதனால, நாரதரிடம் உபாயம் கேட்க, அன்னையை மறந்து தவம் இயற்றியதால், அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம், தன் தவறை உணர்ந்த இந்திரன், அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம். பிறகு அன்னை மனம்குளிர்ந்து மூலிகையை அருளினாராம். இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும், மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் ”இருள் நீக்கி அம்மையார்”என்றும் அழைக்க படுகிறாரார்களாம்!!.
இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறனும்ன்னு சிவபெருமான் வரம் அருளினாராம். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளருமாம் ..
வெளியே சுபிரமணியர் அவ்வளவா பராமரிப்பில்லாத கோலத்தில் காட்சி தருகிறார் .அகத்தியர் காண்டம் ,காக புஜண்டர் காண்டத்திலும் மருந்தீஸ்வரர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். மேலும், அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம் .
மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. சுப்பிரமணியரின் அருகில் இருந்து பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்யமாக காட்சி அளிக்கிறது.
கிணற்றின் உள்பக்கம் அழகாக படிகளால் அமைக்கப்பட்டு காணபடுகிறது.
பக்கத்தில் நவகிரக சன்னதியும் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மூர்த்தங்கள் உள்ளன .பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு.
சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்மமுக சண்டிகேஸ்வரராக சேவை செய்கிறார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். பைரவர் சன்னதியும் காணபடுகிறது.
மேலும், விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகம் அமைந்து இருப்பது இகோவிலின் விஷேசம். இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலா. ம் மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடுமாம்.
பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம். மேலும், சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு செல்லும் போது வீழ்ந்த சிறிய துண்டு என்றும் சொல்ல படுகிறது.
காலை 7:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
அடுத்த வாரம் வேறொரு கோவிலோடு பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை புண்ணிய தரிசனமா... கலக்கறீங்க...
ReplyDeleteமலையின் மேலே நடந்து களைத்துவிடீர்களா ? ஸ்தல வரலாறை ரெத்தின சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்...நல்ல அருமையான கோவில் பலருக்கும் தெரியாத கோவில் ..உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் நன்றி
ReplyDeleteரொம்ப விரிவா சொன்னா போரடிக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் படிக்காம போய்டுவாங்க. நம்மாளுங்க!!
Deleteஹஹஹா... ரீடர்ஸ் பல்ஸ் தெரிஞ்சு வச்சுருக்கீங்க..
Deleteஅழகு!
ReplyDeleteதிருவான்மியூரிலும் ஒரு மருந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது;அதைப் பற்றியும் எழுதுங்களேன்
ம்ம் ஆனா, அங்கெல்லாம் படம் பிடிக்க விடுவாங்களான்னு தெரியலையே!!
Deleteமலையடிவார மருந்தீஸ்வரர் பார்க்கவில்லை, உங்கள் பதிவின் மூலம் தெரிண்டு கொண்டேன்.
ReplyDeleteமருந்தீஸ்வரர் நோய்நொடிகளை தீர்த்து இன்பம் அருளட்டும்.
எல்லோருக்கும் அருளட்டும். வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்க. அழகு சொட்டும் இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் இடம்.
Deleteஅழகு....
ReplyDeleteசிறப்பான படங்கள்... அதன் விளக்கங்களும் சிறப்பாக அளித்துள்ளீர்கள்...
இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... பகிர்விற்கு நன்றி...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!!
Deleteகிணற்றின் உள்பக்கம் அழகாக படிகளால் அமைக்கப்பட்டு காணபடுகிறது.
ReplyDeleteஶ்ரீ சக்ரவடிவில் அற்புதமான கிணறு..!
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நிஜமாவே பார்க்க நல்லா இருக்கும். காண வேண்டிய இடமும் கூட. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்மா!
Deleteகோவிலுக்கே உங்களுடன் அழைத்து சென்று விட்டீர்களே!
ReplyDeleteசென்னை மருந்தீஸ்வ்ரர் கோவில் பற்றித் தான் தெரியும். இதைப் பற்றி கேள்விப் பட்டதில்லை.
தரிசனத்திற்க்கு மிக்க நன்றி சகோ!!
ReplyDeleteஅடிக்கடி கோயில்களுக்குப் போகிறீர்கள் போலிருக்கிறது, அப்படியே ஒரு Trip இலங்கைக்குப் போய் ஈழத்துக் கோயில்களைப் பற்றியும் எழுதுங்கள். :)
ReplyDeleteஉயிர்ப்புள்ள ஒரு கோயிலின் தரிசனம்...
ReplyDeleteஅட! இன்னொரு மருந்தீஸ்வரரா?
ReplyDeleteதெரியாத கோவிலும் தெரியாத விஷயங்களும்!
படங்கள் அருமையா உள்ளது உள்ளபடி வந்துருக்கு.
நன்றி ராஜி.
சென்னை மருந்தீஸ்வரர் பற்றித்தான் இதுவரை தெரியும். அவரைப்பற்றி இங்கே! நேரமிருந்தால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2010/02/blog-post_28.html
இதோ படிக்கிறேன்.
Deleteதிருவான்மியூர் மருந்தீசவரர் கோவில் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
ReplyDeleteஅது காதலர்களின் கோவில்...
காலாக்ஷேத்திர கன்னிகள் அங்கு வருவார்கள்..
நாங்கள் கோவிலுக்கு போகும் போது அவர்களைப் பர்ர்த்து உளோம்.
அமலா என நடிகை அங்கு வருவார்கள்..இப்போ கொல்டி ஊருக்கு போய்ட்டாங்க!
மருந்தீச்வரர் கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி. அருமையான பதிவு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை
ReplyDelete