வியாழன், ஆகஸ்ட் 22, 2013

எங்க ஊரு திருவிழா

எல்லா ஊருலயும் வருசந்தோறும் ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்துறது போல எங்க ஊருலயும் உண்டு, என்ன கொஞ்சம் ஸ்பெஷல்ன்னா, அன்னிக்கு சாயந்தரம் ஊரணி பொங்கல்ன்னு ஒண்ணு எல்லை அம்மனுக்கு வைப்பாங்க. அங்கிருந்து எல்லோரும் மேளதாளத்தோடு ஊர்வலமா ஊரை சுத்தி வந்து வீட்டுக்கு வருவாங்க.

கூழ் வார்க்கும் கோவில்...,

எல்லை அம்மன்...,

மதியம் வீட்டுல கூழும், கருவாடு இல்லாட்டி காராமணி கத்திரிக்காய் போட்ட குழம்பு(எங்க வீட்டுல அசைவம் படைக்குற பழக்கம் இல்லாததால கத்திரிக்காய் காராமணி கொழம்பு), பொங்கல், முருங்கை கீரை வேர்க்கடலை போட்ட பொறியல், அரைக்கீரை மசியல், கொழுக்கட்டை, வடைன்னு படைச்சு, கோவில்ல கொண்டு போய் ஒரு இலை வச்சுட்டு கூழ் கொண்டு போய் ஊத்திட்டு வருவோம்.

கோவில்ல கூழ் சேர்த்து வச்சு சாமிக்கு படைச்சு எழைகளுக்கு கொடுப்பாங்க. முன்னலாம் வெளி ஊருல இருந்துலாம் வந்து வாங்கி போவாங்க. இப்போ வாசனை வந்து மறுநாள் கீழ ஊத்திடுறதா கேள்வி. அதனால, கோவிலுக்கு எடுத்து போகும் கூழின் அளவு குடத்துல இருந்து சொம்பாகிட்டுது!!


ஒரு மண் பானை இல்லாட்டி செம்பு பானை அலங்கரிச்சு அதன் மேல அம்மன் முகத்தை வச்சு கரகமேந்தி ஊர் ஃபுல்லா சுத்தி வருவாங்க. அப்போ, நீர்மோர், ரஸ்னா, புளிசாதம்ன்னு பிரசாதம் தருவாங்க. கரகத்துக்கு தேங்காய், பூ, பழம் வச்சு கற்பூரம் ஏத்துவாங்க. பெண்கள், கரகமேந்தி வர்றவரை அம்மனா நினைச்சு அவர் காலுக்கு தண்ணி ஊத்தி மஞ்சள், குங்கும், பூ போட்டு வணங்குவாங்க. அவங்களும் பெண்களுக்கும் எலுமிச்சை பழமும், குங்குமமும் குடுத்து வாழ்த்துவாங்க!!

வயக்காட்டு நடுவே ஊர் எல்லை அம்மன் கோவில்...,

பொங்கல் கூடை சுமந்துக்கிட்டு நான். மாவிளக்கு, பூ, பழம், தேங்காயோடு என் மகன் ராம்ஜி.

மாடர்ன் உலகத்துக்கேத்த மாதிரி இப்போலாம் வீட்டுலயே கேஸ் அடுப்புல பொங்கல் வச்சுக்கிட்டு போய் படைச்சுக்கிட்டு வந்துடுறாங்க. ஆனா, என் அம்மா மட்டும் இப்படிதான் கோவில்ல வறட்டி கொண்டு போய் வைக்கனும்ன்னு பிடிவாதமா இருக்காங்க.

பொங்கல்லாம் வச்சு சாமிக்கு படைக்க எல்லோரும் வெயிட்டிங்க். பமபி உடுக்கை காரங்க பாட்டு பாடி யாருக்காவது அருள் வாக்கு வருமான்னு முயற்சி பண்ணுறாங்க.


ரொம்ப சீக்கிரமே ரெண்டு ஆண், ரெண்டு பாட்டிக்கு சாமி வந்துட்டுது. ஒரு பாட்டி சாமியும். ரெண்டு ஆண் சாமிலாம் எலுமிச்சையும், வேப்பிலை சாப்பிட்டு மலை ஏறிட்டுது. ஆனா, ஒரு பாட்டி மேல வந்த சாமி மட்டும் சரக்கு எங்கடா?!ன்னு கேட்டுச்சு. உடனே , சாமி படையல்ல வச்சிருந்த ஒரு சரக்கு பாட்டிலை எடுத்து பாட்டிக்கிட்ட நீட்ட.., பாட்டி வாங்கி ஒரே மூச்சுல ராவா அப்படியே அடிச்சுது.

அது முடிசதும் சுருட்டு எடுத்து கொடுத்தாங்க. அதை வாங்கி ரயில் விட்டப்படியே அருள் வாக்கு சொல்லுச்சு. மழை வரவைக்குறேன், புள்ளை குட்டிகளை காப்பாத்துறேன், ஆனா, எனக்கு கோவில் கட்டுங்க, அடுத்த வருசமாவது சேவல் வெட்டுங்கன்னு சொல்லி அங்கிருந்த பொரி, கடலையை அள்ளி அள்ளி சாப்பிட்டுச்சு, பாட்டி சரக்குக்கு சைட் டிஷ்சா பொரி கடலை சாப்பிடுதுன்னு என் பையன் கமெண்ட் அடிச்சான்.

(ராவா அடிச்ச ரங்கீலா பாட்டி இந்த பச்சை கலர் சேலை கட்டிய பாட்டிதான். எப்படியும் 60 வயசிருக்கும். சும்மா நடந்தாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். ஆனா, சாமி வந்து பாட்டி போட்ட ஆட்டமிருக்கே! 2 நிமிசம் வீடியோ எடுத்திருக்கேன். ஆனா, பதிவேத்ததான் தெரியலை!!)

எல்லாம் முடிஞ்சு  மேள தாளத்தோட ஊர்வலமா போய் வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.

கோவில்ல எதிர் வீட்டு குட்டி பையனோட ஆட்டம். 

நைட் சாமி ஊர்வலம் வர்றதோட திருவிழா முடிஞ்சது.

மண்வாசனை மாறாம இன்னமும் சில ஊர்கள் இருக்குது. அதுல எங்க ஊரும் ஒண்ணு.  திருவிழாக்கள் எதுக்கு ஆரம்பிச்சதோ! சாமி இருக்கோ இல்லியோ ஆனா, மக்கள் மனம் மகிழ்ச்சியா இருக்கத்தானே!! அந்த வகையில் எனக்கு பிடிச்ச ஒரு நிகழ்ச்சி இந்த திருவிழா. வீட்டு வேலைகள் படுத்தி எடுத்தாலும் கூட!!


37 கருத்துகள்:

 1. பாட்டிக்கு மலை ஏற சரக்கு வேண்டியிருக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் அதும் மிக்ஸிங்க் எதுமில்லாம ஒரே மடக்குல குடிச்சுது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்தான்!!

   நீக்கு
  2. பாட்டியை எப்படி மலையில் இருந்து இறக்குனீங்க?

   நீக்கு
 2. போட்டோவுல நீங்க பக்தி முற்றி போய் ஞானப்பழமா மாறீட்டுங்க போல இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சும்மா பதிவுல போடும் ஃபோட்டோவுக்காக சின்னதா ஒரு ஆக்டிங்க்!!

   நீக்கு
  2. அது என்ன உங்க உப்புமாவா?

   நீக்கு
 3. பதிவு எழுதும் பக்கத்தில் மேலே Link (Add or remove link), Insert image - இதற்கு அடுத்து ஒரு பட்டன் இருக்கும் - Insert a Video - 2 நிமிசம் வீடியோ தானே... எளிதாக upload செய்து விடலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சி செய்து பார்க்குறேன்ண்ணா!

   நீக்கு
 4. தாரை தப்பட்டை,பம்பி உடுக்கைக்காரங்க போட்டோ,அலகு குத்துற போட்டோ போன்றவை மிஸ்ஸிங்..இந்தப்பதிவில் வெறும் 13 போட்டோதான் இருக்கு.வனமையாக கண்டிக்கிறேன்.அதனால் வழக்கம்போல் எடுக்கப்பட்ட அனைத்து போட்டோக்களையும் பதிவில் போட்டுத்தாக்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி ரெண்டாவது பதிவு போட்டுட்டா போச்சு!!

   நீக்கு
  2. என்னது.. இதுலயே ரெண்டாவது பதிவா.. அப்ப கேரளா போய் பகவதி அம்மனுக்கு பொங்க வச்சா.. பத்து பதிவும் பலநூறு போட்டோவும் போட்டுடுவீங்க போல இருக்கே என உரிமையாய் கேள்வி கேட்கும்..

   போட்டோகிராபர் காந்திஜியின் அடிபொடிகள்
   சென்னை தெற்கு மாவட்டம்..

   நீக்கு
 5. சாமி மக மாயி இந்த ராஜி சாமி கலந்து கொள்ள போற பதிவுலக திருவிழாவில் இந்த மாமிக்கு சாமி வந்து ஆட்டம் வரமா நீதான் காப்பாற்ற வேண்டுமப்பா.

  பதிலளிநீக்கு
 6. என்னது வீடியோவும் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா?..................................?///

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபோட்டோவுக்கு அடுத்த கட்டம் அதானே!

   நீக்கு
 7. உங்க ஊரு எல்லையம்மன் கூழ் வார்க்கும் திருவிழா பற்றிய பதிவு படிக்க சுவாரஸ்யமாக இயல்பான நடையில் இருந்தது. படங்களும் அருமை. ”எங்க ஊரு, எங்க ஊரு “ என்று சொல்லிவிட்டு கடைசி வரை உங்க ஊர் பெயரைச் சொல்லவே இல்லை. எங்கே ஊரு என்று தேடும்படி ஆகி விட்டது. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரிக்கு, இந்த கருத்துரையையும் இதனையும் நீக்கி விடவும்.

   நீக்கு
 8. // பொங்கல் கூடை சுமந்துக்கிட்டு நான். மாவிளக்கு, பூ, பழம், தேங்காயோடு என் மகன் ராம்ஜி. //

  இது ஸ்டில்லோட ஒரு ப்ளக்ஸ் ரெடியாகுது... அக்காவை வரவவேற்க...

  அது இருக்கட்டும் கெடா வெட்டுனீங்களா? இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டுல கறிக்கஞ்சி இல்லீங்கோ. வெறும் சைவம்தான்னு பதிவுல தெளிவா சொல்லி இருக்கேன்! பதிவை படிச்சு பாருங்க சங்கவி!!

   நீக்கு
  2. இது கிண்டல் இல்லை! நியாமனா சந்தேகம். பதில் சொன்னால் நாம.

   ஒரு விழாவில் எப்படி சைவக் கஞ்சியும் கறிக்கஞ்சியும் அதே இடத்தில் படைக்க முடியும். சண்டை வருமே!
   _______________
   எங்கள் குலதெய்வம் கோவிலில் இது மாதிரி ஒரு கேள்வி வந்தது. அதுக்கு நான் ஒரு தீர்ப்பு சொன்னேன்...அதை ஒரு தனி இடுகையாக வரும்.

   நீக்கு
 9. சாமி குத்தம் சாமிய தப்பா சொல்ல கூடாது .இந்த மாதிரி திருவிழாக்கள் மக்களை ஒண்ணா சேர்க்கவும் காலச்சரங்கள் அழியாமலும் பாதுகாக்கினறன( எது சரக்கடிக்கிற கலாசாரமானு கேட்க கூடாது ) திருவிழான்னா உணவுவகைகளுக்கு முக்கியத்துவம் அதில் சில இவ்வாறும் இருக்கும் .ஒரு திருவிழாவில் கலந்து கொண்டது போல் இருந்தது

  பதிலளிநீக்கு
 10. கூழ் பாணைய பத்திரமா பிடிச்சிப் போங்க தவறிச்சி சாமி குத்தமாயிடும்...
  அப்புறம் நான் சொல்லல்ல என்னு கவலைப்படப்படாது :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிங்க சகோ! இதுக்குதான் இப்படி அக்கறையா சொல்ல ஒரு ஆள் வேணும்!!

   நீக்கு
 11. ஒங்க ஊருத் திருவிழா சிறப்பா முடிஞ்சாச்சு;அடுத்து எங்க ஊருத் திருவிழாவுக்கு வந்துடங்க!

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ஈழத்தில் இந்த வகைத் திருவிழாக்கள் மிகக் குறைவு, இல்லை எனலாம்.
  உங்கள் கிராமக் கோவில் திருவிழா படங்களுடன் சிறப்பாகவே உள்ளது.

  பதிலளிநீக்கு
 13. உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி..இந்த பதிவை படித்ததும் எங்க அம்மா வீட்டு கோயில் ஞாபகம் வந்துடுச்சு...

  பதிலளிநீக்கு
 14. வயல்வரப்பில் பொங்கல்கூடையுடன் , பக்கத்தில் மகன் வர படம் மிக அருமை.
  கிராமத்து பொங்கல் திருவிழாவை மிக அழகாய் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் கிராமத்து திருவிழா சிறப்பாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 16. உங்க பதிவ படிச்சதும் எங்க ஊர் அம்மன் கோவில் கொடை நியாபகம் வந்த்ருச்சு.. இ மிஸ் யு தென்காசி..

  இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் போது ஊர்பாசம் இயல்பாக வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது/... நல்ல நினைவூட்டல் பதிவு

  பதிலளிநீக்கு
 17. // பாட்டி மேல வந்த சாமி மட்டும் சரக்கு எங்கடா?!//

  பலே பாட்டி??

  பதிலளிநீக்கு
 18. திருவிழாவிற்கு எங்களை கூப்பிடவில்லையே..

  பதிலளிநீக்கு
 19. அட இது தான் ராஜி அக்காவா ....!! அப்போ இனி எதுக்கு இந்த
  நாய்க்குட்டிப் படம் ?.....யாரங்கே படத்தை உடனே மாற்ற
  உத்தரவிடுங்கள் :) வாழ்த்துக்கள் சிறப்பான பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 20. உறவுகள் அனைவரும் கூடி
  உற்ற கதைகள் பேசி
  இது நம்ம சாமிடா
  என நம் பிள்ளைகளுக்கு சொல்லி..
  நமக்கான இடைப்பின்னல்கள் ஏதுமின்றி
  மனதுக்கு நிம்மதியாக
  சாமி கும்பிட்டு வரும் போது
  இருக்கும் நிம்மதி இருக்கே
  அதுக்கு அளவே கிடையாது...
  கிராமக் கோயிலும் திருவிழாவும்..
  மனதுக்கு நிறைவாக இருக்கிறது சகோதரி...

  பதிலளிநீக்கு
 21. இந்த மாதிரி கிராமங்களுக்கு போய் திருவிழா பார்க்கத்தான் எனக்கு சரியான ஆசை. இங்கு தான் தமிழர்களின் பழமையான பண்பாட்டைப் பார்க்கலாம். பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 23. உங்கள் ஊர் எது என்று தெரியவில்லையே! எல்லையம்மன் தெரிகிறது.
  நீங்களும் உங்கள் மகனும் பக்தியுடன் கோவிலுக்கு செல்லும் போட்டோ மிக அழகாக வந்திருக்கிறது.

  உங்கள் பின்புலம் இருக்கும் ஊர் பார்க்க ரம்மியமாக இருக்கிறது. அதனால் தான் எந்த ஊர் என்று கேட்டேன்.

  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 24. திருவிழா எதுக்கு ஆரமிச்சதோ ..... இந்த வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு