Monday, August 19, 2013

மனைவி பிறந்த நாளை மறக்காம இருக்கனும்ன்னா என்ன செய்யனும்?! -ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! என்ன ஃபோட்டோவை அப்படி பார்த்துட்டு இருக்கீக. எதாவது சின்னபய மவளை பார்த்துட்டு இருக்கியா?!


ம்க்கும் உன் ஒருத்தியை கட்டிக்கிட்டு படுற பாட்டுக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் பெண்ணாசை வராது. இதுல இந்த ஜென்மத்துல இன்னொருத்தியா?! என் உடம்பு தாங்காது புள்ள!

ம்க்கும் எதுக்கெடுத்தாலும் ஒரு கிண்டல் பேச்சு!!

இப்படி நான் எது சீரியசா சொன்னாலும் விளையாட்டுத்தனமா எடுத்துக்குறதுனாலதான் என்  பொழப்பு கொஞ்சமாவது ஓடுது.

வெட்டி பேச்சு பேசாம அந்த போட்டோ என்னன்னு சொல்லுங்க மாமா!! தர்ம புரில “மல்லிகார்ஜுனர்” கோவில்ல இருக்குற “நவாங்க” மண்டபத்துல நூறு தூண்கள் இருக்காம். அதுல, ரெண்டு தூண்களோட அடிப்பகுதி பூமில நாலு பக்கமும் முழுசா படியாம மூணு பக்கம் மட்டும்தான் படிஞ்சு இருக்காம்!! அதுல மெல்லிய குச்சி இல்லாட்டி துணியை இந்த பக்கம் நுழைச்சு அந்த பக்கம் எடுக்கலாமாம். ஒரு பக்கம் படியாம இருந்தாலும் 2 இல்ல 3 டன் வெயிட் இருக்குமாம் இந்த தூண். நம்ம முன்னோர்கள் எவ்வளவு அழகா நுட்பமா சிற்ப வேலை செஞ்சு இருக்காங்கன்னு ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருக்கேன்.

அப்படியா!! இதே மாதிரி ஒரு தூண் கர்நாடகா மாநிலத்துல இருக்குற ”பேளுர்”ன்ற ஊர்ல இருக்கு. நான் பார்த்திருக்கேன். ம்ம்ம் நான் ஒரு ஆச்சர்யமான விசயம் சொல்லவா?!

ம் ம்ம் சொல்லு பார்க்கலாம்!!



காமராஜரை நாம படிக்காத மேதைன்னு சொல்லுறோம். அவர் ஸ்கூலுக்கு போகாதவர்! இங்கிலீசு பேசத் தெரியாதுன்னு சொல்லுறோம். ஆனா, அது உண்மையில்லைன்னு புரிய வச்ச ஒரு நிகழ்ச்சிதான் சொல்ல வரேன்.

ஒரு தரம் நேரு மாமா, சென்னைக்கு வந்து டெல்லிக்கு திரும்புற நேரம். ஏரோப்பிளேன் படிக்கட்டுல ஏறும்போதுதான் , முக்கியமான ஃபைல் சிலது மறந்துட்டு வந்தது ஞாபகம் வர, திரும்பி பார்த்தார். அப்போ காமராஜர் அந்த ஃபைல்களை எடுத்துக்கிட்டு கீழ நின்னபடியே படிக்கட்டுல இருந்த நேருக்கிட்ட கொடுத்தார்.

குனிந்து ஃபைல்களை வாங்கிய நேரு, You are so tall"ன்னு சொன்னார். அதாவது நீங்க உயர்ந்தவர் கூடவே உயரமானவர்ன்னு இரு பொருள் படுற மாதிரி சொல்லி இருக்கார். உடனே, அதுக்கு பதில் சொல்லும் விதமா காமராஜர்..., நீங்கள் என்னைவிட உயர்ந்தவர்ன்னு பொருள் வர்ற மாதிரியும் கூடவே நேரு ஏரோப்பிளேன் படிக்கட்டு உயரத்துல நிற்குறதையும் சேர்த்து   "But not to your level"ன்னு ஒரே வ்அரியில் சொன்னாராம். காமராஜர் படிக்காத மேதைங்குறதுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டுன்னு ஒரு புக்குல படிச்சேன் மாமா!! 




 
மாமா! நம்ம வூட்டுல இருக்குற தென்னை மரத்துல பூ விட்டுருக்கு மாமா!! அதுக்கு சடங்கு செய்யனும் மாமா! அதுக்கு கட்ட ஒரு புது சீலை வாங்கி வாங்க மாமா!!


ம்ம்ம் சரி புள்ள! நான் நல்ல நாள் பார்த்து வரேன். நீ புட்டு, வடை செஞ்சு வை. தென்னையும், பொண்ணும் ஒண்ணு. பொண்ண்ங்க சடங்காகுற மாதிரிதான் தென்னை மரம் பூ பூக்குறது. தேங்காய்க்கும் தமிழருக்கும் அவ்வளவு பொருத்தம். ஒவ்வொரு நாளும் எதாவது ரூபத்துல தேங்காயை யூஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க. காது குத்து தொடங்கி சாவு கருமாதி வரைக்கும் இந்த தேங்காய் தமிழர் வாழ்வுல இருக்கு. 



நம்ம சாப்பாட்டுல கூட சட்னி, துவையல், குருமான்னு பல ரூபத்துல தேங்கா கலந்து இருக்கும். அந்த தேங்காயில பல முக்கியமான சத்துகள் இருக்கு.உடம்புக்கு பலத்தை கொடுக்க கூடிய  வைட்டமின்கள், தாதுக்கள் இதுல நிறைய இருக்கு. நானூறு கிராம் தேங்காயை சாப்பிட்டு தண்ணி குடிச்சா நாந்வெஜ் சாப்பிட்டதுக்குண்டான அளவு கலோரி கிடைக்குதாம். அன்னிக்கு ஃபுல்லா நாம வேலை செய்வதற்குண்டான, தாது உப்புகள், வைட்டமின்கள்லாம் கிடைச்சுடுதாம்.

தேங்காயில அதிகமான கொழுப்பு சத்தும், புரத சத்தும் இருக்காம். 100 கிராம் தேங்காய் பருப்பில் 354 கலோரிகள் தருதாம்.  'லாவுரிக் ஆசிட்' ன்ற  கொழுப்பு அமிலம் தேங்காயில இருக்காம். இது ரத்தத்துல உடலுக்குதேவையான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யுதாம். எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாம்.



இளநீர்ல ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும்  சைட்டோகைனைன் லாம் கூட இருக்காம். பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் இளநீரில் இருக்குதாம் இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்குதாம்.  தேங்காய் எண்ணை சமைக்குறதுக்கும், கூந்தல் உறுதிக்கும், மருந்து தயாரிக்குறதுலயும் பயன்படுதாம்.


இளநீரில் இருக்குற சைட்டோகைனைன், முதுமையை தள்ளி போடுமாம்.  மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டதாம்.  தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.  பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின்ன்னு நிறைய சத்துகள் இருக்காம்.

அதனால, நம்ம வூட்டுல காய்க்குற தேங்காய்களை அக்கம் பக்கம் இருக்குறவங்களுக்கு கொடுத்து மீதம் இருக்குறதை வேச்ட் பண்ணாம சமைச்சு யூஸ் பண்ணு புள்ள!

சரிங்க மாமா! இத்தனை சத்துகள் இதுல இருந்தா நான் ஏன் வேஸ்ட் பண்ண போறேன். ?!

உங்களுக்கு ஒரு யோசனை சொல்லவா?! உங்களுக்குதான் பொண்டாட்டியை தாக்கி வர்றதையெல்லாம் ரசிச்சு படிப்பீங்களே!

ம்ம்ம் புரிஞ்சுக்கிட்டா சரி! ஆம்புளைங்க படும் பாடு அப்படி!! அதனாலதான், அதுப்போல துணுக்குகளை ரசிக்கிறோம்.

மனைவியோட பொறந்த நாளை மறக்காம இருக்க என்ன செய்யனும்ன்னா!! ஒரே ஒரு முறை அவங்க பொறந்த நாளை மறந்து பாருங்க. அப்புறம் ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாம செய்துடுவாங்க.

ம்ம்ம் கரெக்ட்தான்!! சின்ன விசயத்தை கூட பெரிசாக்கி இம்சிப்பீங்களே நீங்கதான். அது போகட்டும். ஒரு குழந்தை தானா பத்தி எரியுதே!! உனக்கு தெரியுமா? நியூஸ்ல லாம் போட்டு காட்டுனாங்களே!



ம்ம் பார்த்தேன். அதுக்கு பக்கத்து வீட்டு பூவாயி சொல்லுறா மாமா! அந்த குழந்தை இப்படி பொறந்ததால இந்த பூமி அழிய போற நேரம் வந்துட்டுதாம்!! அதான் இப்படி சாமி குறிப்பால சொல்லுதாம்!!

ம்க்கும் சாமியும், இல்ல பூதமும் இல்ல புள்ளா முழுசா சொல்லுறென் கேளு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவணம் அருகே உள்ள பரங்குனி கிராமத்தை சேர்ந்த கர்ணம், ராஜேஸ்வரி தம்பதியினருக்கு போன மே மாசம் 22 ஆம் தேதி ரெண்டாவது பிறந்தது. குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் அக்குழந்தை திடீரென்னு தானா தீப்பற்றி எரிஞ்சுதாம். எதாவது ஆக்சிடெண்ட் போல இருக்கும்ன்னு அப்போதைக்கு தேடி பார்த்து சமாதானம் ஆனாங்க. ஆனா, மறுபடியும்  13 ஆம் நாள், 30 ஆம் நாள் ன்னு திரும்ப திரும்ப அந்த குழந்தையின் உடல் தானா தீப்பற்றி எரிஞ்சுது, 

ஐயோ பாவம்!! அந்த பாப்பாக்கு என்னதான் ஆச்சு?!

அதனால பாப்பாவோட உடம்புல தீக்காயம் வந்துச்சாம். இது ஏதோ பில்லி சூனிய வேலையான்னு இருக்கும், மந்திரித்து தாயத்து கட்டுங்கன்னு சொன்னதை நம்பி அதுப்போல செஞ்சு இருக்காங்க. அப்படியும் சரியாகம போகவே ஹாஸ்பிட்டலுக்கு போய் இருக்காங்க.



அங்க போய் டெஸ்ட் பண்ணி பார்த்து அதிகப்படியான பாஸ்பரஸும், நீர்பற்றாக்குறையும் தான் இம்மாதிரி உடல் தானா பத்தி எரிய காரணம் ன்னு சொல்றாங்க.  இல்ல, இது ஏதோ சாத்தானோட வேலைதான்னு சொல்ற ஆளுங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.


என்னமோ இது மாதிரி புரியாத அறியாத வியாதிலாம் வசதி இல்லாதவங்களுக்குதான் வருது. எது எப்படியோ!! அந்த பாப்பா நல்ல படியா பொழச்சு ஆரோக்கியமா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கலாம் மாமா!!

ம்ம்ம் கரெக்ட்தான்.  சரி, நான் கொஞ்சம் வயக்காடு வரை போய் வரேன். நீ வேலையை பாரு புள்ள!

21 comments:

  1. ///மாமா! நம்ம வூட்டுல இருக்குற தென்னை மரத்துல பூ விட்டுருக்கு மாமா!! அதுக்கு சடங்கு செய்யனும் மாமா! அதுக்கு கட்ட ஒரு புது சீலை வாங்கி வாங்க மாமா!!///


    ஆமாங்க மாமா அப்படியே ப்ளக்ஸ் பேனருக்கும் ஏற்பாடு பண்ணியிருங்க

    ReplyDelete
    Replies
    1. அப்படி வெச்சாதானே கழுத்து நிறைய கவரிங்க் நகை போட்டு, பட்டு சேலை கட்டி செல் போன் பேசுற மாதிரி போட்டோ போட்டு மத்தவங்க கண்ணை நொள்ளையாக்க முடியும்!!

      Delete
  2. இங்கன இன்னும் கொஞ்சம் அதிகப்படியா தகவல் கீது. கடந்த வருஷங்களிலே 300 க்கு மேலே இது போல நடந்து இருக்காம் ல.
    இங்கன இன்னும் கொஞ்சம் அதிகப்படியா தகவல் கீது. கடந்த வருஷங்களிலே 300 க்கு மேலே இது போல நடந்து இருக்காம் ல.
    http://newindianexpress.com/cities/chennai/More-than-200-spontaneous-human-combustion-cases-in-last-three-centuries/2013/08/10/article1727163.ece
    சுப்பு தாத்தா.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. போய் பார்க்குறேனுங்க!

      Delete
  3. ///மனைவியோட பொறந்த நாளை மறக்காம இருக்க என்ன செய்யனும்ன்னா!! ஒரே ஒரு முறை அவங்க பொறந்த நாளை மறந்து பாருங்க. அப்புறம் ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாம செய்துடுவாங்க.///


    மனைவியே ஞாபகத்திற்கு வராம இருக்க வழி சொல்லுங்க.... அப்ப அப்ப தூக்கத்துல கூட மனைவி ஞாபகம் வந்ததும் அலறி அடிச்சுகிட்டு பயந்து போய் எந்திரிக்க வேண்டியிருக்குங்க

    ReplyDelete
    Replies
    1. இனி உங்க வீட்டம்மாக்கிட்ட பூரி கட்டை அடியை கொஞ்சம் குறைச்சுக்க சொல்றேன். அதை தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது!!

      Delete
  4. துணுக்குகளை கூட ரசிக்கக் கூடாதா...?

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம் அதெப்படி எங்களை கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்குறது?!

      Delete
  5. இனிய வணக்கம் சகோதரி...
    கர்மவீரரின் ஆக்கங்களும் சொற்களும்..
    செயல்களும் ஒவ்வொன்றும் ..அற்புதமே.
    அருமையான பதிவு சகோதரி...

    ReplyDelete
  6. மனைவியோட பொறந்த நாளை மறக்காம இருக்க என்ன செய்யனும்ன்னா!! ஒரே ஒரு முறை அவங்க பொறந்த நாளை மறந்து பாருங்க. அப்புறம் ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாம செய்துடுவாங்க.//

    ஆனா என் வீட்டம்மா ரொம்ப நல்லவங்க. அதப்பத்தியெல்லாம் கவலையே படமாட்டாங்க. பதிலுக்கு என் பிறந்தநாளை மறந்துருவாங்க. தீனிக்கி தானி. சரியாப்போச்சு.

    ReplyDelete
  7. அந்த கோவிலின் தூணை கட்டியவர்களின் கட்டிட கலை வியக்க வைக்கிறது
    திடீர் திடீரென பற்றி எரியும் குழந்தையை நினைத்தாலே பயமாய் இருக்கிறது... அதை வைத்து கட்டுக்கதை கட்டுபவர்களை நினைத்தால் பாவமாய் இருக்கிறது

    ReplyDelete
  8. சுவாரஸ்யமாக அறியவேண்டிய
    தகவல்களையெல்லாம் சொல்லிச் செல்லுவதில்
    கைதேர்ந்தவராய் இருக்கிறீர்கள்
    பயனுள்ள பகிர்வுக்கும்
    தொடர்ந்து தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தேங்காய் உடலுக்கு கெடுதல் என்றுதான் நினைத்திருந்தேன். தேங்காயின் மருத்துவ குணங்களை நீண்டதொரு பட்டியலாகவே கொடுத்து வீட்டீர்களே.
    ' அவங்க பொறந்த நாளை மறந்து பாருங்க. ' இது ரொம்ப ரொம்ப உண்மைதானுங்க.

    ReplyDelete
  10. மூட நம்பிக்கையினால் சில இடங்களில் இவாறான தவறுகள் நிகழ்ந்த
    வண்ணமே தான் இருக்கின்றது .நகைச்சுவையோடு ஆரம்பித்து சில
    நல்ல கருத்தையும் தந்துள்ள விதம் பாராட்டத் தக்கது .வாழ்த்துக்கள்
    தங்கச்சி :)

    ReplyDelete
  11. ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாம பண்றதுன்னா என்னங்க ?உங்க அனுபவத்தை அடுத்த பதிவிலே போடுங்களேன் !

    ReplyDelete
  12. பல்சுவைப் பதிவு அருமை ! பெருமை !

    ReplyDelete
  13. மாமா கொஞ்சம் பயந்து பயந்து தான் தகவல் சொல்றாரு போல..

    ReplyDelete
  14. ஒரே வழி! மனைவியை மறக்கணும்!

    ReplyDelete
  15. பல தகவல்களுடன் சுவாரஸ்ய பகிர்வு.

    ReplyDelete