Saturday, August 17, 2013

விவேகமான வெள்ளாடு - பாட்டி சொன்ன கதை

பாட்டி!!!

வா கண்ணு!! ஹோம் வொர்க்லாம் பண்ணிட்டீங்களா?!  கைல என்னமோ வச்சிருக்கியே, என்னது சீனு!

பண்ணிட்டேன் பாட்டி!! என் ஃப்ரெண்ட் வீட்டுல நெல்லிக்காய் காய்ச்சுதுன்னு எடுத்துட்டு வந்தான். நல்லா இருக்கு. உனக்குதான் பிடிக்குமே அதான் கொண்டு வந்தேன்!!

ம்ம்ம் ரொம்ப நல்லதுப்பா! நெல்லிக்காய்ல என்ன சத்து இருக்குன்னு உனக்கு தெரியுமா?!

ம்ம் தெரியும் பாட்டி ”வைட்டமின் சி” இருக்கு. 

ம்ம் ”வைட்டமின் சி” எதுக்கு யூஸ்ன்னு தெரியுமா?!

ம்ம் குட்.  அதுமட்டுமில்லாம, இது உமிழ் நீர் சுரப்பிஅயை தூணி, பற்களுக்கு உறுதி அளிக்குது. கல்லீரல் குறைப்பாட்டை நீக்குது. அல்சர் வராம தடுக்குது.

ரத்தம் ஓட்டம் சீராக பாயவும், இதயம் பலமெ பெற உதவுது. அதேப்போல ரத்தத்தில் நோய்க்கிருமிகள் பரவாம தடுக்குது. ரத்த நாளங்கள் சீரா வேலை செய்ய உதவுது. ரத்தத்துல இருக்குற சுகரோட அளவை கட்டு படுத்தி, சிவப்பணுக்களை உற்பத்தி பண்ணுது.

ம்ம் தெரியும் பாட்டி!! பாடத்துல படிச்சிருக்கேன். சளியை வெளியேத்தி சுவாசத்தை சீராக்குது. இதை சாப்பிட்டா நாட்பட்ட ஆஸ்துமா, டிபி மாதிரியான நோய்களுக்கு மருந்தா பயன்படுதாம் எங்க மிஸ் சொன்னாங்க.

இது மட்டுமில்லாம பக்கவாதம், நரம்பு தளர்ச்சி மாதிரியான நோய்லாம் வராம தடுக்குமாம். மூளை பலம்பெறவும், மன இறுக்கத்தை போக்கி தெளிவான சிந்தனை தருமாம். கிட்னி நல்லா வேலை செய்யவும், ஸ்கின்லாம் பிரைட்னெஸ்ஸோட இருக்கவும் உதவுதாம்!!.


நல்ல விஷயம்லாதான் சொல்லிக்கொடுத்திருக்காங்க உங்க மிஸ்.



பாத்தி! போதும். கதை சொல்லுங்க.



ஏய் குட்டி, நல்ல விசயம் சொன்னா உனக்கு போரடிக்குதா?! சரி, கதைக்கு போவோம். ஒரு ஊருல ஒரு ஃபார்மர் இருந்தார். அவர் வீட்டுல ஒரு வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்துச்சு. அது ரெண்டும் திக் ஃப்ரெண்ட்ஸ். எங்க போனாலும் ஒண்ணாவே போகும். வரும். 

அந்த ஃபார்மருக்கு அதுக ரெண்டும் ரொம்பவே பாடுபட்டுச்சு. இருந்தாலும் அந்த ஃபார்மர் அதுகளுக்கு சரியான சாப்பாடு குடுக்குறதில்லை. பசிக்கொடுமை தாங்காம ஒரு நாள் அந்த ஃபார்மர் தோட்டத்துல விளைஞ்ச செடிகளை சாப்பிட்டுடுச்சுங்க ரெண்டு ஆடுகளும். அந்த ஃபார்மருக்கு கோவம் வந்து “ இனிமே இங்க இருக்கக் கூடாது. இருந்தா உங்களைக் கொன்னுடுவேன். எங்காவது போய்டுங்க” ன்னு துரத்தி விட்டுட்டார்,

ரெண்டு ஆடுகளும் அதுங்க திங்க்ஸ்லாம் எடுத்து ஒரு பைஅல் போட்டுக்கிட்டு கிளம்பிடுச்சுங்க.  செம்மறி ஆடு நல்லா புஷ்டியா வளர்ந்திருந்தாலும் கோழையா இருந்துச்சு. ஆனா, வெள்ளாடோ, தைரியமா இருந்துச்சு. ஆனா, உடம்புல வலிமை இல்லை. ரெண்டும் கொஞ்ச தூரம் நடந்து போனதும் ஒரு வயக்காட்டுல செத்து போன ஓநாயோட தலை இருந்துச்சு!!

 ஓநாயின் தலையை நீ எடுத்துக்கோ. எதுக்கும் உதவும்,  நீதான் நல்லா வலிமையா இருக்குறேன்னு சொல்லிச்சு வெள்ளாடு. 

என்னால முடியாது நீதான் வீரன். அதனால, நீயே எடுத்துக்கோன்னு சொல்லுச்சு செம்மறி ஆடு. 

ரெண்டும் சேர்ந்து அந்த ஓநாயோட தலையை பைக்குள்ள போட்டுக்கிச்சு. அங்கிருந்து கொஞ்ச தூரம் போச்சு!! அங்க எரிகிற நெருப்பை பார்த்துச்சு, அந்த நெருப்பு இருக்கும் இடத்துக்கு போகலாம். அங்க போனா, குளிருக்கு இதமாவும் இருக்கும், இங்க ஓநாய்கள் தொல்லை அதிகம் போல!! அந்த ஓநாய்ங்கக்கிட்ட இருந்தும் தப்பிச்சுக்கலாம்ன்னு செம்மறி ஆடு சொல்லுச்சு.

சரின்னு ரெண்டும் அந்த நெருப்புக்கு கிட்ட போச்சுங்க. அங்க போய் பார்த்தா செம ஷாக்.

ஏன் பாட்டி!? அங்க என்ன சுடுகாடா?! பிணம் எதாவது எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சா?!

ம்ஹ்ஹூம், மூணு ஓநாய்கள் உக்காந்துக்கிட்டு இருந்துச்சாம்!! அந்த ஓநாய்களும் அந்த செம்மறி ஆட்டை பார்த்துட்டுதுங்க. இன்னிக்கு நமக்கு செம வேட்டைதான்ன்னு ஓநாய்கள் நாக்கை தொங்க போட்டு வந்ததுங்க. 

இனி நாம தப்பிக்க முடியாதுன்னு வெள்ளாட்டுக்கு கை கால்லாம் உதற ஆரம்பிச்சுட்டுது.

என்ன ஃப்ரெண்ட்ஸ்!! நல்லா இருக்கீங்களா?!ன்னு கேட்டுச்சு வெள்ளாடு.

என்னாது?! நாங்க உனக்கு ஃப்ரெண்ட்ஸா?! இருடி மாப்ளா! உங்களை  இன்னிக்கு கைமா பண்ணிட்டுதான் மறுவேலைன்னு சொல்லிக்கிட்டே ஆட்டை நெருங்கிச்சுங்க ஓநாய்ங்க

உடனே, செம்மறி ஆடே! நாம வர்ற வழில நம்மக்கிட்ட வாலாட்டுன ஓநாய்களை கொன்னுட்டு வந்தோமே!! அதுங்களோட தலையை எடுத்து அவனுங்க கிட்ட காட்டு. அப்போ தெரியும். நாம யாருன்னு?!ன்னு சவுண்டு  விட்டுச்சு வெள்ளாடு.

செம்மறி ஆட்டுக்கு, வெள்ளாட்டோட திட்டம் புரிஞ்சுடுச்சு. பைக்குள்ள இருக்குற ஓநாயோட தலையை எடுத்து காட்டிச்சு செம்மறி ஆடு. 

ஏய் முட்டாள்! நீ என்ன சின்ன ஓநாயோட தலையை காட்டுற?! அந்த பெரிய ஓநாயோட தலையை எடுத்து காட்டு”ன்னு கத்திச்சு வெள்ளாடு.


ஓநாயோட தலையை பைக்குள்ள போட்டுட்டு மீண்டும் அதே தலையை  எடுத்து காட்டிச்சு செம்மறி ஆடு.  உடனே ரொம்ப கோவம் வந்த மாதிரி நடிச்ச வெள்ளாடு, இருக்குறதுலயே பெரிய தலையா எடுக்க சொன்னா, மறுபடியும், மறுபடியும் சின்ன தலையையே காட்டிக்கிட்டு இருக்கியே!! இதை பைக்குள்ள போட்டுட்டு பெரிய தலையா எடு”ன்னு கத்திச்சு வெள்ளாடு.

அந்த தலையை பைக்குள்ள போட்டுட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு. இதைலாம் பார்த்த மூணு ஓநாய்களும் நடுங்கிச்சு. இவை, சாதாரண ஆடுகள் இல்லை. நாம, அதை கேலி செஞ்சிருக்க கூடாது. அதுக கொன்னுட்டு எடுத்து வந்த ஓநாயோட தலைகளை ஒண்ணொன்னா எடுத்து காட்டுதுங்க. இதுக பயங்கரமான ஆடுங்க போல இருக்குன்னு சொல்லிட்டு சைலண்டா நின்னுச்சுங்க அந்த ஓநாய்ங்க.

உங்களைலாம் சந்திச்சதுல ரொம்ப சந்தோசம், இருங்க உங்களுக்கு சமைக்க, தண்ணி கொண்டு வரென்” ன்னு சொல்லி ஒரு ஓநாய் ஓட்டம் எடுத்தது. கொஞ்சம் நேரம் கழிச்சு, ச்சே! அவனுக்கு நேரம், காலம், அவசரமே தெரியாது. எவ்வளவு லேட் பண்ணுரான். நான் போய் கூட்டி வரேன்”ன்னு சொல்லி நைசா நழுவுச்சு ரெண்டாவது ஓநாய்.

இன்னும்  கொஞ்ச நேரம் போச்சு, மூணாவது ஓநாய் பரப்பரப்பா. சே எங்க போய் தொலைஞ்சாய்ங்க?! உங்களுக்கு பசிக்குமேன்னு அக்கறை இல்லாம, பேட் பாய்ஸ். நான் போய் கூட்டி வரேன்னு சொல்லி தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு ஓடிச்சு. 

செம்மறி ஆடே! நம்ம திட்டம் சக்சஸ்.  ஓநாய்ங்ககிட்ட இருந்து  தப்பிச்சுட்டோம். சீக்கிரம் நாம இண்ட்கிருந்து போய்டனும்.அதுங்களுக்கு  உண்மை தெரிந்து மீண்டும்  இங்கே வர்றதுக்குள்ள நாம ஓடி போய்டனும்ன்னு சொல்லிச்சு. 

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைச்சுப் பார்த்துச்சுங்க. அவர்கிட்ட  இருக்கும்வரை உயிருக்கு ஆபத்து எதும் வரலியே! அதனால, நாம அவர்கிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவர்கிட்டயே போய் சேர்ந்துக்கலாம்ன்னு சொல்லி முடிவெடுத்து தன்னோட எஜமானனை தேடி போச்சுதுங்க.

ஆடுகளை பிரிஞ்ச அந்த ஃபார்மரும், நமக்கு எவ்வளவு வேலைகளை செய்ததுங்க. நாம, அதுங்களை பட்டினி போடவே தானே காட்டுல மேய்ஞ்சதுங்க. இனி, அந்த ஆடுகள் திரும்பி வந்தா சரியான தீனி போடனும்ன்னு நினைச்சுக்கிட்டு, காட்டுக்கு போய் ஆடுகளை தேட ஆரம்பிச்சார். எதிரே வந்த ஆடுகள் ஃபார்மரை பார்த்ததும் ஓடிப்போய் அவர் காலை போய் உரசு நின்னுச்சுங்க. அவரும் அந்த ஆடுகள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு வீட்டுக்கு கூட்டி போய்.., இலை, தழை, புல்ன்னு சாப்பிட கொடுத்தார். அந்த ஆடுகளும் மகிழ்சியா இருந்ததோட இன்னும் கொஞ்சம் அதிகமா உழைச்சதுங்க. அந்த ஃபார்மரும் அதுகளை நல்லா பார்த்துக்கிட்டார். 

கதை முடிஞ்சுது. இதிலிருந்து என்ன தெரியுது பசங்களா?!

தனக்கு கீழ வேலை செய்யுறவங்களுக்கு சரியான சேலரியும், மரியாதையும் தரனும். அப்படியே ஒரு வேளை முதலாளி கோவப்பட்டாலும் நாமும் கொஞ்சம் பொறுத்து போகனும். இல்லாட்டி இப்படி உயிர் போகும் ஆபத்து வரும். அப்படி ஆபத்து வரும்போது, கலங்காம தைரியமா நின்னு சமயோசிதமா நடந்துக்கனும்ன்னு தெரியுது பாட்டி!!

குட் சீனு!! கதையை நல்லா புரிஞ்சுக்கிட்டே. பாட்டி ரேஷன் கடைக்கு போய் பொருள்லாம் வாங்கி வரனும். நீங்க அம்மாக்கிட்ட போங்க.

சரி பாட்டி!! பை! பை!

17 comments:

  1. நெல்லிக்காய்ல தெரியாத மருந்தெல்லாம் இருக்கே....? ஃபிரிஜ்ல உப்பு போட்டு வச்சிருக்கேன் இன்னைக்கு ஒரு ஐந்து நெல்லிக்காயையாவது காலி பண்ணனும்.

    புத்திசாலி ஆடுகள் சூப்பர்ப்...!

    ReplyDelete
  2. யாரையும் சாதரணமா நினைச்சிடக் கூடாது

    ReplyDelete
  3. கருத்து குட்டி சீனுவுக்கு சொன்ன மாதிரி தெரியலையே அக்கா!!

    ReplyDelete
  4. '' கீழ வேலை செய்யுறவங்களுக்கு சரியான சேலரியும், மரியாதையும் தரனும். '' நல்ல கருத்தை சிறுவர்களுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கதை

    ReplyDelete
  5. நல்ல கதை...
    நெல்லிக்காய் தெரிந்து கொண்டோம்... இனி தொடர்ந்து சாப்பிடுவோமுல்ல...

    ReplyDelete
  6. கதையோடு கதையாக பல நல்ல விசயங்களையும் சொன்ன விதம்
    அருமை ! வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
  7. கதையையும் கருத்தையும் வெகுவாக ரசித்தேன் .
    நெல்லிக்கனி பற்றிய தகவல்கள் அபாரம்.
    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  8. கதை சுவாரஸ்யம்
    நெல்லியின் பயன்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கும்
    தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கதையோடு கருத்தையும் வெகுவாய் ரசித்தேன். நன்றி

    ReplyDelete
  10. நெல்லியின் மகத்துவம் நல்ல பகிர்வு!

    ReplyDelete
  11. ரசிக்க வைத்த கதை...

    ReplyDelete
  12. நான் முதல் முறை கேட்கும் கதை சகோ ...எதிர்காலத்தை எண்ணி மனப்பாடம் பண்ணிட்டேன்...

    ReplyDelete
  13. அருமையான கதை.
    நெல்லியின் மகத்துவம் அருமை.

    ReplyDelete
  14. ஹா ஹா ஹா பாட்டிகிட்ட கதை கேட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு சீனு வருத்தபட்டான்.. இப்ப அந்த வருத்தம் போக வச்ச எங்க அக்கா வாழ்க வாழ்க

    ReplyDelete