செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

சிறைப்படு.., விடுதலையடைகிறேன்...,

  

நான் நேசிப்பவைகள்
உனக்கு விரோதமானவையாகப் படுகிறது..,
நானும், நீயும் இணையும்
சாத்தியங்கள் இனி, நம் அகராதியில் இல்லை!!

அப்படி என்றால் ??!!
நமக்கான சம்பந்தம் பற்றிய
பிரயத்தனங்கள் வீணானவை தானே!!??
இதில், நாமிருவருமே
நிதானித்து முடிவேடுக்க வேண்டும்.

என்னை சிறையிலும்...,
உன்னை வெளியிலும் அடிப்பதை விடுத்து…..
உன்னுடன் ஒப்புதலுக்காக
உடன்பட்டேன்!!

எதிர்ப்புகளிலும் கூட ,சரியென்று
எத்தனை தடவைகள் சமாளிப்பது!!
இது, இறுதியான நம்மை பற்றிய பார்வையாகட்டும்,
இதில் நீயும், நானும் உறுதியாய் இருப்போம்.

பயனற்ற பயணத்தில் நடந்து சென்றதால்
உனக்கு கால்கள் வலிக்கிறது!!
உள்ளே இருத்தும் துயரங்களை தின்றதால்
எனக்கு உள்ளம் வலிக்கிறது!!

எவ்வாறாயினும்..,
அக வதைபுக்கள் நமக்குத் தானே!!
என்னுடைய காத்திருப்புக்களும்..,
உன்னுடைய துரோகமும்...,
இனி நிச்சயம் எதிர்த்துக் கொள்ள வேண்டும்!!
அதனால்,
நீ சிறை படு...,
நான் விடுதலை அடைகி்றேன்!!

23 கருத்துகள்:

 1. நல்ல கவிதை பாராட்டுக்கள் கவிஞரே

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான கவிதை அக்கா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி தம்பி

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
  2. எனது ப்ளாக்கிற்கும் வருகை தாருங்கள்
   http://pandukavi16.blogspot.in/

   நீக்கு
 4. //நீ சிறை படு...,நான் விடுதலை அடைகி்றேன்!!//
  கல்யாணம் கட்டிகிட்ட எல்லோரும் சிறை பட்டவங்கதான் சிறை பிடித்தவர்கள் எல்லாம் விடுதலை ஆனவர்கள் சரிதானே கவிஞரே

  பதிலளிநீக்கு
 5. ஆம் அதுதான் சரி
  இறுதி வரிகள் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. முடிவில் சூப்பர் டச்சிங்கா சொன்ன விதம் கவிதைக்கு அழகு....!

  பதிலளிநீக்கு